இதுவரை மகிமா யாரிடம் இவ்வாறு அவமானப்பட்டதேயில்லை… அவள் தொடர்ந்து அவமானப்பட்டுக் கொண்டிருப்பது அபின்ஞானிடம் மாத்திரம் தான்…
சில நாட்களாக மனதுக்கு நெருக்கமாக இருந்த அபின்ஞானிடமிருந்து வந்த வார்த்தைகளை தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
வேறு யாராவது சொல்லி இருந்தால் திரும்பியும் பார்த்திருக்க மாட்டாள்… சாதாரணமாக தட்டி விட்டு கடந்து சென்றிருப்பாள்…
ஆனால் அவனது வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… அதை நினைக்கும் போதே அவள் மேனி கூசிப் போனது…
வேகமாக ஒரு முடிவை எடுத்தவள் தன் கண்ணீரைத் துடைத்தபடி முதலுதவியைப் பெட்டியில் இருந்து பஞ்சை எடுத்து நெற்றியில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்தாள்.
காயத்தின் வலியை அவளால் தாங்க முடியவில்லை… இப்போது உண்மையிலே தலையும் வலிக்க தொடங்கி விட்டது.
காயம் கொஞ்சம் ஆழமாகவே இருந்தது… கஷ்டப்பட்டு காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட்டு பிளாஸ்டரை ஒட்டினாள்… யாரிடமும் காட்டி பரிதாப பார்வை வாங்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை…
இன்னும் அவள் உடைகளை கூட களையவில்லை.
அதன் பாரத்தால் ஏற்பட்ட அசௌகரியம், எரிச்சல் இன்னொரு பக்கம்…
கஷ்டப்பட்டு உடைகளை கலைந்து பிரெஷ்ஷாகி கைக்கு வந்த சுடிதார் ஒன்றை அணிந்தவள், அலைபேசியை தேடி எடுத்து மகாதேவுக்கு அழைப்பெடுத்தாள்.
முதல் இரண்டு ரிங்கிளே அழைப்பை ஏற்றவன், மகிமா ஹலோ சொல்ல முன்பே, “எப்படியிருக்க மகி” என்று முதலிலே அவன் கேட்டுவிட,
அவன் அன்பார்ந்த குரலிலும் இதமான பேச்சிலும்… அடக்கிக் வைத்திருந்த அழுகை மீண்டும் வரும் போலிருந்தது…
தன் ஒரே ஒரு சொந்தமான அண்ணாவையே ஒதுக்கி விட்டான் அல்லவா அவன்….
“ஹலோ அண்ணா…” என்றவளது குரலோ பேச முடியாமல் தழுதழுத்தது…
கஷ்டப்பட்டு அழுகையை கட்டுப்படுத்தியவள், “அண்ணா நான் நம்ம வீட்டுக்கு வந்துட்றேன்…” என்று விம்மிய படி கூற,
“என்னடா நடந்துச்சு… முதல்ல உன் அழுகைய நிறுத்து மகி… நீ இப்படி அழுகிற ஆளே இல்லயே…” என்று அவள் அழுகையல் “என்ன பிரச்னையோ” என்று தனக்கு விளைந்த பதற்றத்தை மறைத்துக் கேட்க,
“அண்ணா… நான் இப்பவே வீட்டுக்கு வரேன்…” என்று அவள் அதையே கூறிக் கொண்டிருக்க,
“அவசரப்படாதே மகி… நான் ஒன் ஹவர்ல வந்துட்றேன்… அழாம இரு” என்றான்.
“இல்ல அண்ணா… நீ வராதே நானே வரேன்” என்றாள் அழுதபடி…
“மகி நான் சொன்னா கேளு… கொஞ்சம் பொறுமையா இரு… நானே வரேன் உனக்கு புரிஞ்சதா?” என்ன அழுத்தமாகவே மகாதேவ் கேட்க..
“ம்ம்…” என்று விம்மியபடி கூறியவள் அழைப்பை துண்டித்தாள்.
அந்த அறையில் சிதறிப் போயிருந்த பேப்பர்ஸ் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பைலில் போட்டுக் கொண்டிருந்தவள், அது கடலில் இருக்கும் ஏதோ புதையல் சம்பந்தமான தேடலென்று அவள் இருந்த மனநிலையில் படிக்கத் தவறிவிட்டாள்…
“இந்த வீட்டில் இனி ஒரு நொடியும் இருக்க முடியாது… இங்கிருந்து சென்று விட வேண்டும்” என்று நினைத்த, மகிமா தன்னுடைய உடைகளை அடுக்க ஆரம்பிக்கவும், அந்நேரம் வந்த அன்னபூரணி அம்மாள், “மகி சாப்பிட வா…” என்று கதவை தட்டியபடி அவளைக் கூப்பிட்டார்.
“இல்ல அத்த எனக்கு பசிக்கல” என்றாள் தன் கம்மிய குரலை மறைத்தபடி…
“மகி நான் உனக்கு அப்பவே சொன்னேனே… கொஞ்சம் சாப்பிட்டு படும்மா” என்று அவர் மீண்டும் கூற,
அவளுக்கோ கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது…
நெற்றியில் காயத்துடனும் வீங்கிப் போய் சிவந்திருந்த முகத்துடனும் வெளியே செல்ல பிடிக்கவில்லை…
வெளியே சென்றால் இதற்கு ஆயிரம் கேள்வி கேட்பார்கள்…
இதற்கு மேல் அவரை வெளியே நிற்க வைத்து, அவளிடம் அவரை கெஞ்ச வைக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை…
“அத்த வேணாம்ன்னு சொன்னேன் தானே… சும்மா சாப்பிட கூப்பிட்டு கழுத்தை அறுக்காதீங்க…” என்று அவளுக்கு இருந்த மன அழுத்தத்தில் யார் மேல் கோபத்தை காட்டுவது என்று தெரியாமலே கத்திவிட…
தன் அறை அருகே வந்த அபின்ஞானின் காதிலும் அவள் வார்த்தைகள் தெளிவாக விழுந்து விட்டது…
மகிமா, அன்னபூரணி அம்மாளை மதிக்காது பேசியது அவனை முழு அரக்கனாகவே மாற்றி விட்டது.
அன்னபூரணி அம்மாள் அருகே சென்றவன், “அம்மா நீங்க போங்க… நான் பார்த்துக்குறேன்” என்று கோபத்தை கட்டுப்படுத்தி பற்களைக்கடித்த படி கூற,
அவரைப் பார்த்து சிரித்தவன், “நான் கோவப்பட மாட்டேன்ம்மா. நீங்க பயப்படாம போங்க” என்று அவர் முதுகை பிடித்து தள்ளிக்கொண்டு கொண்டு படியில் விட்டு வந்தவன், தன் ஷேர்ட் கையை முட்டி வரை மடித்தபடி அறைக்குள் சென்றவன், உடைபெட்டியில் தன் உடைகளை அடக்கி கொண்டிருந்தவளது கையை பிடித்து இழுத்தான்…
அடுத்த கணம் அவள் காதினுள் எதோ சத்தம் மட்டும்தான் கேட்டது… இரு கன்னத்தையும் தன் இரு கைகளால் மூடிக்கொண்டு அவனை அதிர்ந்து பார்த்தாள் மகிமா….
“என் மேல் உள்ள கோபத்த… எவ்ளோ தைரியம் இருந்தா நீ என் அம்மா கிட்ட காட்டுவ?” என்று அவள் கன்னத்தில் அறைய கைய ஓங்கியவன், தன் கையில் இருந்த ஐ போன் சிக்ஸ்டீன் ப்ரோ மெக்ஸை தூக்கி அடித்திருந்தான்…
அவன் தனக்கு அறைந்திருப்பான் என்ற கண்களை விரித்துப் பார்க்க, அவனோ அவனது ஐபோனை தூக்கி அடித்திருந்தான்…
அதே அவளுக்கு முகத்தில் அடித்த உணர்வு தான்…
கண்களை மூடி திறந்து கொண்டாள்…
அவன் அடிப்பதையே அவளால் கற்பனை கூட பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.
அவனே இரும்பு மாதிரி தான் இருப்பான் அந்த கையால் அடித்தால் எப்படி இருக்கும்.
“இதுவர நான் பொண்ணுங்களுக்கு கை நீட்டியதே இல்லை… ஆனா நீ என்ன கை நீட்ட வச்சுட்ட… உனக்கு அடிச்சா எனக்கு தான்டி அசிங்கம்… ஒரு பொண்ணுக்கு அடிக்கிறது எனக்கு தான் கவுரவமில்ல… அதனால தான் உன்ன சும்மா விட்றேன்” என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றபடி…
அவனுக்கு இருந்த கோபத்தில் எதையும் பார்க்கும் மனநிலையில் இல்லை…
அதிர்ந்து போய் அவனை பார்த்தவள், எதுவும் பேசாமல் தன் உடைப்பெட்டியை மூடி எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல… “ஏய் மகிமா… வாசல தாண்டி ஒரு அடி வச்சா இனி நடக்க உனக்கு கால் இருக்காது…மரியாதையா உள்ள வா… இன்னும் இன்னும் என்ன கோபப்படுத்தி பார்க்காதே… அத உன்னால தான் தாங்கிக்க முடியாது” என்று அந்த அறை அதிர கத்தினான்.
அவனை அதிர்ந்து பார்த்தவள், “என்னால இனி உங்க கூட இருக்க முடியாது… போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்றன்னா கூட பரவால்ல… உங்களுக்கு வேண்டியத செய்ங்க… ஐ டோன்ட் கேர்” என்றவள் கதவை திறக்க போக,
“ஓஹோ பயம் விட்டுப் போச்சா… தாராளமா போ… இனி உன்ன சாகடிக்க மாட்டேன், உன் அண்ணாவதான் சாகடிப்பேன்… நான் சொன்னா செஞ்சுட்டு தான் மறு வேல பார்ப்பேன்னு உனக்கு நல்லாவே தெரியும்… நான் சொல்றத சொல்லிட்டேன் இனி உன் இஷ்டப்படி போய்க்கோ…” என்று வன்மமாக கூறிவிட்டு, குளியலறைக்குள் சென்றான் அபின்ஞான்.
அவனை வெறித்து பார்த்தபடி மகிமா அங்கேயே நின்று இருந்தாள்.
ஷார்ட்ஸ் ஒன்றை மாத்திரம் போட்டு கொண்டு வந்தவன் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவளை நக்கலாக பார்த்து, “நீ இன்னும் போகல… நான் நீ போயிருப்பேன்னு நினைச்சேன்” என்றான் கிண்டலாக…
“அபி நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க… எனக்கு இங்க இருக்க பிடிக்கல” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போது இடை மரித்தவன்,
“நான் உன்ன தடுக்கல பேபி… நீ போறன்னா போ” என்று தோள்களைக் குலுக்கி சிரித்தபடி கூறினான்.
“தாராளமா போ… போன்னு சொல்லிட்டு இன்டைரக்டர் பிளாக் மெயில் பண்றீங்க” என்று மகிமா முகம் சிவக்க கேட்டாள்.
“ஒப் கோஸ்… இன்டைரக்ட் இல்ல பேபி… நேரடியாகவே பிளாக் மெயில் தான் பண்றேன்…” என்றான் சிரிப்புடன்.
“நீங்க பழி வாங்குறதுக்காக இப்படி பண்றது சரியே இல்ல அபி” என்றாள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த படி,
“உன் அண்ணா என்ன பழிவாங்க சப்போர்ட் பண்ணின தானே? நான் அதையே திருப்பி பண்ணினா மட்டும் தப்பா உனக்கு” என்று கேட்டான் அபின்ஞான்.
“அவன் உங்க ப்ரொஜெக்ட் டாக்குமெண்ட்ட மட்டும் தான் எடுத்தான்… ஆனா நீங்க? என் லைஃப்லயும் அண்ணா லைஃப்லேம் விளையாடிட்டு இருக்கீங்க…. ” என்றாள்.
“என்ன பொறுத்த வரையில ரெண்டுமே ஒன்னு தான்… அவன் என் பிசினஸ் லைஃப்ல கைய வெச்சான்… நான் அவன் லைஃப்லயே கைய வெச்சேன்… அவன் செஞ்சத விட இது அவனுக்கு ரொம்பவே வலிக்கும்… சொல்லும் போதே கிக்கா இருக்கு பார்த்தியா….” என்று விழிகளில் பழிவெறி மின்ன சிரித்தபடி சொல்ல…
அவளுக்கோ, “சீ.. ச்சீ” என்றாகிப்போனது.
“யூ சிட்…” அவள் வாய்க்குள்ளே சீர,
“நான் எங்கடி சீட் பண்னேன்… உன்கிட்ட கேட்டு தானே கல்யாணம் பண்னேன்” என்றான்.
அவள் உடை பேட்டியை அங்கேயே வைத்தவள் படுக்கப் போக பார்க்க, அப்போதுதான் அவள் நெற்றியில் ஒட்டி இருந்த பிளாஸ்டரை கண்டவன், “உன் நெத்தில என்ன காயம்… என் மேல் உள்ள கோபத்தில் உன் தலைய கொண்டு போய் சுவத்துல முட்டிக்கிட்டியா” என்று நக்கலாக கேட்க,
‘என்ன மனிதன் இவன்’ என்று தான் அவளுக்கு தோன்றியது…
அவன் கொட்டேஷனை திருடியது தவறு என்று தெரியும்… அதற்காக அவன் இவ்வாறு பழி வாங்குவது அவளுக்கு பிடிக்கவே இல்லை… மனிதாபமே இல்லையா… மிருகம் மாதிரி அல்லவா இருக்கிறான்.
அவளோ அவனை எரிச்சலாக பார்த்து விட்டு எந்த பதிலும் சொல்லாது சென்று படுத்துக் கொண்டாள்…
அவளருகே நெருங்கி படுத்தவன் அவள் நெற்றியில் இருந்த காயத்தை வருடியபடி அவள் காதருகே குனிந்து, அவன் ட்ரீம் பண்ணிய தாடி மீசை அவள் காது மடலில் உரச, “நான் கேட்டா பதில் வரணும்” என்றவன் ஒற்றைப் புறம் உயர்த்தி அவள் முகம் பார்த்து கேட்டான்.
அவனை முறைத்துப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் கண்களை இறுக மூடிக்கொண்டாள்….
அவள் காயத்தை மென்மையாக வருடிக் கொண்டிருந்தவன் அவள் தன்னை புறக்கணிப்பதால் வந்த கோபத்தில் அழுத்தமாகவே வருட, அவளுக்கோ வலியை தாங்க எவ்வளவு முயன்றும் முடியாமல் தன்னை மீறி கண்ணீர் வழிந்தது…
“ஏன் உனக்கு இவ்ளோ பிடிவாதம்…” என்று அவன் சிரித்தபடி கேட்க,
“உன்ன விடவா நான் பிடிவாதம் பிடிச்சேன்” என்று மனதினுள் நினைத்தவள், இதற்கு மேல் வலி தாங்க முடியாது… வேகமாக அவன் கையை தட்டி விட்டாள், “நீங்க வீசின நெக்லஸ் என் நெத்தில வந்து பட்டதால தான் இந்த காயம்…” என்றாள் ஆத்திரமாக…
“ஓஹ்… சோ சேட்” என்று உச்சி கொட்டியபடி கூற…
மகிமா எதுவும் பேசாமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.
“ஏய் கழுத்துல என்னடி காயம்…” என்று அவள் நெக்லஸை கழட்டும் போது ஏற்பட்ட காயத்தை பார்த்து கேட்க,
“எல்லாம் உன்னால தாண்டா செய்றதெல்லாம் செஞ்சிட்டு எதுவும் தெரியாதவன் மாதிரி இப்ப அங்கு என்ன காயம் இங்க என்ன காயம்ன்னு நடிக்கிறயா?” என நினைத்தவள் அவனிடமிருந்து எப்படியாவது பிரிந்து வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுத்துக்கொண்டாள்.
கழுத்தில் எதோ குளிர்ச்சியாய் இருக்க சட்டென திரும்பி பார்த்தாள்… அபின்ஞான்தான் ஏதோ க்ரீம் பூசிக் கொண்டிருந்தான். “செப்டிக் ஆகாம இருக்க” என்றான்…
“ஒன்னும் தேவல்ல…” என்றாள் அவனை எரிச்சலாக பார்த்த படி…
அவன் தான் விடாக் கண்டன் ஆயிற்றே… அவள் பின் கழுத்தில் களிம்பை பூசிவிட்டு தான் அவள் அருகே படுத்துக் கொண்டான்.
காயத்தை அளிப்பவனும் அவனே… மருந்திடுபவனும் அவனே… அவளால் அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை…
அவள் அவனிடமிருந்து எவ்வளவு தூரம் பிரிய நினைக்கிறாளோ… அவன் ஒரு படி மேலே அவளை நெருங்கி வருவான்… ஒன்றுக்கொன்று எதிரான சக்தி உள்ள காந்தங்கள் ஈர்க்கும் என்பதை அப்பேதை அக்கணம் அறியவில்லை….
அடுத்த நாள் மகிமா கண்விழிக்கும் போது அபின்ஞான் அலுவலகத்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்…
எழும்பும் பொழுதே தலைவலித்தது.
அவள் எழும்பியதைக் கண்டவன், “இங்கிருந்து போனும்னு ஏதாவது செஞ்சு வச்ச… எப்பவும் மாதிரி நான் நிதானமா பேசிட்டு இருக்க மாட்டேன்…. புரிஞ்சுதா” என்று அவள் அருகே வந்து அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடி கேட்க,
“ம்ம்” என்று தலையாட்டினாள் வேண்டா வெறுப்பாக…
“குட் கேர்ள்” என்றவன் அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு கிளம்பினான்.
அவன் சென்றதும் அலைபேசியை தேடி எடுக்க அதோ சைலன்டில் போடப்பட்டிருந்தது…
“இந்த ராட்சஷன் பார்த்த வேல போல” என்று நினைத்தவள் அலைபேசியை பார்க்க மகாதேவிடமிருந்து பல தவறிய அழைப்புகள் இருந்தன…