அத்தியாயம் 13
“ஏன் வாசு அந்த பையனுக்கு என்ன குறை ஆளு பார்க்க அழகா அம்சமா இருக்கிறான். நம்ம பல்லவி மேல உயிரையே வச்சுருக்கான். அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டால் நம்ம பொண்ணு சந்தோசமா இருப்பாள்” என்று செல்வராணி கூறிட, “அந்த பையனுக்கு எந்த குறையும் இல்லை அக்கா ஆனால் அப்பா, அம்மா இல்லையே. அப்பா, அம்மா இல்லாத ஒருத்தனுக்கு எப்படி நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க முடியும்” என்றார் வாசுதேவன்.
“என்ன சொல்லுற வாசு அந்த பையனுக்கு அப்பா, அம்மா இல்லையா?” என்றார் செல்வராணி.
“ஆமாம் அக்கா நம்ம பொண்ணு கல்யாணம் பண்ணி போற வீட்டில் அவளுக்கு மாமனார், மாமியார்னு எந்த சொந்தமும் இல்லாமல் அது சரி வராதுக்கா” என்றார் வாசுதேவன்.
“ஏன் சரி வராது வாசு நீ ஏன் இப்படி யோசிக்க கூடாது. நம்ம பல்லவிக்கு மாமியார் கொடுமை எல்லாம் நடக்கவே நடக்காது” என்ற செல்வராணி, “அந்த பையனுக்கு யாரும் இல்லைனா என்ன வாசு நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி நம்ம குடும்பத்தில் ஒருத்தனா மாறிவிட்டால் அவனுக்கு அம்மாவா நான் இருப்பேன். அக்காவா சங்கவி இருப்பாள். யோசி வாசு பல்லவிக்கு வயசு கூடிட்டே போகுது. சாம்பவி கல்யாணத்தப்பவே பல்லவிக்கும் கல்யாணம் முடியனும்” என்றார்.
“அக்கா” என்று வாசுதேவன் ஏதோ சொல்ல வர , “நல்லா யோசி, யோசிச்ச பிறகு நாளைக்கு உன் பதிலை சொல்லு. எனக்கு என்னவோ திலீப் தான் நம்ம பல்லவிக்கு ஏத்த மாப்பிள்ளைனு தோனுது” என்று கூறிய செல்வராணி சென்று விட வாசுதேவன் யோசிக்க ஆரம்பித்தார்.
“என்ன பவி என் கிட்ட பேச மாட்டியா?” என்ற திலீப்பிடம், “என்ன பேசணும்” என்றாள் பல்லவி. “நம்ம ஃப்யூச்சரை பத்தி தான் பவி” என்ற திலீப் வர்மன் அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன் , “நீ இப்போ குழப்பத்தில் இருக்க இன்னும் சொல்லப் போனால் என் மேல கோபமா இருக்க உன் கோபம் குறையும் வரை உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்” என்று கூறி விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான் திலீப் வர்மன். “திலீப்” என்று அவள் பற்களைக் கடித்திட, “பவி” என்று வந்தாள் சங்கவி.
“ச்சே கனவா” என்று நினைத்தவள், “சொல்லுங்க அத்தாச்சி” என்று திரும்பிட, “என்னடி திலீப்னு கத்திட்டு இருக்க” என்ற சங்கவியிடம், “இல்லையே” என்றாள் பல்லவி.
“லவ் முத்திப் போச்சுன்னு நினைக்கிறேன் கவலைப் படாதே சீக்கிரமே உனக்கும், அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணுறேன் இப்போ நான் ஊருக்கு கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள் சங்கவி.
செல்வராணியும் தம்பியை யோசித்து நல்ல முடிவாக எடுக்க சொல்லி விட்டு மகளுடன் ஊருக்கு கிளம்பி விட்டார்.
“என்ன சாம்பவி நிச்சயதார்த்தம் முடிஞ்ச சந்தோஷம் கொஞ்சம் கூட உன் முகத்தில் இல்லை , என்னாச்சு” என்று வைதேகி கேட்டிட, “ஒன்னும் இல்லைம்மா” என்ற சாம்பவி ஏதோ யோசனையில் இருந்தாள்.
“என்ன பல்லவி பங்சன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா” என்ற அபிநயாவிடம், “அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சுருச்சு அபி. நீ ஏன் வரவில்லை” என்றாள் பல்லவி.
“உனக்கு என்கேஜ்மென்ட்டுனா சொல்லு இரண்டு நாளைக்கு முன்னமே வந்து எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறேன். உன் தங்கச்சி என்கேஜ்மென்ட்டுக்கு எல்லாம் நான் ஏன் பல்லவி வரணும்” என்றாள் அபிநயா.
“அப்போ ரெடியா இருங்க சிஸ்டர் கூடிய சீக்கிரம் எங்களுக்கும் என்கேஜ்மென்ட் நடக்கும்” என்று வந்தான் திலீப் வர்மன்.
அவனை முறைத்த பல்லவி, “உனக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பாரு நான் எங்கே இருக்கேனோ அங்கே வந்துருவியா?” என்றாள் பல்லவி.
“உன்னை சுத்தி ,சுத்தி வருவது மட்டும் தான் என்னோட ஒரே வேலை பவி” என்ற திலீப், “சரி இன்னைக்கு சிஸ்டர் இங்கே உள்ள வேலையை பார்த்துப்பாங்க நீ என் கூட வா” என்று அவளது கையை பிடித்து இழுத்தான் திலீப் வர்மன்.
“திலீப் எங்கே கூப்பிடுற” என்ற பல்லவியிடம், “சொன்னால் தான் வருவியா டீ” என்றான். அவனை அவள் கோபமாக பார்த்திட, “முறைச்சு, முறைச்சு பார்த்தால் மட்டும் உன்னை விட்டுருவேனா ஒழுங்கா என் கூட வா” என்று அவன் வற்புறுத்திட, வேறு வழி இல்லாமல் அவனுடன் சென்றாள் பல்லவி.
அவர்கள் சென்ற ஐந்தாவது நிமிடம் ராகவ் அங்கு வந்தான். “என்ன வேணும் சார்” என்ற அபிநயா விடம், “பல்லவி இல்லையா?” என்றான் ராகவ்.
“இல்லை அவள் வெளியே போயிருக்கிறாள்” என்ற அபியிடம், “எங்கே போனாள்?” என்றான் ராகவ். “தெரியலை” என்ற அபிநயா, “உங்களுக்கு என்ன வேணும் கார்ட்ஸ் பார்க்கணுமா?” என்றிட, “இல்லை பர்சனல் விஷயம் பல்லவி கிட்ட பேசணும் அதான் வந்தேன் அவள் வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லுங்க ப்ளீஸ்” என்று கூறிய ராகவ் சென்று விட்டான்.
“என்னை ஏன் இங்கே கூட்டிட்டு வந்த திலீப்” என்ற பல்லவியிடம், “சினிமா தியேட்டருக்கு எதுக்கு டீ கூட்டிட்டு வருவாங்க சினிமா பார்க்க தான்” என்ற திலீப் , “இந்தா பிடி” என்று பாப்கார்னை அவளிடம் கொடுத்தான்.
“டேய் எருமை எனக்கு கல்யாண ஆர்டர் ஏகப் பட்டது இருக்கு. இன்விட்டேசன் எல்லாம் ப்ரிண்ட் பண்ணி டெலிவரி பண்ணனும் நீ என்னடான்னா சினிமாவுக்கு இழுத்துட்டு வந்திருக்க” என்றாள் பல்லவி.
“அதெல்லாம் உன் அசிஸ்டன்ட் பார்த்துப்பாங்க நீ என் கூட உட்கார்ந்து சினிமா பாரு” என்ற திலீப் அவளது தோளில் சாய்ந்து கொண்டு சினிமா பார்க்க ஆரம்பித்தான்.
“ஏய் சாம்பவி அது உன் அக்கா பல்லவி தானே?” என்றாள் சாம்பவியின் தோழி காயத்ரி. “ஆமாம் இவள் என்ன சினிமாவுக்கு வந்திருக்கிறாள் அதுவும் இவன் கூட” என்றாள் சாம்பவி. “யாரு டீ அவன் செம்ம ஹேன்ட்சமா இருக்கான். உன் அக்காவோட லவ்வரா?” என்ற காயத்ரி, “உன் அக்கா இவ்வளவு நாள் வெயிட் பண்ணதுக்கு நல்ல பலன் கிடைச்சுருக்கு உன் ஆளை விட செம்ம பர்சனாலிட்டியா இருக்கான்” என்றாள்.
திலீப், பல்லவி இருவரையும் ஜோடியாக பார்த்த சாம்பவியின் வயிற்றில் அமிலம் சுரந்தது.
“இவன் கண்டிப்பா இவளுக்கு கிடைக்கவே கூடாது” என்று நினைத்த சாம்பவி கோபமாக சினிமா தியேட்டரை விட்டு வெளியே சென்று விட்டாள்.
“என்னடா உன் கவனம் வேலையில் இல்லை போலையே” என்ற ரஞ்சித்திடம் , “இல்லைடா இன்னைக்கு காலையில் நான் ஆஃபீஸ் கிளம்பிட்டு இருக்கும் போது வாசுதேவன் அங்கிள் வீட்டுக்கு வந்தாரு” என்றான் ராகவ்.
“சரி என்ன விஷயமா வந்தாரு” என்ற ரஞ்சித்திடம், “பல்லவிக்கும், திலீப்புக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அவங்க அக்கா ஆசைப் படுறாங்களாம். அதனால் திலீப் பத்தி விசாரிச்சாரு” என்றான் ராகவ்.
“நல்ல விஷயம் தானடா பல்லவிக்கும் திலீப்புக்கும் கல்யாணம் நடந்தால் பல்லவியோட லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்” என்று ரஞ்சித் கூறிட, “ஆமாம்” என்று கூறிய ராகவ், “திலீப் பல்லவியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பானா?” என்றான் .
“கண்டிப்பா சம்மதிப்பான் அவன் இங்கே வந்ததே பல்லவிக்காக தான்” என்ற ரஞ்சித் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். “என்ன சொல்லுற ரஞ்சித்” என்ற ராகவ்விடம், “திலீப் பல்லவியை லவ் பண்ணுறான்” என்ற ரஞ்சித் தன் வேலையை கவனிக்க ராகவ்விற்கு தான் மனம் வலித்தது.
“என்ன நடக்குது இந்த வீட்டில்” என்று கத்தினாள் சாம்பவி. “என்ன பிரச்சினை சாம்பவி ஏன் கத்துற” என்ற வாசுதேவனிடம், “உங்க செல்ல பொண்ணு பல்லவி எங்கே இருக்காள்னு தெரியுமா?” என்றாள் சாம்பவி.
“எங்கே இருப்பாள் வேலை செய்யும் இடத்தில் தான் இருப்பாள்” என்ற வாசுதேவனிடம், “நீங்க இப்படியே அவளை நம்பிட்டே இருங்க அவள் என்னடான்னா எவனோ ஒருத்தன் கூட சினிமா தியேட்டரில் கொஞ்சிட்டு இருக்கிறாள்” என்றாள் சாம்பவி.
“சாம்பவி என்ன சொல்லுற பல்லவி நிச்சயம் சினிமா தியேட்டர்க்கு எல்லாம் போக மாட்டாள்” என்ற வைதேகியிடம், “நல்லவ வேஷம் போட்டு எல்லோரையும் நல்லாவே ஏமாத்தி வச்சுருக்காள் நீங்களும் நம்புங்க” என்றாள் சாம்பவி.
“சரி சாம்பவி பல்லவி யார் கூட சினிமாவுக்கு போனாள்” என்று வாசுதேவன் கேட்டிட, “வேற யாரு திலீப், திலீப்னு ஒருத்தன் சுத்துறானே அவன் கூட தான்” என்றாள் சாம்பவி.
“ஓ அப்படியா” என்ற வாசுதேவன் தன் வேலையை கவனிக்க சென்று விட, “அம்மா என்னம்மா அப்பா அப்படியான்னு கேட்டுட்டு அமைதியா போறாரு” என்றாள் சாம்பவி.
“வேற என்ன செய்ய சொல்லுற பல்லவி மாப்பிள்ளை கூட தானே போயிருக்கிறாள்” என்ற வைதேகி , “அப்பறம் சாம்பவி இனிமேல் திலீப்பை அவன், இவன் எல்லாம் சொல்லி கூப்பிடக் கூடாது. அத்தான், மச்சான் இல்லை மாமா இப்படி மரியாதையா தான் கூப்பிடனும்” என்றார்.
“என்ன நடக்குது இங்கே அவன் மாப்பிள்ளையா!” என்று அதிர்ந்த சாம்பவியிடம், “ஆமாம் திலீப்புக்கு தான் நம்ம பல்லவியை கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா உன் அப்பாவும், அத்தையும் முடிவு பண்ணி இருக்காங்க” என்றார் வைதேகி.
“இதுக்கு எப்படிம்மா நீங்க சம்மதிச்சீங்க” என்ற சாம்பவியிடம், “ஏன் டீ இன்னும் எத்தனை நாள் அவளும் கல்யாணம் ஆகாமல் வீட்டில் இருப்பாள். நல்ல வரன் வரும் போது கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க தானே வேண்டும்” என்று கூறினார் வைதேகி.
“அம்மா அந்த திலீப் அவனைப் போயி இந்த பல்லவிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா உனக்கு அறிவு இருக்காம்மா? நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே அவளுக்கு எவனாவது வயசான அங்கிளைத் தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு” என்றாள் சாம்பவி.
“பைத்தியம் மாதிரி பேசாதே சாம்பவி ஆயிரம் தான் அவளை உனக்கு பிடிக்க வில்லை என்றாலும் அவள் உன்னோட அக்கா அவளுக்கு கல்யாணம் நடக்கப் போகிறது சந்தோசப் படு அதை விட்டுவிட்டு அவளுக்கு எவனாவது வயசான ஆசாமி கூட தான் கல்யாணம் நடக்கனும்னு நினைக்காதே” என்ற வைதேகி சென்று விட, சாம்பவிக்கு தான் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
(…அடியே…)