இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இலா என்றிட இலக்கியா என்றாள் அவள். அவன் சிரித்து விட்டு ஓகே மிஸ்.இலக்கியா என்றவன் கிளம்பலாமா என்றிட சரியென்று வேகமாக கிளம்பினாள்.
என்ன எப்போ பாரு எதையோ யோசிச்சுகிட்டே இருக்க என்றவனிடம் பதில் பேசாமல் அமைதியாக அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். மவளே உன்னை என்றவன் சட்டென்று பிரேக் போட அவள் சீட் பெல்ட் அணியாத்தால் டேஸ் போர்டில் முட்டிக் கொண்டாள். பச்ஆஆ அம்மா என்றவளிடம் சாரி இலா என்றவன் மனதிற்குள்ளோ எப்படி பேபி என்னோட பனிஷ்மென்ட் என்று நினைத்துக் கொண்டான்.
இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்த பிறகு அவளிடம் என்ன மிஸ்.இலக்கியா லோன்க்கு அப்ளை பண்ணி இருக்கிங்க போல என்றான். எஸ் சார் என்றவளிடம் கம்பெனி ரூல்ஸ் படி இங்கே குறைஞ்சது நீங்க பைவ் இயர்ஸாச்சும் வொர்க் பண்ணி இருக்கனும் பட் நீங்க நாலரை வருசம் தான் வொர்க் பண்ணி இருக்கிங்க அதனால ஐயம் வெரி சாரி உங்க லோன் என்னால சாங்சன் பண்ண முடியாது என்றான். கார்த்திக் ப்ளீஸ் என்னோட தம்பிக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்றவளிடம் ஐயம் வெரி சாரி மிஸ்.இலக்கியா என்றான் .
வேண்டும் என்றால் உங்களுக்காக ஒரு ஆஃபர் தரேன் என்றவன் அவளருகில் எழுந்து வந்து அவள் காதில் ஏதோ சொல்ல அவள் பட்டென்று அவனது கன்னத்தில் அறைந்து விட்டாள். என்னடா கொழுப்பா என்னை பார்த்தால் காசுக்காக உன் கூட படுக்கிறவள் மாதிரி தெரியுதா என்றதும் ஏய் ச்ச்சீ ஓவரா பேசாதடி என்னம்மோ ரொம்ப ஒழுங்கு தான் இந்த அம்மா போடி என்றவனை முறைத்து விட்டு அவள் கிளம்ப நைட் புல்லா யோசி நாளைக்கு நீயே என் ஆஃபரை அக்சப்ட் பண்ணுவ என்றவனது பேச்சு காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.
அவன் சொன்னது தான் அவளுக்கு திரும்ப திரும்ப காதில் கேட்டது. அலுவலகம் முடியும் முன்னே அவனிடம் கூட சொல்லாமல் அவள் கிளம்பிச் சென்றாள்.
வீட்டிலோ பயங்கர அதிர்ச்சி தங்கை பிரதீபாவிற்கு பெண் பார்க்கும் படலம் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் இலக்கியா வருவாள் என்பதை எதிர்பார்க்காத சகுந்தலா அதிர்ந்தாலும் மெல்ல சமாளித்து இவள் தான் என் மூத்த மகள் இலக்கியா என்றாள். இலக்கியா நம்ம தீபாவை பொண்ணு கேட்டு வந்திருக்கிறாங்க என்றதும் ஹும் சரிம்மா என்றவள் மரியாதைக்காக அவர்களிடம் திரும்பி வாங்க என்று கூறி விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
பிரதீபாவிற்கு இருபது வயசு தானே ஆகுது அதுக்குள்ள கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன அதுவும் திடீர்னு பொண்ணு பார்க்க வந்தாங்க அப்படினா இவ்வளவு ஸ்வீட், பலகாரம் எல்லாம் எப்படி. பத்து, பதினைந்து பேர் வந்திருக்கிறாங்க அப்படினா பூ வைக்க வந்தது மாதிரி தானே இருக்கு என்கிட்ட இதை பத்தி அம்மா ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லலை என்று நினைத்தவளால் எதுவும் யோசிக்க முடியவில்லை.
அவள் காதுகளில் திரும்ப, திரும்ப கார்த்திக் சொன்ன விசயங்கள் தான் மண்டையை குடைந்து கொண்டு இருந்தது.
இலா கதவைத் திற என்ற சகுந்தலாவின் குரலில் நினைவு வந்தவள் கதவினைத் திறக்க வாமா என்று சகுந்தலா அழைத்துச் சென்றாள். அவர்களை இவளுக்கு அறிமுகம் செய்து வைத்த சகுந்தலா இன்னும் ஒரு மாசத்தில் மாப்பிள்ளை வெளிநாடு போறாராம் இலா அதுக்குள்ள கல்யாணம் வச்சுறலாம்ல என்று கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருக்க சகுந்தலா அவர்களிடம் என் விருப்பம் தான் என் பொண்ணோட விருப்பமும் என்று கூறி விட அப்பொழுதும் இலக்கியா அமைதியாகவே இருந்தாள்.
வந்தவர்கள் சென்று விட இலாமா உன்கிட்ட சொல்லக்கூடாதுனுலாம் அம்மா நினைக்கலைடா திடீர்னு பொண்ணு கேட்டு வந்துட்டாங்க அந்த மாப்பிள்ளை ரஞ்சித் நம்ம பிரதீபா லவ் பண்ணுற பையனாம். அது மட்டும் இல்லை இந்த பாதகத்தி அவனோட குழந்தையை வயித்துல வேற சுமக்கிறாள் என்னை என்னம்மா பண்ண சொல்லுற என்றதும் பிரதீபாவை பார்க்க அவள் தலை குனிந்தபடி இருந்தாள். பதில் சொல்லு இலா என்ற சகுந்தலாவிடம் சரிங்கம்மா என்று கூறி விட்டு அவள் சென்று விட்டாள்.
என்னம்மா நீங்க அந்த மாப்பிள்ளையைவே இன்னைக்குத் தான் பார்த்தேன். அவனோட பிள்ளை என் வயித்துல வளருதுனு சொல்றிங்க என்ற பிரதீபாவிடம் அப்படி சொன்னால் தான்டி உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாள். இருபத்தாறு வயசாச்சு நமக்கு கல்யாணம் பண்ணாமல் அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க அப்படினு அவள் நினைக்க வேண்டாம் பாரு அதுக்குத் தான். அதனால நீ அமைதியா இரு என்றாள் சகுந்தலா.
இலக்கியாவிடம் மெல்ல வந்து இலா என்னாச்சுமா லோன்க்கு அப்ளை பண்ணிட்டியா என்றாள் சகுந்தலா. இல்லம்மா லோன் கேன்சல் ஆகிருச்சு என்றவளிடம் என்னடா தங்கம் இப்படி சொல்லுற அதை நம்பி தான் உன் தம்பிக்கு வேலை வாங்கனும், தீபா வேற வயித்தை தள்ளிகிட்டு நிக்கிறா என்று அழுதவளிடம் என்னை என்னம்மா பண்ண சொல்றிங்க என்னால முடிஞ்சதை தானே பண்ண முடியும் என்றாள் இலக்கியா. இப்படி நீ சொன்னால் நானும் என் பிள்ளைகளும் சாகுறதை தவிர வேறு வழியே இல்லை என்று நீலிக் கண்ணீர் வடித்தாள் சகுந்தலா.
அவள் சென்று தன்னறைக்குள் அடைந்து கொண்டாள். தன்னுடைய நிலையை நொந்து கொண்டவள் மன நிம்மதியை இழந்து தவித்தாள். அழுது அழுது கரைந்தவள் ஒரு முடிவுடன் உறங்கிப் போனாள்.
மறுநாள் அலுவலகத்திற்கு சென்றவளின் கண் முன்னால் சகுந்தலா அழுத முகமும் உன்னையும் நான் பெத்த பொண்ணா தானம்மா பார்த்து பார்த்து வளர்த்தேன். இதுவே தீபா உன் கூடப் பிறந்தவளா இருந்தால் அவளது வாழ்க்கையை பத்தி யோசிச்சுருப்ப என்றாள். அம்மா என்று அவள் ஏதோ கூற வர அப்போ உன் எம்.டி சொன்ன விசயத்தை ஏத்துக்கோமா என்ற சகுந்தலாவைப் பார்த்து அழுவதா , சிரிப்பதா என்றே தெரியவில்லை இலக்கியாவிற்கு. ஆனால் இது தான் நிதர்சனம் என்று உணர்ந்தவள் அவனது வருகைக்காக காத்திருந்தாள்.
அன்று அவன் மிகவும் களைப்பாக இருந்தான். அவளைப் பார்த்தவன் பதில் பேசாமல் வேலையை பார்க்க அவன் முன்னால் சென்று நின்றவள் கார்த்திக் என்றிட சொல்லு இலா என்றவனிடம் உன்னோட ஆஃபர் என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. என்னோட ஆஃபரை நீ ஏத்துக்கிற அப்படித் தானே என்றவனிடம் சந்தோசம் சரி இரு இப்பவே காண்ட்ராக்ட் பேப்பர் ரெடி பண்ண சொல்லி என் லாயர்கிட்ட சொல்றேன் என்றான்.
அவள் அமைதியாக சென்று தன் வேலையை கவனிக்க அவள் மனமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி பட்ட சோதனை ஆண்டவா அப்படி என்ன பெரிய தப்பு பண்ணுனேன். ஒரு காலத்தில் இதோ நிற்கிறானே இவனை உருகி உருகி காதலிச்சேன் ஆனால் இன்னைக்கு என்னோட மனசுல அந்த காதல் சுத்தமா இல்லை. நேற்று மதியம் கூட கொஞ்சம் நஞ்சம் இருந்த காதல் நேற்று அவன் என்னுடைய சூழ்நிலையை பயன்படுத்தி தன்னோட விருப்பத்தை சொன்னதும் சுத்தமா போயிருச்சு என்றவளின் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வேலையை கவனித்தாள்.
இலா டாக்யூமென்ட்ஸ் ரெடி நீ கையெழுத்து போடு என்றவனிடம் இப்போவே கையெழுத்து போட்டினாலும் சரி, இல்லை ஒன் வீக் அப்பறம் போட்டாலும் சரிதான் என்றான்.
அவள் அதில் கையெழுத்துப் போட்டதும் நீ கேட்டதை விட இரண்டு மடங்கு பணம் உன் அக்கவுண்ட்ல கிரடிட் ஆகிருச்சு என்றவனிடம் தாங்க்ஸ் கார்த்திக் என்றாள். அவளருகில் வந்து கன்னம் தட்டியவன் இதுக்கு எதற்கு தாங்க்ஸ் சொல்ற போ போயி ரெடியா இரு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வரேன் என்றவன் தன் வேலையை பார்க்க அவள் நடைபிணமாக வீட்டிற்குச் சென்றாள்.
வீட்டிற்கு சென்று சகுந்தலாவிடம் விசயத்தைச் சொல்லவும் ராசாத்தி என்று இலக்கியாவின் நெற்றி வழித்து திருஷ்டி கழித்தவள் அவள் அக்கவுண்டிலிருந்த பணத்தை தன் அக்கவுண்டிற்கு பணத்தை மாற்றி விடச் சொல்லவும் இலக்கியாவும் செய்தாள்.
தன் மகனைக் கூட்டிக் கொண்டு கையோடு பணத்தை எடுத்த சகுந்தலா மகனின் வேலைக்கு லஞ்சம் கொடுத்து விட்டு மீதி பணத்தில் மகளுக்கு நகைகள் செய்து கொண்டு மீதமுள்ள பணத்தை திருமண செலவிற்கு ஒதுக்கி வைத்தாள்.
இலக்கியா மனநிம்மதியை இழந்து தவித்தவள் சென்றதோ வடபழநி முருகன் கோவில். முருகனை கும்பிட்டவள் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது.
அங்கு அவர் நின்றிருந்தார். அவளருகில் வந்தவர் சொன்ன செய்தியைக் கேட்டவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தன் சித்தி சகுந்தலா இவ்வளவு கீழ்த்தரமானவளா என்று நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
