குளித்து விட்டு வருவதற்காக மேலே சென்றான். அப்போது எதேச்சையாக மலர்னிகாவின் அறை பக்கம் திரும்ப, அவளது அறைக் கதவு திறந்து இருந்தது. சரி போகலாம் என்று பார்க்க, அங்கே கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள் மலர்னிகா. அவள் விழுந்ததைப் பார்த்த காளையன் அறைக்குள் ஓடினான்.
கீழே விழுந்த மலர்னிகா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவள் கட்டிலில் சாய்ந்தவாறு இருந்தாள். உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. அவளது வாய், “என்னை விட்டுடு” என்று மட்டும் சொல்லிக் கொண்டு இருந்தது. காளையன் அவளருகில் வந்து, “இந்தா மலரு பிள்ளை, என்ன நடந்திச்சி உனக்கு? எதுக்கு இப்படி நடுங்கிற?” என்று அவளது கையை மெதுவாக பிடித்தான்.
அவனது தொடுதலில் நிமிர்ந்து பார்த்த மலர்னிகா, காளையனின் கையை தட்டி விட்டாள். மேலும் தனக்குள் சுருங்கிக் கொண்டாள். அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்தது. அவள் அருகில் அமர்ந்தான். மெல்ல அவளது தலையை வருடினான். இம்முறை எதுவும் செய்யவில்லை மலர்னிகா. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். “இங்க பாரு அம்மணி, எதுக்கு நீ பயப்படுற? இங்க நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. எங்களை மீறி எதுவும் நடக்காது. அதுவும் என்னை மீறி யாரும் எதுவும் பண்ண முடியாது.” என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல சொன்னான்.
மலர்னிகா எதுவுமே பேசவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் மெல்ல சாய்ந்து அவனது மடியில் படுத்தாள். அவனும் அதை தவறாக நினைக்கவில்லை. அவளது தலையை வருடியவாறு இருந்தான். அவனது மடியில் படுத்துக் கொண்டு, அவனையே பார்த்தபடி இருந்தவளின் கண்கள் மெதுவாக மூடியது. அவள் தூங்கியதும் அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன் செல்ல முற்படும் போது, அவனது சட்டையை பிடித்துக் கொண்டு இருந்தாள் மலர்னிகா. அதைப் பார்த்து சிரித்தவன், மெதுவாக அவளது கையில் இருந்த தனது சட்டையை எடுத்து விட்டு வெளியே சென்றான்.
காளையன் சொன்ன மாதிரி கதிர் ஊரின் மத்தியில் இருந்த ஆலமரத்தில் கண்ணப்பனை கட்டி வைத்துவிட்டு சென்றான். அவன் ஆலமரத்தில் கட்டி வைக்கும்போது அங்கிருந்தவர்கள் “என்னப்பா இவன் எப்ப ஜெயிலிலிருந்து வந்தான்? இவன் எதுக்காக இப்படி மரத்தில கட்டி வைக்கிறே?” என்று கதிரிடம் கேட்டனர். அதற்கு கதிரும், “என்ன ஏன் கட்டி வைக்கிறேன்னா கேக்கறீங்க, இவன் பண்ணி வைச்ச வேலை அப்பிடி. நம்மளோட வடக்குப் பக்கமா இருக்கிற அந்த காட்டுப்பக்கத்தில சாராயம் காய்ச்சிட்டு அதுக்கு முன்னுக்கு கடை ஒன்னு போட்டுட்டு, அந்தப் பக்கம் போறவங்க எல்லாருக்கும் வாயில் சாராயத்தை ஊற்றிவிட்டு இருக்கிறான்.
அதனாலதான் காளையன் அண்ணே இவனை மரத்தில கட்டி வைனு சொன்னாங்க. அதான் நான் வந்து கட்டி வச்சேன்.” என்று சொன்னான். அங்கிருந்தவர்கள் “அதுவும் சரிதான் இவனுக்கு நல்ல பாடம் சொல்லி இருக்கிறார்.”என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
அறைக்கு வந்து குளித்துவிட்டு வந்த காளையனுக்கு போன் வந்தது. போனை எடுத்தான்.” என்ன காளையா, ரொம்ப சந்தோஷமா இருக்க போல. இருக்காதா பின்னே ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிற அத்தையை பார்த்தால் சந்தோஷமாக இருக்காதா என்ன, உங்களோட குடும்பத்துக்கு மட்டும் பிரச்சனை படுத்தலான்னு பார்த்தேன், ஆனால் உங்க அத்தையும் வந்து எங்கிட்ட மாட்டிகிட்டாங்க.
ஐயோ பாவம் எங்கிட்ட இருந்து உன் அத்தை, உன் அத்தை பொண்ணு, உங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் காப்பாத்தறது ரொம்ப கஷ்டம் காளையா. “என்று எதிர்புறம் இருந்தவன் பேசினான்.
அதற்கு காளையனோ,” தைரியம் இருந்தால், எப்பிடி தைரியம் இருந்தால் என்கிட்ட நேர்ல மோதி பாருடா. அதைவிட்டுட்டு போன்ல பேசி பயமுறுத்திட்டு இருக்கிறியா? இதுக்கெல்லாம் பயப்படற ஆள் இந்த காளையன் இல்லை. உன்னால் என்ன முடியுமோ அத பண்ணு. அதை எப்படி தடுக்கணும், என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.” என்று ஃபோனை வைத்தான் காளையன். அவனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. அத்தை இன்னைக்கு தான் ஊருக்கு வந்தாங்க. அதுக்குள்ள எப்படி அவங்களை பத்தி இவனுக்கு தெரிஞ்சது? இது யாரு முதல்ல இதுக்கு சம்பந்தமான கண்டுபிடிக்கணும். என்று யோசித்துக் கொண்டே இருந்தான். பின்னர் நேசமதி அழைக்க கீழே வந்து சாப்பிட்டனர், ராமச்சந்திரனையும் தேவசந்திரனையும் சந்திக்க மில்லுக்குச் சென்றான்.
காமாட்சியும் நிஷாவும் நன்றாக ஊரை சுற்றிவிட்டு நுங்கு, பழங்கள் என்று சாப்பிட்டுவிட்டு இருவரும் களைப்போடு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
சென்னையில் சபாபதி பிளாட்டில் இருந்த மோனிஷா அவனிடம் சொல்லிவிட்டு தனது வீட்டுக்கு சென்றாள். அவள் சென்ற பிறகு சபாபதி ஊரில் இருக்கும் அவளது நண்பன் கீதனுக்கு போன் பண்ணினான். ” டேய் கீதன் ஊர்ல என்னடா நடக்குது?” என்றான்.
அதற்கு கீதன், “ஏன்டா உனக்கு தெரியாது, உன் அத்தையும் உன் அத்தை பொண்ணுங்க ரெண்டு பேரும் வந்து இருக்காங்க, இதுதான் இப்போதைக்கு ஊருக்குள்ள பேசிட்டு இருக்கிற விசயம்.” என்று சொன்னான். சபாபதி, “அத்தைக்கு ரெண்டு பொண்ணா? ” அப்படின்னு கேட்டான்,” ஆமாடா ஒன்னு அத்தை பொண்ணு இன்னொன்னு அத்தை தத்தெடுத்து வளர்த்த இன்னொரு பொண்ணு” என்று சொன்னான்.
அப்படியா கதை போகுது சரி சரி என்ன மாதிரி காளையன் என்ன செய்றான்?” என்று சபாபதி கேட்டான்.” அவன் எப்போதும் ஊருக்குள்ள மாஸ் தான்டா. நீ தான் வெளியூருக்கு போயிட்டு அங்க இங்க, ஊர்ல இருந்துட்டு இவன் மாஸ் பண்ணிவிட்டு திரிகிறான்.” என்று கீதன் சொன்னான். அதை கேட்ட சபாபதி,” அவன் என்ன பண்ணா என்னடா படிக்காத முட்டாள் தானே அவன். நான் நல்லா படிச்சிருக்கேன், இங்க சொந்தமா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண போற ஐடியாவில் இருக்கிறேன்டா.”
“என்னடா சொல்ற உங்க வீட்ல எல்லாம் சம்மதிப்பாங்களா? உன்னை வேலையே விட்டுட்டு வர சொல்லிட்டு இருக்காங்க” என்று கீதன் கேட்டான். அதற்கு சபா,” எனக்கு அவங்க சப்போர்ட் பண்ணாலும் இல்ல அவங்க எனக்கு சப்போர்ட் பண்ணலைன்னு சொன்னாலும் என்னால சுயமா பிஸ்னஸ் ஆரம்பிக்க முடியும். அதற்குரிய எல்லாமே என்கிட்ட இருக்கு. ” என்று சொன்னான்.” சரி சரி ஏதோ நீ நல்லா இருந்தா சரிதான். ” என்றான் கீதன். நான் அப்புறமா பேசுறேன் ஏதாவது ஊர்ல அப்டேட் இருந்தா எனக்கு போன் பண்ணு என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் சபாபதி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊