அவனைப் போலவே அடங்காத அவனது கேசம் இன்றும் அவன் முன்நெற்றியில் விழுந்து அவனை மேலும் அழகனாகிக் கொண்டிருந்தன…
அழுத்தமான உதடுகள்… “இந்த லிப்ஸ்ல லேசில சிரிக்காது…” என நினைத்தவளது பார்வையோ அவன் முகத்தை தாண்டி கீழ் இறங்கியது…
ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டு அவன் அருகே செல்லவும், அப்போதுதான் அவள் வந்திருப்பதை கண்டான் அபின்ஞான்…
“நீயும் எக்ஸைஸ் பண்ண வந்தியா… லேடிஸ் ஜிம் போய்ருக்கலாமே” என்று கேட்க,
“என் டிரஸ்ஸ பாத்தா ஜிம் பண்ண வந்த மாதிரியா இருக்கு…” என்று தன்னை குனிந்து பார்த்தபடி கேட்டாள்…
அவன் பதில் சொல்லாமல் இருக்க… “உங்களத்தான் பார்க்க வந்தேன்” என்று சொல்லியபடி அவனை நெருங்கி நின்று, அவன் டையமண்ட் டேட்டூவை தொட பார்க்க, சட்டென அவள் கையை பிடித்துக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான்…
அவளோ ஒற்றைப் புருவம் உயர்த்தி ‘என்ன’ என்பது போல் பார்க்க, “இப்ப டச் பண்ணாதே” என்றான் குரலை செருமிய படி…
இதழ்களுக்குள் சிரித்தவள், “நீங்கதான் சொன்னீங்களே ஆசைப்பட்டா தொடலாம்ன்னு” என்று இழுவையாக சொல்ல…
“என்னடி காலையிலேயே பிரச்சின பண்ணனும்ன்னு வந்திருக்கியா?” என கேட்டான்.
“இல்லயே… உங்கள பார்க்க ஆசையா இருந்துச்சு… அதுதான் வந்தேன்” என்றவள்,
அவன் சிக்ஸ் பேக் தேகத்தை பார்த்து, “வாவ் செம்மயா இருக்கு… நான் இத தொட்டு பார்க்கவா” என கேட்ட படி கையை நீட்ட, அப்போதும் அவள் கையை தடுத்து பிடித்தவன், “இதுவரக்கும் நீ என்ன தொட்டதே இல்ல பாரு… இன்னக்கி புதுசா பாக்கிற… காலையிலே டெம்ப்ட் பண்ணி மனுஷன கஷ்டப் படுத்தாம போடி” என்றான் அவளை முறைத்தபடி…
“நான் என்ன பண்னேன் இப்ப… நீங்க என்ன கண்ட கண்ட நேரத்துல தொடுவீங்க… நான் என்ன உங்கள மாதிரி புலம்பிட்டா இருக்கேன்” என்று அவள் சிரித்தபடி கேட்க,
“இன்னக்கி என்ன ஒரு மார்க்கமா இருக்கா” என நினைத்தவன் வராத கோபத்தை வர வலைத்தபடி, “என்னடி நக்கலா?” என்றான்.
“இல்லயே உண்மையா தான் சொன்னேன்” என்றாள் சிரிப்பை கட்டுப்படுத்திய படி…
“சரி எங்க வேணுமோ தொட்டுக்கோ… ஆனா நான் ஆரம்பிச்சா நீ தாங்க மாட்ட…” என்று அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டு கூற…
“எனக்கு எதுக்கு வம்பு… நீங்க உங்க பாட்டுக்கு எக்ஸர்சைஸ் பண்ணுங்க” என்றவள் அங்கிருந்து திரும்பி நடக்க பார்க்க…
அவளை மரித்தபடி அவள் முன்னாள் வந்து நின்றவன், “வந்ததோட வந்துட்ட… கிஸ் பண்ணிட்டே போ” என்றான்…
“அடப்பாவி…” என்று வாயில் கையை வைத்துக் கொண்டவள், “இவ்ளோ நேரமா என்னமோ பேசினீங்க… நிறைய வேலை இருக்கு… டெம்ப் பண்ணாதேன்னு சொல்லிட்டு இருந்தீங்க…” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே, அவள் வாயில் கை வைத்தவன், “போதும்மா நீ கெளம்பு” என்று கைகளை கூப்பியபடி கூறினான்…
அவன் பேச்சில் சிரித்தவள் அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவள், “அபி நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்” என்றாள்…
“என்ன விஷயம்” என்று புருவம் சுருக்கி கேட்டான்.
“நீங்க சஞ்சனாவயும் அண்ணாவையும் உண்மையாவே பிரிச்சிடுவீங்களா?” என்று கேட்டாள்.
“இங்க பாரு மகி… நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… ஒரு நாளும் சஞ்சனாவ நான் அவனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்… தேவ் சஞ்சனாவ லவ் பண்ணா கூட அவங்கள சேர விடவும் மாட்டேன்” என்று அபின்ஞான் கராறாக கூறவும்,
“நீங்க மாறிட்டீங்கன்னு நினைச்சேன், ஆனா அதே மாதிரியே தான் இருக்கீங்க” என்றாள் வேதனையாக…
“யார் சொன்னா… நான் மாறினேன்னு நம்ம போட்ட எக்ரிமெண்ட் கூட அப்படியே தான் இருக்கு… இங்கிருந்து போனதும் நாம டிவோர்ஸ் எடுத்துக்கலாம்” என்றான் ஒற்றை கண்ணை சிமிட்டி…
மகிமாவை சந்திப்பதற்காக அவளைத் தேடி வந்த தேவுக்கோ, அபின்ஞான் கதைத்தது முழுவதும் கேட்டுவிட அவனுக்கோ கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்பின…
“எங்க வீட்டு பொண்ண… நீ பழி வாங்க கல்யாணம் பண்ணி டிவோஸ் பண்ணுவியாடா… ஓஹ் நீ எனக்கு சஞ்சனாவ கல்யாணம் பண்ணி தர மாட்டியா… என் லைஃப்ல முடிவெடுக்க நீ யாருடா? இனி நானும் சும்மா இருக்க மாட்டேன்” என நினைத்தவன் மகிமவுடன் பேசாமலே கோபமாக அங்கிருந்து சென்றான்…
அவன் எதேர்ச்சியாகத்தான் இதை கேட்க நேர்ந்தது…
ஆனால் ஒட்டுக்கேற்பவர்கள் பொதுவாக நல்லதை கேட்பதில்லை என்பது மகாதேவ் விஷயத்தில் உண்மையாகிப்போனது…
அபின்ஞானுக்கோ மகிமாவை டிவோஸ் பண்ணும் எண்ணம் கடுகளவும் இல்லை…
அவன் விளையாட்டாக தான் அவளிடம் கூறினான்…
மகிமாவுக்கும் அது தெரிந்ததால் அவளும் அதை கண்டு கொள்ளவில்லை…
ஆனால் அபின்ஞான் விளையாட்டுக்கு கூறியதை மகாதேவ் கேட்டு விட்டான் என்பதை இருவருமே அறியவில்லை…
தேவ் வந்து சென்றதை அறியாத மகிமா, “விளையாடினது போதும் அபி… நம்மள பத்தின கதய விடுங்க… உங்களுக்கு ஏன் தேவ பிடிக்கவே இல்ல” என்று கேட்க…
“மகிம அவன பத்தியே கேட்டு நீ என்ன இரிடேட் பண்ணாதே… வா நம்மள பத்தி பேசலாம்” என்று கூறியபடி அவளை கட்டி அணைக்க… அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட்டவள்…
“நீங்க உங்க வேலய பாருங்க… நான் என் வேலய பார்க்குறேன்” என்றபடி அங்கிருந்து சென்றாள்…
கடலில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து, அங்கு நடக்கும் மாற்றங்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான் மகாதேவ்…
மனதுக்குள் ஏதோ ஒரு உறுத்தல்…
“தான் எடுத்த முடிவு சரியா…” என்று யோசனை…
வேலையில் கவனம் செலுத்தவும் முடியவில்லை…
தலை வலிப்பது போல் இருந்தது…
அந்த நேரம் மகாதேவ் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் சஞ்சனா…
வலித்துக் கொண்டிருந்த தலையை வருடியபடியே “ஹாய் சஞ்சு…” என்றான்.
அவன் தலையை வருடிக் கொண்டிருப்பதை கண்டவள், “என்னாச்சு தேவ்… உனக்கு தலை வலிக்குதா?” என்று கேட்டபடியே அவன் அருகே வந்தாள்…
“ம்ம் லைட்டா… நீ போ நான் கொஞ்சம் தூங்கி எழுந்தேன்னா சரியாகிடும்” என்றவனுக்கு இப்போது அவளுடன் பேசும் மனநிலை கடுகலவும் இருக்கவில்லை…
எந்த பதிலும் சொல்லாமல் அவனது சமையலறைக்குள் சென்றவள், ஏதோ பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்கும் சத்தம் தான் கேட்டது…
“இந்தத் தலைவலி பத்தாதுன்னு… இவ வேற… என்ன பண்றான்னே புரியல” என முனு முனுத்தவன், அமர்ந்தபடியே சமையலறையை திரும்பிப் பார்த்தவன், “என்னடி பண்ற… தெரியாம ஏதும் செஞ்சு வச்சிடாதே” என்று இங்கிருந்து அவன் கத்த அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை…
“பேசினா மதிக்கிறாளா பாரு… அவ அத்தான் மாதியே திமிரு புடிச்சவ” என நினைத்தவன், முன்னால் காபியை நீட்டியபடி நின்றாள் சஞ்சனா…
விழி விரித்து அவளைப் பார்த்தவன், எதுவும் சொல்லாது காபி கப்பை வாங்கிக் கொண்டான்….
அவன் முன்னால் குவித்து வைத்திருந்த பைல்களை நேர்த்தியாக மூடி அங்கிருந்த மேசை மேல் வைத்தவள், மகாதேவ் பின்னால் வந்து நின்று அவன் தலையை மசாஜ் பண்ண ஆரம்பித்தாள்….
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது…
மகிமா கூட அவனை இப்படி பார்த்துக் கொண்டதில்லை…
அவளை அவன் பார்த்துக் கொள்வானே தவிர… அவள் அவனைப் பார்த்ததில்லை…
அப்படி அவனை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்றுதான் சொல்லலாம்…
சிறுவயதிலிருந்தே மகிமா ஹாஸ்டலில் தான் வளர்ந்தாள்…
வீட்டிலிருந்தால் அவனுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டே அவள் நேரம் போய்விடும்…
இதுவரை அவன் ஒரு பெண்ணின் அரவணைப்பை அனுபவித்ததில்லை… அவன் கைக்கே வேலைகளை செய்து கொடுக்கும் சஞ்சனாவை அதனால் தான் அவளை ஆச்சரியமாக பார்த்தான்…
அவளது இதமான வருடலில், மகாதேவ்கோ இருந்த அழுத்தம் குறைந்து… மனதிலும் ஏதோ ஒரு நிம்மதி பரவியது…
சஞ்சனா கையை பற்றி முன்னே இழுத்தவன், “தேங்க்ஸ் சஞ்சு…” என்றபடி அவளை கட்டிப்பிடித்து அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்…
“ஹேய் தேவ்… இந்த சின்ன விஷயத்துக்கு தேங்க்ஸ் சொல்லனுமா…” என்றவளுக்கு அவன் திடீர் நெருக்கம் அவஸ்த்தையாக இருந்தது…
அவனை விளக்கவும் முடியவில்லை… அணைத்துக் கொள்ளவும் அவளால் முடியவில்லை…
அவளுக்கோ வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் உடல் எல்லாம் புல்லரிக்க ஆரம்பிக்க அசையாமல் சிலை போல் நின்றிருந்தாள்…
அவள் தவிப்பையோ உணர்வுகளையோ அறியாதவன், அவள் வயிற்றிலே முகத்தை அழுத்தி வைத்தபடி, “அம்மா கூட இருந்தா இப்படித்தான் பீல் பண்ணி இருப்பேன்னு நினைக்கிறேன் சஞ்சு” என்றான்…
அவளோ அவனைப் அதிர்ச்சியாக பார்த்தாள்…
இப்போதுதான் அவளுக்கு அவனது மனநிலையே புரிந்தது…
மெதுவாக தன் கையை உயர்த்தி அவன் தலையை வருடிக் கொடுத்தாள்…
“மகி பிறக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க… அப்போ எனக்கு அஞ்சு வயசு… குட்டி குட்டி கைகாலோடு துருதுறுன்னு இருந்தவள பாத்ததும் எனக்கு அவள நல்லா பாத்துக்கணும்னு தான் தோணுச்சு… அம்மா இல்லாததுனால மகி பொறந்த அப்புறம் அப்பா அவள தான் கூடுதலா பார்த்துகிட்டார்… எனக்கும் புரிஞ்சது… ஆனா அத தாண்டியும் எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு… அம்மாவும் இல்ல… அப்பா இருந்தும் இல்லாதது போல ஒரு நிலை… ரொம்ப தனிமையாக ஃபீல் பண்ணினேன். நானும் வளர கிட்ட அப்பா என் கூட இருக்கணும்… பேசணும்னு… எதிர்பார்க்கல, எதிர்பார்ப்பு இருந்தா தானே அவர் என்கிட்ட இருந்து விலகி இருக்க கிட்ட கவலையா இருக்கும்…” என்று ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டவன்,
“சின்ன வயசுல மகி ரொம்ப சமத்து” என்றவனது இதழ்களில் அன்றைய நாளைய நினைவுகளில் இன்றும் மலர்ந்தன…
“மகி எப்பவுமே என் கூடவே ஒட்டிட்டு இருப்பா… அவ கூட இருக்கும்போது ரொம்ப நல்லா இருக்கும்… ஆனா அப்பா அவ நல்லா படிக்கனும்ன்னு ஹாஸ்டல்ல சேர்த்துட்டார்… வீட்டில் தனியா இருக்கும் போது ரொம்ப தனிமயா ஃபீல் பண்ணுவேன்… என் தனிமையை போக்க நல்லா படிச்சேன்… படிச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் முழு மூச்சா பிசினஸ்லயே இறங்க அந்த ஃபீல் இல்லா போயிடுச்சு… அந்த நேரம் தான் அப்பா இருந்துட்டார்… என்னால அந்த டைம்ல அழக் கூட முடியல… மகிய சமாதானப்படுத்தனும்… என்ன கட்டுப்படுத்திக்கிட்டு மகிய பார்த்துகிட்டேன்… மகிக்கு கல்யாணம் முடிச்சு போனா உடனே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… வீட்ல இருக்கவே பிடிக்கல… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… நான் பணக்காரன் தான்… ஆனா பணம் இருந்தும் அனாதையா இருக்கேன்… எல்லாரும் என்கிட்ட இருக்க பணத்தை பாப்பாங்களே தவிர மனுசனா பாக்க மாட்டாங்க… ஆனா நீ என் கூட இருக்கும் போது தனிமை ஃபீல் ஆகவே இல்ல” என்று இவ்வளவு நாளும் தன் அடி மனதில் புதைத்திருந்த ரகசியங்களை தன்னை மீறி அவளிடம் கொட்டிக் கொண்டிருந்தான்…
அவளுக்கோ அவன் கூறியதை கேட்டு கண்களில் கண்ணீரை வந்துவிட்டது….
இந்த கம்பீரமான ஆண்மகலுக்குள் இத்தனை துன்பம் இருக்கின்றதா என்று அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை…