49. காதலோ துளி விஷம்

4.9
(104)

விஷம் – 49

காபி ஷாப்பில் கதிருக்காக காத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிற்கோ பொறுமை பறந்தது.

உனக்காக காத்துக் கொண்டிருப்பேன் எனக் கூறியவன் அரை மணி நேரம் தாமதமாகியும் வரவில்லை என்றதும் அங்கிருந்து சென்று விடலாமா என எண்ணத் தொடங்கினாள் அவள்.

இவ்வளவு நேரம் காத்திருந்து பார்த்தாயிற்று..

இன்னும் ஒரு பத்து நிமிடங்களாவது காத்திருந்து பார்க்கலாம் என்ற முடிவோடு அங்கேயே அவள் அமர்ந்திருக்க சற்று நேரத்தில் அந்த காபி ஷாப்பினுள் இன்னொரு ஆடவனுடன் உள்ளே நுழைந்தான் கதிர்.

தனியாகப் பேச நினைத்தால் அவன் இன்னொரு ஆணுடன் அல்லவா வருகின்றான்.. இப்போது எப்படி தெளிவாகப் பேசுவது எனத் தயங்கியவள் சலிப்போடு விழிகளை ஒரு கணம் மூடித் திறந்தாள்.

“ஹாய் அர்ச்சனாம்மா, சாரி கொஞ்சம் லேட் ஆயிருச்சு..” என்றான் கதிர்.

அவனுடைய முகம் முழுவதும் மகிழ்ச்சிப் புன்னகை.

“இட்ஸ் ஓகே…” என்றாள் அவள்.

அவளுடைய பார்வையோ கதிரின் அருகே இருந்த ஆடவனின் மீது கேள்வியாகப் பதிய,

அதைப் புரிந்து கொண்டவனோ,

“இவன் என்னோட ப்ரண்ட் நித்திலன்.. வர்ற வழியில என்னோட பைக் பெச் ஆயிருச்சு… இவன் பைக்லதான் இங்க வந்தேன்…” என அவனை அறிமுகம் செய்து வைத்தான் கதிர்.

மரியாதை நிமித்தமாக அந்த நித்தலனைப் பார்த்தும் சிரித்து வைத்தவள்,

“நீங்க எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டீங்கன்னு அம்மா சொன்னாங்க.. அதைப் பத்திதான் கொஞ்சம் பேசணும்…” என்றாள் அவள் தயக்கமாக.

நித்திலன் இருப்பதால்தான் தயங்குகின்றாள் என்பதை புரிந்து கொண்ட கதிரோ “இவன் என்னோட பிரதர் மாதிரி.. நீ தயங்காம பேசு அர்ச்சனா..” என்றதும் அவளுக்கோ எரிச்சலாக இருந்தது.

ஆனால் இப்போது எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளும் நேரம் இல்லை அல்லவா..?

ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளி விட்டவள்,

“முதல்ல எந்த தைரியத்துல எங்க வீடு தேடி வந்து பொண்ணு கேட்டீங்க..?” என அர்ச்சனா சற்று கோபமாகக் கேட்டதும் கதிருக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“ஏன் அர்ச்சனா இப்படி கோபப்படுற..? நீ இந்த ஹாஸ்பிடல்ல வேலைக்கு சேர்ந்ததுல இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா அப்போ தைரியமா லவ்வ சொல்ல முடியல… சுத்தி வளைச்சு உன்கிட்ட சொன்னேன்தான்… பட் நீ என்ன கண்டுக்கவே இல்ல… எப்படியும் கொஞ்ச நாள்ல குடும்பத்தோட வந்து உங்க வீட்ல உன்ன பொண்ணு கேட்கலாம்னு நினைச்சேன்..

ஆனா திடீர்னு நீ யாழவன் சார கல்யாணம் பண்ணிக்கிட்ட… என்னால எதுவுமே பண்ண முடியல… ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்… என்னோட காதல் ஆரம்பிக்கும் முன்னாடியே கருகிப் போச்சு…

ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. அதுக்கப்புறம் உன்னை மறக்க ட்ரை பண்ணி மறந்துட்டேன்னு நினைச்சேன்… ஆனா இப்போ உன்னோட நிலமை தெரிஞ்சதுக்கப்புறம் என்னால உன்னை விட முடியல… உன் கூட வாழ சான்ஸ் கிடைச்சா எனக்கு அதுவே போதும்… கடைசி வரைக்கும் உன்னையும் குழந்தையும் கண் கலங்காம வச்சு பார்த்துப்பேன் அர்ச்சனா.. என்னை நம்பு..” என்றான் அவன் உறுதியான குரலில்.

அவனுடைய வார்த்தைகளில் திகைத்து விட்டாள் அவள்.

“உங்களோட பக்கத்துல இருந்து நீங்க பேசும்போது எல்லாமே சரியாதான் இருக்கும்.. பட் என்னோட பக்கத்துல இருந்து பார்த்தா எல்லாமே வேற மாதிரி இருக்கும் கதிர்… நான் என்னோட ஹஸ்பண்ட்டைதான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்…

அவரை மறந்துட்டு வேற யாரையும் என்னால கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியாது… அவர் இறந்தாலும் கூட எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க… அவங்க கூடவே என்னோட வாழ்க்கைய முடிச்சுடலாம்னுதான் இருந்தேன்…

ஆனா இன்னைக்குத்தான் அவருக்கு எதுவுமே ஆகல அவர் உயிரோட இருக்காருன்னு எனக்குத் தெரிஞ்சுது… ஏதோ ஒரு காரணத்துக்காக என்ன பாக்க வராம இருக்காரு… எப்படியாவது நான் அவரைப் பாக்கணும்.. எல்லா பிரச்சனைகளையும் முடிச்சு அவர் கூட நிம்மதியா சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படுறேன்..

அவரைத் தவிர வேற யாரையும் என்னோட வாழ்க்கைல என்னால அனுமதிக்க முடியாது..” என்றதும் கதிரின் முகமோ வாடிப் போனது.

அர்ச்சனாவின் மீது சிறு கோபமும் துளிர்த்தது.

“இத சொல்றதுக்காகவா என்ன வரச் சொன்னீங்க…?” என மரியாதைப் பன்மையுடன் தன் பேச்சைத் தொடர்ந்தான் அவன்.

திருமணத்திற்கு சம்மதம் கூறப் போகின்றாள் என்ற உரிமையில்தான் அவளை வா போ என அழைத்தான்.

ஆனால் அவள் அவளுடைய மனதைப் கூறிய பின்பு அவளை ஒருமையில் அழைக்க அவனால் முடியவில்லை.

“சா..சாரிங்க உங்கள கஷ்டப்படுத்தணும்னு நான் நினைக்கல.. ஆனா இப்படியே நீங்க என்னையே நினைச்சுகிட்டு உங்க வாழ்க்கைய வீணாக்கறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல…”

“ம்ம்..” என்றான் அவன் விரக்தியாக.

“கதிர் எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு உதவி வேணும்.. எனக்காக பண்ண முடியுமா ப்ளீஸ்..?” என அவள் கெஞ்சிக் கேட்க,

“சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்..” என்றான் கதிர்.

“இந்தக் கல்யாணம் நடக்காது… ஆனா போலியா கல்யாணம் நடக்கிற மாதிரி பிளான் மட்டும் பண்ணலாம்.. பத்திரிக்கை அடிச்சு எல்லாருக்கும் சொல்லலாம்… இதெல்லாம் பார்த்தா என்னோட ஹஸ்பண்ட் கண்டிப்பா என்னைத் தேடி வருவாரு… அதுக்காக நீங்க கொஞ்ச நாளைக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி நடிச்சீங்கன்னா போதும் ப்ளீஸ்..” என அர்ச்சனா கேட்க பொறுமையின் சிகரமான கதிருக்கே கோபம் வந்துவிட்டது.

“ஏங்க எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு.. எப்படிங்க உங்க கூட நார்மலா கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி என்னால நடிக்க முடியும்…? உங்களை உயிருக்கு உயிரா காதலிச்சவன் நானு.. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாதுங்க சாரி..” எனக் கதிர் உறுதியாகக் கூற,

அவளுடைய அத்தனை திட்டங்களும் நொறுங்கிப் போய்விடுமோ என கவலை கொண்டாள் அர்ச்சனா.

“டேய் கதிர் அவங்க கொஞ்ச நாளைக்குத்தானே உன்னை நடிக்க சொல்றாங்க.. உன்னால அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா நல்லதுதானே… ஹெல்ப் பண்ணுடா..” என்றான் நித்திலன்.

அவனை அடித்து விடுவது போல முறைத்துப் பார்த்தான் கதிர்.

“வேணும்னா நீ ஹெல்ப் பண்ணு.. என்னால முடியாது.. மணமேடை வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி நீ நடிடா… என்ன எதுக்கு நடிக்க சொல்ற..?” என கோபமாகக் கேட்டான் கதிர்.

“வை நாட்..? எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல.. உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க நீங்க சொன்ன மாதிரி நான் நடிக்கிறேன்… கல்யாண மேடை வரைக்கும் உங்க கூட நடிப்பை கண்டின்யூ பண்ண நான் ரெடி…” என நித்திலன் கூறியதும் அவனை அதிர்ந்து பார்த்தவள்,

“நீங்க எதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணனும்..?” என புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“உங்க கதை மாதிரிதான் என்னோட கதையும்… என்னோட லவ்வர் என்ன பிரேக்கப் பண்ணிட்டு போயிட்டா.. எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சா ஃபீல் பண்ணி வருவான்னு நம்புறேன்..” என அவன் சோகமாகக் கூற அர்ச்சனாவுக்கு குழப்பமாக இருந்தது.

இப்போது இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை நிராகரிப்பதா..?

கதிரையாவது அவளுக்குத் தெரியும்.

இந்த நித்திலனை யார் என்றே அவளுக்குத் தெரியாதே..

எப்படி இவனுடன் இணைந்து திட்டத்தை மேற்கொள்வது..?

“என்னங்க இவ்வளவு யோசிக்கிறீங்க..? நான் ஒன்னும் உங்களை போர்ஸ் பண்ணல… உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் நினைச்சேன்.. உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க.. இல்லன்னா நோ ப்ராப்ளம்..” என்றான் நித்திலன்.

“எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. ஆனா உங்களை யாருன்னே தெரியாது… அதான் யோசிக்கிறேன்..”

“அத பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க அர்ச்சனா… இவன் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… தூரத்து சொந்தம் வேற.. நீங்க நினைக்கிற மாதிரி கெட்ட பையன் எல்லாம் கிடையாது… உங்களுக்கு இவனோட ஹெல்ப் வேணும்னா நீங்க யூஸ் பண்ணிக்கோங்க… பட் சாரி நீங்க கேட்ட உதவிய என்னால பண்ண முடியாது… அப்படி பண்ணினா என்னால நிம்மதியா மிச்ச வாழ்க்கைய வாழவே முடியாது…” என்றான் கதிர்.

அவனைப் பார்க்க அவளுக்கோ பாவமாக இருந்தது.

“சாரி கதிர்… என்ன விட ஒரு நல்ல பொண்ணு உங்களுக்கு கண்டிப்பா கிடைப்பா.. அந்த பொண்ணு கூட சந்தோஷமா வாழுங்க..” என அவள் கூற அவளைப் பார்த்து கசப்பாக புன்னகை புரிந்தான் அவன்.

“சரிங்க அர்ச்சனா.. அப்போ நாங்க கிளம்புறோம்..” எனக் கதிரும் நித்திலனும் எழுந்து கொள்ள சட்டென தானும் எழுந்து கொண்டவள்,

“நீங்களே எனக்கு ஹெல்ப் பண்ணுங்க… இப்போ உங்களை விட்டா எனக்கு வேற எந்த உதவியும் கிடைக்காது..” என்றாள் அவள் நித்திலனைப் பார்த்து.

“பண்ணலாமே.. எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது… அக்காதான் இருக்காங்க.. இந்த நாடகத்துக்கு அவங்கள உள்ள இழுக்க முடியாது… சோ நான் அநாதைன்னு உங்க வீட்ல சொல்லிடுங்க.. உங்க வீட்ல எல்லாத்தையும் பேசிட்டு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க அப்படியே பண்றேன்…” என்றவன் அவனுடைய அலைபேசி எண்ணை அவளுக்குக் கொடுத்தான்.

மறுக்காது அதனை வாங்கியவள் “உங்க உதவியை எப்பவுமே மறக்க மாட்டேன்… ரொம்ப ரொம்ப நன்றி..” என்றாள் அவள்.

அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பியதும் இப்போது எப்படி தன்னுடைய அன்னையை சமாளிப்பது என்ற கேள்வி பூதாகரமாய் எழுந்து அவளை அச்சுறுத்தியது.

கதிரை வேண்டாம் எனக் கூறிவிட்டு இன்னொரு ஆணை திருமணம் செய்கின்றேன் என்றால் தன் அன்னை அதற்கு சம்மதிப்பாரா..?

உண்மையைக் கூறினால் தன்னை அடித்தே கொன்று விடுவார் என்பதை அறிந்தவள் எப்படியாவது பேசி சமாளித்து விட வேண்டும் என்ற முடிவோடு வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினாள்.

“டேய் யாழா நீ மட்டும் என் கண்ணுல மாட்டு.. அன்னைக்கு இருக்கு உனக்கு..” என அவனைத் திட்டியவள்,

அடுத்த கணமே “கூடிய சீக்கிரமே நீ என்னைத் தேடி ஓடி வரப்போற…” என சிறு புன்னகையுடன் கூறிக்கொண்டாள்.

அவளுடைய எதிர்பார்ப்பு நிஜமாகுமா..?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 104

No votes so far! Be the first to rate this post.

1 thought on “49. காதலோ துளி விஷம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!