என் தேடலின் முடிவு நீயா – 15

4.9
(46)

தேடல் 15

அவளை நெருங்கி நின்றவன், “மகி நீ ஏன் இப்படி டிரஸ் பண்ற” என்று கேட்டான்.

“இந்த டிரஸ்க்கு என்ன குறைச்சல்” என்று தன் ஆடையை குனிந்து பார்த்தபடி கேட்டாள் மகிமா.

“எல்லாமே குறைச்சலா தான் இருக்கு” என்றான் அவளை மேலிருந்து கீழ் வெறித்துப் பார்த்தபடி…

“பொறுக்கி மாதிரி பார்க்குறான்” என வாய்க்குள் சொல்லிக் கொண்டவள்,

“எனக்கு என் டிரஸ் நல்லாத்தான் இருக்கு, பாக்குறவங்களோட கண்ணுல தான் குற” என்றாள் நக்கல் தொணியில்.

“ஆமா… எனக்கு நீ இப்படி டிரஸ் பண்றது பிடிக்கல” என்றான் நேரடியாகவே.

“நான் எதுக்கு உங்க இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணனும்? அப்படிப் பார்த்தா நீங்க நாள் முழுக்க அரகுறயா ஷார்ட்ஸ மட்டும் போட்டுட்டு சுத்துறீங்க… எனக்கும் சங்கடமா தான் இருக்கு… ஆனா அதுக்கு நான் வேணாம்ன்னு சொன்னேனா… இல்ல தானே” என்று அவள் தெனவெட்டாக கேட்க,

“ஓய்… நானும் நீயும் ஒண்ணா?” என்றான்.

“என்ன பொறுத்த வரையில ஒன்னுதான்… உங்களுக்கு வந்தா ரத்தம்… எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா” என்று அவளும் குதர்க்கமாகவே பேசிக் கொண்டிருக்க, அவள் வேண்டும் என்றே தன்னுடன் வம்பிழுக்கிறாள் என்பதை உணர்ந்தவன், “ஓஹ்… அப்பிடியா… நீ டூ பீஸ் ட்ரஸ் வேணும்னாலும் போடு… நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்… ஆனா என் முன்னாடி மட்டும் தான்… நானும் உன் முன்னாடி மட்டும் தானே இப்பிடி இருக்கேன்…” என்று இதழ் கடித்து சிரிப்பை அடக்கியவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி கூற…

அவனை அனல் தெறிக்க பார்த்தவள், தன் ஸ்விம்மிங் டிரஸை எடுத்துக்கொண்டு அவனது பேச்சை கேட்காது சென்று விட்டாள்…

மகிமா அவ் அறையை விட்டு சென்றதும் ஆழ்ந்த மூச்சை விட்ட படி, “என்ன பேச இருந்தேன்… கடைசில என்னமோ பேசி சொதப்பி வெச்சிட்டேன்… பேச வந்த டாப்பிக்கே மறக்க வெச்சிட்டா ராட்சஷி” என்றவன் தலையை அழுத்தமாக கோதியவாறு கரனை அழைத்துக் கொண்டு உடற்பயிற்சி அறைக்குச் சென்றான்…

அங்கே ஏற்கனவே மகாதேவும் ராகவும் வந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்…

அபின்ஞானும் மகாதேவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி எதிர் எதிரே நின்று ட்ரெட் மில்லில் ஓட ஆரம்பிக்க, “இவனுங்களோட முடியல” என்று நினைத்த ராகவும் கரனும் உடற்பயிற்சி உபகரணங்கள் இருக்கும் வேறொரு பகுதிக்கு சென்றனர்….

சஞ்சனாவை பார்த்த மகிமா, “நேத்தய விட இன்னக்கி நல்லாவே நீந்தின” என்றாள்…

“சும்மா சொல்லாதே… நல்லா நீந்தியும் உன்ன பீட் பண்ண முடியலயே” என்றாள் சஞ்சனா…

பெண்கள் இருவரும் முந்தின நாளை விட அதிகமா நேரம் இன்று நீந்தி விட்டு ஜிம் செய்ய கிளம்பினர்.

இரு பெண்கள் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா… அயல் வீட்டிலிருந்து உலகம் வரை உள்ள அனைத்து கதைகளையும் கதைக்க தொடங்கி விட்டனர்…

இருவரும் ஏதாவது சிப்ஸை கொறித்த படி, கதைத்துக் கொண்டும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும் நேரத்தை கடத்தினர்…

நேற்று போலவே இன்றும் மகிமா அறைக்குள் வர பத்து மணி தாண்டி விட்டிருந்தது…

தொடர்ந்து அபின்ஞானால் மகிமாவை சந்திக்கவே முடியவில்லை…

அவன் எழுவதற்கு முன்பு எழுந்து… அவன் தூங்கியதன் பின் அவள் அறைக்குள் வரும்போது அவனால் என்ன செய்து விட முடியும்…

அவனும் கரனுடன் சேர்ந்து தம் ஆராய்ச்சிக்கான வேலைகள் செய்து கொண்டும், ஜிம், நீச்சல் என்று அவன் நேரம் சென்று கொண்டிருந்தது…

எப்போதும் போலவே சஞ்சனாவின் அறைக்கு செல்ல மகிமா தயாராகிக் கொண்டிருக்க… அவளை மரித்த படி வந்து நின்றான் அபின்ஞான்…

“மகி நீ என்ன இக்னோர் பண்றியா?” என்று கேட்டான் அபின்ஞான்.

அவனை விழிகள் இடுங்கப் பார்த்தவள், “புரிஞ்சா சரி” என்றபடி அங்கிருந்து நகர பார்க்க…

அவள் கையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “மகி நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க…” என்றான் தனக்கு வந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திய படி…

அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

இவ்வளவு நாளும் ஏதாவது குறும்புகளை ஓயாமல் செய்து கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தவள் அவனுடன் பேசாமல் நிராகரிக்கவும் அவனுக்கு என்னதோ போல் இருந்தது…

அவளை முறைத்துப் பார்த்தவன், அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்து, “வேண்டியத செஞ்சுக்கோ” என்றவன் அவள் கையை உதறி விட்டு அவளுக்கு முதல் அவனே அறையை விட்டு சென்றான்…

மும்முறமாக போட்டிக்காக நீந்தி கொண்டிருந்தார்கள் மகிமா மற்றும் சஞ்சனா…

இன்றும் மகிமாவே முதலிலே நீந்தி விட, “மகி ஏதாவது எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிக்கிறியாடி நீ… எவ்ளோ பிராக்டிஸ் பண்ணாலும் உன்ன பீட் பண்ணவே முடியல…” என்று சோகமாக கூற…

இன்னும் கொஞ்சம் பிரக்டீஸ் பண்ணா ஓகே ஆகிடும் ” என்று மகிமா சமாதானமாக கூற…

“ஆனா அத்தான் செம்மயா நீந்துவார் தெரியுமா?’ என்று சஞ்சனா கேட்க,

“ஓஹ் அப்படியா” என்றாள் சிரத்தையற்று…

“அவனோட நீந்தினா… நீ கண்டிப்பா தோத்துடுவ” என்றாள் சஞ்சனா…

“அதுல உனக்கு ஒரு சந்தோஷம்” என்றவள், “என் அண்ணாவும் செம்மையா நீந்துவான்” என்றாள் மகிமா…

“ஆஹ்… அப்படியா” என்று கண்களை விரித்த சஞ்சனா, “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்… யார்கிட்டயும் சொல்லாதே” என்று கூற..

“சொல்லு சொல்லு… நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்று ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள் மகிமா…

 “மகி நான் உன் அண்ணாவ லவ் பண்றேன்” என்று சஞ்சனா கூற, “என்னடி சொல்ற…. இது எப்போல இருந்து” என்று மகிமா அதிர்ச்சியாக கேட்க,

“பிசினஸ்ல அத்தான ஜெயிக்கிற ஒரே ஆள் உன் அண்ணா தான்னு கேள்விப்பட்டதுமே, ரொம்ப குஷி ஆகிட்டேன்… அதுமட்டுமில்லாம அத்தான் கூட போற நிறைய மீட்டிங்ல… தேவ பார்த்திருக்கேன்… அவன பத்தி எல்லாரும் புகழ்றத கேட்டு… கேட்டு… லவ் ஆயிடுச்சு…” வெட்கப்பட்ட படி கூற,

அவளை மேலிருந்து கீழ் பார்த்த மகிமா, “இதெல்லாம் ஒரு லவ்வு… இதுக்கு ஒரு வெட்கம் தான் கேடு… அவன பத்தி தெரியாம பேசிட்டு இருக்க” என நினைத்தவள்,

“உன் லவ்வா நீ அண்ணா கிட்ட சொல்லவே இல்லையா?” என்று கேட்க…

“உனக்கு தெரியுமா? உன் அண்ணா எந்த மீட்டிங்கு வந்தாலும் அங்கு இருக்கிற பொண்ணுங்க கிட்ட நல்லா கடல போடுவான்டி… எல்லா பொண்ணுங்க கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசியே பொண்ணுங்கள மயக்கி அவங்க கிட்டயே அவ்ளோ வேலயும் வாங்கி முடிச்சிடுவான்…” என்று கூறிக் கொண்டிருக்க,

“இந்த கூத்து தெரிஞ்சுமாடி லவ் பண்ற” என நினைத்துக் கொண்டாள் மகிமா.

“பொதுவா அத்தான் பொண்ணுங்க கிட்ட பேச மாட்டான்… பொண்ணுங்களே பேச வந்தாலும்… அவன் பேசுற பேச்சாலே தல தெரிச்சு ஓடிடுவாங்க, ஆனா உன் அண்ணா சிரிச்சு சிரிச்சு நல்லா பேசுவான்” என்று பெருமூச்சுடன் கூறியவள் சிறு இடைவெளியின் பின்,

“நான் அபி அத்தானோட மொறப்பொண்ணுன்னு ஒரே ஒரு காரணத்துக்காக என்ன கண்டா திரும்பியும் பார்க்க மாட்டான்… அத மீறி நான் பேசினா கூட எங்கிருந்துதான் உன் புருஷனுக்கு கண் வேர்த்துடுமோ தெரியல… எதுக்கு இந்த பொறுக்கியோட பேசுறன்னு, இழுத்துட்டு போவான்… என்று கவலையாக கூறி முடித்தாள்…

அவளது பேச்சை யோசனையாக கேட்டவள், “அப்போ உன் அத்தானுக்கு விஷயம் தெரிஞ்சு இருக்கணும்” என்று மகிமா சந்தேகத்துடன் அவளை பார்க்க…

“ம்ம் தெரியும்… நான் ஒரு ஆசைக்கு என் பேருக்கும் தேவ் பேருக்கும் பெலிம்ஸ் போட்டு பார்த்தத அத்தான் பாத்துட்டான்… அதிலிருந்து தேவ் பக்கத்துல கூட நிக்க விடமாட்டான்” என்றாள் கோபமாக,

“அட ச்சே… நீ என்ன சின்ன புள்ளயாடி…” என கிண்டலாக மகிமா கேட்க,

சஞ்சனா அவளை பாவமாக பார்த்து, “ஒரு ஆசைக்கு பண்ணேன்டி… அத உன் புருஷன் பார்ப்பான்னு யாருக்கு தெரியும்” என்று கேட்க,

“சரி அத விடு… ஆனா ஒன்னு மட்டும் உண்ம… உன் அத்தான் உங்க ரெண்டு பேரயும் வில்லன் மாதிரி இருந்து பிரிச்சிருக்கான்… சரியான பொறாம பிடிச்சவனா இருப்பான் போல” என்று மகிமா கூற…

“சரியான பொறாம புடிச்சவன் தான்…” என்று கோபத்தில் வெறிகொண்டு எழுந்தவள்… “என்னையும் என் தேவ் வவையும் பிரிச்சு வச்ச அபி… டேய் நீ லைப் லாங் காதலுக்காக ஏங்கி ஏங்கி கன்னிப் பையனாகவே இருக்கணும்… இது இந்த கன்னிப் பொண்ணு சாபம்” என்று ஒரு ஆவேசத்தில் கூறிய சஞ்சனா… அப்போதுதான் மகிமா இருப்பதை உணர்ந்து, “ஐயையோ… அபி உன் புருஷன்ல” என்ற அசடு வழிந்தபடி கேட்டவள், “நான் என் சாபத்த வாபஸ் வாங்கிக்கிறேன்” என்றாள் அவசரமாக…

மகிமாவோ அதை கண்டுகொள்ளாமல் தோள்களை குலுக்கியவள், “அவனுக்கு இது தேவைதான்” என்ற படி உடைமாற்ற சென்றாள்….

 மகிமா செல்வதை பார்த்து இரு பக்கம் தலையாட்டியவள், அவனுக்கு ஏத்தவ தான் இவ என நினைத்துக் கொண்டாள்.

உடைமாற்றி விட்டு வந்த மகிமா, “அன்னக்கி அண்ணனோட நம்பர தந்தேன் தானே… நீ அவனோட பேசிட்டா இருக்க” என்று கேட்க…

“நடக்கிற கதைய பேசு மகி… நான் யாருன்னு தெரியாத வரைக்கும் பேசினான்… உங்க கல்யாணத்துக்கு பிறகு நானே அபி என் அத்தான்னு உளறி வச்சிட்டேன்… அப்ப பிளாக் பண்ணது இன்னமும் பிளாக் லிஸ்ட்ல தான் இருக்கேன்” என்றாள் சஞ்சனா…

 கவலைப்படாதே எல்லாம் நல்லா நடக்கும் என்றவள், தன் அண்ணனை பார்க்க கிளம்ப,

“மகி என் விஷயத்தை உன் அண்ணா கிட்ட சொல்லிடாதே” என்றாள் சஞ்சனா…

அவளை முறைத்துப் பார்த்த மகிமா, “க்கும்… காவிய காதல்… நான் சொன்ன உடனே ரெண்டு பேரும் சேர்ந்துட போறீங்க பாரு… முதல்ல பிளாக் லிஸ்ட்ல இருந்து உன் பேர எடுக்க பாரு” என்றவள் அங்கிருந்து செல்ல பார்க்க,

அவள் கையை தடுத்துப் பிடித்த சஞ்சனா,

“நீதாண்டி எனக்கு ஹெல்ப் பண்ணனும்… என் காதல நீதான் உன் அண்ணாவுக்கு புரிய வைக்கணும்” என்றாள் சோகமாக…

“நீ என்னடி நினைச்சிட்டு இருக்க… அவன் நான் சொல்றதெல்லாம் கேட்க மாட்டான்… அவன்ட விஷயத்தில் அவன் நினைச்ச படி தான் நடப்பான்… அவனும் சரியான திமிரு புடிச்சவன் தான்… நீ நினைச்சிருக்க மாதிரி இல்ல” என்று மகிமா கூற,

“என் தேவ்… அத்தான் மாதிரி இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று சஞ்சனா கூற,

“என் தேவா?… இது வேறயா” என நினைத்தவள், “சஞ்சு… அவனுங்க ரெண்டு பேருமே ஒரே கரெக்டர் தான்… ஈகோவ விட்டுக் கொடுக்க ரெண்டு பேராலுமே முடியல… அதனால அடிச்சிட்டு சாவுறானுங்க…” என்று மகிமா மெதுவாகக் கூறினாள்.

“பொய் சொல்லாதடி… கடைசில நீயும் எல்லா நாத்தனார் மாதிரி உன் புத்திய காட்டிட்டல்ல…” என்று கோபமாக கூறிக்கொண்டே போக,

“இது எப்போ? என்று அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவள், “ஆள விடு தாயே… நீயாச்சு உன் தேவாச்சி… வேண்டியத செஞ்சிக்கோ… நான் இந்த விளையாட்டுக்கு வரல…” என்றபடி அங்கிருந்து செல்ல பார்க்க,

“மகி… ப்ளீஸ்… ப்ளீஸ்…டி ஹெல்ப் பண்ணுடி” என்று கெஞ்சி கொண்டு அவளைப் போக விடாமல் வழிமறித்து நின்றாள் சஞ்சனா…

“என் தலையெழுத்து… நீ எனக்கு அண்ணியா வரப்போற… இரு ஏதாவது பண்ணி தொலக்கிறேன்… இல்லன்னா மட்டும் நீ சும்மாதான் இருப்பியா… ஒருமுறை பேச சான்ஸ்ஸ ஏற்படுத்தி தாரேன்… அதுக்கு பிறகு உன் சாமர்த்தியத்தில இருக்கு” என்றாள் மகிமா…

“அபியோட ஆபீஸ்க்கே வந்து நீ ப்ரொஜெக்ட்டயே திருடி இருக்க…அபி மாதிரி இல்ல தேவ்… அப்போ தேவ் எல்லாம் எனக்கு ஏமாத்திரம்” என்ற சஞ்சனா, “தேங்க்ஸ்டி…” என்று மகிமாவின் கன்னத்தில் முத்தம் இட…

கன்னத்தை துடைத்த மகிமா, “சரிதான்” என்றபடி மகாதேவை சந்திக்க சென்றாள்…

மகாதேவுடன் பேசிவிட்டு வந்து கொண்டிருந்தவளுக்கு அபின்ஞான் மற்றும் சஞ்சனா பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது…

அவர்களைப் புருவம் சுருக்கி பார்த்தவள், “இதுங்க ரெண்டும் என்ன பேசிட்டு இருக்குதுங்க… இது ரெண்டுக்கும் தான் ஒத்தே வராதே” என்று யோசித்தபடி மறைந்து நின்று ஒட்டு கேட்க தொடங்கினாள் மகிமா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!