தேவதை 23
வசி தனது வீட்டிற்கு சென்றவன், குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். ஷவருக்கடியில் நின்றவனுக்கு தர்ஷியின் முகமும், அவளை எப்போதும் காதலுடன் பார்க்கும் தேவாவின் முகமும் நினைவில் வந்து வந்து சென்றது….
முதன் முதலில் தர்ஷியை ஏதேச்சையாக மோதிய பிறகு, சாரி கேட்க அவளின் முகம் பார்த்த அன்றைக்கே அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டது…
ஆனால் ஒரு முறை காலேஜில் ஜெய் தேவாவின் காதலை சொல்ல சொல்லி வற்புறுத்தி பேசிகிக்கொண்டிருக்கும் போதே, வசி அதை காதில் வாங்கிவிட்டான் அப்போதே அவனுக்கு சில உண்மைகள் புரிந்து விட்டது… தேவாவின் காதலுக்கு குறுக்கே நிற்க கூடாது என்ற எண்ணம் மனதில் பதிந்தாலும், அவனால் தர்ஷியிடம் பேசாமல் இருக்கவோ, அவளுக்கு தன் இதயத்தில் இடம் கொடுக்காமலோ இருக்க முடியவில்லை… நாளைடைவில் காதலாக மாறவே, இன்று தேவாவின் உண்மையான ஆழமான காதலை படித்து உணர்வுபூர்வமாய் உணர்ந்தவனுக்கு இதயம் ரணமாய் வலித்தது….
இது தவறு, அவனை விட என் காதல் ஒன்றும் பெருசல்ல, அவள் எனக்கானவள் இல்லை என மனதை திடப் படுத்திக் கொண்டான், ஆனாலும் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட,
சில சமயங்களில் மனதின் எண்ணங்கள் வாய்மொழியாய் தென்படுவது கிடையாது, கண்ணீர் துளிகளால் தான் வெளிப்படும், தன் காதலுக்கு ஆயுள் கம்மி, வந்த சில நாட்களிலே தடம் தெரியாமல் அழிந்து விட்டது, மனதில் உள்ள வலியை நீருக்கடியில் கண்ணீரில் கரைத்துக் கொண்டு இருந்தான்….
எனக்கே இப்படி வலிக்கிறதே, தேவாவிற்கு எப்படி இருக்கும்!? என அந்நிலையிலும் யோசித்துப் பார்த்தான்..
தேவாவுடன் தர்ஷினி பைக்கில் பீச்சிற்கு சென்றுக் கொண்டிருக்க, சட்டென யாரையோ பார்த்தவள், டேய் தேவா வண்டியை ஸ்டாப் பண்ணு பண்ணு என அவன் தோள்களை பற்றி குலுக்கினாள்…
என்னடி என்ன ஆச்சு? என சட்டென வண்டியை நிறுத்தியது தான் தாமதம், குரங்கு குட்டி போல் தாவி இறங்கி ஓடினாள்.,
ஏய் பைத்தியம் எங்க டி ஓடுற? கத்தியப் படியே பைக்கை ஸ்டாண்ட் போட்டவன், அவள் பின்னால் தேவாவும் அரக்க பறக்க செல்ல, தர்ஷினி ஒரு ஐஸ் கிரீம் பார்லர் முன்னே நின்னு கண்ணாடி வழியே எட்டி பார்த்தாள்..
தேவா கடுப்பானவன், லூசு ஐஸ் க்ரீம் வேணும்னு கேட்டா வாங்கி தர போறேன், அதுக்கு எதுக்கு இப்டி ஓடி வர, அறிவு இருக்கா டி? என பற்களை கடித்து திட்ட,
தேவா அங்க பாரு டா, இந்த ஜெய் ஒரு பொண்ணு கூட உட்காந்திருக்கான் என முட்டை கண்களை விரித்து அதிர்ச்சியாய் சொல்ல, தேவா அவள் சொன்ன இடத்தில் பார்க்க, சாட்சாத் ஜெய் தான் ஸ்ருதியுடன் அமர்ந்திருந்தான்.
அவர்களை பார்த்ததும் தேவாவின் முகம் மாறியது, நம்மளே பாவம் இவனை மாட்டி விட்டோமே! சரி சமாளிப்போம் என எண்ணியவன், லூசு கண்ணு கோளாறு டி உனக்கு கண்ணாடி வழியா பாக்குறல அதான் உனக்கு அப்டி தெரிது, நீ வா நாம பீச்சுக்கு போவோம் என அவள் கைகளை பற்றி இழுக்க…
அவன் கையை உதறிவிட்டவள், லூசா டா நீ அவன் பைக்க பாரு அங்க தான் நிக்குது இது ஜெய் தான் கண்டிப்பா வா டா உள்ள போய் பாப்போம் என சொல்லவும், தேவா அதெல்லாம் வேணாம் வாடி போவோம் என அழைத்து செல்லப்பார்க்க அவன் முகத்தை உற்று நோக்கியவள்..
சரி தான் என்னமோ நடக்குது, எனக்கு தெரியாம என்ன பண்றீங்க? ரெண்டு பேரும்… நா உள்ள போய் பாக்குறேன், இந்த விஷயத்துல உனக்கு ஏதும் தெரிஞ்சி என்கிட்ட மறச்சி இருந்த! இனி லைஃப் முழுக்க உன்கிட்ட பேச மாட்டேன் என்றதும் தேவாவிற்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது… உஃப் என உதடு குவித்து ஊத, அவன் முகத்தை உற்று பார்த்தாள் தர்ஷி….
உன் முகமே சொல்லுது டா நீயும் என்கிட்ட ஏதோ மறைக்கிறல! குரலில் ஆதங்கம் தெரியவும்… பைத்தியம் எனக்கு எதுவும் தெரியாது என பொய் சொல்லி வைத்தான்…
ஓஹ், உனக்கு ஏதும் தெரியாதுல சரி அப்ப வா, அவனை போய் பாப்போம்
விடு டி சொல்றதுனா அவனே சொல்லிருக்க மாட்டானா? எதுக்கு இது பெருசு படுத்துற?
என்னடா இப்டி சொல்லிட்ட! என புருவம் உயர்த்தியவள்.. நா மட்டும் வசிகிட்ட பேசுனது, நம்பர் குடுத்த விஷயம் எல்லாம் ஷேர் பண்ணேன்லே, நீங்க மட்டும் ஏண்டா இப்டி என்கிட்ட எல்லாத்தையும் மறைக்கிறீங்க? இல்ல என்னால இத எத்துக்க முடியல, இப்ப அவனை போய் என்ன பண்றேன்னு பாரு என கோவமாய் அந்த பார்லருக்குள் நுழைய
தேவா வேணாம் டி ப்ளீஸ் அப்புறம் பேசிக்கலாம் என கெஞ்சியப் படி அவள் பின்னாலயே சென்றான்…
வேக எட்டுகளாக ஜெய் அமர்ந்த இடத்திற்கு சென்று நின்றதும், ஸ்ருதி தான் அவளை முதலில் பார்த்தாள்..
ஜெய் உன் பிரெண்ட்ஸ் வந்திருக்காங்க பாரு தலையாட்டி அவன் பின்னால் கண்ணை காட்ட, பிரெண்ட்ஸா என திரும்பிப் பார்த்தவனுக்கு அங்கு காளியாய் நின்றிருந்த தர்ஷி தெரிந்தாள்…
முகம் சடுதியில் மாற, தேவாவை பார்த்தான், தேவா கழுத்தை வெட்டுவது போல் சைகை காட்ட, ஐயோ இவ எங்க இங்குட்டு வந்தா! என பயந்தவன்
ஹாய் தர்ஷி, ஹாய் டா தேவா வாங்க ஐஸ்கரீம் சாப்பிடலாம் என கேசுவாலாக அழைத்து பார்த்தான், தர்ஷி கைகளை கட்டி நின்றுக் கொண்டு அவனை முறைக்க,
எக்ஸ்கியூஸ்மி மேடம், கொஞ்சம் அங்குட்டு போய் உட்காறீங்களா? இவங்க என் பிரெண்ட்ஸ் நாங்கல்லாம் சேர்ந்து உட்கார்ந்து ஏதாச்சும் பேசிகிட்டு இருப்போம் நீங்க வேற இடத்துல உட்காரீங்களா? என ஸ்ருதியை பார்த்து கேட்க
அவள் அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் அப்படியே இருந்தாள்.. என்னமா நடிக்கிறான்? என தேவா வாயில் விரல் வைத்தவன், ஆனா டோட்டலி வேஸ்ட், ஏனா ஏற்கனவே நீ மாட்டிகிட்ட தங்கம் என்றாவாரு தான் நின்றிருந்தான்…
என்னடி அப்டி பாக்குற? பாவம் இடம் இல்லாம இங்க வந்து உட்காரவானு கேட்டாங்க? சரி உட்காருங்கனு சொன்னேன் என பொய்களை அள்ளி தெளித்தான்…
அப்படியா என ஒற்றை புருவம் உயர்த்தியவள், கடை முழுதும் கண்களால் அலச, ஒரு ஈ காக்காய் இல்லை, இவர்கள் இரண்டு பேரையும், வேலை பார்க்கும் பெண்ணையும் தவிர்த்து….
ஜெய் அவள் பார்வையில் புரிந்துகொண்டவன், இல்ல இப்ப தான் அம்புட்டு கூட்டமா இருந்துச்சி, எல்லாம் இப்ப தான் போனாங்க நீங்க கரெக்ட்டா உள்ள வரீங்க என அசடு வழிய, ஸ்ருதி வாயை பிளந்தவாறு தான் உட்கார்ந்திருந்தாள்…
நம்ப மாட்டியா டி என ஜெய் வாய் விட்டே அவளிடம் கேட்க, தர்ஷி ஆத்திரத்தில் டம்ப்ளரில் இருக்கும் தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் வீசவும், ஸ்ருதிக்கு கோவம் வந்து விட்டது…
தேவா சட்டென தர்ஷியின் கையை பிடித்துக் கொண்டான்…
ஆனால் ஸ்ருதி எழுந்தவள், இங்க பாரு தர்ஷினி எதுக்கு இப்டி பப்ளிக் பிளேஸ்ல கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம நடந்துக்குற? நாங்க அப்டி என்ன தப்பு பண்ணிட்டோம்? என கோவமாய் அவளிடம் சண்டைக்கு சென்றாள்…
தர்ஷிக்கு மேலும் அது அவமானத்தை கொடுக்க,விழி விரித்தவள் விரல் நீட்டி ஸ்ருதியிடம் ஏய் இங்க பாரு இது எனக்கும் என் பிரெண்டுக்கும் இருக்குற பிரச்சனை இதுல நீ தலையிடாத என பற்களை கடித்தாள்…
இங்க பாரு பிரெண்ட்ஷிலாம் வேற எங்கயாச்சும் வச்சிக்க, நாங்க ரெண்டு பேரும் தான் சேர்ந்து வந்தோம் இப்ப என்ன அதுக்கு ஓவரா சீன் போடுற?
அடியேய் வாய மூடு டி என ஜெய் ஸ்ருதியை பிடித்தான்,,
தர்ஷி அவளை அடிக்க கை ஓங்கவும், தேவா தடுத்து விட்டான்…ஏய் இரு டி அப்புறம் பேசிக்கலாம், எதுக்கு இப்டி பிஹேவ் பண்ற? என அடக்க பார்த்தான்
தள்ளு டா அவ என்ன பேச்சு பேசுறா? அவன் என் பிரெண்ட் அவனை அடிக்க திட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு, நீ யாரு அதை கேட்க..? என சத்தம் போட
நானும் அவனும் லவ் பண்றோம் எங்களுக்கு பிறகு தான் பிரெண்ட்ஷிப் என பதிலுக்கு ஸ்ருதி சொல்லவும் ஜெய் அதிர்ச்சியாக ஸ்ருதியை பார்த்தான்…
அவன் மட்டும் அல்ல, தர்ஷிக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது… உறைந்து போய் அப்படியே நின்றிருந்தாள்…
ஜெய் தர்ஷினியின் கையை பிடித்தவன், ஏய் லூசு அவ சும்மா உன்ன வெறுப்பேத்த சொல்றா டி, நம்பாத என புரியவைக்க முயல ஸ்ருதிக்கு அது மேலும் அவமானமாய் இருந்தது…
ஏய் சே அசிங்கமா பொய் பேசாத, என் மேல லவ் இல்லாம தான் இங்க வந்தியா? இங்க பாரு தர்ஷினி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம், இது தான் தேவாவுக்கு தெரியுமே! ஏன் அவன் உன்கிட்ட சொல்லலையா? என கேட்க
தேவாவிற்கு பயத்தில் உடல் சில்லிட்டது.. உங்க பிரச்சனையில என்ன ஏண்டி இழுத்து விடுறீங்க? என்பது போல் ஸ்ருதியை பார்த்தான்…
தர்ஷி கண்கள் சிவந்து தேவாவை அடிப்பட்ட பார்வை பார்த்தாள், தேவா தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்…
கண்கள் மூடி பல்லைக் கடித்த தர்ஷினி ஜெய்யை பார்த்து, நீ என்ன கருமத்த வேணும்னாலும் பண்ணிட்டு போ, எந்த நாய வேணும்னாலும் கூப்டு சுத்து நானும் உனக்கு பிரெண்ட் தான அது ஏன் என்கிட்ட மட்டும் மறைச்ச? என கத்தவும்
ஸ்ருதி உடனே இங்க பாரு நாய் னு லாம் பேசுற வேலை வசிக்காத, கடுப்பாகிருவேன்.. நீ மட்டும் வசி கூட சுத்தலாம் தப்பு இல்ல,! ஆனா ஜெய் சுத்தக் கூடாதா? என கேட்டு முடிக்கவும் கீழே கிடந்தாள் ஸ்ருதி…
ஜெய் தான் ஆத்திரத்தில் அவளை அறைந்திருந்தான்… கன்னம் எரிய ஸ்ருதி கண்களில் கண்ணீருடன் ஜெய்யை பார்த்தாள்…
உன்கிட்ட நிறைய முறை சொல்லிருக்கேன், எங்க பிரெண்ட்ஷிப் குள்ள நீ வரக்கூடாதுனு புரிஞ்சிக்க மாட்டியா? என கை நீட்டி கேட்க தேவாவிற்கு ஸ்ருதியை பார்க்க பாவமாய் இருந்தது…
ஏண்டா என ஜெய்யை கேட்டு விட்டு ஸ்ருதியின் கை பிடித்து தூக்கி விட்டான்…தர்ஷினி கண்கள் ஸ்ருதி மேல் ஏளனமாய் பரவ அது ஸ்ருதிக்கு பெருத்த இழிவாக இருக்கவே ஜெய்யிடம் திரும்பி
அவ என்ன நாய் னு சொல்லுவா அது உனக்கு தப்பா தெர்ல? ஆனா நா பேசுனது உனக்கு தப்பா தெரிதுல? நீ உன் பிரெண்ட்ஷிப் மேல வச்சிருக்குற மரியாதைய பாத்து தான் நா உன்ன லவ் பண்ணவே ஆராமிச்சேன், ஆனா நீ ச்சே வேஸ்ட் என் லவ்வுக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன், இனி என் மூஞ்சிலயே முழிக்காத, நீ எனக்கு வேணாம் என்றதும் ஜெய்க்கு இதயம் சுருக்கென குத்துவது போல் வலித்தது..
ஸ்ருதி கண்களை துடைத்துக் கொண்டவள், தர்ஷியின் முகத்தை பார்த்து, ரொம்ப சந்தோசப்படாத, உன்ன பாத்தா தான் எனக்கு பாவமா இருக்கு ஏன்னு தெரியுமா? என்றதும் தர்ஷி மூக்கு விடைக்க அவளை பார்த்தாள்…
ஹ்ம்ம் என கசந்த புன்னகை சிந்தியவள், உன் பக்கத்துல இருக்குற அன்பே உன் கண்ணுக்கு தெர்ல, நீ எல்லாம் காதலிக்கவும் தகுதி இல்ல, பிரெண்டா இருக்கவும் தகுதி இல்ல என்றவள் தேவாவை ஒரு கணம் பார்த்து விட்டு அவ்விடம் விட்டு சென்றாள்…
அவள் செல்வதையே பார்த்த ஜெய்க்கு தான் இதயம் ரணமானது.. அவள் பின்னால் சென்று அவளை சமாதானப் படுத்த துடித்தான்.. ஆனால் தர்ஷியை பார்த்து நின்ற இடம் விட்டு நகரவில்லை…
தொடரும்ம்…..
நிறைய பேர் படிக்கிறீங்க தயவு செய்து staars குடுத்துட்டு போங்க ப்ளீஸ்… 🙏🙏🥰🥰🥰