அபின்ஞானுடைய கப்பல் பசிபிக் சமுத்திரத்தின் மத்திய பகுதியை அடைந்து விட அங்கே பாதுகாப்பான ஒரு இடத்தை பார்த்து கப்பலை நிறுத்தினார்கள்….
கப்பல் அடித்தளம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன…
கப்பலில் உள்ள சென்சர் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பன கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருந்தால் கப்பலை சுற்றியுள்ள கடலின் உட்பகுதியையும் மேற்பரப்பையும் பார்க்கவும் செவிமடுக்கவும் முடியும்…
இதற்காகவே ஒரு தனி கண்காணிப்புக்கு குழுவினர் கப்பலில் இருந்தனர்…
அபின்ஞான் கப்பலை நிறுத்தியதால் அதன் வேலைகளில் மும்முறமாக ஈடுபட்டிருக்க அவனுக்கு தொந்தரவாக இருக்க விரும்பாத மகிமா சஞ்சனாவை தேடிச் சென்றாள்…
அவளோ மாகதேவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்…
மகாதேவோ அவள் உடற்பயிற்சியில் விடும் பிழைகளை திருத்திக் கொண்டிருந்தான்…
அவர்களுக்கு இடையில் செல்ல விரும்பாதவள் தன்னறைக்கே திரும்பி வர அப்போது அபின்ஞானும் வந்துவிட்டிருந்தான்…
அவனோ சில புத்தகங்களை வைத்துக்கொண்டு அதில் எதோ அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்…
அவன் செய்யும் வேலைகளை மகிமாவை பார்க்க விடமாட்டான்… அந்த அளவுக்கு அவனுக்கு தன் மனையால் மீது நம்பிக்கை கொட்டிக் கிடந்தது…
அவன் வேலை செய்யும் போது அருகே சென்றால், “இங்கே உனக்கு என்ன வேல…” என்று அவளை விரட்டி விடுவான்…
அவனைப் பார்த்து சலிப்பாக தலையாட்டிய படி நீந்தச் சென்றாள்.
அவளுக்கோ சஞ்சனாவை பற்றி யோசனையாகவே இருந்தது…
“அபி எப்போ சஞ்சனாவுக்கு கல்யாணம் பேசினானோ… அன்னயிலிருந்து அவ முழுக்க அண்ணா கூடத்தான் டைம் ஸ்பென்ட் பண்றா… என் கூட பேசறதுக்கு கூட அவளுக்கு டைம் இல்ல” என்று யோசித்தவளது விழிகள் அதிர்ந்து விரிந்து கொண்டன..
“ஓஹ்… மை கோட்… நான் அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண கூடாதுன்னு பிளேன் பண்ணி காய் நகர்த்திருக்கான்… ராஸ்கல்” என்றபடி மகிமா பல்லை கடிக்க…
அபின்ஞானும் நீந்த தயாராகி வந்து அவளை பார்த்து கண் சிமிட்டிய படி, நீரினுல் பாய்ந்தான்…
தலையில் இருந்து வடிந்த நீரை ஒற்றை கையால் கோதியப்படியே, “என்ன மேடம் எந்த கோட்டையை பிடிக்க ரொம்ப பலமா யோசிச்சிட்டு இருக்கீங்க” என்று கேட்ட படி அவளருகே வந்தான்…
அவளுக்கோ தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை மறைக்கும் எண்ணம் கடுகளவும் இருக்கவில்லை…
அதனால் நேரடியாகவே அதை அவனிடம் கேட்டு விட, அவன் இதழ்களிலோ கண்டுபிடிக்க முடியாத மில்லிமீட்டர் அளவு புன்னகை அவன் தாடி மீசைக் குள்ளே ஒளிந்து கொண்டது.
“அப்படி ஒன்னும் இல்லடி… வா நாம நீந்தலாம்” என்று அவள் கையை பிடிக்க வர,
அவன் கையைத் தட்டி விட்டவள், “அபி எனக்கு உண்ம தெரிஞ்சே ஆகணும்… நடிக்காதீங்க எனக்கு உங்கள பத்தி தெரியாதா?” என்று மகிமாவும் விடாப்பிடியாக நிற்க…
தன் நாவால் உட்கன்னதை வருடிய படி பழுப்பு நிற விழிகளால் அவளை அழுத்தமாக பார்த்தான்…
“பாக்குறத பாரு… எங்கடா பொண்ணுங்கள மயக்கிடலாம்னு பார்த்துட்டு இருக்கான் போல” என நினைத்தவள் அசையாமல் அப்படியே நின்று இருந்தாள்…
அவளை பார்த்து சிரித்தவன், “நீ இவ்ளோ புத்திசாலியா இல்லாம இருந்திருக்கலாம்” என்றபடி அவள் கன்னத்தில் தட்ட… “ஆஹான்… அப்பதானே என்ன நல்லா ஏமாத்திட்டு உங்க வேலய பார்க்கலாம்… ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல… உங்களுக்கு அண்ணாவை சுத்தமா பிடிக்காது, ஆனாலும் சஞ்சனாவ அண்ணா கிட்ட அனுப்பி இருக்கீங்க… உங்கள பார்த்தா அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிற ஆள் போல விளங்கலையே ” என்றாள் புருவ முடிச்சுடன்…
“சஞ்சனா உன் அண்ணா கூட எவ்ளோ பழகினாலும்… அவன் ஒரு நாளும் சஞ்சனாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டான்… அதனால அவன் கூட பழகுறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை… இங்கிருந்து போன உடனே அவளுக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்…” என்று அவள் காதருக்கே குனிந்து சொன்னவன் மனதினுள், “அதோட நீயும் என்ன அவாய்ட் பண்ண முடியாது… சோ என்கூட தான் நீ டுவண்டிபோர் ஹவர்ஸும் இருந்தாகணும்… ஒரு கல்லுல ரெண்டு மாங்கா…” என்று நினைத்துக் கொண்டான்…
அவன் சொல்லாமலே அவன் எண்ண ஓட்டத்தை உணர்ந்தவள், “கடவுளே… என்னா ஒரு மாஸ்டர் மைண்ட்… ஆனா அத நல்ல விஷயத்துக்கா யூஸ் பண்றான்… நாசமா போனவன்…” என அவனுக்கு திட்டியவள்… அவனை பார்க்காது அவள் முகத்தை திருப்பிக் கொண்டு நீந்தத் துவங்கினாள்…
அவளுக்கும் இதற்கு மேல் அவர்களைப் பற்றி விவாதிக்க விருப்பமில்லை…
அவள் அருகே நீந்திய படி வந்தவன், “நீ சரியான ஸ்லோவா நீந்துர… நான் உனக்கு கத்து தரட்டுமா”” என்று கேட்டேன்.
“என்ன நேத்தய மாதிரியா?” என்று கேட்டாள் கிண்டலாக…
“உஷாராகிட்டாள்…” என முனுமுனுத்தவன், ‘இல்லை’ என்பது போல் தலையாட்டி, “நான் தர பிரக்டீஸ உன்னால தாங்க முடியாது” என்றான்.
“நல்லா மூச்சு எடுத்து விடு…” என்றபடி அவளுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தவன் அவளை விடும்போது அவளுக்குத்தான் போதும் போதும் என்றாகிப் போனது…
கலைத்து சோர்ந்து போய் விட்டிருந்தாள்…
“நான் ஒழுங்கா கத்துத் தருவீங்களான்னு கேட்டதற்கு என்ன வெச்சி செஞ்சிட்டீங்க தானே அபி” என்று மூச்சு வாங்கியபடி சொன்னவள் நீச்சல் தடாகத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்…
அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன், “இதுதான் பிராக்டீஸ்… உன்கிட்ட சொன்னேனே…” என்றான்…
“தெரியாம கேட்டுட்டா… இப்படியா கஷ்டப்படுத்துவீங்க?” என்றவளுக்கு இன்னும் மூச்சு வாங்குவது நின்ற பாடில்லை…
“நீ டெய்லி இனி இப்படித்தான் ப்ரசிட்டிஸ் எடுக்கணும்” என்றான் கறாராக…
“என்ன வேற மாதிரி பழிவாங்கி என் மேல இருக்க கோபத்த தீர்க்கிறீங்கல்ல…” என்றாள் முகத்தை சுருக்கிய படி…
அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாததால் அவனை திரும்பிப் பார்த்தாள்…
நீரில் நனைந்திருந்ததால் அவள் அணிந்திருந்த டி-ஷர்டோ அவள் உடலுடன் ஒட்டி இருந்தது…
அவள் மேனியில் ஒற்றியிருந்த நீர் துளிகளோ அவனை அவள் மீது பித்தம் கொள்ள செய்து கொண்டிருந்தது…
தலையே அழுத்தமாக கோதிக் கொண்டவனுக்கு தன் பார்வையை ஆகற்ற முடியவில்லை…
அவளிடம் அத்துமீற தூண்டிய மனதை காட்டுப்படுத்திக் கொண்டு அவளுக்கு அவன் பயிற்சி அளித்ததே பெரிய விஷயம் தான்….
“என்ன மூட் ஏத்திட்டே இருக்கா ராட்சஷி…” என்றவனது தொண்டை குழியோ ஏறி இறங்கியது…
அவன் பார்வை மாற்றத்தை அப்போது கண்டவள் அருகிலிருந்த டவலை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டபடி. “பார்க்குறத பாரு… காணாம கண்டவன் மாதிரி…” என முனு முனுத்துக் கொண்டே அவள் எழுந்து அறைக்குள் செல்ல பார்க்க…
“உன் பாடி ஷேப் நல்லா இருந்துச்சின்னு தான் பார்த்தேன்… அதுக்காக நீ போர்த்திட்டு போகணும்ன்னு அர்த்தம் இல்ல…” என்றான் சத்தமாக…
அவன் பேச்சில் அவளுக்கோ வெக்கம், சங்கடம், தடுமாற்றம் என்று எத்தனையோ உணர்வுகளின் கலவை… அதை அவனிடம் காட்ட முடியாமல் எதுவும் பேசாமல் சென்று விட்டாள் அவள்…
*****
“அப்பாடா… ஒரு மாதிரி வந்துட்டோம்… இனி வேலய ஆரம்பிக்கிறது தான் பாக்கி…” என்று பெருமூச்சு விட்டபடி கரன் கூற,
“இனிதான் ரிஸ்க்கே இருக்கு கரன்” என்றவாரு திரையில் சென்ற கொண்டிருந்த கடலை சுற்றி பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கும் கட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான் அபின்ஞான்…
ட்ரோன் கேமராக்கள் மூலம் கடலின் மேற்பரப்பில் உள்ள நிலைமைகளை அதானித்துக் கொண்டிருந்தார்கள்…
“நாளைக்கு மார்னிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்ல” என கேட்டாள் சஞ்சனா…
“ம்ம்… பார்க்கலாம்” என்றவாரு அங்கிருந்து சென்றான் அபின்ஞான்.
பசிபிக் சமுத்திரத்தின் மத்திய பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது…
அனைவரும் இன்று போட்டிங் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்…
ஆனாலும் அபின்ஞானும் மகாதேவும் தான் இன்னும் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்… இருவருமே பிரிந்து தனித் தனி தீவுகளாக தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்…
CNC இயந்திரப் படகுகள் மூன்று கடலில் இறக்கப்பட்டிருக்க, ஒரு படகில் இரண்டு பேர் வீதம்… மகாதேவும் ராகவும், சஞ்சனாவும் கரனும் மற்றும் அபின்ஞானும் மகிமாவும் என்று மூன்று ஜோடிகளாகப் பிரிந்து செல்லத் தயாராகினார்கள்…
கப்பலில் கீழ்தளத்தில் இருந்து ஒருவரின் பின் ஒருவராக அங்கிருந்த ஏணியில் கடலை நோக்கி இறங்கினர்…
அனைவரும் தத்தம் படகுகளில் ஏறி விட… ஒவ்வொரு ஜோடியும் பிரிந்து பசிபிக் சமுத்திரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல ஆயத்தமானார்கள்…
நீலக் கடலில் மூன்று திசைகளை நோக்கி அந்த மூன்று மோட்டார் படகுகளும் பயணிக்க ஆரம்பித்தன…
அவர்களின் படகுகளோ கடல் நீரை கிழித்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தன…
ஆனால் அதிலிருந்து ஒரு அதிர்வோ… சத்தமோ… கேட்கவில்லை…
அவ்வளவு நவீனமாகவும் அனைத்து வசதிகளுடனும் ஆராய்ச்சிகளுக்கு பொருத்தமான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தன அந்தப் படகு…
குளிர் சற்று அதிகமாகவே இருந்தது….
வெளிச்சமும் இல்லாத இருளும் இல்லாத ஒரு கலவையான ஒரு காலநிலையே நிலவியது…
பார்க்கும் இடம் எல்லாம் கடல் மட்டுமே கண்களுக்கு புலப்பட்டது….
வானத்தையும் கடலையும் கூட பிரித்து அறிய முடியவில்லை…
அந்த மயான அமைதியில் கடல் அலைகளின் இரைச்சல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது…
இதை ரசனையாக பார்த்துக்கொண்டு அபின்ஞான் அருகே அமர்ந்திருந்தாள் மகிமா…
“மகி… உன் பின்னால ஒரு பேக் இருக்கும் அத கொஞ்சம் தா” என்று அபின்ஞான் கேட்க,
அதை அவன் கையில் கொடுக்கவும், “இந்த போட்ட கொஞ்சம் நீ ஒட்டு…” என்று ஓட்டுனர் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்…
மகிமா படகை செலுத்த தொடங்கவும், அபின்ஞான் கடலினுல் பாய்வதற்கு தயாராக தொடங்கினான்…
கடலினுள் செல்ல பாதுகாப்பான உலர்ந்த உடையை(dry suit) அணிந்தவன், நீந்தும் கேமரா ஒன்றை கடலில் போட்டு, அதை தன் கையில் இருந்த நவீன ரக டச் பேடின் மூலம் இயக்கிக் கொண்டிருந்தான்… அந்த தொடுத்திரையிலோ கடலில் நடக்கும் அனைத்து காட்சிகளும் நேரடியாக பதிவாகிக் கொண்டிருந்தன…
கடலுக்கு அடியில் கேமராவை பொருந்துவதற்கு பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை அவனுக்கு…
“மகி இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட்டா போ” என்றான்…
அவளும் வேகத்தை கூட்டினாள்…
“ஏய்… மகி வேகமா போக சொன்னா ஏன் இவ்ளோ பாஸ்ட்டா போற… நீ போற போக்க பார்த்தா ரெண்டு பேரும் திரும்ப வீடு போய் சேர மாட்டோம் போல இருக்கு… பார்த்துப் போ” என்றான்…
“ஓகே ஓகே தவறி வேகத்தை கூட்டிட்டேன்” என்றவள் வேகத்தை குறைக்க….
“அடிப்பாவி உனக்கு போட் ஓட்ட தெரியும் தானே… உண்மைய தானே சொன்ன, இல்லன்னா பெருமைக்காக சும்மா அடிச்சு விட்டியா” என்று அதிர்ச்சியாக கேட்க,
“இதுல யாராலும் விளையாடுவாங்களா அபி” என்று அவள் பின்னால் திரும்பி அவனை முறைத்த படி சொல்ல,
“ஏய் முன்னால பார்த்து ஒட்டு டி… நீ ஓட்ட கிட்ட எனக்குத்தான் பக் பக்ன்னு இருக்கு என்றவன்…” கையில் இருந்த தொடுதிறையில் கவனமானான்…
“ஓகே மகி… இங்க போட்ட நிறுத்து” என்று கூறவும், மகிமாவும் போட்டை நிறுத்தி விட்டு அவனருகே அமர்ந்தபடி அவன் கையில் இருந்த தொடுதிரையை பார்த்து விட்டு படகில் பொருத்தப்பட்டிருந்த திரையை பார்த்தாள்.
“இந்த இடத்துலயா கேமரா ஃபிட் பண்ண போறீங்க” என்று கேட்க,
“ம்ம்.. இங்க பிட் பண்ண இந்த இடத்தை சுத்தி நடக்கிற அவ்ளோ விஷயமும் நமக்கு தெளிவா தெரியும்… நாம இந்த ஏரியால வேற கேமரா ஃபிட் பண்ணி… நம்ம டைம்ம வேஸ்ட் பண்ண தேவல்ல… இந்த ஒரு இடமே போதும்” என்று தன் கையில் இருந்த டச் பேடை காட்டியபடி கூறினான்….
“ம்ம்… இந்த இடம் நல்லாத்தான் இருக்கு, ஆனா எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க” என்று கேட்டாள் மகிமா.
“அதெல்லாம் எங்கள மாதிரி ஜீனியஸ்க்கு தான் புரியும்… உன்ன மாதிரி மக்குங்களுக்கு புரியாது” என்றான்.
“அப்ப எதுக்கு இந்த மக்க கூடவே வச்சிருக்கீங்க… அண்ணா கூடவே அனுப்ப வேண்டியது தானே” என்றவளுக்கோ அவன் ஒருநாளும் தன்னை தேவுடன் அனுப்ப மாட்டான் என்று பதில் தெரிந்திருந்தாலும் வேண்டும் என்றே கேட்டாள்…
“இந்த மக்குப் பொண்ண புத்திசாலியா மாத்துறதுக்கு தான் கூடவே வச்சிருக்கேன்” என்று கூற மகிமாவோ முகத்தை சுழித்துக்கொண்டே திரையை பார்க்க தொடங்கினாள்…