கீழே விழுந்த தொலைபேசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனின் விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது.
சிறிது நேரம் மூச்சு விடக்கூட சிரமப்பட்டவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
கருணாகரன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன..? அப்படி தொலைபேசியில் கமிஷனர் என்னதான் கூறினார்.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவர் கீழே சிதறி விழுந்த தொலைபேசியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென,
“நோ.. நோ.. அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்னோட பொண்ணுக்கு எதுவும் ஆகி இருக்காது எனக்கு நல்லா தெரியும் கடவுளே..! ஏன் இப்படி என்ன வதைக்கிற..” என்று வாய்விட்டுக் கதறியவர், சிறிது நேரத்தின் பின் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு மேலதிக தகவலை அறிந்திட கீழே விழுந்த தொலைபேசியின் பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து பொருத்திப் பார்த்தார்.
ஆனால் தொலைபேசி விழுந்த வேகத்தில் சிதறிய பாகங்கள் உடைந்து போனதால் அதனை பொருத்த முடியாது போனது.
தனது இக்கட்டான நிலைமையில் தொலைபேசியும் துரதிஷ்டவசமாக உடைந்ததை எண்ணி மேலும் கோபமுற்றவர் அந்த தொலைபேசியை ஆவேசமாகத் தரையில் தூக்கி அடித்தார்.
மனமும் உடலும் வேதனையில் உருகித் தவிக்க இயலாமையுடன் கீழே மண்டியிட்டு முகத்தில் கை வைத்து குலுங்கிக் குலுங்கி அழுதவர், தரையில் தனது கையால் ஓங்கிக் குத்தி அப்படியே சரிந்து சுவற்றில் சாய்ந்தபடி,
“நிவேதா ப்ளீஸ் எங்க இருந்தாலும் என்னை தேடி வந்திடுமா என்னால முடியல உன்ன பாக்காம இருக்க முடியல இவங்க சொல்றதெல்லாம் நான் நம்பவே மாட்டேன் உனக்கு ஒன்னும் ஆகியிருக்காது எனக்கு தெரியும் ப்ளீஸ் அப்பாவ தேடி வந்துடுமா..” என்று மனம் விட்டு கதறினார்.
அவர் அழுவதைப் பார்த்து அந்த வழியால் செல்லும் தாதியர்களும், வைத்தியர்களும், நோயாளிகளும் அவரை வேடிக்கையாகப் பார்த்தனர்.
காயத்ரியின் அறை பூட்டி இருந்ததால் வெளியே நடக்கும் எந்த விடயமும் அவரது காதிற்கு விழவில்லை. ஆனால் அருகில் இருந்த கார்த்திகேயனுக்கு ஏதோ சந்தேகம் முளைத்தது.
தொலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற கருணாகரன் ஏன் இன்னும் உள்ளே வரவில்லை ஏதாவது பிரச்சனையோ என்று அவன் மனதில் எண்ணிக் கொண்டிருக்கும் போது அவனது தொலைபேசியும் சினுங்கத் தொடங்கியது.
யார் என்று எடுத்துப் பார்த்தவனுக்கோ புருவங்கள் முடிச்சிட்டன.
உடனே காயத்ரியை பார்த்து,
“எக்ஸ்கியூஸ் மீ மேடம் இம்போர்ட்டனான கால் வருது பைவ் மினிட்ஸ்ல பேசிட்டு வந்துர்ரன்..”
“சரிப்பா அவர் வெளியே நின்னா உள்ளே கொஞ்சம் வர சொல்லு..” என்று கருணாகரனை அழைத்து வரும்படி காயத்ரி பணிக்க சரியென தலையாட்டி விட்டு வெளியே வந்த கார்த்திகேயனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
கருணாகரன் நிலையை கண்டு மனதளவில் பரிதவித்து போனான் கார்த்திகேயன். ஓடிச்சென்று அவரது தோலை பற்றித் தூக்கி,
“என்ன சார் இது முதல் எழுந்திரிங்க எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க என்ன ஆச்சு ஏன் சார் இப்படி நடந்துக்குறீங்க..? ” என்று கார்த்திகேயன் கூறியதும், உடனே அங்கு சிதறிக் கிடந்த தொலைபேசியின் பாகங்களை எடுத்து கார்த்திகேயனது கையில் திணித்து,
“இந்…த இந்த போன்ல கமி…ஷனர் கமிஷனர் நம்ம நி…வேதா நிவேதா..” என்று எதையோ கூற முற்பட்டவர், அதனை கூற முடியாமல் வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்த்து எதனையோ சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார்.
உடனே அவரைக் கட்டி அணைத்து அவரது முதுகில் அக்கறையுடன் அன்புடன் தடவியபடி,
“இங்க பாருங்க சார் நம்ம நிவேதாவுக்கு எதுவுமே ஆகியிருக்காது அங்க மேடம் இப்படி உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது நீங்களும் இப்படி மனம் உடைந்து ரொம்ப டீப்ரஷன்ல இருந்தீங்கன்னா மேடத்த யார் பார்த்துக்கிறது நிவேதாவை கண்டுபிடிக்கிறது இனி என்னோட வேலை அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லி நீங்க சும்மா மனசு போட்டு குழப்பிக்காதீங்க
கமிஷனர் அங்கிள் தானே கால் பண்ணி இருக்கிறது எனக்கும் எடுத்து இருக்காரு என்ன விஷயம் என்று முதல் பொறுமையா கேட்போம் நீங்க வீணா டென்ஷன் ஆகாதீங்க ஓகே யா..?” என்று சிறுபிள்ளை போல அவருக்கு ஆறுதல் அளித்துவிட்டு அணைப்பிலிருந்து விடுபட்டவன்,
தனது தொலைபேசியை பார்க்க மூன்றாவது தடவை கமிஷனர் அழைப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அதனை கவனித்த கருணாகரன்,
“கார்த்தி ப்ளீஸ் எடுத்து பேசுங்க என்னால முடியல அவரு நிவேதா பற்றி..” என்று சொல்ல வந்தவர் அப்படியே கண்களை மூடி வார்த்தைகளை விழுங்கினார்.
“ஓகே சார் நீங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க நான் பேசிட்டு சொல்றேன்..” என்று கார்த்திகேயனை அவ்விடத்தை விட்டு நகர,
“இல்ல கார்த்திக் இங்கேயே இருந்து பேசு..” என்று கூற, உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
அழைப்பை ஏற்றதும் கமிஷனர் மிகவும் கோபத்துடன்,
“கார்த்தி கருணா எங்க போயிட்டான் அவனுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல வர கோல் திடீர்னு கட் ஆயிடுச்சு அதுக்கப்புறம் திருப்பி எடுக்க ரீச் ஆகவே இல்லை அவனோட போனுக்கு என்னதான் ஆச்சு..?
“அங்கிள் அவரு பக்கத்துல தான் இருக்காரு நீங்க சொன்ன விஷயத்த கேட்டு தான் அவர் கொஞ்சம் டிஸ்டரப்டா இருக்காரு..”
“அச்சோ அவன் கிட்ட சொல்லுங்க ஒரு கார் ஆக்சிடென்ட் ஆயிருக்கு இந்த கார் அவனோட தானே செக் பண்ணனும் அதுக்கு தான் வரச் சொன்னனா அதோட கார் முழுவதும் எரிஞ்சிருச்சு அதுல இருக்க நம்பர் பிளேட் ஆக்சிடென்ட் பட்டதுல எங்கேயோ விழுந்துடுச்சு போல கிடைக்கல
அதுக்குத்தான் கால் பண்ணினேன் அவனை கொஞ்சம் நேர்ல வந்து பார்த்துட்டு போகச் சொல்லுங்க இது ஜஸ்ட் கன்ஃபர்மேஷன் தான் இதுக்கு போய் ஏன் அவன் குழம்பிக்கிட்டு இருக்கான்
கார்த்தி சீக்கிரமா அவனை வர சொல்லு நிறைய போர்மாலிட்டி எல்லாம் இருக்கு அதெல்லாம் நாங்க முடிக்கணும் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது..”
“ஓகே அங்கிள் அவர நான் இப்பவே அழைச்சிட்டு வாரேன்..”
“கார்த்தி ஆக்சிடென்ட் நடந்த லொகேஷன் உனக்கு போன்ல அனுப்புறேன் இங்க சீக்கிரமா வந்துட்டு போங்க அவனுக்கு சொல்லு முதல் சந்தேகத்தில் தான் அங்கு கூப்பிடுறோம்னு..”
“ஓகே அங்கிள் டென் மினிட்ஸ்ல நாங்க அங்க இருப்போம் நீங்க லொகேஷன் மட்டும் அனுப்பி விடுங்க..” என்று கூறியதும் கமிஷனர் அழைப்பை துண்டித்தார்.
“தாயின் முகத்தைப் பார்க்கும் பசு கன்று போல கார்த்திகேயன் கூறப்போகும் விடயத்தை கேட்பதற்காக ஆவலாக எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்த்து நின்றார் கருணாகரன்.
“என்ன சார் இது ஒரு சின்ன விஷயம் ஆக்சிடெண்ட் பட்ட கார் நம்மளோடதான்னு செக் பண்ண தான் கூப்பிட்டு இருக்காங்க இதெல்லாம் ஒரு விஷயம்னு இதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆனால் எப்படி வாங்க அது நம்மட காரா இருக்கவே இருக்காது நாம எதுக்கும் போய் இல்லன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு உடனே வந்துடுவோம்..” என்று கார்த்திகேயன் மிகவும் இயல்பாக கூற, அப்போதுதான் கருணாகரனின் இதயத்துடிப்பு சீராகத் துடித்தது.
“உண்மையாவா கார்த்தி அது நம்மட காரா இருக்காது தானே..!” என்று மீண்டும் அவர் உணர்ச்சிவசப்பட,
“என்ன சார் இது அஞ்சு வயசு பையன் மாதிரி அடம்பிடிக்கிறீங்க போய் பார்த்தா தெரியப் போகுது வாங்க போவோம் அது நம்மட காரா இருக்கவே இருக்காது ஓகேயா..” என்று கூறிவிட்டு கார்த்திகேயன் முன்னே நடக்க கருணாகரனும் அவ்விடத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்.
எதையோ பேசிக்கொண்டு நடந்து சென்ற கார்த்திகேயன் கருணாகரன் தன்னுடன் வரவில்லை என்று உணர்ந்ததும் திரும்பிப் பார்க்க அவ்விடத்திலேயே கார்த்திகேயன் பார்த்துக் கொண்டிருந்தார் கருணாகரன்.
“என்ன சார் வாங்க சீக்கிரமா கிளம்புவோம்..”
“காயத்ரி..” என்று கூற அப்போதுதான் காயத்ரியின் மீது கார்த்திகை எனக்கு வந்தது.
‘சரி மெதுவாக ஏதாவது பொய்களை கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்று விடுவோம்..’ என்று எண்ணிய கருணாகரன் காயத்ரியின் அறையை மெதுவாக திறக்க காயத்ரி ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அதனால் அவரை தொந்தரவு செய்யாமல் மெதுவாக வைத்தியநாதன் மருத்துவரிடம் அனைத்து விடயங்களையும் கூறிவிட்டு புயல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு வெளியேறி விபத்து நடந்த இடத்திற்கு வேகமாக விரைந்தனர்.
கார்த்திகேயனுக்கும் கருணாகரனுக்கும் இதயம் பலமாக துடிப்பது போலவே இருந்தது. விபத்து நடந்த இடத்தில் எதுவுமே மனதை பாதிக்கிற மாதிரி நடக்கக் கூடாது என்று இருவரும் மனதார வேண்டிக்கொண்டனர்.
சொன்னபடி 10 நிமிடங்களிலேயே விபத்து நடந்த இடத்தை அடைந்த இருவரும் காரை விட்டு வெளியே இறங்கி வந்து நேரே அங்கு புகை மூட்டத்துடன் கருகருவென ஒரு கார் கவுந்து கிடந்ததைப் பார்த்த இருவருக்கும் பயப்பந்து வயிற்றுக்குள் சுழல்வது போலவே இருந்தது.
என்ன வாசகர்களே அந்தக் கார் நம்ம நிவேதாவோட காரா இருக்குமோ..!