உனக்கு இது தேவையா அம்மா என்ற துவாரகாவிடம் தேவை தான் என்ன இருந்தாலும் அவன் நான் பெத்த மகனாச்சே என்ற சித்ரா தேவி தானும் கை கழுவினார்.
என்னடீ இன்னும் எவ்வளவு நேரம் தான் சமைப்ப என்று கத்தினாள் கார்த்திகா. இதோ ஐந்து நிமிடம் அம்மா என்றவள் வேக வேகமாக பூரி சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டது தான் மிச்சம். பூரி சுடும் பொழுது சஷ்டி என்னம்மா சமையல் என்று ராஜேஷ் கிட்சனுக்கு வர அவ்வளவு தான் பயந்த சஷ்டிப்ரதா கை தவறி எண்ணெய் சட்டியை தட்டி விட கொதிக்கும் எண்ணெய் அவளது கையையும், காலையும் பதம் பார்த்தது தான் மிச்சம்.
பீடை , பீடை ஒரு எண்ணெய் சட்டியை ஒழுங்கா வைத்து பூரி சுடத் தெரியுதா தரித்திரம் புடிச்ச நாயே ஒழுங்கு மரியாதையா இந்த இடத்தை க்ளீன் பண்ணிட்டு வேலைக்கு போ என்று கூறிவிட்டு என்னங்க காலை சாப்பாடு ஹோட்டலில் இருந்து வாங்கிட்டு வாங்க என்று கூறினார் கார்த்திகா.
கை, கால் இரண்டிலும் எண்ணெய் கொட்டியதால் பொக்கலம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் அவள் அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு அலுவலகம் சென்று விட்டாள்.
அங்கு குகனோ அன்று அவளை வேலை, வேலை என்று பிழிந்து எடுத்து விட்டான். அவள் எடுத்து வந்த அத்தனை பைலிலும் மிஸ்டேக் மிஸ்டேக் என்று அவளை தாளித்து எடுத்து விட்டான்.
என்ன ப்ரதா இவ்வளவு மிஸ்டேக் உன்னோட கவனம் எங்கே இருக்கு என்றவனிடம் ஸாரி சார் என்று கூறிவிட்டு அவள் கிளம்ப எத்தனிக்க அவளது கையை எட்டிப் பிடித்தான் குகநேத்ரன்.
ஆ அம்மா என்று அவள் கத்திட அப்பொழுது தான் அவளது கையை பார்த்தான். என்ன டீ கை எல்லாம் கொப்பலமா இருக்கு என்றிட எண்ணெய் கொட்டிருச்சு சார் விடுங்க ப்ளீஸ் என்று அவள் கூறிட ஒழுங்கு மரியாதையா ஐந்து நிமிசத்தில் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வர என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட அவளுக்கு தான் ஐயோ என்று இருந்தது.
இப்போ எதற்கு இவன் நம்மளை கார் பார்க்கிங் வரச் சொல்லி இருக்கிறான் ஒருவேளை இன்னைக்கே அவன் கூட என்று நினைத்த உடனேயே அவளது உடல் கூசியது. என்ன செய்ய விஷ்ணு உயிரோடு வர வேண்டும் என்றால் அவனுக்கான மருத்துவம் சரியாக நடக்க வேண்டும் அதனால் இந்த அரக்கன் என்ன செய்ய சொன்னாலும் செய்து தான் ஆக வேண்டும் என்று நினைத்த சஷ்டிப்ரதா கார் பார்க்கிங் நோக்கி சென்றாள்.
வண்டியில் ஏறு என்று அவன் கூறிட அவளும் வேறு வழி இல்லாமல் காரில் அமர்ந்து கொண்டாள். கார் நேராகச் சென்றதோ அவனது கெஸ்ட் ஹவுஸிற்கு தான்.
இங்கே எதற்கு வந்து இருக்கோம் குகன் என்று அவள் கேட்டிட நம்ம அக்ரிமென்ட் உனக்கு நியாபகம் இருக்கு தானே ஒரு மாதம் நீ என் கூடவே இருக்கனும் என்று அவன் கூறிட நியாபகம் இருக்கு ஆனால் என்று அவள் தயங்கிட என்ன ஆனால் வாயை மூடிக் கொண்டு இறங்கு என்றான் குகநேத்ரன்.
அவளும் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இறங்கி அவனுடன் அந்த வீட்டிற்குள் சென்றாள். எங்கே எங்கே காயம் இருக்கு என்று அவன் கேட்டிட தன் கையை மட்டும் காண்பித்தாள். வேறு எங்கேயும் காயம் இல்லையா என்ற குகனிடம் காலில் இருக்கு என்று அவள் தயங்கிட போ போயி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா என்றான் குகன்.
அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்க்க நீ இங்கே தங்கப் போற ஒரு மாதமும் உனக்கு என்ன தேவையோ எல்லாமே இங்கே கிடைக்கும் என்று அவன் கூறிட அவளும் அமைதியாக அந்த அறைக்குள் சென்றாள்.
அங்கு இருந்த நைட்டியை அணிந்து கொண்டவள் வெளியே வர அவளை இழுத்துக் கொண்டு கதிரையில் அமர வைத்தவன் அவளது கால்களை பிடித்து காயத்தைப் பார்த்து விட்டு அதிர்ந்து போனான். என்ன டீ இவ்வளவு காயம் ஏன் ஏற்பட்டது என்று கேட்டான்.
அதான் சொன்னேனே எண்ணெய் கொட்டிருச்சு என்று அவள் கூறிட எண்ணெயில் குளிச்சு விளையாடினியா முண்டம் என்று அவளை திட்டி விட்டு அவளது காயத்திற்கு மருந்து இட்டவன் அவளிடம் திரும்பி இடுப்பை காட்டு ஊசி போடனும் என்றான்.
அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்து நீங்க என்ன டாக்டரா என்று தான் கேட்டாள். ஆமாம் என்று அவன் கூறிட அப்போ பிசினஸ் என்று அவள் தயங்கிட டாக்டராகனும் என்று ஆசை படித்தேன். அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை பிசினஸை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால் பிசினஸை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றவன் சரி திரும்பு என்றான்.
கையில் போடுங்களேன் ப்ளீஸ் என்று அவள் கெஞ்சிட நான் தானே டீ திரும்பு என்று அவளுக்கு இன்ஜக்சனை போட்டு விட்ட குகன் கொஞ்ச நேரம் தூங்கு என்றான். தேங்க்ஸ் என்றாள் சஷ்டிப்ரதா.
நீ என்னோட ப்ராப்பர்ட்டி உனக்கு எந்த காயமும் இருக்க கூடாது என்று கூறிவிட்டு அவன் சென்று விட அவள் அமைதியாக படுத்து உறங்கினாள்.
உறங்கும் அவளின் அருகில் வந்த குகன் உன்னை எதுனாலும் பண்ணி கொடுமைப் படுத்தனும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் ஏனோ என்னால உன்னை எதுவும் செய்ய முடிய வில்லை. இந்த அப்பாவியான முகத்தை பார்க்கும் பொழுது எனக்கு ஏனோ கோபம் கூட வரவே மாட்டேங்குது என்று நினைத்த குகன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
என்ன நினைத்தானோ அவளை அணைத்துக் கொண்டு தானும் உறங்க ஆரம்பித்தான்.
சஷ்டிப்ரதா தன்னுடைய மொபைல் போன் ஒலித்திட அந்த சத்தத்தில் கண் விழித்தாள். தன்னை அணைத்தபடி குகன் உறங்குவதைக் கண்டு பதறிப் போய் எழுந்தாள். என்ன டீ ஏன் இப்படி வாரிச் சுருட்டி எழுந்திருக்க என்று அவன் கேட்டிட நீங்க ஏன் என்னை கட்டிப் பிடித்து தூங்குறீங்க என்றாள் சஷ்டிப்ரதா.
ப்ரதா ஒரு மாதம் முழுக்க நீ எனக்கு தான் சொந்தம் அதை மறந்துட்டியா என்று கேட்டவன் எதற்கு எழுந்த என்றான்.
ஃபோன் என்று அவள் கூறிட சரி போயி பேசிட்டு வா டின்னர் சாப்பிட வெளியே போகலாம் அப்படியே நைட் ஷோ சினிமா போகிறோம் என்று அவன் கூறிட அவளுக்கு தான் நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது.
குகன் என்ன இது நாம இரண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றினால் நம்ம விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடாதா என்று அவள் கேட்டிட யாருக்கு தெரிந்தால் என்ன ஐ டோண்ட் கேர் என்று கூறிவிட்டு அவன் சென்று கிளம்ப ஆரம்பித்தான்.
அவளுக்கு தான் தன் மீதே வெறுப்பு வந்தது. மீண்டும் அவளது ஃபோன் ஒலித்திட அதை அட்டன் செய்து காதில் வைத்தாள் சஷ்டிப்ரதா.
ஏன்டீ பீடை மணி எத்தனை ஆகுது இன்னும் வீட்டுக்கு வராமல் எங்கே ஊர்ப் பொறுக்கிட்டு இருக்க என்ற கார்த்திகாவிடம் அம்மா மன்னித்து விடுங்கள் சொல்ல மறந்துவிட்டேன் ஆஃபீஸ் டூர் போகிறோம் அதனால் ஒரு வாரம் கழித்து தான் வீட்டிற்க்கு வருவேன் என்று கூறிவிட்டு கார்த்திகாவின் பதிலைக் கூட கேட்காமல் ஃபோனை கட் செய்து சுவிட்ச் ஆஃப் செய்து விட்டாள்.
என்ன ப்ரதா இன்னும் ரெடி ஆகாமல் இருக்க என்ற குகனிடம் ஒரு ஐந்து நிமிடம் என்றவள் உடை மாற்ற செல்ல உனக்கான டிரஸ் நான் எடுத்து வச்சுருக்கேன் அதை போட்டுக்கோ என்றான் குகநேத்ரன்.
அவள் சென்று பார்க்க அங்கு இருந்ததோ முட்டிக் கால் அளவுக்கு இருந்த கவுன் தான். அதுவும் ஸ்லீவ்லெஸ் அதைக் கண்ட சஷ்டிப்ரதா கோபமாக அவனருகில் வந்தாள்.
என்ன டிரஸ் அது அதை எப்படி நான் போடுவேன் என்று அவள் கேட்டிட கையால தான் என்று பதிலளித்தான் குகன். பொறுக்கி என்று அவள் பற்களைக் கடித்திட பட்டென்று அவளது இதழை தன் இதழால் சிறை செய்தான்.
அவனது திடீர் முத்தத்தில் அவள் அதிர்ந்து போக அவனோ அவளை அணைத்துக் கொண்டு மேலும் மேலும் அவளது இதழை சிறை செய்தான். அவளுக்கு தெரியும் தான் அவனிடம் இருந்து விடு பட முயன்றால் அவனது பிடி இறுகும் என்று ஏற்கனவே அவனிடம் அனுபவப் பட்டவள் தானே தன் விதியை நினைத்து நொந்து கொண்டாள் சஷ்டிப்ரதா.
அவளை விடுவித்தவன் இனிமேல் என்னை பார்த்து பொறுக்கின்னு சொன்ன வீட்டில் நான்கு சுவற்றுக்கு நடுவில் இல்லை பப்ளிக்கா ஆஃபீஸ்ல ஸ்டாஃப் முன்னாடி கிஸ் பண்ணுவேன் ஜாக்கிரதை என்று எச்சரித்தான் . இன்னும் ரெண்டு நிமிஷம் தான் டைம் நீ அந்த டிரஸ் போட்டு விட்டு வரணும் என்று அதிகாரமாக அவன் கூறிட அவளும் வேறு வழி இல்லாமல் அந்த உடையை அணிந்து கொண்டு வந்தாள்.
அவளுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது இப்படி ஒரு உடையை அணிவாள் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க வில்லை. அதுவும் அவளது கால்கள் எல்லாம் அப்பட்டமாக தெரிந்தது. சுடிதார் கூட ஃபுல் ஸ்லீவுடன் அணிபவள் இன்று ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து கொண்டு வர அவளுக்கு ஏதோ போல இருந்தது.
அவனோ அவளைப் பார்த்து சொக்கிப் போனவன் ரொம்ப அழகா இருக்க ப்ரதா என்று கூறிவிட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டான். டிரெஸ்ஸிங் ஓகே பட் மேக்கப் சுத்தமா இல்லை என்று கூறிவிட்டு சரி வா என்று அவளது கை பிடித்து அழைத்து சென்றவன் நேராக ஒரு பியூட்டி பார்லருக்கு அவளை அழைத்துச் சென்றான்.
வேக்சிங், பெடிக்யூர், மெனிக்யூர், ஃபேசியல் என்று அனைத்தையும் செய்ய சொல்லி விட்டு அவன் வெளியே சென்று விட்டான்.
இரண்டு மணி நேரம் அனைத்தும் முடிந்து அவள் வெளியே வர வாவ் சூப்பரா இருக்க ப்ரதா என்று கூறிவிட்டு அவன் அவளது கை பிடித்து அழைத்து சென்றான்.
இருவரும் முதலில் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு பிறகு சினிமாவிற்கு சென்றனர். இருவரும் சினிமா பார்த்து விட்டு வீட்டுக்கு வர அவளோ காரிலேயே உறங்க ஆரம்பித்தாள்.
வீட்டிற்கு வந்த குகன் உறங்கும் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தன் அறைக்குள் இருந்த மெத்தையில் அவளை படுக்க வைத்து உடை மாற்றிக் கொண்டு வந்து அவளருகில் படுத்து அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.
உறங்கிக் கொண்டிருந்த சஷ்டிப்ரதா திடீரென அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.
…. தொடரும்…