தேவதை 24
ஸ்ருதி ஜெய்யை திட்டிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்ததும், தர்ஷினி தேவாவையும், ஜெய்யயும் முறைத்த படி நின்றிருந்தாள்..
வண்டு நீ வீட்டுக்கு கிளம்பு, இத பத்தி அப்புறம் பேசிக்கலாம் என தேவா அவள் கையை பிடித்து இழுக்க, அவன் கையை தட்டி விட்டவள், நீ கூட என்ன ஏமாத்திட்ட என்றதும் தேவா அவளை புரியாமல் பார்த்தான்….
என்ன ஒன்னும் தெரியாத மாதிரி லுக்கு விடுற, ஸ்ருதி பத்தி உனக்கு எதுவும் தெரியாதுனு தான சொன்ன, ஆனா அவ வந்து தேவாவுக்கு எல்லாம் தெரியும்னு சொல்றா, நீங்க ரெண்டு பேரும் இன்னும் என்னலாம் மறைக்கிறீங்க உண்மைய சொல்லுங்க என கேட்க ஜெய் சேரில் தலையில் கை வைத்தப் படி அமர்ந்து விட்டான்…
தேவா தான் அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான், இங்க பாரு டீ இப்ப பேசுறது நல்லதுக்கு இல்ல, அவனை பாரு பாவமா இருக்கு என ஜெய்யை பார்த்து தேவா கண் காட்ட
ஓஹ் சார்க்கு வருத்தம் வேறயா? அவ என்ன எவ்ளோ கேவலமா பேசிட்டு போறா உனக்கு அத பத்தி கொஞ்சம் கூட கோவம் வரலல என ஜெய்யிடம் கேட்க… அவன் அமைதியாக இருந்தான்…
ஏய் ஸ்ருதி பாவம் டீ, உன்ன பேசுனதுக்கு தான் அவன் அவளை அடிச்சிட்டான்ல, இதுக்கு மேல அவளை என்ன பண்ணனும் சொல்ற போதும் டீ இவ்ளோ கோவம் ஆகாது என தேவா புரிய வைக்க முயன்றான்.. கேட்பாளா அவன் தேவதை….
என்னது அவ பாவமா? என்னடா நடக்குது ஜெய் என்னனா அவளை திட்டி அனுப்பிட்டு வருத்தப்படுறான், நீ என்னடானா ஸ்ருதி பாவம்ன்ற, என்ன ரொம்ப உசுப்பேத்தி பாக்குறீங்க ரெண்டு பேரும்….
நா தான் சொன்னேன்ல இப்ப எது பேசுனாலும் உனக்கு புரியாது, கோவம் இருக்கிறப்ப கொஞ்சம் அமைதியா இருக்கணும் டீ, சொல்றத புரிஞ்சிகிட்டு பைக்கிட்ட போ நா இவனை கூப்டு வரேன்….
இல்ல எனக்கு இப்போவே முடிவு தெரியணும், அவ என்ன வசிக்கூட ஊர் சுத்துறனு சொன்னது தப்பு தான? அத ஏன் நீ கேக்கவே இல்ல டா தேவா… என்கிட்டே இவங்க லவ் பண்ற விஷயத்தையும் மறைச்சிட்ட, எல்லாமே நம்பிக்கை துரோகம் மாதிரி பீல் ஆகுது….
ஏய் வண்டு நீ ரொம்ப எமோஷனலா ஆகாத, டீ.. அந்த அளவுக்கு இப்ப ஒன்னும் நடக்கல., நீ முதல்ல இங்க வா என அவள் கையை பிடித்து இழுத்து சென்றவன் தன் பைக் அருகில் நிற்க வைத்து.. இங்கயே இரு அவனை போய் நா கூப்டு வரேன், என பார்லருக்குள் ஓடியவன் ஜெய்யை சமாதானப் படுத்த முயன்றான்… ஆனால் ஜெய் அமைதியாக எழுந்தவன் தர்ஷியை நிமிர்ந்தும் பார்க்காமல் தனது பைக்கில் சென்று விட தர்ஷிக்கு அது மேலும் கோவத்தை கிளப்பியது….
பாத்தியா டா தேவா அவன் என்கிட்ட சாரி கூட கேட்காம போறான்.. நா தான டா கோவப்படணும் சம்மந்தமே இல்லாம அவன் கோவப்பட என்ன இருக்கு? என்றதும்
தேவா தர்ஷியிடம், நீ எதுக்கு டீ அவளை நாய் னு சொல்ற அது தப்பு தான! பாரு ஸ்ருதி என்ன பண்ணிட்டானு அவளை இவன் அடிச்சானு தெர்ல என உச் கொட்ட, தர்ஷிக்கு தேவா தான் தன்னை விட்டுக் கொடுத்து பேசியதா என உணரவே சில கணம் தேவைப்பட்டது….
நீ நீ என்ன சொல்ற? என் மேல தான் தப்பு னு சொல்றியா? ஆதங்கமாக குரல் வெளியே வர…
நா உன்ன தப்பு சொல்லல டீ பேசுறப்ப பாத்து பேசணும், அத தான் சொல்றேன்,
ஏண்டா அவ என்ன வசிக் கூட ஊர் சுத்துறனு கேப்பா அது தப்பு இல்லையா ஓஹ் நீ இப்ப என்ன சொல்ற அன்னைக்கு உங்கள விட்டுட்டு நா படத்துக்கு வசிக் கூட போனது வச்சி நீயும் அவன் கூட நா ஊரை சுத்துறேன்னு சொல்லாம சொல்ற, அதான!
வாய மூடு டீ கண்டதை பேசாத என தேவா அவளை அடக்க முயல…
பைக்க நிறுத்து உன்கிட்ட பேசணும்…
பைத்தியமா டீ கொஞ்சம் பொறுமையா தான் இரேன்..
வண்டியை நிறுத்து னு சொன்னேன் டா, இப்போ நிறுத்துறியா இல்ல வண்டியில இருந்து கீழ குதிக்கவா? தீர்க்கமாக கேட்க… இவ செஞ்சாலும் செய்வா என நினைத்தவன், பெருமூச்சி விட்டப்படி வண்டியை ஓரமாக நிறுத்தினான்….
கீழே இறங்கியவள், அவன் முகத்தை பார்த்து, நீ என் தேவா தானா டா? எப்பவுமே நா என்ன பண்ணாலும் எனக்கு தான சப்போர்ட்டா இருப்ப, இப்ப அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்ன தப்பு சொல்ற? என மனம் முழுக்க வலியுடன் அவனிடம் கேட்க… தேவா பின் தலையை கோதியவன்,,
வண்டு இப்ப அதெல்லாம் பேசுறதுக்கு நேரம் இல்ல, நைட் பேசிப்போம் நீ கால் பண்ணு, வா ரோட்ல ஏதும் பேசிக்க வேணாம் எல்லாம் பாக்குறாங்க…
விரல் நீட்டி தடுத்தவள், இல்ல இல்ல முடியாது, இப்ப சொல்லு நா பேசுனது தப்பா? அவ பேசுனது தப்பா? உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியணும்…
தர்ஷி பைக்குல ஏறு, உங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு.. ரெண்டு பேரும் வார்த்தையை அதிகமா விட்டுட்டீங்க.. போதுமா வா வண்டியில ஏறு, அவன் கை பிடித்து இழுக்க… அதை உதறியவள்
இல்ல ஒருத்தர சொல்லு, என் மேல தப்பா? அவ மேல தப்பா? கத்தி கேட்க…
தேவாவிற்கு ஆத்திரம் பொங்கியது, ரோட்டில் இருக்கும் அனைவரின் கண்களும் இவர்கள் மேல் படவும், கடுப்பானவன் உன் மேல தான் டீ தப்பு, என சொல்லிவிட… தர்ஷி உடைந்து போனாள்….
மூக்கு சிவந்து கண்களில் நீர் கோர்க்க,
எ எ என் மேலயா தப்பு! நா என்ன தப்பு பண்ணேன் குரலும், உடலும் நடுங்க அவனை பார்க்க.
தேவாவிற்கு தான் மேலும் பீதியை கிளப்பியது… ஏய் வாயேன் டீ வண்டியில ஏறி தொலையேன் வீட்ல விடுறேன், பிறகு பேசிப்போம்…
என்ன விட்டுக் குடுத்துட்டல்ல, நா அவ்ளோ தான்ல, உனக்கு நேத்து வந்தவ தான் முக்கியமா போய்ட்டா அப்டி தான!
இல்ல டீ சத்தியமா இந்த உலகத்துல உன்ன விட எனக்கு யாரும் முக்கியம் இல்ல, வந்து வண்டியில ஏறு ப்ளீஸ் என அவளின் கை பிடித்து இழுத்து வண்டியில் ஏற வைத்தவன், வேகமாக சென்றான் தர்ஷியை வீட்டில் விடும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை… தேவாவும் பேச முயற்சிக்கவில்லை..
தர்ஷி வீடு வந்ததும் இறங்கி தேவாவை பார்த்து பை தேவா என மெலிதான குரலில் சொல்லிவிட்டு செல்ல, தேவாவும் எதையும் நினைக்காம தூங்கு டீ மார்னிங் வரேன் என சொல்லவும்…. ஹ்ம்ம் என்றவள் வீட்டிற்குள் சென்றாள்…
தேவா அதன் பிறகு வண்டியை எடுத்தவன் நேராக சென்றது ஜெய்யை பார்க்க தான்….
தர்ஷி முகம் வாடி இருப்பதை பார்த்த மஞ்சுளா என்னவென்று கேட்க, பதில் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்….
தேவா சென்று ஜெய்யை அவன் வீட்டில் பார்க்க அங்கு அவன் இல்லை, போனையும் சுவிட்ச் ஆப் செய்திருந்தான்….அப்போது சப்பை வலையை எடுத்துக் கொண்டு ஜெய் வீட்டின் வழியே செல்லவும் அவனை பிடித்து தேவா கேட்டு பார்க்க.
ஜெய் அங்க நம்ம போட்ல தான் உட்காந்திருக்கான் போய் பாரு டா என சொல்லிவிட்டு செல்ல, அடுத்த நொடி தேவா கடற்கரைக்கு விரைந்திருந்தான்….
போன் சத்தத்தில் எழுந்த தர்ஷி, யார் என பார்க்க புது நம்பராக இருந்தது… எடுத்து காதில் வைத்தவள் ஹலோ யாரு? என கேட்கவும்…
ஹாய் தர்ஷி எப்படி இருக்க? நா ஷில்பா பேசுறேன் என்றதும் தர்ஷிக்கு அவள் குரலை கேட்டதும் கோவம் தான் வந்தது….தன்னிடம் மன்னிப்பு கேட்க தான் போன் செய்திருக்கிறாள் என வசி சொல்லியதை நம்பியவள்….
சொல்லுங்க சீனியர் என்ன விஷயம்? எனக் கேட்க…
நேத்து உன்ன பாத்ரூமல வச்சி பூட்டினது யாருனு தெரியுமா?
ஹ்ம்ம் வசி சொன்னாங்க, நீங்க தான்னு என பற்களை கடித்தாள்,
ஹ்ம்ம் உனக்கு கோவம் வரலையா? ஒரு வேளை நாங்க பணக்கார பார்ட்டி எங்கள பகைச்சிக்க கூடாதுனு அமைதியா இருக்கியா? கிண்டலாக கேட்கவும்
பாத்து பேசுங்க சீனியர், இல்லனா மரியாதை கெட்டிடும் என்றதும் ஷில்பா தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தாள்…
யூ ப்ளடி பெக்கர்… உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் வசிக் கூட க்ளோஸ் ஆக பாப்ப.. உனக்கு ரெண்டு கொடுக்கு பிரெண்டஸ் பத்தலையா? வசியும் வேணுமா? இல்ல வசிய மயக்கி காசு பணம் பார்க்கலானு பாத்தியா? அவன் படத்துக்கு கூப்பிட்டதும் உன் பிரெண்ட்ஸ மறந்துட்டு ஈஈஈ னு பல்ல காட்டிட்டு வர, ஹவ் சீப் யூ ஆர்…? வார்த்தைகளை ஷில்பா அள்ளி தெளிக்க…
ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருந்தவளுக்கு ஷில்பாவின் பேச்சு பெரும் ஆத்திரத்தை தூண்டிவிட, தர்ஷி அங்கு காளியாகவே மாறிவிட்டாள், ஏய் மரியாதையா பேசு, என்ன இஷ்டத்துக்கு வாய் பேசுற? இதெல்லாம் வேற யார்கிட்டயாச்சும் வச்சிக்க, என்கிட்ட வேணாம்.. அப்புறம் உன் தலைல ஒரு சொட்டு மசுரு இருக்காது, மொட்டை அடிச்சி ஊர்வலம் நடத்திருவேன் என மிரட்டினாள்….
ச்சீ உன் பேச்சுலயே தெரிது, நீ சரியான ஊருநாட்டான் தான் பட்டிக்காட்டு கழுதை டீ நீ, ஆனா வசிய நல்லா மயக்கி வச்சிருக்க, அவ உன்ன தான் லவ் பண்றேன்னு என்கிட்டயே தைரியமா சொல்ற அளவுக்கு தைரியம் வந்திருச்சு இங்க பாரு அன்னைக்கு பாத்ரூம்ல வச்சி தான் பூட்டினேன்… இனி வசி கூட பேசுறத பாத்தேன், அங்கேயே உன் மூஞ்சில ஆசிட் அடிச்சிருவேன் பாத்துக்க என மிரட்டி பார்த்தாள் ஷில்பா….
அப்டியா! முடிஞ்சா ஆசிட் அடி பாப்போம் என்றவள் நானும் வசிய லவ் பண்றேன் உன்னால முடிஞ்சத பாத்துக்க இப்போவே வசிகிட்ட என் பிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் கால் பண்ணி வசிய லவ் பண்றேன்னு சொல்ல போறேன், இனி நீயா நானான்னு பாத்துப்போம் என இணைப்பை துண்டித்து விட்டாள்…
ஷில்பாவுக்கு சும்மா இருந்த புண்ணை சொறிந்து விட்டோமோ என தோன்ற, ஹவ் டேர்…. இவள சாதாரணமா நெனச்சிட்டோம்… ஹ்ம்ம் இவள விட கூடாது என எண்ணியவள் தனது நண்பர்களுக்கு போன் அடித்து விஷயத்தை சொல்ல….
தர்ஷிக்கு தான் பெரிய ஷாக்காக இருந்தது, வசி என்ன லவ் பண்றானா? எனக்கும் அவன் கூட பேசுறப்ப ஹேப்பியா இருக்கு, அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசையா தான் இருக்கு, ஒரு வேளை இதான் லவ்வோ இருக்கும்… என முதலில் தேவாவிற்கு தான் போன் அடித்திருந்தாள்….
தேவா, ஜெய்யுடன் கடற்கரை மணலில் அமர்ந்து அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்… தர்ஷி கால் செய்யவும் எடுத்து காதில் வைக்க…
தேவா போன ஸ்பீக்கர்ல போடு என சொல்லவும், ஏண்டி என்னாச்சி? மனம் ஏதோ தவறாக நடக்கபோவதாக அடித்துக் கொண்டது, அடிவயிற்றில் சுமை இருப்பது போல் உணர்ந்தவன்.. எதுக்கு டீ என கேட்டான்….
எனக்கு தெரியும் நீ ஜெய் கூட தான் இருப்ப, போனை ஸ்பீக்கர்ல போடு டா அப்ப தான் சொல்வேன் என அடம் பிடிக்கவும்.. தேவா ஸ்பீக்கரில் போட்டவன் ஜெய் முகத்தை தான் பார்த்தான்….
நா சொல்றத ரெண்டு பேரும் கேட்டுக்கோங்க, நீங்க என்ன எப்படி நெனச்சிருக்கீங்கனு எனக்கு தெர்ல, பட் நா உங்கள பிரெண்டா தான் நெனைக்கிறேன்… அதான் ஒரு விஷயத்தை உங்ககிட்ட மறைக்காம சொல்ல போறேன், என சொல்லவும்
ஜெய்க்கும் ஒன்றும் புரியாமல் தேவாவை என்ன என்பது போல் கேட்டான்….
ஐ லவ் வசி…. என்றதும் தேவாவின் கையிலிருந்த போன் கீழே விழுந்திருந்தது…. ஜெயிக்குமே அதிர்ச்சியாக இருக்க, போனையே பார்த்திருந்தான்…
இங்க பாருங்க நா இன்னும் இத வசிகிட்டயே சொல்லல… இனிமேல் தான் சொல்ல போறேன்.. அப்ப நா உங்கள எந்த இடத்துல வச்சிருக்கேனு புரிஞ்சிக்கோங்க என்றவள், பை என போனை வைத்து விட்டாள்….
தொடரும்…..
படிக்குறவங்க மறக்காம stars குடுங்க… 🥰🥰🙏🙏
Knjm big epi kudunga pa.interesting story