யுகித் தன் ஃபோனில் சிரித்துக் கொண்டிருந்த வெண்ணிலாவின் புகைப்படத்தையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்தவன், அவளது கண்களில் அது எட்டவில்லை என்பதை கவனிக்கவில்லை. அவள் மீதான கோபம் அவனது கண்ணை மறைத்தது.
தான் இல்லாமல் அவள் மட்டும் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கிறாள் என்று எண்ணும் போதே, அவள் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உள்ளம் தகதகவென கொதிக்க, ஃபோனைத் தூக்கி வீசியவன், கண்களை மூடினான்.
மூடிய விழிக்குள், தலை சாய்த்து சிரிக்கும் வெண்ணிலாவின் முகமே வந்து நின்றது. அட்சரம் பிசகாமல் தலைமுடி சுருள் காற்றில் பறந்ததிலிருந்து, அவள் அணிந்திருந்த பர்பிள் நிற டாப் வரை கண் முன்னே வந்து சென்றது. அது மட்டுமா முன்பு, ஒடிந்து விழுகும் ஒல்லியாக இருந்தவள், தற்போது கொழுக், மொழுக்கென்று இருப்பது வரை அவன் கருத்தில் பதிந்தது.
‘ஓ காட்! இவளை நினைச்சாலே ஐ லூஸ் மை கன்ட்ரோல். பீ ஸ்டெடி யுகித்,’ என்றவன் அவன் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியேறி, அங்கிருந்த ஸ்விம்மிங் ஃபூலிற்கு சென்றான்.
**************************
விடிந்தும் விடியாத அந்த அழகிய காலை பொழுதில் திண்டுக்கல்லில் இருந்த அந்த தனி வீட்டில் வியர்க்க, விறு விறுக்க ஜாகிங் செய்து கொண்டு இருந்தான் தீரன்.
எப்பொழுதும் போல், அந்த அமைதியான தனிமையில் கீச்சுகீச்சென்ற பறவைகளின் சத்தத்தை ரசித்தவாறே ஓடிக் கொண்டிருந்தத தீரனுக்கு, திடீரென்று தனக்குப் பின்புறம் ஒலித்த சத்தத்தில், “யார் இந்த நேரத்தில் வருவது?” என்று யோசனையுடன் திரும்பிப் பார்த்தான்.
“மாமா! ஓவரா ஆக்ட் பண்ணாதீங்க. இட் ஸ் மீ .” என்று அவள் அணிந்திருந்த டிராக் ஷுட்டை இழுத்து விட்டுக் கொண்டாள்.
“ பின்னே என்ன நிலா ? நான் எவ்வளவு தடவை வெயிட் போட்டுட்ட. ஜாகிங் பண்ணுன்னு சொன்னேன். எங்கேயாவது கேட்டியா? வீட்ல உள்ளவங்க எல்லாம் என்கிட்ட சண்டைக்கு வேற வந்தாங்க. நீயும் தான் வெயிட் போட்டா என்ன, நான் ஆரோக்கியமா தான் இருக்கேன். அடுத்தவங்களுக்காக வாழ முடியுமான்னு ஆயிரம் ரூல்ஸ் எல்லாம் பேசின. இப்ப என்ன திடீர்னு ஞானதோயம்?” என்று புருவத்தை உயர்த்தி வினவ.
“அது வந்து மாமா…” என்று வெண்ணிலா இழுக்க.
“அது தான் வந்துட்டீங்களே மேடம். சொல்லுங்க.” என்று கைகளைக் கட்டிக் கொண்டு அவளை கூர்ந்துப் பார்க்க.
“நான் காலேஜ் படிக்கும் போது ரொம்ப ஒல்லியா இருப்பேன். இப்போ கொஞ்சம் வெயிட் போட்டுருக்கேன்ல. அதான் ரீயூனியனுக்கு போகுறதுக்குள்ள கொஞ்சம் வெயிட் குறைப்போம்னு பார்க்குறேன்.”
“நிலா! திஸ் இஸ் டூ மச். மூணு நாள்ல உனக்கு வெயிட் குறைஞ்சிருமா?”என்று தீரன் வினவ.
“டிஸ்கரெஜ் பண்ணாதீங்க மாமா. முயன்றால் முடியாதது இல்லை.” என்று வெண்ணிலா கெத்தாகக் கூற.
“இந்த தத்துவத்தை எல்லாம் வாழ்க்கையில முன்னேறுவதில் காண்பி. இது தேவையில்லாத வேலை. அப்புறம் நீ சொன்னது போல தான். யாருக்காகவும் வாழ முடியாது. அதுனால இந்த அலப்பறை எல்லாம் நிறுத்து தாயே
என்னால முடியல.” என்று அவளை முறைத்துக் கொண்டே மீண்டும் ஜாக்கிங்கை தொடங்கினான் தீரன்.
“மாமா அடுத்தவங்களுக்காக ஒண்ணும் நான் செய்யல. இந்த ரீயூனியன்ல லாஸ்ட் டே சாரோட ஃபேர்வெல் பார்ட்டி நடக்கும். அதுக்கு எல்லாரும் சேரி கட்டணும்னு முடிவு பண்ணி இருக்காங்க. அன்னைக்கு சாரில கொஞ்சம் ஒல்லியா இருந்தா அழகா இருக்கும்னு தான் ட்ரைப் பண்றேன்.” என்று அவளும் ஓடிக்கொண்டே கூற.
திரும்பி பார்த்த தீரனோ, அதிமுக்கியமான கேள்வியை கேட்டான். “நிலா! ஃபர்ஸ்ட்
உனக்கு சாரி கட்டத் தெரியாது தானே!” என்று வினவ.
“ஆமாம்!”
“அப்புறம் எப்படி புடவைக் கட்டுவ? யூடியூப் பார்த்தா? அதெல்லாம் செட்டாகுமா?”என்று சற்று அச்சமாக அவளைப் பார்க்க.
“ யூடியூப் பார்த்து கட்டுறது எல்லாம் ஓல்ட் ஸ்டைல். இப்போ நியூ ட்ரெண்டா, சேரி ஃப்ரீ ப்ளீட்டிங்குனு பண்ணித் தர்றாங்க. அதை ஜஸ்ட் டூ மினிட்ஸ்ல கட்டிக்கலாம்.”
“நல்ல வேளை! இல்லன்னா அதுக்குன்னு இப்ப நிறைய பேர் புடவைக் கட்டி விடுவதை புரபஷனலா செய்யுறாங்களே. அவங்களை வர சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன்.” என்று நெஞ்சில் கை வைத்துக் கொள்ள.
“பயப்படாதீங்க மாமா! அப்படியெல்லாம் கூப்பிட மாட்டேன்.” என்றவள் கலகலவென்று நகைக்க. தீரனும் சிரித்துக் கொண்டே தனது ஓட்டத்தைத் தொடர்ந்தான்.
வெண்ணிலாவும் ஒரு இரண்டு ரவுண்டு ஓடிவிட்டு, டயர்டாகி அவளதறைக்கு சென்று விட்டாள்.
அதற்குப் பிறகு அவள் யார் கண்ணிலும் படவில்லை .
தீரன் ஆஃபிஸுக்கு கிளம்பி வந்த பிறகும் அவள் வராமலே இருக்க, வெண்ணிலாவுக்கு ஃபோன் செய்தான்.
“ டேய்! அவ ஆசைப்படுறா? எடுத்துக்கட்டும்டா! நீயா செலவுப் பண்ண போற? அவளை ஏன் திட்டுற?”என்று யாழினி சப்போர்ட்டுக்கு வர.
“அம்மா! அவ உங்களால தான் வீணா போறா.”என்று யாழினியையும் கடிந்துக் கொள்ள.
“ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் ரெடியாகிட்டு வர்றேன்.” என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வெண்ணிலா சொல்ல.
“ப்ச்! இப்போ எதுக்கு மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு இருக்க? நான் ஏன் சொல்றேன்னு புரிஞ்சுக்க. நம்ம கம்பெனில நம்மளே இப்படி அனாவசியமா லீவு போட்டா ஸ்டாப்ஸ் எல்லாம் எப்படி இருப்பாங்க சொல்லு. உனக்கு ஷாப்பிங் போகணும்னா ஈவினிங் நானே கூட்டிட்டுப் போறேன். ஓகேவா?” என்று தீரன் வினவ.
அங்கு பார்வையாளராக இருந்த மிதுனா, “ ஐ ஜாலி!” என்றுக் கத்தினாள்.
“ஆமாம் இப்போ நீ ஏன் குதிக்குற?”என்று தங்கையின் காதைத் திருகி வினவ.
“நானும், அண்ணியும் தான் ஷாப்பிங் போகலாம்னு இருந்தோம். இப்போ ஆடு வந்து தானா சிக்கி இருக்கு. விட்டுடுவோமோ.” என்றவாறே வெண்ணிலாவுக்கு ஐ ஃபை கொடுக்க.
அங்கிருந்த இனியா,” அத்தை நானு! அம்மா நானு…”என்று ஐ ஃபை கொடுக்க.
“மகளிர் கூட்டணி பலமா இருக்கே.” என்று தீரன் சிரிக்க.
யாழினியும், நிரஞ்சனும் அவர்களைப் பார்த்து கண் கலங்க சிரித்தனர்.
வெண்ணிலா அந்த ரீயூனியனுக்காகப் பண்ண அலப்பறைகளை பார்த்து மொத்த குடும்பமே நொந்து போனது.
இவள் இங்க இப்படி அலப்பறையும், ஆர்ப்பாட்டமுமாக கொடைக்கானலுக்கு கிளம்பிக் கொண்டிருக்க.
அங்கு ஒருவனோ எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து சென்னை ஏர்போர்ட்டில் இறங்கினான்.
அங்கோ அவனைப் பிக்கப் செய்வதற்காக ரகுலன் வந்திருந்தான்.
“ டேய் என்னடா திடீர்னு கிளம்பி வரேன்னு மெசேஜ் அனுப்பிட்டு வந்து நிக்கிற?” என்று கேட்க.
“ உன்னை யார் இங்கே வரச் சொன்னா? நானே வர்றேன்னு தானே சொன்னேன். அங்கே அரேஞ்ச்மெண்ட்லாம் கரெக்டா பண்ணியிருக்கியா?” என்று ரகுலன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்தான் யுகித்.
“யுகி! நான் எல்லா ஏற்பாடுகளையும் கரெக்டா பண்ணிட்டேன். நான் கேட்குறதுக்கு ஒழுங்கா பதில் சொல்லு. நீ ரீயூனியனுக்கு வரலைன்னு தான லண்டனுக்கு போன?”
“ ஆமாம் !”
“அப்போ இப்ப எதுக்கு வந்த?”
“ இப்ப வரணும்னு தோணுச்சு. அதனால வந்தேன்.”
“டேய்! நான் அனுப்புன ஃபோட்டோவை பார்த்து வந்தியா? நிலா அவ லைஃப்ல செட்டிலாயிட்டா. நீயும் மூவ் ஆன் ஆகுங்குறதுக்காக தான் உன்ன லண்டனுக்கு அனுப்பினேன்.”
“ அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமல், ட்ராலியைத் தள்ளினான் யுகித்.
“ இங்கப் பாரு யுகி!இது சினிமாவோ, நாடகமோ கிடையாது. வெண்ணிலா அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டு போயிட்டா. அவளை நீ டிஸ்டர்ப் பண்ணாதே.” என்று நண்பனுக்கு ரகுலன் அறிவுரைக் கூற.
“அடுத்தவன் வைஃபை எப்பவுமே நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனால்…” என்றவன், வேற எதுவும் கூறாமல் விடு விடுவென நடக்க.
அவன் சொன்னதைக் கேட்டு முதலில் மகிழ்ந்த ரகுலன், இறுதியில் அவன் சொல்லாமல் விட்டதில் குழம்பித் தவித்து அவனைத் பின்தொடர்ந்தான்.