என் பிழை நீ – 12

4.9
(19)

பிழை – 12

“எஸ்.. அவளுடைய குழந்தைக்கு அப்பா நான் தான்” என்றவன் எப்படி இவனின் குழந்தைக்கு அவள் தாயாகினாள் என்ற கதையையும் கூறி முடித்தான்.

“என்ன சொல்ற பாரி நீ சொல்றதெல்லாம் உண்மையா? என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல” என்று அதிர்ந்து போய் விதுஷா கேட்கவும்.

அரவிந்திற்கோ பாரிவேந்தன் கூறியதை கேட்ட பின்னர் பெரும் ஆச்சரியமாக இருந்தது.

ஆம், அவன் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதை பற்றி இவனும் அறிவான். ஆனால் அப்பெண் இனியாளாக இருக்கும் என்பதை அவன் சற்றும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.

அவ்வளவு ஏன் அவன் யாருடன் ஒன்றாக இருந்தான் என்பதை பற்றி அரவிந்துக்குமே தெரியாதே..

அவனை பொறுத்த மட்டும் விதுஷாவின் மனதில் இருந்து பாரிவேந்தனை நீக்க வேண்டும். என்ன செய்தால் பாரிவேந்தன் விதுஷாவிடமிருந்து விலகுவான் என்பதை வெகுவாக சிந்தித்தான்.

அவன் என்ன செய்தாலும் விதுஷா அவனின் பின்னோடு நாய்க்குட்டி போல் தான் சுற்றித் திரிவாள். அதுவே அவனின் மேல் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தி விட்டால் அவனை வெறுப்போடு விதுஷா ஒதுக்கி விடுவாள் என்று எண்ணிய அரவிந்த் ஏதேதோ தன் அவசர புத்தியால் செய்து விட்டான்.

பாரி வேந்தனும் தன் நண்பன் தான் என்பதை சிந்திக்க அவனின் மதி அப்பொழுது தவறிவிட்டது.

அவனை தவறானவனாக சித்தரித்தாவது விதுஷாவின் மனதிற்குள் அவனின் மேல் வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணியவன் ஏதேதோ செய்து விட..

அவன் நினைத்தது போலவே பாரிவேந்தனும் அவளிடம் இருந்து விலக தொடங்கி விட்டான். ஆனால் பாரி வேந்தனால் பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் அவனுக்கு கிடைப்பாள் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். அதில் எப்படி அவள் இவன் கைக்கு மீண்டும் கிடைப்பாள். யார் என்றே தெரியாத பெண்ணை எப்படி அவனாலும் கண்டுபிடிக்க முடியும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் இதோ கிடைத்து விட்டாளே.. அதுவும் அவனின் குழந்தையுடன் அவனின் முன்னே வந்து நிற்கிறாள்.

ஒரு புறம் அவள் குழந்தையுடன் திரும்பி வந்ததும் பாரி வேந்தனின் எண்ணம் முழுவதும் அவளின் புறம் சாய்ந்து விட்டதை எண்ணி அரவிந்திற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியப்படாமலும் அவனால் இருக்க முடியவில்லை.

“சரிடா நீ சொல்றது சரியா இருந்தாலும் இந்த குழந்தை உன்னுடையது தான்னு எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்ற?” என்றவனின் முன்பு செல்பேசியில் இருக்கும் ஒரு பைலை திறந்து காட்டினான்.

அது வேறு ஒன்றும் அல்ல, இக்குழந்தை அவனுடையது தான் என்பதற்கான டிஎன்ஏ ரிப்போர்ட் தான் அது..

அதை மற்ற இருவருமே பார்த்தனர்.

“எஸ் யு ஆர் ரைட்.. இந்த குழந்தை உன்னோடது தான். பட், ஐ காண்ட் பிலீவ்.. எப்படி இதெல்லாம் சாத்தியம் கரெக்ட்டா அந்த பொண்ணு திரும்ப உன் கைக்கே கிடைச்சிருக்கா ரொம்ப ஆச்சரியமா இருக்கு”.

“ஆமா டா நான் கூட யார்கிட்டயும் இதை பத்தி வெளியில் சொல்லாமல் அவள் யாருன்னு தெரியாம எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு தெரியாம ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தேன். ஆனா கடவுள் எப்படியோ அவளை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டார்”.

“சரிடா இவ்வளவு நடந்த பிறகும் எப்படி அந்த பொண்ணு இங்க வந்து ஸ்டே பண்ண ஒத்துக்கிட்டா உன் மேல கோவப்படலையா”.

“இல்லடா.. அவளுக்கு நான் தான் இந்த குழந்தையோட அப்பானு தெரியல”.

“வாட்! தெரியாதா.. என்னடா சொல்ற.. எப்படி தெரியாம இருக்கும்?”.

“ஏன்னா அன்னைக்கு அந்த பொண்ணுக்கு சுத்தமா கான்ஷியஸ் இல்ல”.

“ஏன்.. என்ன ஆச்சு?”.

“தெரியல டா.. அத பத்தி எல்லாம் நான் இன்னும் அவ கிட்ட பேசல.. எப்படி கேக்குறதுன்னும் தெரியல”.

அனைத்தையுமே அரவிந்த் தான் பாரிவேந்தனிடம் பேசிக் கொண்டிருந்தான். அவனின் டிஎன்ஏ ரிபோர்ட்டை பார்த்த நொடி முதலே விதுஷா அதிர்ச்சியில் பேச்சற்று போய்விட்டாள்.

அவளால் சற்றும் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பாரியா இப்படி என்று எண்ண எண்ண அவளுக்குள் ஏதோ ஒரு வருத்தம்.

அவன் தன்னையும் மீறி தான் இப்படி அவளிடம் நடந்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்தாலுமே அதை முழுதாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம்.

எப்படியோ இனி பாரிவேந்தனும் விதுஷாவும் சேர வாய்ப்பே இல்லை என்பதை அறிந்த அரவிந்தின் மனம் இப்பொழுது தான் நிம்மதி அடைந்தது.

“ம்ம்.. ஆனா எவ்வளவு நாள் இந்த விஷயத்தை அந்த பொண்ணு கிட்ட இருந்து மறைக்க முடியும். எப்படியும் ஒரு நாள் அந்த பொண்ணுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சு தானே ஆகணும். அந்த பொண்ணு கிட்ட பேசி பாரு அன்னைக்கு அவளுக்கு என்ன நடந்துச்சுன்னு பேசினா தானே தெரியும். இந்த குழந்தையுடைய அப்பா நீ தான்னு சொல்லு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க லைஃபை ஸ்டார்ட் பண்ணுங்க”.

“பேசணும் தான் நானும் கரெக்டான சிச்சுவேஷனுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். எங்க எல்லா உண்மையும் தெரிஞ்சா இங்க இருக்க மாட்டேன்னு போய்டுவாளோன்னு வேற பயமா இருக்குடா”.

“நீ எதுவும் வேணும்னு பண்ணலைனு எக்ஸ்ப்ளைன் பண்ணு அன்னைக்கு உன்னுடைய சிச்சுவேஷன் அப்படி இருந்ததுன்னும் அவ கிட்ட சொல்லு.. அப்படியே அவளுக்கும் என்ன ஆச்சுன்னு தெரியும்ல.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பேசினா தான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும். குழந்தையே பிறந்துடுச்சு இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதை இப்படியே ஓட்ட முடியும். உன்ன விட அந்த பொண்ணுடைய நிலைமை தான் ரொம்ப பாவம்.. யார் இதுக்கு காரணம்னு தெரியாம அவளுக்கு அது எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும்”.

ஆம், அனைத்துக்கும் மூல காரணமே அரவிந்த் தான்.

ஆனால் விதுஷாவின் விஷயத்தில் மட்டும் தான் அவன் கெட்டவன். மற்றபடி பாரி வேந்தனுக்கு அவன் நல்ல நண்பன் தானே..

தன் காதலுக்காக அவனின் வாழ்க்கையை அழித்தவன். இப்பொழுது அவனின் வாழ்க்கையை சரி செய்வதற்கான வழியையும் அவனுக்கு கூறுகிறான். தன் நிலைக்கு காரணமே இவன் தான் என்பதை அறிந்தால் பாரி வேந்தனின் எண்ணம் எப்படி இருக்குமோ..

“புரியுது.. நானும் அதை பத்தி தான் யோசிக்கிறேன். சீக்கிரமே அவகிட்ட எல்லாத்தையும் சொல்லணும்” என்றவன் அப்போது தான் விதுஷா அமைதியாக அமர்ந்திருப்பதை கவனித்தான்.

“ஹே உனக்கு என்ன ஆச்சு”.

“இவ்வளவு நடந்து இருக்கு இவ்வளவு நாள் இதை பத்தி நீ ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலையே டா” என்ற அவளின் வார்த்தைகள் ஆதங்கமாக வெளிவந்தது.

“இதை நான் எப்படி சொல்றது.. யார்கிட்டயுமே என்னால் இதை ஷேர் பண்ணிக்க முடியல. தெரிஞ்சு பண்ணாலும் தெரியாமல் பண்ணாலும் நான் பண்ணது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல. இதை சரி பண்ணனும்னு தான் நான் நினைச்சேனே தவிர, வெளியில் இதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல.. எல்லாரும் என்னை பாக்குற பார்வை எப்படி இருக்குமோன்னு ரொம்ப பயமா இருந்துச்சு விது”.

“சின்ன வயசுல இருந்து என்கூட நீ பழகுற.. என்னை பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா.. இந்த விஷயத்தை கூட நீ என்கிட்ட சொல்ல தயங்கி இருக்கேனா அப்ப நான் உனக்கு நல்ல பிரண்டு இல்ல தானே”.

“ச்ச.. ச்ச.. ஏன் டி இப்படி எல்லாம் பேசுற”.

“எனக்கு அப்படி தான் டா தோணுது. என்னை பெஸ்ட் பிரண்டா நினைச்சிருந்தா இதை எல்லாம் மறைக்காமல் என்கிட்ட சொல்லி இருப்ப இல்ல.. இத்தனை நாளா இதை எல்லாம் உன் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க.. சந்தோஷத்தை மட்டும் ஷேர் பண்ணிக்கிறது பிரண்ட்ஷிப் கிடையாது. இந்த மாதிரி சிச்சுவேஷன்லயும் உன் கூட பக்க பலமா இருக்கிறது தான் டா பிரண்ட்ஷிப்.. இதை என்கிட்ட சொன்னா நான் உன்னை பத்தி தப்பா நினைச்சு இருப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்”.

“சாரி டி இதை பத்தி எப்படி சொல்றதுன்னு எனக்கு ரொம்ப கில்டா இருந்துச்சு. அந்த பொண்ண கண்டு பிடிச்சு எல்லாத்தையும் சரி பண்ணனும்னு நினைச்சேன். இப்படி ஒரு விஷயம் நடந்த பிறகு உன் கூட எனக்கு மேரேஜ் அரேஞ்ச் பண்ணாங்க.. அது எனக்கு இன்னும் கில்டா இருந்துச்சு. உன்னை பேஸ் பண்ணவே முடியல.. அதான் உன் கிட்ட இருந்து கொஞ்சம் விலகி இருந்துட்டேன் என்னை மன்னிச்சிடு”.

“போடா.. கடைசில நான் உனக்கு அவ்வளவு தான்ல” என்று கண்களில் கோர்த்த நீரோடு ஆதங்கமாக குரல் அடைத்து அவள் கேட்கவும்.

அவளின் கையை பற்றிய பாரிவேந்தன், “சில் விது.. உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நான் நினைக்கல டி. ஆனாலும் இதை யார்கிட்டயும் என்னால ஷேர் பண்ணிக்க முடியல. யாரை பார்த்தாலும் ரொம்ப கில்டா இருந்துச்சு. அதான் எனக்குள்ளேயே இதை மொத்தமா மறைச்சுக்கிட்டேன்.

என் லைஃப்ல அப்படி ஒரு இன்சிடென்ட் நடந்த பிறகு என்னால அதை கடந்து மேரேஜ் செட்டில் ஆகுறதை பற்றி எல்லாம் யோசிச்சு கூட பாக்க முடியல டி. அதுவும் உன்னோட எனக்கு மேரேஜ் அரேஞ்ச்மெண்ட்ஸ் நடக்குதுனு கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சி ஆகிடுச்சு.

மே பி அப்படி ஒரு டாக் போகாம இருந்திருந்தா என் மனசுல இருக்குறதை நான் உன்கிட்ட சொல்லி இருப்பேனோ என்னவோ எனக்கு தெரியல. பட், அப்படி ஒரு டாக் வந்த பிறகு உன்னை ஃபேஸ் பண்ணவே என்னால முடியல. இதில் எங்கிருந்து என் மனதில் இருக்கிறது எல்லாம் நான் உன்கிட்ட சொல்றது”.

“சரி” என்றவாறு தன் முகத்தை அழுந்த துடைத்த விதுஷா, “இது எல்லாம் சீக்கிரமா சரியாகணும்னு தான் நானும் ஆசைப்படுறேன். நான் வேணும்னா அந்த பொண்ணு கிட்ட பேசி பார்க்கவா”.

“நோ நோ.. வேண்டாம் விது.. இப்போ நான் அவளுக்கு ஹெல்ப் பண்றேன்னு நினைச்சு தான் அவ இங்க இருக்கவே சம்மதித்திருக்கா. அவளுடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்னு தெரிஞ்சா அவ என்னை விட்டு மொத்தமா போனாலும் போய்டுவா.. ஃபர்ஸ்ட் அவள்‌ லைஃப்ல என்ன நடந்துச்சுன்னு நான் தெரிஞ்சுக்கணும்.

ஆம்பள என் லைஃப்லையே இந்த விஷயத்தால இவ்வளவு பெரிய இம்பேக்ட் இருக்கும் பொழுது அவ ஒரு பொண்ணு.. அவ லைஃப்ல எவ்வளவு கஷ்டத்தை பேஸ் பண்ணி இருப்பான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அதெல்லாம் தெரிஞ்ச பிறகு தான் அவகிட்ட மத்ததெல்லாம் பேசணும்னு நினைக்கிறேன்”.

அதன் பிறகு சற்று நேரம் அவனுடன் உரையாடி விட்டு அங்கிருந்து அரவிந்தும் விதுஷாவும் புறப்பட்டனர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் பிழை நீ – 12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!