அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(5)

4.5
(11)

“என்ன பண்ணலாம் தூக்கமே வர மாட்டேங்குதே பேசாமல் நம்ம ஆளுக்கு போன் பண்ணி பார்ப்போமா?” என்று யோசித்தாள் மயூரி .

 

“வேண்டாம் வேண்டாம் போன் பண்ணி நம்ம வாய்ஸ் கேட்டதும் நம்பரை பிளாக் பண்ணிட்டானா? வேற என்ன பண்ணலாம்” என்று யோசித்தவள், “பேசாமல் வாட்ஸப்ல மெசேஜ் பண்ணலாமா? வேண்டாம் , வேண்டாம் அதுக்கு நான் தானு சொல்லியே பேசலாம்” என்று நினைத்தவள் அவனது எண்ணிற்கு டயல் செய்தாள்.

 

ரிங் அடித்துக் கொண்டிருக்க அதை பார்த்தவன், “புது நம்பரா இருக்கே யாரா இருக்கும்” என்று நினைத்து அட்டென்ட் செய்த காதில் வைத்தான்.

 

“ஹலோ யாரு?” என்ற அரவிந்தனிடம் , “ஹாய் போலீஸ்கார்” என்ற குரலை கேட்டதும் கடுப்பானவன், “யார் நீங்க?” என்றான் அரவிந்தன்.

 

“என்ன போலீஸ்கார் அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா? மதியம் தானே பேசினோம்” என்றாள் மயூரி .

 

“மதியம் பேசினோமா யார் நீங்க?” என்று அவன் மீண்டும் கேட்டிட, “என்ன போலீஸ்கார் ஈவினிங் கூட பாப்பாவை கூப்பிட்டு போக எங்க வீட்டுக்கு வந்தீங்களே நான் தான் மயூரி” என்று அவள் கூறிட , “என்ன வேணும் உங்களுக்கு , என் ஃபோன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது” என்றான் அரவிந்தன் .

 

“உங்க நம்பர் வாங்குவதெல்லாம் ஒரு பெரிய விஷயமா அதெல்லாம் சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் இந்த மயூரி நினைச்சா உங்க ஃபோன் நம்பர் என்ன உங்க பான் கார்டு நம்பர் கூட வாங்கி விடுவேன்” என்று கூறிக் கொண்டிருக்க போனை கட் செய்தான் அரவிந்தன்.

 

“ இந்த ஆளுக்கு கொழுப்பு பாத்தியா பேசிட்டு இருக்கும் போது ஃபோன் கட் பண்றாரு விடலாமா இவரை” என்று நினைத்த மயூரி மீண்டும் அவனது எண்ணிற்கு ஃபோன் செய்தாள்.

 

“என்ன வேணும் உனக்கு” என்ற அரவிந்தனிடம், “நீங்க தான் வேணும் வேற யாரு என்ன பெரிசா கேட்கப் போகிறேன்” என்றாள் மயூரி .

 

“எக்ஸ்கியூஸ் மீ” என்று அவன் கொஞ்சம் அதட்டலாக கூறிட, “உங்க கிட்ட பேசணும் தோணுச்சு அதுதான் போன் பண்ணினேன். நீங்க பொண்ணுங்க கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா? என்றாள் மயூரி.

 

“ஆமா பேசமாட்டேன் பசங்க கிட்ட மட்டும் தான் பேசுவேன் போதுமா ஃபோனை வை” என்றான் அரவிந்தன்.

 

“என்ன பசங்க கிட்ட மட்டும் தான் பேசுவீங்களா? ஹலோ நீங்க ஒன்னும் வானவில் அந்த மாதிரி எதுவும் இல்லையே” என்று அவள் கேட்டிட, “ச்சீ கருமம் பிடிச்சவளே, பொம்பள பிள்ளை என்று பார்க்கிறேன் வாயில் அசிங்கமா ஏதாச்சும் சொல்லிடுவேன் மரியாதையா ஃபோனை வச்சிட்டு போடி” என்று கூறிவிட்டு காலை கட் செய்தான் அரவிந்தன்.

 

“மயூ உனக்கு வாயில் தான்டி சனீஸ்வர பகவான் குடி இருக்கிறார் அவர் கிட்ட ஏடாகூடமாக பேசி இப்போ பாரு அவரு ஃபோனை கட் பண்ணிட்டாரு” என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் மயூரி. பொண்ணுங்க கிட்ட பேச மாட்டேன்னு சொன்னால் அப்போ அப்படித்தான் கேட்க தோணும்” என்று தனக்கு தானே சமாதானம் வேறு கூறிக் கொண்டிருந்தாள்.

 

“இரிட்டேட்டிங் இடியட் போன் பண்ணிட்டு என்னென்ன பேசுறாள் திமிரு புடிச்சவள்” என்று நினைத்தவன், “இவளுக்கு யார் என் நம்பரை கொடுத்தது” என்று யோசித்திட, “ஒரு வேளை நம்ம அம்மா தான் இவளுக்கு நம்ம ஃபோன் நம்பர் கொடுத்து இருப்பாங்களோ?” என்று நினைத்தவன் தன் அன்னையின் அறைக்கு வந்தான்.

 

கன்னிகா தன் மகனின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டு புலம்பி கொண்டிருந்தார்.

 

“ ஏன்டா இப்படி இருக்க உனக்கு பின்னாடி பிறந்தவனெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு அஞ்சு வயசுல ஒரு பிள்ளை பெத்து வச்சு பொண்டாட்டியோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கான். நீ ஏன்டா இப்படி சாமியார் மாதிரி கல்யாணமும் வேண்டாம். ஒரு கத்திரிக்காயும் வேண்டாம் என்று சுத்திட்டு இருக்க ஊர் உலகத்துல போலீஸ்காரன் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறதே இல்லையா உங்க அப்பா செத்து போயிட்டாருனா நீயும் செத்து போயிருவியா ஏன்டா இப்படி எல்லாம் நினைச்சுட்டு உன் வாழ்க்கையை நீயே அழிச்சிக்கிட்டு இருக்க” என்று மகனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு புலம்பி கொண்டிருந்தார்.

 

“அம்மா” என்ற அரவிந்தனின் குரலில் நிமிர்ந்தார் கன்னிகா.

 

“உள்ளே வாப்பா” என்று அவர் கூறினார் அவனும் அந்த அறைக்குள் சென்றான்.

 

“என்ன தனியா புலம்பிட்டு இருக்கீங்க” என்ற அரவிந்தனிடம், “வேற என்ன புலம்ப போறேன் என் பையன் உனக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி பாக்கணும் என்பது தான் என்னோட ஆசை அது கனவில் தான் நடக்கும்னு தெரியும். நிஜத்திலும் நடக்கனுமேன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்” என்றார் கன்னிகா.

 

நேரில் கேட்டால் கோபமா பதில் சொல்லுவ, அதான் போட்டோல கேட்கிறேன். நேரில் தான் நீ சிரிக்கிறதே இல்லை. இந்த போட்டோவை பாரு அழகா சிரிச்சிட்டு இருக்க அதனால் தான் உன் போட்டோ கிட்ட பேசுறேன்” என்ற கன்னிகாவை முறைத்தவன், “என்னதான் உங்க பிரச்சனை நான்தான் தெளிவா சொல்லிட்டேன்ல எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லன்னு அப்புறம் ஏன் தேவையில்லாமல் என் ஃபோன் நம்பரை ஏதோ ஒரு பொண்ணு கிட்ட எல்லாம் கொடுத்து என்கிட்ட பேச சொல்றீங்க” என்றான் அரவிந்தன் .

 

“உன் ஃபோன் நம்பரை நான் ஏதோ ஒரு பொண்ணு கிட்ட கொடுத்து பேச சொன்னேனா? என்னடா சொல்ற நான் எந்த பொண்ணு கிட்டயும் உன் நம்பர் எல்லாம் கொடுக்கலையே” என்றார் கன்னிகா.

 

“பொய் சொல்லாதீங்க ரூபிணியோட ரிலேட்டிவ்ஸ் பொண்ணு மயூரி அவளுக்கு என் நம்பர் கொடுத்தது நீங்க தானே சாயந்தரம் நீங்க தானே அவங்க வீட்ல இருந்து வந்தீங்க அப்போ நீங்க தான் கொடுத்து இருப்பீங்க” என்ற அரவிந்தனை முறைத்தவர் , “அடேய் சத்தியமா சொல்றேன்டா உன் நம்பரை நான் அந்த பொண்ணுக்கு கொடுக்கவே இல்லடா எனக்கு என்ன பைத்தியமா உன்ன மாதிரி ஒரு ரோபோட்டுக்கு அந்த மாதிரி ஒரு அழகான அம்சமான பொண்ண கட்டி வைக்க பாவம் அந்த பொண்ணு வாய் துடுக்கா சந்தோஷமா பேசுறாள். போற இடத்துல சந்தோசமா வாழனும். உன்னை மாதிரி ஒரு ரோபோவுக்கு அந்த பொண்ணை கட்டி வைக்கணும்னு நினைப்பேனா?” என்று கன்னிகா கூறிட, “என்னது நான் ரோபோவா?” என்றான் அரவிந்தன்.

 

“ஆமா நீ ரோபோ தான் ரோபோ தான் எப்ப பார்த்தாலும் விறைப்பா இருக்கும். சிரிக்க தெரியாது அந்த மாதிரி தான் நீயும் இருக்க அம்மா ,தம்பி கூட என்னைக்காவது உட்கார்ந்து சிரிச்சு பேசி இருக்கியா? உங்க அப்பா என்னைக்கு செத்தாரோ அன்னையிலிருந்து உன் மூஞ்சிக்கு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் வச்சிருக்கே” என்ற கன்னிகாவை முறித்தவன், “ நான் இஞ்சி தின்ன குரங்காவே இருந்துட்டு போறேன் நீங்க தான் என் நம்பரை அவளிடம் கொடுத்து இருப்பீங்கன்னு எனக்கு கன்ஃபார்மா தெரியும் சும்மா நடிக்காதீங்க இந்த வேலை எல்லாம் இனிமேல் பாக்காதீங்க எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை நான் எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அவகிட்டயும் தெளிவா சொல்லிருங்க” என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டான் அரவிந்தன்.

 

“நிஜமாவே உன்னை ரோபோட்டா தான் பெத்தேனோ? அட போடா” என்று நினைத்த கன்னிகா, “அந்த பொண்ணு இவனுக்கு போன் பண்ணுச்சா இது என்ன புது கதையா இருக்கு ஒருவேளை ரூபிணி சொன்னது உண்மையோ? அந்த பொண்ணுக்கு இவன் மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்குமோ கடவுளே அந்த பொண்ணையாச்சும் என் பையனுக்கு முடிச்சு விட்டுருங்க . அட்லீஸ்ட் அவளை போய் உனக்கு கட்டி வைக்க மாட்டேன்னு இவனை வெறுப்பேத்தி பார்த்தாவாச்சும் இல்லை நான் அவளை தான் கட்டி கூட்டிட்டு வருவேன் என்ன பண்ணுவேன்னு இவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரும்னு நானும் என்னென்னமோ டிராமா பண்ணி பாத்துட்டேன் பயபுள்ள உசுரா இருக்கானாம் போலீஸ் வேலைதான் கல்யாணம், காக்கி சட்டைதான் பொண்டாட்டின்னு சுத்திட்டு இருக்குற இவனை எப்படித்தான் அந்த பொண்ணு வழிக்கு கொண்டு வரப்போறாளோ? முருகா நீ தான் அந்த மயூரிக்கு துணையா இருந்து என் மகனுக்கு நல்ல நேரத்தில் மாலை எடுத்து கொடுக்கணும்” என்று வேண்டிக்கொண்டார் கன்னிகா

 

“மைடியர் போலீஸ் கார் ஒருவேளை நீங்க என் நம்பரை பிளாக் பண்ணினாலும் பரவாயில்லை நாளைக்கே புது சிம் கார்டு வாங்கி திரும்பவும் போன் பண்ணுவேன். இல்லையா அம்மாவோட நம்பர் இருக்கு அதுவும் இல்லையா ஏதாச்சும் ஒரு டெலிபோன் பூத்துக்கு டெய்லி போய் போன் பண்ணி டார்ச்சர் பண்ணாம விட மாட்டேன்” என்று நினைத்துக் கொண்ட மயூரி, “சரி தூங்குவோம் தூக்கத்துல கனவுல நம்ம ஆளு கூட டூயட் பாடுற சான்ஸாவது கிடைக்கும்” என்று நினைத்து மெத்தையில் சரிந்தாள் மயூரி.

 

இங்கு அரவிந்தனும் தான் எடுத்த கேஸை பற்றிய சிந்தனைகள் மூழ்கிக் கொண்டிருந்தான்.

 

“என்ன ரூபினி ஏதோ யோசனையாகவே இருக்க” என்ற அர்ஜுனனிடம், “நான் என்ன பெருசா யோசிக்க போறேன் எல்லாம் நம்ம வீட்டைப் பத்தி தான். நமக்கு கல்யாணம் ஆகி தியா இருக்காள். அதே மாதிரி உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகி அவருக்கு ஒரு குழந்தை பிறந்தால் அத்தையோட மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் அதற்கான ஏற்பாட்டை தான் நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் உங்க அண்ணன் கிட்ட ஒன்றத்துக்கும் வேலைக்காகாது போல” என்று புலம்பினாள் ரூபிணி.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!