விசாகம்,” மலர்னிகா நான் சொல்றதை கேளுமா, காளையா நீ மலரோட கழுத்தில தாலி கட்டியிருக்க. அதனால நீங்க ரெண்டு பேரும் ஒரே அறையில்தான் இருக்கணும். தேவா யோசியருக்கு போன் போட்டு குடு, சடங்கு வைக்கணும், அவர்கிட்ட நல்ல நேரம் கேட்கணும்” என்றார்.
காளையன், “பாட்டி, இப்போதைக்கு எதுவும் தேவையில்லை. சொன்னால் புரிஞ்சிக்கோங்க. நாங்க ஒரே அறையில இருக்கிறம், ஆனால் இப்போ சடங்கு எதுவும் வேண்டாம் பாட்டி. “என்றான். காளையனிடம் பேச வந்த விசாகத்தை தடுத்தார் துர்க்கா,” அம்மா, அதுதான் காளையன் சொல்றான்ல. விடுமா” என்றவர், “நீ போ மலர்.”என்றார். அவளும் விட்டால் போதும் என்று சென்றுவிட்டாள்.
எல்லோரும் அவர் அவர் வேலையைப் பார்க்கச் சென்றனர். காமாட்சியும் நிஷாவும் அவர்களின் அறைக்குச் சென்றார்கள். தனது அறைக்கு வந்த காளையன் உடையை மாற்றி விட்டு, காமாட்சியின் அறைக் கதவை தட்டினான். நிஷா வந்து கதவைத் திறந்தாள். “அண்ணா, உள்ள வாங்கண்ணா” என்றாள். காளையனும் உள்ளே வந்து அங்கிருந்த கதிரையில் இருந்தான்.
நிஷாவைப் பார்த்தவன், “நிஷா எனக்கு உன்னோட உதவி தேவைப்படுது. எனக்கு உதவி பண்ண முடியுமா?” என்றான். “ஐயோ அண்ணா என்ன இது? உதவினு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கிறீங்க? அதெல்லாம் ஒண்ணுமில்லை. என்ன செய்யணும்னு சொல்லுங்க அண்ணா” என்றாள்.
காளையன், “எனக்கு மலர்னிகா பற்றி தெரியணும் நிஷா. அன்னைக்கு நீ அவளைப் பற்றி சொன்னது சரி, ஆனால் அவளோட எதிரிகள் யாருனு தெரியணும் “என்றான். அதற்கு நிஷா,” அண்ணா அவங்களுக்கு எதிரினா ஒரே ஒருத்தர் தான். அந்த கேசவனும் அவனோட பையன் முகேஷ். ரெண்டு பேரும்தான் மேமோட எதிரிங்க. அவங்களை தவிர பெருசா யாரும் இல்லை அண்ணா. “என்றாள்.
இவங்க ரெண்டு பேரும் எதுக்காக மலரை கொலை பண்ண முயற்சிக்கிறாங்க? இப்போ நம்மளோட முழு குடும்பத்தையும் கொல்லப் பார்க்கிறாங்க? என்று யோசித்தவன் மீண்டும் நிஷாவிடம்,” நிஷா எனக்கு அந்த கேசவனோட முழு தகவலும் வேணும். உன்னால எடுத்து குடுக்க முடியுமா? ” என்றான்.
உடனே நிஷாவும், “முடியும் அண்ணா, என்னோட ப்ரண்ட் ஒருத்தன் டிடெக்டிவ்வா இருக்கிறான். அவன்கிட்ட கேட்டுட்டு சொல்றன்.” என்றவள் உடனே அவனது ப்ரண்ட்க்கு போன் பண்ணி பேசினாள். அவனும் கொஞ்ச நேரத்தில் தகவல்களை எடுத்து அவளுக்கு அனுப்புவதாக சொன்னான்.
காளையன், “அவரு அனுப்பினதும் எங்கிட்ட சொல்லுமா “என்றவன் அவர்களிடம் சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்றான். அங்கே சென்று குளித்து விட்டு வெளியே வர, அவனது அறைக்குள் நின்றிருந்தாள் மலர்னிகா.
தனது அறைக்குள் அவளை எதிர்பார்க்காதவன், “என்ன அம்மணி இங்க வந்திருக்கிறீங்க?” என்றான். அவனைப் பார்த்த மலர்னிகா தனது தாலியை எடுத்து அவனிடம் காட்டி, “எதுக்காக என்னை கல்யாணம் பண்ணீங்க?” என்று கேட்டாள். அதற்கு சிரித்துக் கொண்டவன், “இது என்ன கேள்வி அம்மணி, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணணும்னு முன்னாடியே பேசினாங்கதானே. அதுதான் தாலி கட்டினேன்” என்றான்.
அவன் அப்படி சொன்னதும், “இல்லை,இது காரணம் இல்லை. வேற ஏதோ இருக்கு. என்னனு சொல்லுங்க” என்றாள். அவனும் “அப்படி எதுவும் இல்லைங்க. நீங்க போங்க, போய் ரெஸ்ட் எடுங்க “என்றான். அவளும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனை பார்த்து விட்டு சென்றாள்.
களைப்பாக இருக்கவும் குளித்து விட்டு வந்து, சுடிதார் ஒன்றை போட்டுக் கொண்டு வந்து ஜன்னலின் அருகில் நின்று, வெளியே தெரிந்த வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளது தோளைத் தொட்டது ஒரு கரம். திரும்பிப் பார்க்க அங்கே நேசமதியும் குணவதியும் நின்றிருந்தனர்.
“என்ன கண்ணு இப்படி வெளியே பார்த்துக் கொண்டு நிற்கிற? கொஞ்ச நேரம் தூங்கலாமே கண்ணு” என்றார் குணவதி. நேசமதி, “உன்னோட படிப்புக்கு காளையன் பொருத்தம் இல்லாதவன்தான். ஆனால் அவனோட மனசு ரொம்ப சுத்தம் மலரு. அவன் ஒருத்தங்களை உறவாக ஏத்துக்கிட்டான்னா, அவங்களுக்காக உயிரையும் குடுப்பான்.
தங்கமான பையன் காளையன். உனக்கு அவன்கிட்ட ஏதாவது பிடிக்கலனா, உடனே அப்பவே அவன்கிட்ட சொல்லிடு கண்ணு. அதுமட்டுமல்ல அவனுக்கு பொய் பேசுறது பிடிக்காதுமா. அவன் மேல தப்பு இருந்தால், சொன்னா கேட்டுக்குவான். ரொம்ப பாசக்காரன். புரிஞ்சி நடந்துக்கடா. உனக்காக நாங்க எல்லாரும் இருக்கிறம்.” என்றார் நேசமதி. பின்னர் அவளிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் சென்றதும் கட்டிலில் வந்து படுத்தவள், அப்படியே தூங்கினாள்.
சபாபதி கோபத்துடன் இருந்தான். அவனுக்கு வீட்டினரை நினைக்க கோபம் வந்தது. இனியரூபன் பிஸ்னஸ் பண்ணபோய், இவங்களோட தொடர்பு இல்லாமல் போனால், நானும் அப்படியே இருப்பேன்னு இவங்க எப்படி நினைக்கலாம்? என்று கோபத்தில் இருந்தான் சபாபதி.
அவனது நிலமை புரியாமல், அவனுக்கு போன் பண்ணினாள் மோனிஷா. போனைப் பார்த்த சபாபதி அதை கட் பண்ணினான். மீண்டும் அவள் கால் பண்ணினாள். ஆனால் சபாபதி போனை எடுக்கவே இல்லை. மறுபடியும் கட் பண்ணினான். அவளும் உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று மீண்டும் மீண்டும் போன் பண்ணினாள். கட் பண்ணிப் பார்த்தவன் போனை ஆஃப் பண்ணினான்.
சபாபதி போனை ஆஃப் பண்ணியதும், இந்தப் பக்கம் மோனிஷாவிற்கு கோபம் வந்தது. நான் எடுத்த போனை பேச முடியாதளவிற்கு இவன் என்ன பண்ணிட்டு இருக்கிறான். இனிமேல் அவன் போன் பண்ணாமல் நாமளா போன் பண்ணக் கூடாது. என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.
கேசவனுக்கு போன் பண்ணி உடனே வீட்டிற்கு வரச் சொன்னான். அவரும் என்னவோ ஏதோ என்று வந்து சேர்ந்தார். “என்ன முகேஷ் எதுக்காக இப்போ உடனே என்னை வரச்சொன்ன?” என்றார். “அப்பா அந்த குடும்பத்தையே அடியோட அழிக்கலாம்னு அன்னதானம் நடக்கிற இடத்தில விசத்தை வைச்சி கொல்லணும்னு முயற்சி பண்ணோம். ஆனால் அது நடக்கலை. அதுகூட பரவாயில்லை அப்பா. ஆனால் நான் எது நடக்கவே கூடாதுனு நினைச்சனோ அது நடந்திட்டு” என்றான் .
கேசவன் அவனை புரியாமல் பார்த்தார்,” என்ன முகேஷ் நடக்க கூடாதுனு நினைச்ச? “என்று கேட்க, அவன்” அந்த மலர்னிகாவிற்கு கல்யாணம் நடந்திடுச்சி அப்பா, அதுவும் காளையன்கூட. நான் அவனுக்கு மலர்னிகாவோட வீடியோவை அனுப்பி வைச்சேன். அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் அவன் கல்யாணம் பண்ணிருக்கிறான் அப்பா. அவங்களை விடவே கூடாது. ஏதாவது பண்ணணும்” என்றான்.
முகேஷ் சொன்னதைக் கேட்ட கேசவன்,” என்ன சொல்ற முகேஷ், அந்த வீடியோவைப் பார்த்துமா அவன், அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அப்போ அவன் ஏதாவது பிளான் பண்ணுவான். அவன் நம்மளைப் பற்றி கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி, நாம அவங்க கதையை முடிச்சுடணும். அதுக்கு முன்னாடி, சபாபதியை நம்மளோட சைட்டுக்கு வரவைக்கணும் முகேஷ். ” என்றார். இருவரும் சேர்ந்து பல திட்டங்களை தீட்டினர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
Interesting divi