அரிமா – 10

4.5
(13)

“இப்போ ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க? ஓடிப்போனவளையே நினைச்சுட்டு இருக்காம, அடுத்து என்ன பண்ணனும்னு யோசிங்க. எல்லாரும் வந்துட்டாங்க” என்ற மிருதுளாவிடம்,

” இனிமே என்ன பண்றது வந்தவங்க கிட்ட கல்யாணம் நடக்காதுன்னு எடுத்து சொல்லி அனுப்ப வேண்டியது தான்” என்றார் அருள்நிதி.

” கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா   என் தம்பியும் என் தம்பி பையனும் அசிங்கப்பட்டு நிக்க மாட்டாங்களா”

” அதுக்காக கல்யாணம் நடக்கும்னு பொய்யா சொல்ல முடியும்”

” குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடந்தா ஏன் பொய் சொல்லணும் “

” என்ன உளறிட்டு இருக்க, மது இல்லாம எப்படி “

” மது மது மது நம்ம எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டு அர்ஜுன ஏமாத்திட்டு போனவள பத்தி ஏன்  இப்ப பேசிட்டு இருக்கீங்க. மது மட்டும் தான் பொண்ணா என்ன? நம்ம ஜூவாலா இல்லை, அர்ஜுனுக்கும் ஜூவாலாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என்று மிருதுளா கூறியதும்,

“அத்தை”,

” அம்மா என்ன பேசிட்டு இருக்கீங்க “,

” என்ன மிருதுளா நீ, எப்போ வந்து என்ன பேசிட்டு இருக்க” என்று அர்ஜுனை தொடர்ந்து இளமாறன் மற்றும் அருள்நிதி குரலும் சேர்ந்து ஒலிக்க, அனைவரையும் தன் பார்வையாலே அடக்கிய மிருதுளா அர்ஜுனை பார்த்து,

 ” என்னடா? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு என்கிட்ட எகிறிட்டு வர, அந்த ஓடிப்போனவளுக்காக நீயும் அசிங்கப்பட்டு எல்லாரையும் அசிங்க படுத்தலாம்ன்னு நினைக்கிறியா” சீற்றத்துடன் வினவினார்.

” யாரும் அசிங்கப்பட வேண்டாம்  நானே எல்லார்கிட்டயும் போய் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடுறேன்  போதுமா ” தன் கன்னம் அதிர கோபமாக கூறினான் அர்ஜுன்.

 அப்பொழுது, “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க யாரும் எதுவும் பேச வேண்டாம்” என்ற ராம்குமார் மிருதுளா மற்றும் அருள்நிதியை பார்த்து,

” அக்கா மாமா இப்ப நான் கேட்கிறேன், உங்க பொண்ணு ஜூவாலாவ என் பையன் அர்ஜுனுக்கு தர முடியுமா” என்று கேட்டுவிட, எதுவும் செய்ய முடியாது நடக்கும் அனைத்தையும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த பிரீத்தாவை கர்வத்துடன் பார்த்த மிருதுளா தன் தமையனிடம்,

” அதான் நானே தரேன்னு சொல்றேனே அப்புறம் ஏன் கேட்டுட்டு இருக்க, போய் மத்த ஏற்பாட கவனி” என்றார்.

 இருவரின் சம்பாஷணையில் இன்னும் ஆத்திரம் கொண்ட அர்ஜுன்,

” அப்பா ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க ” என்று கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்த ராம்குமார்,

” நீ சும்மா இரு, இதுல நீ எதுவும் பேசக்கூடாது. உன் விருப்பப்படி விட்டு இப்ப அசிங்கப்பட்டு நிக்கிறோம். இனிமே நான் சொல்றத மட்டும் நீ கேட்டா போதும். உனக்காக தான் இந்த முடிவு எடுக்கிறேன், நீ கேட்டு தான் ஆகணும்” என்றவர் ஜூவாலாவை பார்த்து,

” உன் முடிவு என்னம்மா” என்க, ஜுவாலாவால் பதில் சொல்ல முடியவில்லை.

 அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள் தான், ஆனால் இப்படி ஒரு நிலைமையில் இல்லையே. அவன் வேதனையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.  எனவே ஜூவாலா அமைதியாக நின்றிருந்தாள்.

“சொல்லுமா”

“மாமா” ஜூவாலா தயங்கிக்கொண்டிருக்க,

 ” மது என் பையனை வேண்டாம்ன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு அவமானப்படுத்திட்டு போன போல, நீயும் என் பையன வேண்டாம்ன்னு சொல்லிடாத டா ” என்று ராம்குமார் உருக்கமாக பேசவும்,

“ஐயோ மாமா ஏன் இப்படி பேசுறீங்க, அத்தானுக்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்” என்றவள் அர்ஜுனை பார்க்க,

 ” அவன் ஓகே சொல்லுவான் மா” என்றார்.

அப்பொழுது, ” ஆனா மாமா ஏன் எல்லாரும் அவசரப்படுறீங்க, அர்ஜுன் பாவம் மாமா. இதுல ரெண்டு பேரோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு. அர்ஜுனுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாமே” என்றான் இளமாறன்.

 அதைக் கேட்டதும் கொதித்தெழுந்த மிருதுளா, ” உனக்கு ரொம்ப தெரியுமா? ஹான், யாருக்கு என்ன டைம் கொடுக்கணும்னு பெரியவங்க எங்களுக்கு தெரியும் வந்துட்டான். நீ எல்லாம் ஒரு வார்த்தை பேசாத, நீயும் உன் அத்தையும் கொடுத்த இடத்துல தான் அந்த மது இப்படி ஒரு வேலை பார்த்து வச்சிருக்கா, பைய மாட்டிகிட்டு கண்ட இடத்துக்கும் அவ போகும் போதே நினைச்சேன் ஓடுகாளி மானத்தை வாங்கிட்டா.”

“அண்ணி ப்ளீஸ் அப்படி பேசாதீங்க. அவ பாவம்” என்ற ப்ரீத்தாவை அழுத்தமாக பார்த்த மிருதுளா,

 ” யம்மா புண்ணியவதியே அவ ஏமாத்திட்டு போனது உன் புள்ளைய தான். அதுக்குள்ள மறந்துட்டியா என்ன? அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க”

” என்ன இருந்தாலும் அவ நம்ம வீட்டு பொண்ணு அண்ணி ” என்றதும் மிருதுளா ஏதோ சொல்ல வர,

 ” இப்ப எதுக்கு நமக்குள்ள தேவை இல்லாத வாக்குவாதம் ” என்று தன் தமக்கையை தடுத்த ராம்குமார்,

 ” ஏற்பாடுகளை கவனிக்கலாம் மாமா ” என்று சொல்லிவிட்டு வந்தவர்களை வரவேற்க அருள்நிதியுடன் கிளம்பி விட்டார்.

 அப்பொழுது ப்ரீத்தாவிடம் வந்த மிருதுளா, ” என்ன சம்பந்திமா அப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்,  போய் கோபமா போற உங்க பையன  சமாதானப்படுத்துங்க”  என்று நக்கலாக கூறியவர், தன் மகளை அழைத்துக் கொண்டு சென்று விட, இளமாறனும் ப்ரீத்தாவும் அர்ஜுனை சமாதானம் செய்வதற்காக அவனது அறையின் கதவை தட்டினர்.

@@@@@@

ஊருக்கு தொலைவில் இருந்து தான் இருக்கும் இடத்திற்கு, வரவே ஆதித்யாவிற்கு பலமணிநேரம் மணிநேரம் ஆகிவிட, அதற்குள் அவள் பட்ட வேதனையை விட அவன் பட்ட வேதனை தான் அதிகம்.

மயக்கத்தில் கிடந்தவளை தூக்கிக்கொண்டு தனது மாளிகைக்குள் ஓடினான் ஆதித்யா .

அவன் அங்கு வரும்பொழுது அனைத்து ஏற்பாடுகளும் அவன் சொன்னதற்கு ஏற்ப தயாரான நிலையில் இருக்க, மதுவுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது .

“அவளுக்கு வலிக்க வேண்டாம் வலிக்காம இருக்க முதல்ல அனஸ்தீஷியா குடுங்க” என தனது காயத்தை கூட பொருட்படுத்தாது , மயக்க நிலையிலும் வலியில் முகம் சுளித்தவளை பார்த்து கொண்டே கூறியவனின் கண்களில் தான் எத்தனை வலி .

” ஆதி அவளுக்கு தான் ட்ரீட்மெண்ட் குடுக்குறாங்கல்ல, வா உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்போம் உனக்கும் புல்லெட் இறங்கிருக்கு ” என நாகா அழைக்க ,

” அவளுக்கு முடியட்டும் ” என்றவனின் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது .

சில நிமிடங்களுக்கு பிறகு,

 ” பயப்படுறத்துக்கு எதுவும் இல்லை ஆதித்யா. கொஞ்ச நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போய்டும் ” என மருத்துவர் தாரா கூற,

 .

” உஃப்” – என இயல்பாக மூச்சுவிடும் பொழுது தான் ஆதித்யாவுக்கு புரிந்தது, தான் இவ்வளவு நேரம் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டிருந்திருக்கின்றோம் என்று.

 அதுவரை உச்சகட்ட பதற்றத்தில் இருந்தவன் மருத்துவர் மதியின் நலனை உறுதி செய்த பிறகே நிம்மதி அடைந்தான்.

ஆதித்யா மதியின் அருகிலே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துகொள்ள, மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்தார் .

” ஆதித்யா அனஸ்தீஷியா ” என மருத்துவர் தாரா கேட்க .

” நோ ” தன் கைகளினால் வேண்டாம் என தடுத்தவன். மதியையே வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்தான் .

 கையில் இறங்கியிருந்த புல்லட் அவனது சதையை கிழித்தபடி நீக்கப்பட, முகம் மட்டும் கொஞ்சம் சிவந்ததே தவிர அவனது உடம்பில் சிறு அசைவு கூட இல்லை,

‘ இவன் மனிதனா. இல்லை உணர்ச்சியற்ற ஜடமா ‘ என தாராவுக்கு ஆச்சரியமாக இருந்தது .

” முடிச்சாச்சு ஆதித்யா. டேக் சம் ரெஸ்ட் ” என அவர் சொன்ன மறுநிமிடம்  மதுவை  தன் கையில் ஏந்தியவன் தன் அறையை நோக்கி நடந்தான் .

” என்ன நாகா இது அவர் ரெஸ்ட் எடுக்கணும்.” என தாரா நாகாவை பார்த்து ஆற்றாமையுடன்  கூறினாள்.

” சொன்னா கேட்க மாட்டான் தாரா. உனக்கு அவனை நல்லா தெரியுமே “

” உண்மையாவே ஆதித்யா சக்கரவர்த்தி இரும்பு மனுஷன் தான் பா. என் வாழ்க்கையிலையே இவரை மாதிரி ஒருத்தரை நான் இதுவரை பார்த்தது இல்லை ” சிறு மென்னகையுடன் கூறியவள் அங்கிருந்து செல்ல. நாகாவும் சென்றுவிட்டான் .

@@@@@

ஒருவழியாக திருமணமும் முடிந்து விட, அர்ஜுனின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நாளுக்காக எவ்வளவு கனவுகளோடு காத்திருந்தானோ , அவனே இன்றைய நாளை அறவே வெறுத்தான். அவனால் மது செய்த காரியத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

‘ உனக்கு அவர பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும், நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டேன் ஆனா என்னால முடியல, ரெண்டு நாள் பழக்கத்துல அது எப்படி அவன் மேல உனக்கு லவ் வரும்ன்னு உங்க எல்லாருக்கும் தோனலாம்.

ஆனா என்கிட்ட அந்த கேள்விக்கு பதில் இல்லை, எந்த இடத்தில அவர் மேல எனக்கு காதல் வந்துச்சுன்னு தெரியல, ரெண்டு முறை என் உயிரை காப்பாத்தினதுனால வந்துச்சா, இல்லை நாள் முழுக்க எங்க கூடவே இருந்து எனக்காகவும் குழந்தைகளுக்காகவும் அவர் பார்த்து பார்த்து பண்ணினதுனால அவர் மேல லவ் வந்துச்சான்னு தெரியல ஆனா என்னால அவரை மறக்க முடியல.

 கண்ண மூடினாலே அவர்தான் வந்து நிற்கிறார், அப்படி இருக்கும்போது உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் வாழ்க்கையும் சேர்த்து உன் வாழ்க்கையும் அழிக்கிற மாதிரி ஆகிடும் அர்ஜுன்.

 அதனால தான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கேன், இன்னைக்கு இல்லாட்டாலும் கண்டிப்பா உனக்கு ஒரு நாள் என்  நிலைமை  புரியும். என் காதலை தேடி நான் போறேன் அர்ஜுன், முடிஞ்சா என்னை மன்னிச்சுடு’

அர்ஜுன் நம்ப வேண்டும் என்பதற்காக ஆதித்யாவின் பெயர் கூட தெரியாத அந்த நேரத்தில், அவனை காதலிப்பதாக மது  எழுதி வைத்து, விட்டுச் சென்ற பொய்யிலான கடிதத்தில் இருந்த இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் அர்ஜுனின் மனதில் தோன்றி அவனை ரணப்படுத்திக் கொண்டே இருக்க,

 ‘ஆதித்யா’ என்று தன் மனதிற்குள் எண்ணியபடி பல்லை கடித்த அர்ஜுனின் மொத்த கோபமும்  ஆதித்யா பக்கம் திரும்பியது.

 இப்பொழுது இருக்கும் நிலைமையில் கல்யாணம் செய்து கொள்ளும் மனநிலை சுத்தமாக இல்லாவிட்டாலும், தன் தாய்  ஒருத்திக்காக வேண்டா வெறுப்பாக ஒவ்வொரு சடங்கையும் செய்தான் அர்ஜுன்.

வந்தவர்கள் அனைவருக்கும் பெண் மாறியது பெரிய அதிர்ச்சியை கொடுத்தாலும், தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்களே தவிர நாகரிகம் கருதி யாரும் பெரிதாக கேட்கவில்லை.

ஒரு சில நெருங்கின உறவினர்கள் மட்டும் கேட்டதற்கு மிருதுளாவே சமாளித்து விட, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் பெரிதாக ஆர்ப்பாட்டம் இன்றி இனிதாகவே முடிந்தது.

 திருமணம் முடிந்ததில் வந்தவர்கள் அனைவரும் கிளம்பியதும் தான் தாமதம், யார் சொல்லியும் கேட்காத அர்ஜுனோ காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட, இப்பொழுது மிருதுளா ப்ரீத்தாவிடம் எகிறினார்.

@@@@@@@@

மெதுவாக மதுவை படுக்கையில் கிடத்தியவன். போர்வையை அவளது கழுத்து வரை போர்த்திவிட்டு அவளை பார்த்தபடி அவள் அருகிலே கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான் . கண்களை மூடி குழந்தை போல கிடந்தவள் சில மணிநேரத்துக்கு முன்பு குண்டடி பட்டு ரத்தவெள்ளத்தில் தனக்காக அலறி துடித்தது அவன் கண்முன்னே வர ,

” ஏன் மதி இப்படி செஞ்ச. நீ அப்பவே போயிருக்கணும். ” என்றவனின் மனதிற்குள் ஆயிரம் சிந்தனை ஓடியது.

அப்பொழுது அவள் உடம்பில் திடிரென்று சிறு அதிர்வு,

” நோ ஆதித்யா வேண்டாம்…ப்ளீஸ்…. நோ ஷூட் பண்ணாதீங்க” மயக்கத்திலே மதுமதி அழுது புலம்ப, உடல் வெட்டி போட்டது போல துடித்தது.

வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஆதித்யா, அவள் முகமெல்லாம் முத்துமுத்தாய் வியர்த்து இருக்க, பதற்றத்திலும் பயத்திலும் அவள் உதடுகள் துடித்தது .

” மதி.. நீ பத்திரமா தான் இருக்க ” – நடுங்கும் அவள் கரங்களை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அவளை ஆறுதல் படுத்த, அவளது அலறலும் பதற்றமும் அதிகமானது.

 மதுமதியின் மூடிய இமைகள் தாண்டி கண்ணீர் வழிய,

” யாரவது காப்பாத்துங்க ப்ளீஸ் ஆதி ” சத்தமாக புலம்பினாள்.

” ஒன்னும் இல்லை பேபி நீ நல்லா இருக்க ” சட்டென்று மதுவை தன் நெஞ்சோடு அணைத்து பிடித்துக்கொண்டு அவள் முதுகை வருடினான்.

” ப்ளட்டா வருது ” விம்மியபடி அழுதாள் .

அவளது கண்ணீரை துடைத்து, சிகையை வருடி,

” ஷ்ஷ்.. நான் உன் பக்கத்துல தான் இருக்கேன் எல்லாமே சரி பண்ணியாச்சு பேபி ” அமைதி படுத்தினான் ஆதி. அவளோ அவனது வெற்று மார்பில் முட்டி மோதி, பயத்தில் அவனிடம் இருந்து விடுபட போராடினாள் .

” ட்ரஸ்ட் மீ பேபி எல்லாமே சரி பண்ணிடலாம் ” முடிச்சிட்ட அவளது புருவத்தை நீவியபடி நம்பிக்கை கூறினான் .

” ட்ரஸ்ட் யூ ஆதி ” மயக்கத்திலும் நான் உன்னை நம்புறேன் என்று அவளது உதடுகள் மெல்ல முணுமூணுக்கவும், சுகமான தென்றல் ஒன்று அவன் கனல் இதயத்தை இதகமாக வருடி செல்ல, ஆதித்யாவின் அழுத்தமான இதழ்கள் இப்பொழுது மெதுவாக புன்னகைத்தது. மதுமதியின் புலம்பலும் குறைந்து, அழுகையும் குறைந்தது.

அப்பொழுது ஆதித்யாவின் தாய் மற்றும் தங்கை வாழும் வீட்டின் தலைமை  காவல்காரரிடம் இருந்து  ஆதித்யாவுக்கு அழைப்பு வர, உடனே ஏற்றவன்,

” சொல்லுங்க பத்ரி எல்லாம் ஓகே தானே ” என்று வினவினான்.

” ஒரு சின்ன பிராப்ளம் சார்”

“என்னாச்சு”

” ஏ சி பி அர்ஜுன் சார் உங்கள பார்த்தே ஆகணும்னு ரொம்ப வயலென்டா நடந்துக்குறாரு, ட்ரிங்க்ஸ் வேற எடுத்திருக்காரு, இப்போ என்ன பண்றது சார்” என்று தலைமை காவலாளி கேட்கவும், அரை மயக்கத்தில் இன்னும் எதையோ முணுமுணுத்த படி  படுத்திருந்த மதுவை பார்த்தவன்,

” சரி அவர்கிட்ட ஃபோனை குடுங்க” என்று கூறினான்.

 தலைமை காவலாளியோ,

” சார் தான் லைன்ல இருக்காங்க பேசுங்க சார்” என்று அர்ஜுனிடம் அலைபேசி நீட்ட வாங்கிக்கொண்ட அர்ஜுன்,

” பழி வாங்கிட்டல உன்னை விடமாட்டேன்டா, உன்னை பத்தி எதுவும் தெரியாததுனால மது உன்னை நம்புறா, கூடிய சீக்கிரம் உன்  முகத்திரையை கிழிச்சு, மது வாயால உன்னை வேண்டாம்ன்னு சொல்ல வைச்சு, ஜெயில்ல தள்ளல நான் அர்ஜுன் கிடையாது. எப்படி நான் இன்னைக்கு என் காதலை இழந்து தவிச்சிட்டு நிக்கிறேனோ, நீயும் ஒரு நாள் நிப்ப” என்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்க, அர்ஜுனின் பேச்சில்  எரிச்சல் அடைந்த  ஆதி கோபத்தில் சத்தமாக பேசினால் மது விழித்துக் கொள்வாளோ என்பதை கருத்தில் கொண்டு அவனிடம் பேசுவதற்காக மெத்தையில் இருந்து எழுந்து கொண்ட நேரம், ஆதித்யாவின் கரத்தை  பற்றி கொண்ட மது,

 “ப்ளீஸ் என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க ஆதித்யா” என்று அரை மயக்கத்தில் சொல்ல,

 ” நீ தூங்குடா நான் எங்கையும் போகல” என்று மதுவின் கரத்தை வருடிய ஆதி அவள் மீண்டும் உறங்கியதும்.

 அலைபேசியில் எதிர் முனையில் இருந்த அர்ஜுனிடம்,

“கேட்டிச்சா மிஸ்டர்  கமிஷனர் சார், இனிமேலாவது என்கிட்ட சவால் விடுறத விட்டுட்டு, போட்ட காக்கி சட்டைக்கு உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாருங்க.” என்று நக்கலாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவனுக்கு, அர்ஜுனின் செயல்களும் பேச்சும் யோசனையை கொடுக்க,

 ‘ என்னவாக இருக்கும்’ என்னும் யோசனையில் அமர்ந்திருக்க, அர்ஜுன் தான் அலைபேசியில் மிகத் தெளிவாக கேட்ட மதுவின் பேச்சில் இன்னுமே உடைந்து விட்டான்.

– அரிமா வருவான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!