அன்னம் 54, 55

5
(11)

அன்னம் 54, 55

 

 

வீச்சருவாளை கையில எடுத்தவன் பைக்கு முன்ன வச்சுட்டு அன்னத்த பெத்த வீட்டுக்கு பைக்கை பறக்க விட்டான்.

 

வாயில அஞ்சாரு கெட்ட வார்த்தைய உதிர்த்தவன், “இன்னைக்கு இந்த ஊருக்குள்ள சாவு விழும்டா. எல்லாத்தையும் கருப்பன் வீட்டுக்கு வரச் சொல்லிப்புடு” ன்னு சொல்லிட்டே கெளம்பினான்.

 

அதை வேதவாக்கா எடுத்த வேலையாள், “அண்ணே வீச்சருவாளோட கருப்பன் அண்ணன வெட்டறதுக்கு போறாருன்னு” ஒருத்தருகிட்ட சொல்ல அது பலவாறா ஊருக்குள்ள பரவிடுச்சு.

 

கருப்பன் சத்தியசீலன் சண்டையை பாத்து பலநாள் ஆவிட, அதுவும் இப்ப அன்னத்த சத்தியசீலனுக்கு கொடுத்ததால மாமன் மச்சான் சண்டையா போவ, பாக்கறதுக்கு ஆர்வமா கெளம்பிட்டனர் ஊரு சனத்துல அந்த தினத்துக்கு வேலைக்கு போவாம வீட்டுல இருந்தவங்க அம்புட்டு பேரும்.

 

கருப்பனுக்கும் தயாளனுக்கும் போன் போவ அவங்களும் வீட்டை நோக்கி அவசரமா கிளம்பினார்கள். அவசரத்துக்கு அவந்தான் சிக்குனான்னு புள்ளைய கட்டி வச்சதுக்கு அனுபவிக்கறமடா தயாளன் தலையில அடிச்சுக்கிட்டாரு.

 

“பேசாம வாப்பா. அவனுக்கு என்ன குறைன்னு புலம்பற. நம்ம வீட்டு மருமவளை நாம பாத்துகிட்ட லட்சணத்துக்கு அவன் ஒண்ணும் அம்புட்டு மோசமில்ல வாய மூடிட்டு வாய்யா” அடக்கிட்டான் தகப்பனை.

 

சுலோச்சனா பண்ணி வச்ச கூத்து இன்னும் அவங்க காதுக்கு போவல, உடம்பு முடியலன்னு மட்டும் மேம்போக்கா சொல்லியிருந்தார்கள் அவங்ககிட்ட.

 

பைக்க விட்டு இறங்கி எதிர்த்தாப்புல நிக்கற யாரையும் பாக்காம கூட வீட்டுக்குள்ள வேக வேகமா மூச்சு வாங்க ஓடுன அன்னம் பெத்தவ பக்கத்துல போனா.

 

“அம்மா என்னாச்சு?” கேட்டுட்டே பக்கத்துல போவ.

 

“அடியே பொண்டாட்டி வாடி வெளியே” சத்தியசீலன் குரல் ஆசீரிறியா காதுல விழ அவள் உடம்பே நடுக்கத்துல குலுங்கி தூக்கி வாரிப்போட்டது.

 

“இந்த ஆம்பளை புத்திய மறந்து தொலைச்சு வந்துட்டேனே. இப்ப சாமியாடுவானே” தலையில கையை வச்சவ பெத்தவள விட்டுப்புட்டு வாசலை பாக்க.

 

வீச்சருவா பறந்து வந்து நிலத்துல கொத்திக்கிட்டு நின்னுச்சு.

 

“வாடி பொண்டாட்டி வெளியே.

ஏ வாலிபத்த நோகடிச்ச கிளியே

நீயா இப்ப வாரியாடி பொண்டாட்டி?” பாட்டாவே பாடினவன் கதியை பாத்தவளுக்கு பயத்துல அழுகை பொத்துக்கிட்டு வந்துச்சு.

 

கோவத்துல சாமியாடாத குறையா நின்னவனை பாத்தவளுக்கு பயத்துல நடுங்கியது உடம்பே.

 

“அன்னம் போவாதம்மா. இங்கயே இரு” ன்னு சுலோச்சனா சொன்னதை காதுல போட்டுக்காம வாசப்படியை விட்டு இறங்கினா அன்னம்.

 

“பொண்டாட்டிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு பறக்க பாக்குறா. ஏண்டி எம்புட்டு நெஞ்சலுத்தம் இருந்தா இங்கிட்டு வரவே கூடாதுன்னு சொல்லியும், என்ற வாசப்படிய தாண்டி வந்துருப்ப. இன்னைக்கு உன்ன சங்க அறுக்காம ஓய மாட்டேண்டி” அன்னத்தை கழுத்தை பிடிக்க வந்தவன இழுத்துப் பிடிச்சான் கருப்பன்.

 

“டேய் இப்ப என்ன ஆவிப் போச்சுன்னு குதிக்கற. அந்தப் புள்ள பெத்தவள பாக்க வந்தது தப்பா?” ஆதங்கமா கேட்டான் கருப்பன்.

 

“ஆமாண்டா தப்புதேன். என் கையாள தாலிய வாங்குனா நா சொன்னதை அவ கேட்டாகனும் கருப்பா. பொம்பளைக்கு மதிப்பில்லாத வீட்டுக்கு அவ வரதில எனக்கு விருப்பமில்ல. அது தெரிஞ்சும் வந்திருக்கான்னா அவ மனசுல என்னமோ இருக்கு” அன்னம் பக்கத்துல வர போனவனை புடிச்சு நிறுத்தினார்கள் கருப்பனும் தயாளனும்.

 

“பாவம் தெரியாம வந்துட்டா. இனி உன்ன கேட்டுப்புட்டே வரட்டும். நா புத்திமதி சொல்லி அனுப்பறேன்” தயாளன் கெஞ்சிட்டு நின்னார் மருமகனிடம்.

 

“பொம்பளையா இவ. அப்புடியே அவளை பெத்த ஆயா மாதிரி புத்திய வச்சுருக்கா. தெனத்துக்கும் ஒரு செலவை இழுத்து விட்டுக்கறா சிறுக்கி மவ. அச்சடிக்கற மெஷின் வச்சா கூட பத்தாது இவளுக்கு” சத்தியசீலன் பொண்டாட்டிகிட்ட சண்டைக்கு நிக்க.

 

“எல்லாத்தையும் திருப்பி கொடுத்துடறேன். நீ மூடிட்டு பேசாம நில்லு” அவள் யாருக்கும் கேக்காம ரோசமா சொன்னாள். ஆனாக்கா அது தெளிவா அவனுக்கு கேட்டுச்சு.

 

“டேய் கருப்பா நீ சரியான ஆளுடா. இவளை கட்டி மேய்க்க நாந்தேன் லாயிக்குன்னு எந்தலையில கட்டிவச்ச பாத்தியா. அங்கதாண்டா சதி பண்ணி வச்சிருக்க” அன்னத்த விட்டுப்புட்டு கருப்பன் பக்கம் அவன் கவனம் போவ.

 

அடுத்து என்ன ஆவுமுன்னு நிலவரம் புரிஞ்ச அன்னம் வேடிக்கை பாக்க தயாரா நின்னவங்களை பாத்து தலையில அடிச்சுக்கிட்டா. இதுங்க முன்ன வச்சு பேசுனா இன்னும் பிரிச்சுத்தான் விடுவாங்கன்னு பயந்தவ, புருஷன் மேல இருக்க பயத்த தள்ளி வச்சுட்டு மெதுவா அவன் பக்கத்துல போனா.

 

சத்தியசீலன் கருப்பன்கிட்ட தன் பெருமைய பத்தி புட்டு புட்டு வைக்க, கேக்க அசிங்கமா இருந்தாலும் நடுங்கிய காலை கட்டுப்படுத்தி அவன் பக்கத்துல நெருங்கி நின்னா.

 

“மச்சான் நம்ம வீட்டுக்கு போவலாம். வாய்யா” அவன் தோளை ஒரு விரலால் சுரண்டி வீட்டுக்கு அழைத்தாள் அவனை.

 

மச்சான்னு அவ கூப்பிட்டதும் ஆடின ஆட்டம் மொத்தமா அடங்கிப் போவ பொண்டாட்டி பக்கம் ஆசையா திரும்பியவன் “நம்ம வீட்டுக்கு போலாமா புள்ள?” மீசையை முறுக்கி விட்டுட்டே கேட்டான்.

 

“ஆமா மச்சான் உனக்காக எம்புட்டு நேரமா காத்திருந்தேன் நீ வருவன்னு. பாரு உனக்காகத்தான் பாத்து பாத்து இந்த சேலையை கட்டிக்கிட்டேன். கோழி அடிச்சு குழம்பு வச்சேன். அம்மான்னதும் பாசத்துல ஓடி வந்துட்டேன் அதுக்கு எம்புட்டு பேச்சு பேசிட்ட நீ” ன்னு கண்ணை கசக்கினாள்.

 

“அய்யோ என்ற கண்ணு ராசாத்தி. நா கிறுக்கன்னு உனக்குத்தான் தெரியுமே. கோவத்துல எதையாச்சும் பேசிப்புடுவேன். அதெல்லாம் மனசுல வச்சுக்காதே” பேசிட்டே புருசனும் பொண்டாட்டியும் பைக்குல ஏறிட்டு போயிட.

 

வேடிக்கை பாக்க வந்த மொத்த கூட்டத்துக்கும் சப்புச்சு ஆவிப்போச்சு. சலசலன்னு பேசிட்டே வீட்டை நோக்கி போனவங்க “பொண்டாட்டிகிட்ட எம்புட்டு பாசமுன்னு பாத்தியா கோவக்கார பயலுக்குன்னு” பேசிக்கிட்டே போனாங்க.

 

வீட்டுக்குள்ள போன அன்னம் அவனுக்கு சாப்பிட எடுத்து வச்சாள். அவளை கட்டிக்கிட்டு வந்த நாளுல இருந்து வெளியில சாப்பிடுறது இல்ல அவன். எம்புட்டு நேரமா போனாலும் வீட்டுக்கே வந்து நிப்பான் அதனால அவன் பசிய ஆத்த நெனச்சாள் முதல்ல.

 

அவனை நல்லா கேட்டுப்புடனும் இன்னைக்குன்னு நிறைய கேள்விய மனசுக்குள்ள வச்சிருந்தா அன்னம்.

 

அவனும் தன்னைப் போல தண்ணித் தொட்டியில மோட்டாரை போட்டுட்டு சோப்பு போட்டு குளிச்சான்.

 

துவட்டிக்கிட்டு இடுப்புல வேட்டிய கட்டிட்டே நேரா சாப்பிடத்தான் உக்கார்ந்தான்.

 

வரும்போதே அத்தன பசியில ஊட்டுக்கு வந்தவன் பொண்டாட்டி பொறந்த வீட்டுக்கு கேக்காம போயிட்டான்னு தெரிஞ்சதும் ஆவேசமாயிட்டான்.

 

புருஷன் பேச்சுக்கு என்ன மரியாதைன்னு கோவப்பட்டு அவகிட்ட கத்திட்டவன் இப்ப பசி அடங்கிப் போவ மனசு தெளிஞ்சு பொண்டாட்டி முகத்த பார்த்தான்.

 

அவளும் அவன்கிட்ட எதையும் கேட்டுக்காம சாப்பாட்டுல கவனத்தை வச்சிருந்தா.

 

“என்ன புள்ள மச்சான் மேல கோவமா?” கேட்டான் வட்டில்ல கைய கழுவிட்டே.

 

அவளும் சாப்பிட்டு முடிக்க அவனுக்கு பதில பேசாம எல்லாத்தையும் எடுத்துட்டு போயி அப்பவே சுத்தம் பண்ணி திண்ணை மேல கமுத்தி வச்சாள் பாத்திரத்தையெல்லாம்.

 

அவ பாட்டுக்கு வேலையில கவனமா இருந்துட்டு படுக்க வந்தாள். அப்பவும் எதையும் பேசாம படுத்துக்கிட்டாள்.

 

அதுக்கும் மேல பொருக்க முடியாம அவ பக்கத்துல நெருங்கினான். “என்ன புள்ள மனுஷன் கேட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு உன்ற வேலைய மட்டும் பாக்குற. அப்புடி என்ன கோவமடி உனக்கு?” கேட்டுட்டே அவள் கூந்தல்ல வாசம் புடிச்சவனுக்கு கிறங்கியது.

 

“விடுய்யா. உனக்கு கோவம் வந்தா என்ன வேனா பேசுவ” விம்மல் வெடித்தது அவளுக்கு.

 

மல்லிப்பூ வாசம் அவனை கட்டிப்போட அவ வேற அழுதுட்டிருக்க, “சரி விடு புள்ள. அதான் தெரியாம பேசிட்டேன்னு சொல்லிட்டேன். அதையே புடிச்சுட்டு தொங்குறவ”

 

“நானா தொங்குறேன். நீ எது பண்ணாலும் மூடிட்டு கேக்காம போவனும் அதான. நானும் எம்புட்டு நாளுதான் பொறுத்துப் போவேன்” திரும்பி அவனை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள்.

 

“உனக்கு எம் மேல ஒண்ணுமே இல்லைய்யா. எப்பவோ வாய் அடங்காம பேசித் தொலைச்சுப்புட்டேன். அதையே இன்னிய தேதி வரைக்கும் சொல்லிக் காட்டிட்டு இருக்க. நானும் மனுஷிதான்” அவன் மார்பில் முகத்தை துடைச்சாள்.

 

“விடுன்னு சொல்றேன்ல” ஒரு அதட்டலில் அவளை அடக்க நெனச்சான்.

 

“ஆம்பள உன்னை பட்டினி போட்டுட்டு இருக்கேன்னு மனசு அடிச்சுக்குதுய்யா. பொண்டாட்டியா ராத்திரி உன்ன தவிக்க விடறேன்னு இப்பல்லாம் படுத்தா தூக்கம் வரது இல்ல” அவனை கட்டிக்கிட்டவள் புலம்பினாள்.

 

நடுக்கடலின் பொறுமையை பிடிச்சு நின்ன அவன் இளமை கரையை கடக்க துடிக்க அதனால ஆவற சேதாரத்த பொண்டாட்டி தாங்குவாளான்னு யோசிச்சவன் அவள் நெத்தியில முத்தம் கொடுத்து அச்சாரத்தை பதிச்சான்.

 

 

 

அத்தியாயம் 55

 

 

நெருப்பில் வேறுபாடு இருக்கு. மனுஷனை மாதிரியே அதுக்கும் வெவ்வேற குணமிருக்கு. கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சிச்சியான தீபம் வீட்டுக்கு அழகை தரும்.

 

காட்டாறு மாதிரி இருக்கற அத்தனையும் வாரி சுருட்டி அழிச்சுப்புடும். ஒரு காட்டையே கரியாக்குற வல்லமை அதுக்கு இருக்கு.

 

யாரையும் தனக்குள்ள அடக்குற வல்லமையும் ஆதிக்கமும் நெறைஞ்ச நெருப்பு இருக்குற இடத்துக்கு ஏற்ப தன்னை அடக்கிக்கும். உனக்கு தேவையானத தரேன் தப்பா பயன்படுத்துனா எரிச்சுப்புடுவேன்னு மெரட்டிப்புடும்.

 

சத்தியசீலன் அடங்காத நெருப்பு அவனுக்குள்ள இதத்தை காண நெனச்சா அவனை அப்படியே ஏத்துக்கிட்டு அடங்கிப் போவனும்.

 

தனக்கு ஏத்தவளா அன்னம் புரிஞ்சுக்கற வரைக்கும் பொருத்தவன், அவகிட்ட முழுசா அடங்கிப்போவ நெனச்சான்.

 

கரங்களால் அவளை இறுக்கமான அணைப்புக்குள் அடக்கியவன் பட்டு மேனி இறுகிய தேகத்தில் உரச இன்பத்தை உணர்ந்தான்.

 

முதுகில் ஊரிய விரல் நகங்கள் கீறி சுவடுகள் பதிக்க, “யோவ் முரட்டு மச்சான் கைய எடுய்யா” தட்டி விட்டாள்.

 

“கிட்ட வந்துட்டு தட்டிப்போற? என்ன பாத்தா கிறுக்கனாட்டம் தெரியறனாடி கழுத” மறுத்து பட்டினி போட்டுருவாளோன்னு அவள் காதில் இறைஞ்சியது அவன் குரல் தவிப்போட.

 

“அய்யோ நகம் கீறுதுய்யா. சரியான இம்சை நீ. எத சொன்னாலும் தப்பாவே புரிஞ்சுக்கற” அவன் விரலை நெறுக்கி பிடித்தாள்.

 

“கருகருன்னு யானை மாதிரி இருக்கேன்னு சொன்னவதான?” சின்ன பையன் மாதிரி புகார் பண்ணிட்டே நேராக அணைகட்டி அவளோட கைகள் இரண்டையும் தன் கரத்தினுள் அடக்கினவன் பார்வை அகன்றது பேரதிசயம் பார்த்துட்ட வியப்பால்.

 

அவன் பார்வையில் அங்கம் கூச, “அது நெசந்தானய்யா?” கேட்டாள்.

 

“பொறுக்கி. அவுசாரிகிட்ட போகத்தான் லாயக்குன்னு சொன்னவடி நீ” மத்தியில் முகத்தைப் பிரட்டி முட்டினான்.

 

“பின்ன இல்லையா. வெக்கமே இல்லாம உன் கையி கண்ட பக்கம் போச்சே. இப்பகூட அதான்… ஏய் தள்ளிப்போ” கையை விடுவிக்க போராடினாள் அவன் அட்டூழியம் தாங்காம.

 

மூச்சு வாங்க நிமிர்ந்து அவள பாத்தவன் பொண்டாட்டிகிட்ட தேவையானதை எடுத்துக்க என்னடி வெக்கம்?

ராத்திரி வரவே கூடாதுன்னு நெனச்சிருக்கேன்.

இம்சையை கொடுத்த மேடு பள்ளங்களை சோதித்து ஆடைகளை வழுக்கட்டாயமா தவிர்த்து அவள் வாசனையை நுகர்ந்தான். அவளை மொத்தமா விழுங்கிடும் ஆவேசம் கிளர்ந்தது அவனுக்குள்ள.

 

தேகத்தில் மோகப் பித்தேறிய கிறுக்கனா அவளை புரட்டிப் புரட்டிப்போட சொக்கிப் போன அன்னத்துக்கு தேகம் வியர்த்துப் போனது அவன் விளையாட்டால்.

 

தீரா தொல்லை கொடுத்து அனுதினமும் அவன் இளமையை சோதித்து நிற்கும் செழித்த அழகில் தொலைந்து போனான்.

 

விரலால் நகத்தால் இதழ் கொண்டு அவளை சீண்டி சித்தரவதை செய்து அவளை கொதி நிலைக்கு கொண்டு வந்தவன் வேணும்னே அவ சம்மதத்த எதிர்பாத்து நின்றான்.

 

அரவமில்லாம இருக்க கண்ணை திறந்த அன்னம் அவன் தன் பார்வையை பாத்து “என்ன?” அவன் பார்த்ததில வெக்கமா வர கேட்டாள்.

 

“பொண்ணுங்க விருப்பமில்லாம அடையறவன் ஆம்பளையே இல்லைன்னு சொன்னவடி நீ” புன்னகையை அடக்கி சொன்னான்.

 

“அட ராமா எந்திருச்சு போய்யா. நா சாமியாராவே போயிக்கறேன்” அவனை தள்ளிவிட்டாள் அக்கட்ட.

 

அதுக்கு அவன் விடல அசுரனாய் அவளை அடைந்தான். பிடிச்சிருக்கா சம்மதமான்னு கேட்டே அவளை சாகடித்தான்.

 

“பிடிக்கவே இல்ல போய்யா” மூச்சத்திர சொல்லிட,

 

“திமிரெடுத்த கழுத. இன்னைக்கு செத்தடி நீ” தன் வலுவை அவகிட்ட காட்ட.

 

“இதுதா வேணும்ய்யா. எம்புருசனுக்கு இதான் அழகுன்னு” அவனை இறுக்கி அணைச்சுக்கிட்டா அன்னம்.

 

“செத்துப் போவன்னு நெனச்சு பொறுமைய காட்டுனேன் புள்ள. எனக்கும் இதான் வேணும்” சொன்னவன் அவகிட்ட மொத்தமா அடங்கிப் போனான் அணையா நெருப்பா.

 

தாம்பத்தியத்துல வெறும் காமம் மட்டும் இல்லாம காதலும் இணைந்தால்தான் நிறைவு.

 

“இப்போ சந்தோசமா உனக்கு” அவனை கேட்டாள் தலை கோதி.

 

“ஆமாடி. எனக்கு நீ இருக்கேன்னு சந்தோசமா இருக்கு. படிச்சவ நீ உனக்குன்னு இருக்க கனவை நான் சிதைச்சுப்புட்டேன் புள்ள. புருஷன் இப்படித்தான் வேனுமுன்னு பட்டியல் போட்டவளாச்சே நீ” சோகமா சொன்னவன் வாயில் ஒரு அடியைப் போட்டாள் அன்னம்.

 

“அது பேச்சுக்கு சொன்னது. விடவே மாட்டியா அதை? நீ கெடைக்க நா கொடுத்து வைக்கணும் மச்சான்” காதை பிடித்து கிட்டே இழுத்து கன்னத்துல முத்தம் கொடுத்தவளை அடுத்தகட்டம் கூட்டிப் போனான் சத்தியசீலன்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!