தேவதை 27
தர்ஷினி வசியிடம் தனது காதலை கூறிய பிறகு, வசியுடன் காரிலேயே அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்..
தேவாவும் ஜெய்யும் மதிய உணவுக்கு கூட எழ வில்லை.. நன்றாக உறங்கினர்..கலாவதியும் அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டார்.
தர்ஷி என்னதான் வசியுடன் வெளியில் சென்று இருந்தாலும், அவளுக்கு முழு எண்ணங்களும் தேவாவின் மீது தான் இருந்தது…
போன் பண்றனா? பாரு.. வரட்டும் காத திருகிடுறேன், கொழுப்பெடுத்தவன் என் பின்னால எவ்ளோ சுத்தி கெஞ்சினாலும் நா சமாதானம் ஆகப்போறது இல்ல.. என யோசிக்க… உண்மையில் இனி தர்ஷி தான் தேவாவிடம் வழியாக்க சென்று பேசி, கெஞ்ச போகிறாள் என்பது இவளுக்கு தெரியவில்லை…
ஒருவர் இருக்கும் போது அவர் அன்பை உணரப் போவது இல்லை, தூரம் சென்றால் தான் அந்த அன்பின் ஆழம் புரியும், இது வரை தொல்லையாய் தெரிந்தது, இனி அவளுக்கு தேவையாய் இருக்கப் போவது மட்டும் உறுதி..
அடுத்த நிமிடம் நேரில் சென்று அவனிடம் சண்டை போட்டு விடுவேன் என்ற எண்ணத்தோடு தேவாவின் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்…
தேவா தூங்குனது போதும் வா டா சாப்பிடுவோம், என ஜெய் அவனை உசுப்பினான்… தேவா எழுந்தவன் ஜெய்யை பார்த்து மச்சான் நீயும் இங்க தான் இருக்கியா? என கேட்க
ஆமா நா 2 நாள் உன்கூட தங்கிட்டு போறேன்.. நீ வா டா வயித்துக்குள்ள குழந்தை இருக்குற மாதிரி சத்தம் கேட்குது போய் சாப்பிடுவோம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கூறினான் …
சாரி டா கொஞ்சம் கொஞ்சம் இருடா மூஞ்சி எல்லாம் கழுவிட்டு வந்துடுறேன் என்று குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் தேவா.
அதன் பின் வெளியே வந்தவர்களை கண்ட கலா, ஓடி சென்று சாப்பாடு எடுத்து வைத்து, உணவு பரிமாறினார்..
தேவா கலாவிடம், மா அப்பா கூட நாளைலேந்து நானும் சைட்டுக்கு போறேன் மா என்றவனை அதிசயமாக பார்த்தார்.. ஜெய் தான் பசி மயக்கத்தில் உணவருந்தியவன் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை..
சரி பா, கொஞ்சம் உடம்பு நல்லாகட்டும் பிறகு போலாம், என்றதும் உடம்புக்குலாம் ஒன்னும் இல்ல மா, நாளைலேந்து போறோம் என ஜெய்யை பார்க்க, அவன் எங்கே காதில் வாங்கினான்…
என்ன டா ஜெய், நாளைக்கு நீயும் சைட்டுக்கு வரல, என கேட்கவும்…
ஹ்ம்ம் என தலையாட்டியவன், இவனுங்க காதலுக்கு, கூட இருக்குற நாங்க தான் டா கடலுல டைவ் அடிக்கணும், வெயிலுல காயனும் என முனுமுனுத்தப் படி செல்ல, தேவா சிரித்துக் கொண்டான்…
கொஞ்சம் நேரம் கழித்து, தர்ஷி தேவாவின் வீட்டிற்கு வந்திருந்தாள், அத்தை எங்க அவன்?
வா மா தர்ஷி, ரூம்ல தான் இருக்கான்… உடம்பு முடியல மா, காலைல தான் வந்தானுங்க, இப்ப தான் மதிய சாப்பாடே சாப்பிட்டான்…
உடம்பு முடியலையா! விழி விரித்தவள், நான் போய் பாக்குறேன் என வேகமாக அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்… அங்கு ஜெய் பேசுவதை கேட்டு அப்படியே நின்று விட்டாள்…
அறைக்குள் புகுந்த பின், இவன் காதலுக்கு இவ்ளோ எபர்ட் போடுறேன், என் லவ்வுக்கு போட்டா என்ன தப்பு, ட்ரை பண்ணுவோம் என அமுலுக்கு போன் செய்ய பிசி பிசி என வந்தது…
தேவா தன் போனில் தர்ஷியின் முகத்தை ஜூமில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க, அதை புடுங்கியவன் கொஞ்சமாச்சும் திருந்து டா, என அமுலு நம்பரை அவன் போனில் டைப் செய்து கால் செய்தான் , ரிங் போனது…
ஹே ரிங் போது போது ஈஈஈ என தேவாவிடம் ஜெய் பல்லை காட்டி அசடு வழியவும்,
நீ நடத்து மச்சான் என சாய்வாக படுத்து விட்டத்தை பார்த்து படுத்துக் கொண்டான் தேவா…
ஹாலோ யாரு? என அமுலு கேட்க…
ஏய் புள்ள! நா தான் ஜெய்… எதுக்கு புள்ள என் நம்பர ப்ளாக் ல போட்டு வச்சிருக்க?
பிளாக்ல போட்டா பேச பிடிக்கலனு அர்த்தம்,, இப்ப எதுக்கு புது நம்பர்லந்து கூப்பிடுற? கடுப்படித்தாள்..
இது தேவா நம்பர் தான், சரி என் நம்பர பிளாக்லேந்து எடு, உன்கிட்ட நிறைய பேசணும் என திரும்பி தேவாவை பார்க்க…
அவன் புருவத்தை உயர்த்தி சூப்பர் மச்சி, பேசு பேசு என்பது போல் சைகை காட்டினான்..
உங்கிட்ட பேச ஒன்னும் இல்ல, அன்னைக்கு உன் பிரெண்ட் என்ன அசிங்கப்படுத்தினா! நீ அவளை கேக்காம என்ன தான அடிச்சி அசிங்கபடுத்துன, பிறகு என்ன மூடிட்டு போனை வை. உன் பிரெண்ட் பாத்தா உன்ன திட்ட போறா…
அவ இங்க இல்ல டீ என ஜெய் வாயை விட…
ஓஹ் அப்ப அவ இல்லனதும் தான் எனக்கு போன் பண்ற! அவள கண்டா உனக்கு அம்புட்டு பயம்? அப்படிதானா?
அப்டி இல்லடி அது ஒரு பைத்தியம், எதையுமே புரிஞ்சிக்காது, ஆனா நீ அப்டியா அறிவாளி புள்ள, அநியாயத்துக்கு வழிய, தேவா வாயை பொத்திக் கொண்டு சிரித்தான்…
சும்மா ஐஸ் வைக்காத டா, அவ முன்னாடி ஒரு பேச்சு, என் முன்னாடி ஒரு பேச்சா? அவகிட்ட உனக்கு பயம் இல்லனா! எனக்கு குடுத்த அறைய அவளுக்கு குடேன் பாப்போம்
கண்டிப்பா டீ, அவ மட்டும் என் கைல கெடச்சா, அப்புறம் இருக்கு.. அவளை ஒரே அறைச்சல் என சொல்லி முடிப்பதற்குள் அவன் உச்சி தலை முடியை பிடித்திருந்தாள் தர்ஷினி…
ஜெய் அதிர்ச்சியுடன் திரும்ப, காளியாய் நின்றிருந்தாள் தர்ஷி…. அவளை அங்கு பார்த்ததும் தேவாவிற்கே அதிர்ச்சி தான்…
வண்டு… நீ எப்படி வந்த? ஜெய் நடுக்கத்துடன் போனை கட் செய்து விட்டு கேட்க…
ஹ்ம்ம் என்ன பத்தி சார் அந்த புள்ளைகிட்ட புகழ்ந்திங்கல! அப்போவே வந்துட்டேன், என மூக்கு விடைக்க கூறியவள்…
ஏண்டா நா உனக்கு பைத்தியமா? அவ அறிவாளியா? என்ன பாத்தா முட்டா செறிக்கி மாதிரி இருக்கா?? அவன் தலையில் மாவாட்ட…
ஆஹ் வலிக்குது டீ, விடு டீ என்ன.. கத்தி கூச்சலிட்டான் ஜெய்…
உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்ன பத்தி அவகிட்ட இப்டி பேசுவ.. அவ என்ன பத்தி என்ன டா நெனைப்பா? ஆத்திரத்தில் வேகமாய் ஆட்டினாள்…
வலி தாங்க முடியாதவன் அவள் கையை உதறிவிட்டு, போடி லூசு, பொண்ணா டீ நீ? பாதி முடியே அவள் கையில் இருந்தது.. விட்டா வழுக்கை ஆக்கிருவா போல! போய் தொலை டீ, அவளை பிடித்து தள்ளியவன் வேகமாய் வெளியில் ஓடி, அறை கதவை வெளியில் இருந்து லாக் அடித்தான்…
உள்ளிருந்து கதவை தட்டியவள், மொவனே இப்ப நீ மட்டும் கதவை திறக்கல! வெளியில வந்த பிறகு சட்னி தான்…
திறக்க முடியாது போடி, என தலையை தேய்த்தவன் உச்சந்தலையில் ஐஸ் எடுத்து வைக்க அடுப்படிக்குள் ஓடி விட்டான்…
டேய் கதவை திறடா, திறடா, தட்டி தட்டி சோர்ந்தவள், தேவாவின் பக்கம் திரும்பினாள்…
ஏண்டா அவன் தான் என்ன பத்தி அப்டி பேசுறானா? நீ என்னடானா சிரிச்சிக்கிட்டு இருக்க? உனக்கு நா பைத்தியமா? டா நா லூசா? என பெட்டில் அமர்ந்திருந்த தேவாவின் தலை முடியை பிடிக்க செல்ல…
தேவா அவளிடம் இருந்து தப்பிக்க, ஏய் லூசு அவன் சொன்னா அதுக்கு நா என்னடி பண்ணுவேன், நா அதுக்கு சிரிக்கல டீ, என அவள் கையை பிடித்து அவள் தன் தலையில் கை வைக்காதவாறு வேறு பக்கம் சாயவும், தர்ஷி தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள்…
விழுந்ததில் அவள் நெற்றியில் ஏதேச்சையாக தேவாவின் உதடுகள் பட்டு விட, அதிர்ச்சியில் விழி விரித்தவள் அவன் முகத்தை தான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்…
விழிகள் உரசிக் கொண்டு, மவுன மொழி பேசியது… அவன் கண்களில் உள்ள ஈர்ப்பு அவளிடம் ஏதோ சொல்ல வர, என்னவென்று கவனித்தாள்…
தேவாவிற்கே என்ன செய்வதென்று புரியவில்லை.. தடுமாறி விழும் போது அவள் இடுப்பில் கை வைத்து தாங்கியிருந்தான்…
சொல்ல முடியா உணர்ச்சியில் இருவருமே தத்தளித்தனர்… சட்டென தேவாவிற்கு நேற்று இவள் தான் வசியை விரும்புவதாக கூறியது மீண்டும் நினைவுக்கு வர, அவள் மேலிருந்து கையை எடுத்தவன், அவளின் தோளை பிடித்து எழ வைத்து, அவனும் எழுந்து நின்று அவள் முகம் பார்க்காமல் தலை கோதியவன், தன் அறை கதவருகில் சென்று வேகமாக தட்டினான்..
மா மா கதவை திறங்க, டேய் ஜெய் கதவை திற டா என கத்தி அழைக்கவும், ஜெய் கதவை திறந்தான்..
தலையில் ஒரு குழம்பு சட்டியை கவிழ்த்து இருந்தவன், இரு கையிலும் கரண்டியை வைத்திருந்தான்… எங்கடா அவ? என கேட்க தேவா பதில் சொல்லாமல் சென்று சோபாவில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தான்…
தர்ஷி ஒரு மாதிரி தர்ம சங்கடத்துடன் வெளியே வந்தவள், ஜெய் நின்றிருந்த நிலைமையை பார்த்து சிரித்து விட்டாள்… மீண்டும் அவனை அடிக்க துரத்த , ஜெய் ஓட வீடே ரகளை கட்டியது …ஆனால் தேவா எதையும் கண்டுக் கொள்ளவில்லை… சற்று முன்பு நடந்த விஷயங்களை மனதில் ஓட விட்டு ரீபிளே செய்து பார்த்து சந்தோசபட்டுக் கொண்டான்…
சிறிது நேரத்தில் ஜெய்யை பிடித்து முடிந்தவரை அடித்தவள் மூச்சி வாங்க ஓடி வந்து, தேவாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்… தேவா டீவி யில் தான் லயித்திருந்தான்..
அவன் முகம் உற்று பார்த்தவள், என்ன டா உடம்புக்கு முடியலையா? ரொம்ப டல்லா இருக்க, என கேட்டு அவன் நெற்றியிலும், கழுத்திலும் கை வைத்து பார்க்க,
சட்டென அவள் கையை பிடித்தவன், அதெல்லாம் ஒன்னும் இல்ல டி, நல்லா தான் இருக்கேன் என கையை விலக்கி கொண்டான்….
சரி டா, நாளைக்கு நாம 3 பேரும் வெளில போய்ட்டு வரலாமா? என கேட்க தேவா மறுத்து விட்டான்…
இல்லடி, நாளைக்கு நானும், ஜெய்யும் எங்கப்பா கூட சைட்டுக்கு போறோம்… இனி தினம் அங்க போயிட்டு, ஏதாவது வேலை பாத்துகிட்டு அப்பாக்கு உதவியா இருக்க போறேன், நைட் தான் வரலாம்னு இருக்கோம்… என்றதும்
தர்ஷி சளைக்காமல் நானும் வரேன் டா, நாம சேர்ந்து போய் மாமாக்கு உதவி செய்யலாம்…
லூசா நீ! சும்மா எதுக்கெடுத்தாலும் நானும் வரேன், நானும் வரேன்னு… எல்லா இடத்துக்கும் உன்ன கூப்டு போக முடியுமா? ரொம்ப தொல்லை பண்ணிக்கிட்டு தேவா கடுப்படித்து பேசவும்.. தர்ஷிக்கு முகம் மாறியது…
உதடு பிதக்கி, அவன் முகம் பார்க்க தேவா கண்டுகொள்ளவே இல்லை…
தர்ஷி சரி டா, போங்க என்ன மட்டும் தனியா கழட்டி விடுறீங்கள! போங்க… நான் உனக்கு தொல்லையா? இனி தொல்லை பண்ண மாட்டேன்… நா இனி இங்க வந்து உன்ன பாக்க போறது இல்ல.. காலும் பண்ண மாட்டேன் சிறு குழந்தையென கோவத்தில் மூக்கு சிவந்து பேசியவளை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை…
ஆனாலும் சரி தான் போடி என்பது போல் அமர்ந்திருந்தான்… தர்ஷி கோவித்துக் கொண்டு செல்ல, பின்னால் தன்னை தடுக்க வருகிறானா? என திரும்பி திரும்பி பார்த்த படி தான் சென்றாள்…
தேவா டீவியை பார்த்தவாறே இருக்க.. என்மேல உனக்கு சுத்தமா பாசமே இல்ல.. நா போறேன் என மூக்கை உறிஞ்சிக் கொண்டு வெளியே சென்று விட்டாள்…
தொடரும்…..
டியர்ஸ் படிச்சிட்டு மறக்காம stars குடுங்க 🥰🥰🙏🙏