நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது.. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது. நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…. நானும், என் டேட்டும் மட்டுமே.. தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ.. என்று அந்த நியூயார்க் சிட்டியின் இரவு நிசப்த்தத்தை கெடுக்கும் அளவிற்கு கொடூரமாக பாடிக்கொண்டிருந்தான் ரோகித். அதுவும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு தன் அன்னையின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தவாறே மெத்தையில் உருண்டு புரள.. அவன் கண்களோ பார்க்க வேண்டியவர்கள் பார்க்கிறார்களா என்று எதிரில் நிற்கும் உருவத்தை நோக்க.. ம்கூம்.. அவன் ட்ராமா எதுவும் அங்கு பலிக்காமல் தான் போகின்றது. “ம்ச்… ஸ்டோன் ஹார்டட் லேடி..”புலம்பியவனோ.. “ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா.. நீயும் அம்மாவ வாங்க முடியுமா… ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா… உன்னையும், என்னையும் படைச்சதிங்க யாருடா… அந்த அம்மா தான் என்னை விட்டுட்டு ஊருக்கு போதுடா… என்னடா உலகம் இது.. என்னை விட்டுட்டு அம்மா ஊருக்கு போதுடா…”என்று கர்ண கொடூரமான குரலில் அவன் கத்திக்கொண்டிருக்க… அதுவரை பொறுமையாக இருந்த அவனின் அன்னை பார்வதியோ பொங்கி எழுந்துவிட்டார். “ஆஆஆ.. டேய் பயில்வான்.. காது காலி ஆகுதுடா நீ பாசத்துல பாடுறத கேட்டு… டொமேட்டோ..”ஆங்காரமாக கத்தினார் பார்வதி. அதில் வேகமாக பாடிக்கொண்டே உருள ஆரம்பித்துவிட்டான் அவன்.. “ஊர தெரிஞ்சிக்கிட்டேன் அம்மாவ புரிஞ்சிக்கிட்டேன் என் தாயே என் தாயே.. என்னையும், டேடையும் மட்டும் தனியா விட்டுட்டு அந்த பிக்பாயோட வில்லேஜ்க்கு போறியே என் மாம்மே…”என்று மறுபடி அவன் கத்தி பாட… “ஆஆஆ… ஆன்டிப்பட்டி கறுப்பே…”என்று தலையில் அடித்துக்கொண்ட பார்வதியோ வேக வேகமாக தன் வார்ட்ரோப்பில் இருந்த ட்ரெஸ்களை அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டார்.. “ம்மாவ்வ்வ்வ்…”மறுபடி ராட்ஸஸன் கணக்காக கத்தியவனை கண்ட பார்வதியோ அவன் அருகில் போய் உட்கார்ந்து.. “சின்ன வயசிலையே ராப் சாங்க்ஸ் பாட போறேன்னு வந்து நின்னபோதே உன் கால உடைச்சி வீட்டுக்குள்ள போட்டுருக்கனும்.. இப்போ பாரு அத செய்யாததால என் காது டேமேஜ் ஆகுது.. என் காது மட்டும் இல்லாம யூட்யூப்ல வேற உன் கர்ண கொடூரமான குரல்ல போட்டு தாளிச்சி எடுக்குற.. ஆண்டவா…”என்றவரின் கையோ மாறாக தன் சிறிய மகனின் தலையை கோதிவிட.. “போமா…”என்று தன் அன்னையின் கையை தட்டிவிட்டவனோ.. “உனக்கு நான் ஆரோ தானே.. என்னை தவுட்டுக்கு தானே வாங்குன..”முகத்தை சுழித்துக்கொண்டு வாகாக தன் அன்னையின் மடியில் வந்து படுக்கும் தன் சிறிய மகனை நினைத்து புன்னகைத்தவறோ.. “இல்லடா மகனே தவுடுலாம் அரந்த ஓல்ட் ஆகிப்போச்சில்ல.. இப்போலாம் ஹான்ட்பர்கர், சாசேஜ் அதுதான் பேமஸ்.. உன்ன… ம்ம்ம்ம்… எதுக்கு வாங்குனேன்…”கன்னத்தில் கை வைத்து யோசித்தவறோ… “ஹான் புடிச்சிட்டேன் சீஸி….”என்று அவர் இழுக்க.. “சீஸி ஹான்ட்பர்கருக்கு வாங்குனியாக்கும்..”என்றான் பாவமாக ரோகித். “ஹான் ஆமா ஆமா.. உனக்கே தெரியும்ல அம்மா எவ்ளோ நல்லா, டேஸ்டியா ஹான்ட்பர்கர் செய்வேனு.. அப்டி ஒரு பேமிலிக்கு செஞ்சிக்கொடுத்துதான் உன்ன இனாமா வாங்குனேன்… ஆனாலும் நீ அந்த ஹான்ட்பர்கருக்கு ஒர்த் இல்லடா மகனே..”என்று வேணுமென்றே தன் சிறிய மகனை வம்பிழுக்க… “ஆஆஆஆஅ… அய்யோ என்னை ஏமாத்திட்டாங்க.. ஏமாத்திட்டாங்க.. நான் இவங்க பையன் இல்லையாம்.. ஏமாத்திட்டாங்க.. போயும் போயும் ஹான்ட்பர்கருக்கு என்னை வித்துட்டு போய்ட்டாங்களே…”புலம்பியவனோ “பெத்து எடுத்தவ தான் என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா.. பெத்த கடனுக்கு தான் என்னை வித்து ஹான்ட் பர்கர் வாங்கிப்புட்டா… என்று மறுபடி பாட்டினை எடுத்து விட… பார்வதிக்கோ தன் மகனின் தமிழ் உச்சரிப்பில் மனம் நிறைந்தே போனது. பின்னே இருக்காதா என்ன ரோகித் பிறந்ததே இதே நியூயார்க்கில் தான்.. இதுவரை இந்தியா பக்கம் கூட அவனை கூட்டிக்கொண்டு போனதில்லை.அவன் மட்டும் இல்லை அவரும் தான் அவரின் பெரிய மகனும் தான். பார்வதியின் கணவர் மட்டும் எப்போதாவது இந்தியா சென்று வருவார். அதற்கு காரணம் இந்தியாவில் பார்வதிக்கோ அவரின் கணவர் ஜனகனுக்கோ அவ்வளவாக சொந்தங்கள் இல்லை. பல வருடங்களுக்கு முன்பே அனைவரும் இறந்து போக ஜனகனின் அன்னையுடன் பல வருடத்திற்கு முன்பே நியூயார்க் வந்து செட்டில் ஆகிவிட்டனர். ஜனகனின் அன்னையும் கூட பத்து வருடங்கள் முன்பு இறந்துவிட்டார். அப்படிப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக தமிழ் பேசுவது அரிது தானே.. ஆனால் பார்வதி தன் மகவுகளுக்கு சிறுவயதிலிருந்தே தமிழை எழுதவும், படிக்கவும், பேசவும் கத்துக்கொடுத்துவிட்டார். ரோகித் அதனை கப்பென்று பிடித்துக்கொண்டான். தாயும், மகனும் வார இறுதி நாட்களில் தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் போட்டு பாப்கார்ன் சகிதமாக உட்கார்ந்துவிடுவார்கள். ஜனகன் கூட அதில் கலந்துக்கொள்வார். ஆனால் ரோகித்தின் அண்ணன், ஜனகன் மற்றும் பார்வதியின் முதல் மகனோ இதில் எதிலும் கலந்துக்கொள்ளவே மாட்டான். அவனுக்கும் தமிழ் பேச எல்லாம் வரும் ஆனால் கொஞ்சம் தடுமாறுவான். ஆனால் ரோகித் அப்படியில்லை. “சின்னு…”பார்வதி தன் சிறிய மகனை கன்னத்தை பிடித்து கொஞ்ச. “போ மா.. உனக்கு நான் யாரோ தானே..”மறுபடி முறுக்கிக்கொள்ள.. “அடேய் போதும்டா இப்டி முகத்த வச்சிக்கிட்டா நாளைக்கி நைட் எனக்கு ஃப்ளைட்..அம்மா எப்டி தங்கம் ஊருக்கு போவேன்..”என்றவரை கண்டு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.. “நானும் வரேன் மம்மி.. இந்தியாவுக்கு என்னை ஒருதடவையாச்சும் கூட்டிட்டு போனியா.. ம்ச் ஐ லவ் தட் ப்ளேஸ்ம்மா… அன்ட் ஐ மிஸ் யூ டூ.. நானும் வரேன்னே..”கடைசி முறையாக கெஞ்சிப்பார்க்க.. “ம்ச் சின்னு நான் என்ன நீ வரக்கூடாதுன்னா உன்ன இந்தியா கூட்டிட்டு போல.. உனக்கு நெக்ஸ்ட் வீக் எக்ஸாம் இருக்குடா.. அத முடிக்க வேணாமா…”என்று அந்த இருபத்தி மூன்று வயது குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருக்க.. அவனோ.. “அதுனால என்ன நான் வேணா எக்ஸாம்ஸ எழுதாம உன்னோட வந்துடுறேன்..”ஒற்றை கண் அடித்தவாறே கூறிய மகனை எரிப்பார்வை பார்த்தார் பார்வதி. “ஓஓஓ நீ எக்ஸாம்ஸ் எழுதாம ஸ்கிப் பண்ணிட்டு இந்தியா போனாலும் ஓகே தான் சின்னு..”என்றவாறே வந்தார் ஜனகன். “ஏங்க.. நீங்களுமா…”பார்வதி அதட்ட.. “அட இருமா பாரு..”ஜனகன் அமைதிப்படுத்தியவரை கண்டு ரோகித் துள்ளிக்குதித்தவன்… “வாவ் டேட் இட்ஸ் ட்ரூவா… நான் எக்ஸாம்ஸ் ஸ்கிப் பண்ணிட்டு இந்தியா போகவா…”கண்களில் ஆர்வம் மின்ன கேட்டவனை கண்டு பார்வதி தலையில் அடித்துக்கொண்டார். பின்னே அவருக்கு தெரியாதா தன் கணவரை பற்றி.. ஏதோ ட்விஸ்ட் வைக்க போகிறார் என்று நினைத்தவர் தன் பேக்கிங் வேலையை சிறப்பாக செய்ய.. “ம்ம்ம் எஸ்… ஸ்கிப் பண்ணிடு…”என்றவரை கண்டு… “யாகூகூகூ…”என்று கத்தியவனை கண்டு விஷமமாக சிரித்த ஜனகனோ.. “ஆனா எக்ஸாம்ஸ ஸ்கிப் பண்ணுனா அதுக்கு பதிலா உன்னோட அந்த மியூஸிக் ட்ரூப்பையும், உன்னோட தேவை இல்லாத அந்த் ஆணியான யூட்யூபையும் இழுத்து மூடனும்… என்ன ஓகேவா..”என்று கடைசியாக ஆப்படிக்க… அதில் அப்படியே மிரண்டு போய் நின்றான் ரோகித்.. “டேட்…”என்று அவன் கத்த… பார்வதிக்கோ தன் சிறிய மகனை நினைத்து சிரிப்பு தான் வந்தது. பின்னே அவருக்கு தெரியாதா இந்த இரண்டும் அவனுக்கு எவ்வளவு முக்கியமென்று. யூட்யூப் கூட பரவாயில்லை.. ஆனால் அவனின் மியூசிக் ட்ரூப் அதான் அவனுக்கு உயிரே.. அதனை போய் இழுத்து மூட சொன்னால். “வாட் டேட்…”என்றான் கோவமாக. “வாட் சின்னு.. நான் சொல்றது சரிதானே. உன்னோட ட்ரூப்க்கு நீ இங்க இல்லாம தெண்டமா நான் மாச மாசம் ரென்ட் கொடுத்துட்டு இருக்கனுமா என்ன.. அந்த யூட்யூப்க்கு ஒரு ரூமையே திங்க்ஸா வாங்கி அடிக்கி வச்சிருக்க.. நீ இல்லாம இதெல்லாம் எதுக்கு மேன்.. தட்ஸ் ஒன்லி..”என்றார் பிஸினஸ்மேனாக ஜனகன். “ஓஓஓ காட்.. யூ ஆர் டெவில் பிஸினஸ்மேன்ப்பா… ஐ ஹேட் யூ.. போங்க…”என்று அந்த அறையை விட்டு மறைந்துவிட்டான் அவன்.. பின்னே இன்னும் சிறிது நேரம் இருந்தால் பேசியே தன்னை டேமேஜ் செய்திவிடும் தந்தையிடமிருந்து எஸ் ஆகதான் இந்த ஓட்டம்.. “ஹாஹா எப்டி ஓடுறான் பாரு…”சிரித்தவாறே அவர் பெட்டில் உட்கார.. “அட பாவம் சின்னு…”என்று பார்வதி செல்லமாக தன் கணவரை முறைக்க… “அட என்னம்மா நீ வேற.. இன்னும் டென் டேஸ்ல அவனுக்கு எக்ஸாம்ஸ் முடிஞ்சிடும் அப்போ அவன நானே இந்தியா அனுப்பறேன்.. நீ ஒன் மந்த் இந்தியா ப்ளான் போட்டத உன் பிக்பாய்க்கிட்ட சென்னியா..”என்றார் பாயின்டாக.. “ம்கூம்.. எங்க சொல்ல விடுறான்.. இந்தியா போனும்னோனே அப்போ எப்போ ரிட்டன் வருவோம்னு தான் கேட்குறான்.. அவன எப்டி சமாளிக்க போறேன்னு தெரில…”என்றவறோ… கணவனிடம் பேசிக்கொண்டிருக்க… இங்கு அவர்கள் அனைவரும் பிக்பாய் என்று அழைக்கப்படுபவனோ கடலில் திமிங்கலம் நீந்துவது போல பாய்ந்து பாய்ந்து ஸ்விம்மிங் பூலில் நீந்திக்கொண்டிருந்தான். நல்ல கட்டுமரம் போன்ற உடலமைப்பில், அந்த இரவு நேரத்தில் தெரியும் நிலாவின் பயனால் அவன் உடல் நீர்த்துளிப்பட்டு மின்னிக்கொண்டிருக்க.. கண்டிப்பாக அவன் ஆறடி உயரம் இருப்பான். நல்ல அடர்த்தியான கேசம் தண்ணீரில் இருந்தாலும் அடங்காமல் சிலிர்த்துக்கொண்டு நிற்க.. அவனின் உரமேறிய, திணவெடுத்த கைகளோ தண்ணீரை தள்ளிக்கொண்டு ராட்ஸஸனாக நீந்திக்கொண்டிருந்தான். அவனின் நீந்தும் திணுசிலே அவன் அதில் வல்லவன் என்று நமக்கு தெரிந்து போக.. அவனோ கொஞ்சமும் சிரமம் இல்லாமல் சீராக அதே நேரத்தில் வேகமாக நீந்திக்கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து அவன் நீந்துவதையே நீண்ட நெடிய மூச்சினை விட்டு பார்த்த ரோகித்தோ… “உனக்கு என்ன ப்ரோ நீ ஜாலியா இந்தியா போற அந்த ஜாலில இப்டி ஸ்பீடா சந்தோஷமா நீந்துற..”என்று கால்களை தண்ணீரில் விட்டவாறே உட்கார்ந்தவன் கூற. அவனின் வார்த்தை அந்த நெடியவனின் காதுகளில் நன்றாக விழுந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாதவனோ அசுரத்தனமாக நீந்திக்கொண்டிருந்தான். ரோகித்திற்கு கண்டிப்பாக தெரியும் தன் அண்ணனான அவனுக்கு கண்டிப்பாக இந்தியா செல்வது பிடிக்கவில்லை என்றும், தன் அன்னை தான் அவனை கட்டாயப்படுத்தி இந்தியா கூட்டிப்போவது. தன் நீச்சலை முடித்தவனோ தன் ரெத்த நிற கண்களால் ரோகித்தை முறைத்தவனோ அப்படியே தண்ணீரில் இருந்து எழ.. அவனின் சிக்ஸ் பேக்கில் இருந்து அழகாக வரிவரியாக வடிந்தது நீர்துவாலைகள். “நானே அங்க போறது பிடிக்காம கடுப்புல இருந்தா நீ என்ன புல்லி பண்றியா..”கம்பீரமான அதே அதட்டலான குரலில் கேட்டவனோ அப்படியே ஒரு டவலை எடுத்துக்கொண்டு தன் இடையில் கட்ட.. “வாட் ப்ரோ.. அங்க போறது உனக்கு புடிக்கலையா… வாவ் வாட் எ ப்ளேஸ்.. வாட் எ நேச்சர் தெரியுமா… ஸீ… இங்க பாரு… எவ்ளோ ப்யூட்டிஃபுல்லா இருக்குனு…”என்றவன் அந்த நெடியவனும் அவனின் அன்னையும் போக போகும் அந்த அறந்த பழசான கிராமத்தை தன் போனில் போட்டு காட்ட… ஆனால் அந்த நெடியவனான கிருத்திஷ் அதனை திரும்பிக்கூட பார்க்காமல் தன் அறைக்கு சென்றுவிட்டான். பாவம் அவனுக்கு தெரியவில்லை எந்த ஊருக்கு அவன் வெறுப்பாக செல்கின்றானோ அந்த ஊரிலே அவனுக்கு அசைக்க முடியா பந்தத்தை ஏற்படுத்த போகின்றது என்று.