அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(3)

4.6
(11)

“யாரு ரூபி அந்த பொண்ணு என் அண்ணனையே பார்த்துட்டு இருந்துச்சு” என்று அர்ஜுனன் கேட்டிட , “என்ன சொல்லுறீங்க அர்ஜுன் நிஜமாவா” என்று கேட்டாள் ரூபிணி.

 

“ஆமாம்” என்று அவன் கூறிட , “இவள் தான் உங்க அண்ணனுக்கு நான் பார்த்த பொண்ணு. என் ரிலேட்டிவ் அபிராமி சித்தியோட பொண்ணு” என்றாள் ரூபிணி.

 

“அவளுக்கு அப்போ உங்க அண்ணன் மேல் இன்ட்ரஸ்ட் இருக்கும் போலையே அவங்க அம்மா கிட்ட உடனே பேசிருவோம்” என்றாள் ரூபிணி.

 

“ஏய் அவசரப் படாதே டீ என் அண்ணன் அக்சப்ட் பண்ணனும் அதனால் கொஞ்சம் பொறுமையா இரு” என்று கூறிய அர்ஜுன், “பாப்பாக்கு அட்மிஷன் இருக்கு‌ போகலாமா” என்று கேட்டிட அவளும் கிளம்பினாள்.

 

“மயூ என்ன உன் கவனம் எங்கேயோ இருக்கு போல” என்று அவளை உலுக்கினாள் சங்கீதா. “என்ன கீதா மிஸ்” என்று அவள் கேட்டிட, “சரியா போச்சு மயூ பத்து நிமிஷமா மயூரி, மயூரினு‌ உன்னை கூப்பிட்டுட்டு இருக்கேன்” என்றாள் சங்கீதா.

 

“அப்படியா ஸாரி கீதா மிஸ்” என்று அவள் கூறிட , “உன் ஸாரி எல்லாம் வேண்டாம்பா நீங்க ஸ்டிச் பண்ண கொடுத்த ஜாக்கெட் ஃபிட்டிங் எல்லாம் கரெக்டா இருக்கானு செக் பண்ணிட்டு நாளைக்கு சொல்லுங்க” என்றாள் சங்கீதா.

 

“ஓகே மிஸ் கண்டிப்பா” என்ற மயூரி , “உங்க அக்கவுண்ட்டுக்கு ஜீபே பண்ணிடுறேன்” என்றிட புன்னகைத்த சங்கீதா சென்று விட்டாள்.

 

மயூரிக்கு தான் மனம் ஒரு நிலையிலேயே இல்லை. “அது எப்படி பார்த்த உடனே லவ் வரும்” என்று அவள் யோசிக்க , “அப்போ அவன் மேல் உனக்கு லவ் இல்லையா” என்று அவளது மனசாட்சி கேள்வி கேட்டது. “அப்படி எல்லாம் சொல்ல முடியாது அவனை ஏனோ பிடிச்சிருக்கு” என்று தனக்குள் கூறியவள் சிரித்தாள்.

 

அன்று மயூரி பசங்களிடம் கூட ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொள்ள வில்லை. அனைவரிடமும் புன்னகை முகமாகவே நடந்து கொண்டிருந்ததாள்.

 

“ஸார்” என்ற சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம், “சொல்லுங்க சிவக்குமார்” என்றான் அரவிந்தன்.

 

“போதை மருந்து கும்பல் பத்தி நீங்க கேட்ட இன்பர்மேசன்” என்று ஒரு ஃபைலை நீட்டினான் சிவகுமார்.

 

“ட்ரக்ஸ் கல்ச்சர் ரொம்ப அதிகமாகிருச்சு ஸார் சிட்டியில் நிறைய இடத்தில் பப்ல ட்ரக்ஸ் டிஸ்ட்ரிப்யூட் பண்ணுறதா இன்பர்மேசன் கிடைச்சுருக்கு” என்ற சிவக்குமாரிடம் , “அப்போ அங்கே போய் அவங்களை அரஸ்ட் பண்ணலாமே” என்றான் அரவிந்தன்.

 

“முடியாது சார் எல்லா பப்புமே மினிஸ்டர்.புருஷோத்தமன்  சாரோட பினாமி‌ பெயரில் இருக்கு அங்கே பக்காவான எவிடன்ஸ் இல்லாமல் போனால் பிரச்சினையாகிரும் அதான் சார்” என்றான் சிவக்குமார்.

 

“ஓகே மிஸ்டர் சிவக்குமார் இந்த கேஸ்ல தேவையான எல்லா எவிடன்ஸையும் கலெக்ட் பண்ணலாம்” என்று அந்த கேஸை பற்றிய தகவல்களை திரட்ட ஆரம்பித்தான் அரவிந்தன்.

 

“என்ன இது மதியம் தான் சாப்பிட்டோம் இப்போ அகைன் பசிக்குதே என்று யோசித்த மயூரி சரி ஒரு ஜூஸ் குடிக்கலாம்” என்று அந்த ரெஸ்டாரன்ட் உள்ளே சென்றாள்.

 

அங்கே எல்லா டேபிளும் நிறைந்து வழிய கடுப்பானவள் கிளம்ப எத்தனிக்க ,அங்கே ஒரு டேபிளில் மட்டும் ஒருவன் இருக்க அங்கே தான் இடம் இருக்கு என்று நினைத்தவள், “பசிக்குது மயூ ஒருத்தன் தானே உட்கார்ந்து இருக்கான் போயி உட்காரு” என்று நினைத்தவள் சென்று அமர்ந்தாள்.

 

“எக்ஸ்கியூஸ்மீ ஸாரி வேற எங்கேயும் இடம் இல்லை லைட்டா பசிக்குது இங்கே உட்கார்ந்துகட்டுமா” என்று கேட்ட பிறகு தான் அவனை நன்றாக பார்த்தாள்.

 

அரவிந்தன் தான் அமர்ந்திருக்க, “அட நம்மாளு” என்று நினைத்தவள், அவனைப் பார்த்து புன்னகைக்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் ஆர்டர் செய்த ஜூஸை குடித்துக் கொண்டிருந்தான்.

 

“மேடம் என்ன சாப்பிடுறீங்க” என்று வெய்ட்டர் கேட்டிட, “மாதுளை ஜூஸ்” என்று அவள் கூறிட வெயிட்டரும் எடுத்து வர சென்று விட்டான்.

 

“ஹாய்” என்று அவள் கூறிட அவளை நிமிர்ந்து பார்த்தான் அரவிந்தன். “ஐ யம் மயூரி” என்றவள் “ஸாரி” என்றாள்.

 

“எதற்கு ஸாரி” என்று அவன் கேட்டிட, “காலையில் ஜிம்ல” என்று அவள் தயங்கிட, “இட்ஸ் ஓகே” என்றவன் கருமமே கண்ணாக ஜூஸை குடித்துக் கொண்டிருந்தான்.

 

“சரியான ரோபோ இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாது போல” என்று நினைத்தவள் ஜூஸ் வரவும் எடுத்துக் குடித்துக் கொண்டே அவனை குறு குறு வென பார்த்தாள்.

 

“எக்ஸ்கியூஸ்மீ என்ன பார்க்கிறீங்க” என்று அவன் கேட்டிட, “உங்களை தான் பார்க்கிறேன்” என்றாள் கூலாக. “வாட்” என்றவனிடம், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதான் சைட் அடிச்சுட்டு இருக்கேன்” என்று அவள் கூறிட அவனோ கடுப்புடன் அவளை முறைக்க, “சிரிச்சா இன்னுமே அழகா இருப்பீங்க” என்றவள், “நான் மயூரி. உங்க பெயர் என்ன?” என்றவளை முறைத்தவன் வெயிட்டரிடம் பணம் கொடுத்து விட்டு எழுந்து கொண்டான்.

 

“ஒரு ஃபைவ் மினிட்ஸ் பேசலாமே அதற்குள்ள ஏன் எழுந்து போறீங்க” என்றாள் மயூரி. அவளை முறைத்து விட்டு அவன் கிளம்பிட அவளும் ஜூஸுக்கு பில் பே செய்து விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

 

“ஹலோ போலீஸ்கார் கொஞ்சம் நில்லுங்க” என்று அவள் அவனை விரட்டிக் கொண்டு வர “எக்ஸ்கியூஸ்மீ என்ன கொழுப்பா” என்றான் அரவிந்தன்.

 

“இல்லை எனக்கு சுகர், ப்ரசர், கொலஸ்டிரால் எதுவும் கிடையாது” என்றாள் மயூரி. அவளை முறைத்த அரவிந்தன் “என்ன திமிரா பப்ளிக் ப்ளேஸ்ல இன்டீசன்டா பிகேவ் பண்ணிட்டு இருக்கீங்க” என்றான் அரவிந்தன்.

 

“இன்டீசன்டா நான் என்ன பிகேவ் பண்ணினேன்” என்றாள் மயூரி. அவளை முறைத்தவன் “என்ன வேண்டும் உனக்கு” என்றான். “நீங்க தான் வேண்டும்” என்று அவள் கூறிட அவளை கோபமாக பார்த்தவன் ஏதோ சொல்ல வர, “ஐ மீன் உங்க ப்ரண்ட் சிப், உங்க நேம்” என்று அவள் கூறிட , “இடியட்” என்று அவளைத் திட்டி விட்டு அவன் கடந்திட “உங்க அம்மாவுக்கு உங்க மேல பயங்கர கோபமோ இடியட்னு பெயர் வச்சுருக்காங்க” என்று மயூரி கூறிட கடுப்பான அரவிந்தன், “என்னடி உன் பிரச்சினை நானும் பொறுமையா பேசிட்டு இருக்கேன் அகைன் அன்ட் அகைன் இரிட்டேட்டிங்கா பேசிட்டே இருக்க பொண்ணு தானே நீ” என்றான் அரவிந்தன் கோபமாக.

 

“பொண்ணு தான் புடவை தானே கட்டி இருக்கேன்” என்று அவள் மேலும் மேலும் வெறுப்பேற்றிக் கொண்டே இருக்க கடுப்பானவன் இதற்கு மேல் இங்கே இருந்தால் கோபத்தில் அவளை அறைந்தாலும் ஆச்சர்யமில்லை என்று உணர்ந்து வேகமாக அங்கிருந்து சென்று தன் காரில் அமர்ந்தான். அவளை முறைத்துக் கொண்டே காரை இயக்கி விட்டு கிளம்பினான்.

 

“கடைசி வரை பெயரே சொல்லாமல் எஸ்கேப் ஆகிட்டாரே ச்சே” என்று நினைத்தவள் , “சரி சரி நம்ம பக்கத்து வீடு தானே பெயர் கண்டுபிடிக்கிறது ஒரு விஷயமா?” என்று நினைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியை இயக்கினாள்.

 

“என்ன மயூ ரொம்ப ஹாப்பியா இருக்க” என்ற அபிராமியிடம், “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே அபி நான் நார்மலா தான் இருக்கேன்” என்றாள் மயூரி.

 

“என் பொண்ணு முகம் எனக்கு தெரியாதா வழக்கமா ஸ்கூல் விட்டு வரும் போது டல்லடிக்குமே இன்னைக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கே” என்றார் அபிராமி.

 

“அது ஒன்னும் இல்லை அபி வரும் போது மாதுளை ஜூஸ் குடிச்சிட்டு வந்தேன். உனக்கும் வாங்கிட்டு வந்து இருக்கிறேன் நீயும் குடி” என்று பார்சலை தன் அன்னையிடம் கொடுத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் மயூரி.

 

அபிராமி சிரித்து விட்டு “மயூ கோவிலுக்கு போகலாம் வர்றீயா?” என்று கேட்டார். “நோ மம்மி நீ போயிட்டு வா” என்று கூறியவள் உடை மாற்றி விட்டு தயாராகி வந்தாள்.

 

“என்ன டீ கோவிலுக்கு வரவில்லைனு சொன்ன” என்ற அபிராமியிடம், “ஆமாம் அம்மா நான் கோவிலுக்கு வரவில்லை கீழே  பார்க்க போய் உட்காரலாம் என்று இருக்கிறேன்” என்றாள். “சரி சரி என்ற அபிராமி நான் ரூபிணி மாமியார் கூட கோவிலுக்கு போயிட்டு வரேன்” என்று கூறினார்.

 

“என்ன ரூபிணி மாமியாரா அப்போ நம்ம ஆளோட அம்மா நமக்கும் அவங்க தானே மாமி நம்ம ஆளு விரைப்பான வீராசாமியை கரைக்ட் பண்ணுறதுக்கு முன்னே அவங்க அம்மாவை கரைக்ட் பண்ணினால் என்ன” என்று யோசித்தாள் மயூரி.

 

மகள் ஏதோ யோசிக்கிறாள் தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்த அபிராமி கன்னிகாவுடன் கோவிலுக்கு கிளம்பி சென்று விட்டார்.

 

யோசித்து முடித்தவள் “எங்கே இங்கே இருந்த என் அம்மாவை காணோம் அம்மா அம்மா மை டியர் மாதா ஜீ எங்கே போன” என்று அவள் புலம்பிட , “ஹாய் மயூ” என்று வந்தாள் ரூபிணி.

 

“என்ன தனியா புலம்பிட்டு இருக்கீங்க” என்று ரூபிணி கேட்டிட “இல்லையே” என்று அவள் ஏதோ கூறிட, “பார்க் போறீங்களாமே இப்போ தான் சித்தி சொன்னாங்க‌. அத்தையும், சித்தியும் கோவிலுக்கு போயிட்டாங்க நானும், பாப்பாவும் கூட பார்க் தான் போகிறோம் அதான் உங்க கூட சேர்ந்து போகலாம்னு வந்தேன்” என்றாள் ரூபிணி.

 

“சரி, சரி இவள் கிட்ட நம்ம ஆளைப் பற்றி போட்டு வாங்குவோம்” என்று நினைத்து விட்டு மயூரி ரூபிணியுடன் பார்க்கிற்கு சென்றாள்.

 

குழந்தை ரியா அங்கு இருந்த குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தாள். மயூரி, ரூபிணி இருவரும் ஸ்டோன் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

 

மயூரி கேட்காமலே ரூபிணி அரவிந்தன் பற்றி பேச ஆரம்பித்தாள். “என்ன இவள் நான் கேட்காமலேயே அவனைப் பற்றி சொல்லிட்டு இருக்கிறாள் அதுவும் நம்மளை குறு குறுனு வேற பார்க்கிறாளே இது சரியில்லையே. ஒருவேளை காலையில் லிஃப்ட்ல அவனை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல பார்த்துட்டு நின்னோமே அதை கவனிச்சுருப்பாளோ” என்று யோசித்து விட்டு முடிந்த வரை முகத்தை இயல்பாகவே வைத்திருந்தாள் மயூரி.

 

“என்ன இவள் நான் அரவிந்தன் மாமா பற்றி பேசிட்டு இருக்கேன் இவள் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை அர்ஜுன் ஏதோ இவள் அரவிந்தன் மாமாவை சைட் அடிச்ச மாதிரி தானே சொன்னாரு” என்று யோசிக்க ஆரம்பித்தாள் ரூபிணி.

 

…தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!