டேய் இப்ப என்னடா உனக்கு பிரச்சினை… அப்புடி எல்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கலைடா, பாப்பு மேல்ல ஏன்டா கோவப்படற, எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த போலிஸ்காரன் தான்.. பெருசா எதுவும் தப்பா நடக்கலையே அப்புறம் ஏன்டா இவ்வளோ குதிக்கிற
தேவாவிற்க்கு ஏனோ கோவம் அடங்க மறுத்தது… கோவம் கோவம் பயங்கர கோவம் தியாவை போலிஸ் ஸ்டேஷனில் வைத்த அந்த போலிஸ் மீது, அவளை அவதூறாக பேசியது, அதை விட அவன் எப்போது செய்யவே கூடாது என நினைத்ததை செய்ய வைத்து விட்டார்களே என தியா சூர்யா இருவர் மீதும் பயங்கர கோவம்..
அதே கோவத்துடன் என்ன சொன்ன? தப்பா எதுவும் நடக்கலையா, ஓ… இப்ப இவளுக்கு நடந்த எதுவும் உனக்கு தப்பா படலை அப்புடி தானே,போலீஸ் ஸ்டேஷனில் வச்சு பெத்தவங்களே இவளை தப்பா பார்த்தாங்களே அது தப்பா படலை, இந்த அர்த்த ராத்திரியில் ஆம்பிளையை தேடி போயிருக்கா என்ன பொண்ணோன்னு உன் அக்கா மஞ்சு நம்ம காதுபடவே முணுமுணுத்துட்டு போனது உனக்கு தப்பா படலையா,
எப்புடி உனக்கு அது எல்லாம் தப்பா படும் ஏன்னா அவ ஒன்னும் உன் கூட பொறந்த தங்கச்சி இல்லையே, உன் வீட்டு பொண்ணா இருந்தா இப்புடி நடுராத்திரியில் ஒரு பையனை பார்க்க வெளியே கூட்டிட்டு வருவியா, யாரோ வீட்டு பொண்ணுன்னு தானே, இப்புடி சுயநலமா உன் குற்ற உணர்ச்சியை தீர்த்துக்க இவளை பயன்படுத்திக்கிட்ட என்று தேவா கோவத்தில் வார்த்தையை கொட்டி விட,
பாவா ப்ளீஸ் ஏன் இப்புடி எல்லாம் அண்ணாவை பேசாதீங்க.. அவர் ஒன்னும் பண்ணலை நான் தான் பிடிவாதமா என்றவளை தேவா முறைத்ததில் தியா அமைதியாக,
டேய் என்னடா ,என்ன ஓவரா பேசுற ஏதோ பயன்படுத்திக்கிட்டேன் குற்ற உணர்ச்சி அது இதுன்னு, என்ன பயன்படுத்திக்கிட்டேன் சொல்லு என்று தேவாவின் கோபத்துக்கு நிகரான கோவத்துடன் சூர்யா கேட்க,அது மேலும் தேவாவிற்கு கோவத்தை அதிகரித்தது…
வெண்…. என்று சொல்ல வந்தவன், அதை தவிர்த்து உன் குடும்பத்து ஆளால தான் ஏன் வாழ்க்கை இப்புடி ஆகிருச்சுன்னு உனக்கு ஒரு குற்ற உணர்ச்சி அதான் அந்த குற்ற உணர்ச்சியை போக்கிக்க தான் நான் அவ்ளோ சொல்லியும் கேட்காம சின்ன பொண்ணை தூண்டி விட்டுஎன்று கோவத்தில் வார்த்தையை விட,
சூர்யா தான் அந்த வார்த்தைகளில் துடித்து போனான்… வலித்தது என்ன வார்த்தை சொல்லி விட்டான் குற்ற உணர்ச்சி, சின்ன பிள்ளையை பயன்படுத்திக்கிட்ட, சுயநலம் என்று,
ஆமாடா ஆமா சுயநலம் தான், ஆனா நீ நினைக்கிற மாதிரியான சுயநலம் இல்லை.. என் ப்ரெண்ட் வாழ்க்கை நல்லா அமையனும்ங்கிற சுயநலம், அவனும் சந்தோஷமா வாழனும்ங்கிற சுயநலம்டா, எனக்கு அந்த சுயநலம் தப்பா தெரியலை அதான் அதற்காக மட்டும் தான் தியாக்கு உதவி செய்ய ஒத்தக்கிட்டேன்… அப்புறம் என்ன சொன்ன குற்ற உணர்ச்சியை தீர்த்துக்க சின்ன பொண்ணை பயன்படுத்திக்கிட்டேன்…ஆமா அப்புடியே வச்சுக்கோ என் ப்ரெண்ட் வாழ்க்கை நல்லா இருக்கிறதுக்காக எது வேணாலும், ஏன் ஒரு கொலை வேணாலும் பண்ணுவேன்டா, அப்புறம் என்ன சொன்ன உன் கூட பொறந்த தங்கச்சியா இருந்தா, உண்மையா பாசம் இருந்தா இப்புடி பண்ணுவியான்னு கேட்ட தானே, என் பாப்பு மேல்ல நான் எவ்ளோ பாசம் வச்சு இருக்குன்னு எனக்கும் பாப்புவுக்கும் தெரியும்… அதை உன்னை மாதிரி லூசு பயலுக்கு எல்லாம் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை போடா என்ற சூர்யா கோவமாக பேசி விட்டு செல்ல,
தியாவோ அண்ணா போகாதடா நில்லு, பாவா ஏதோ கோவத்தில் பேசிட்டார்ன்னா.. அதுக்காக ஓவரா பண்ணாதே,
டேய் அண்ணா…
அண்ணா என்றபடியே பின்னால் போக, சூர்யா நிற்காமல் சென்றான்…
தேவாவிற்கே சங்கடமாகி போனது கோவத்தில் சூர்யாவை இப்புடி எல்லாம் பேசியது தவறு என்பது புரிய, அதனால் டேய் சூர்யா நில்லு என்று அழைக்க,
திரும்பாமலே சூர்யா நமக்குள்ள எல்லாமே முடிஞ்சுது குட் பாய் என்று விட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான்…
தேவா ச்சே என்று தன்னையே நொந்தபடி ஷோபாவில் அமர்ந்தான்… அவனுக்கு தெரியும் சூர்யாவின் கோபத்துக்கு ஆயுள் குறைவு என்று, ஆனாலும் அவனை திட்டியது சூர்யாவை விட தேவாவிற்கே வருத்தம் அதிகம்…. வெளியே கேட் வரை சூர்யா பின்னாடி போகாதீங்க என்று கெஞ்சியபடி போன தியா அவன் நிற்காமல் சென்றதால் உள்ளே வந்தாள்…
அவளை பார்த்த தேவாவிற்கு எல்லாம் இவளால் தான்… அவனை திட்டி அவன் கோவிச்சிட்டு போய்ட்டான் என்று தேவா தியா வை முறைக்க, அவளோ அதே அளவு அவனை திருப்பி முறைத்தவள்,
இப்ப எதுக்கு நீங்க என் அண்ணா வா கண்டபடி திட்டி வீட்டை விட்டு துரத்தி விட்டிங்க… அவர் என்ன தப்பு பண்ணுனார் என்று கேட்டபடி அவன் அருகில் வந்தாள்…
வாங்குனது பத்தலையா உனக்கு எல்லாமே உன்னால் தான்டி, அப்புடி இருக்கும் போது நீ வந்து என்னை கேள்வி கேட்கிறியா, பேசாம போய்டு என்றான் கோவமாக,
என்னது எல்லாமே என்னாலையா, நான் என்ன பண்ணுனேன், நானா உங்களை போலிஸ் ஸ்டேஷன் வர சொன்னேன்,
நானா உங்களை எனக்காக அங்க வந்து பேச சொன்னேன்,
நானா என் கழுத்தில்ல தாலி கட்டுங்க சொன்னேன்…
எல்லாத்தையும் நீங்க பண்ணிட்டு இப்ப வந்து என் மேல்ல பழி போடுறீங்க இது என்ன நியாயம் என்று தியாவின் கேள்வியில் தேவா அமைதியாக இருந்தான்…
அவன் பேசாமல் அமைதியாக இருக்கவும், தியா மேலும் பதில் சொல்லுங்க பாவா, என்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணுனா உங்களுக்கு என்ன? என் மேல்ல கேஸ் போட்டா உங்களுக்கு என்ன? நான் அசிங்கப்பட்டு அவமானப்பட்டா உங்களுக்கு என்ன? நீங்க ஏன் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத எனக்காக என்னை காப்பாத்தறதுக்காக இது எல்லாம் பண்ணுனீங்க, என்று கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டி தியா கேட்க தேவாவே தடுமாறி வாயடைத்து நின்றான்…
அவன் அப்புடி நிற்பதை பார்த்த தியா, அவனை பயங்கரமாக குழப்பி விட்டு இருக்கோம் என்று தனக்குள் நினைத்து சிரித்து கொண்டு, கமான் தியா விடாதா இன்னும் குழப்பு என்றபடி,
தியா,இப்புடி அமைதியா நின்னா என்ன அர்த்தம் பாவா, சொல்லுங்க எனக்காக நீங்க இவ்ளோ பண்ணி இருக்கீங்க அப்புடினா, உங்களுக்கு என் மேல்ல ஒரு இது இருக்குன்னு தான் அர்த்தம் என்னறவளை முறைத்தவன்
மண்ணாங்கட்டி உனக்காக தான் நான் போலிஸ் ஸ்டேஷன் வந்தேன்னு எவன்டி சொன்னான்,
நான் ஏன் உனக்காக பண்ண போறேன்… இப்ப போனானே ஒரு பைத்தியக்காரன் அவனுக்காக மட்டும் தான் வந்தேன்… உனக்கு ஏதாவது தப்பா நடந்தா, அவன் தன்னால் தான் இப்புடி எல்லாம் நடந்துச்சுன்னு கவலைப்படுவான்.. என் சூர்யாவுக்கா மட்டும் தான் வந்தேன்… அவனுக்காக தான் உன்னை வெளியே கொண்டு வர போலிஸஅ ஸ்டேஷனில் அப்புடி பேசுனேன்… மத்தபடி உனக்காக எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது… ஏன்னா நான் வெறுக்கிறவங்க லிஸ்ட்ல நீ தான் இப்ப பர்ஸட்ல இருக்க என்றான்..
தேவா கூறியதை கேட்டு உதட்டை இரண்டு புறமும் சுளித்த தியா, என்ன பண்றது பாவா உங்க தலை எழுத்து நீங்க யாரை வெறுக்கிறீங்களோ அவளையே கல்யாணம் பண்ணி வாழ்க்கை ஃபுல்லா குப்பை கொட்டனம்னு, ஆனா எனக்கு பாருங்க நான் யாரை லவ் பண்ணணோ அவரையே கல்யாணம் பண்ணி ஹாப்பியா வாழனும்ங்கிறது என் தலை எழுத்து என்று கண் சிமிட்டி கூறினாள் தியா…
நீ ஹாப்பி யா தான் இருப்பே, ஆனா உன் அப்பா அம்மாவை பத்தி நினைக்கவே இல்லைல, நீ இன்னைக்கு பண்ணுன காரியத்தால்ல அவங்க எவ்ளோ வருத்தப்படுவாங்க… அவங்களை மத்தவங்க முன்னாடி அவமானப்படுத்திட்டோங்கிற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமா இருக்க என்ற தேவா ஹாலில் இருந்து வெளியே சென்று விட்டான்… அதை கேட்ட தியா முகம் வாடி விட்டது அப்புடியே ஷோபாவில் அமர்ந்து விட்டாள்…
இப்போது அப்பா அம்மாவும் வருத்தப்பட்டு தானே இருப்பாங்க… அச்சோ மம்மி டாடி சாரி என்னை மன்னிச்சிடுங்க… நான் நினைச்சது வேற நடந்தது வேற, உங்களை அசிங்கம்படுத்தனும்னு நா நினைக்கலை… நீங்க என்னை வெறுக்க மாட்டிங்க கோவமா தான் இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனாலும் ப்ளீஸ் மம்மி ப்ளீஸ் டாடி சீக்கிரம் சமாதானமாகிடுங்க.. பாவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவர் ரொம்ப நல்லவர்… நீங்க அதை சீக்கிரம் புரிஞ்சிக்குவீங்க… அப்புறம் என் மேல்ல இருக்க கோவம் காணாமா போய்டும்… என்று யோசித்து கொண்டே அமர்ந்த வாக்கில் அந்த ஷோபாவில் உறங்கியும் போனாள்…
வெளியே தோட்டத்தில் நின்று சீக்ரெட் ஒன்றை புகைத்தபடியே தியா சற்று நேரத்திற்கு முன்பு கேட்ட எனக்காக ஏன் நீங்க இது எல்லாம் பண்ணுனீங்க என்று தாலியை எடுத்து காட்டிய அதே கேள்வியை தான் தனக்கு தானே கேட்டு கொண்டு இருந்தான் தேவா…
அவளை இந்த ஆறு மாசத்தில், ஆறு ஏழு தடவை பார்த்து இருப்பேன்னா, அந்த நேரத்தில் கூட அவ பேசுவதை கேட்டா எரிச்சலும் கடுப்பும் தான் வரும்… திட்டா தான் செஞ்சு இருக்கோம்… அதுக்கு அப்புறம் அவ நியாபகம் கூட வராது… அப்புடி இருக்கும் போது, எப்புடி அவளுக்காக சூர்யாவை திட்டி சண்டை போட்டேன்… எப்புடி எமோஷல் ஆகி தாலி கட்டுற வரை போனேன்…
ஏன்?
ஏன்? ன்று கேட்டபடியே கண்மூட, ஏன்னா உன்னை மனதை சுற்றி நீ போட்டு இருந்த இரும்பு திரையை உடைத்து உள்ளே வந்துட்டாளோ, என்னவோ அவன் மனசாட்சி கூறும் அதே நேரம்,
உங்களை நான் இல்லை வேற எந்த பொண்ணு கல்யாணம் பண்ணினாலும் நீ வாங்குன கொலைக்காரன், பொம்பளை பொறுக்கிங்கிற பட்டம் வாழ்நாள் முழுவதும் தூரத்தும் என்ற வெண்ணிலா பேச்சும், உனக்கு பொண்டாட்டி குடும்பம் குட்டி எதுவும் நிலைக்காது எல்லாம் அற்ப ஆயுளில் போயிரும் ஜீவாவின் அம்மா கௌரியின் சாபமும் நினைவு வர,
நோ என்று கத்தியபடி கண்விழித்தவன் கையில் இருந்த சீக்ரெட்டை வீசிவிட்டு, நானாவது அவளை காதலிக்கிறதாவது, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்த முட்டாள் தேவாவிற்கு தான் அன்பு, பாசம், காதல், கத்ரிக்காய், கண்றாவி எல்லாம் வரும்… எனக்கு வராது… அவ சின்ன பொண்ணு எனக்கா ஏதோதோ பண்ணி பிரச்சினையில் மாட்டிக்கிட்டா, அதான் அதற்காக மட்டும் தான் நான் இது எல்லாம் பண்ணுனேன், மத்தபடி ஒன்னும் இல்லை என்று தான் கேட்ட கேள்விக்கு தனக்கு தகுந்த பதிலை கூறி அவனை அவனே சமாதானப்படுத்தி கொள்ள,
அதை பார்த்து தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு சொல்ற உன்னை எல்லாம் திருத்தவே முடியாது என்று தலையில் அடித்து கொண்ட மனசாட்சி, சரி இனிமே தியா விஷயத்தில் அடுத்து என்ன பண்ண போற என்று கேட்க…
அதை தான் அவனும் யோசித்து கொண்டு இருந்தான்.. அடுத்து என்ன என்ற கேள்வி தான் பூதாகரமாக மனதில் வந்து நின்றது.. தாலி கட்டி விட்டு அப்புடியே விட்டு வர மனதில்லை.. அதனாலே அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.. அதே நேரம் அவளோடு சேர்ந்து வாழும் எண்ணம் எல்லாம் இல்லை.. இப்ப என்ன செய்வது என தீவிரமாக யோசித்தவன்,
சின்ன பொண்ணு விவரம் இல்லாமல் காதல் கீதல் என்று பிதற்றுக்கிறாள்.. கொஞ்ச நாள் அவனோடு இருந்தாளே இந்த ஊரும் உலகமும் அவனை பார்க்கும் பார்வையில் தெளிந்து அவளாகவே விலகி விடுவாள்..
அப்புடி இல்லையென்றாலும் கொஞ்சம் கொஞ்சமா புரியும்படி புத்தி சொல்லி அவளுடைய அப்பா அம்மா கோவம் குறைந்த பின் அவர்களிடம் பேசி வீட்டுக்கு அனுப்பி வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தான்..
சுத்தம் இவன் எல்லாம் தேற மாட்டான் என்ற மனசாட்சி அப்புடியே மறைந்து விட, தேவாவும் வீட்டுக்குள் சென்றான்…
அங்கு ஷோபாவில் அமர்ந்த படியே தூங்கி கொண்டு இருந்தாள் தியா… அவளின் அருகே வந்து அவளை பார்த்தான் தேவா.. அவன் அடித்ததில் இரண்டு கன்னங்கள் சிவந்து லேசாக வீங்கி இருந்ததை பார்க்க பாவமாக இருந்தது.. இவளுக்கு இது எல்லாம் தேவையா என அவளுக்காக வருத்தப்பட்டவன் அவளின் கையில் தட்டி ஏய் எழுந்திரு மேலே ரூம்ல போய் படு என்று கூற, தியாவோ நல்ல உறக்கத்தில் இருந்ததால் எழவில்லை…
மறுபடியும் எழுப்ப மனம் வரவில்லை தேவாவிற்கு, உறக்கத்தில் இருப்பவர்களை எழுப்ப கூடாது என்பதாலும்,மேலும் அவன் அடித்து சிவந்து இருந்த கன்னங்களை பார்த்ததும் பாவமாகி போனதாலும், அதற்காக ஷோபாவிலே உறங்கட்டும் என்று விட்டு செல்லவும் மனம் இல்லாததால், அவளை அப்புடியே கைகளில் அவளின் உறக்கம் கலையாதவாறு அள்ளிக் கொண்டு மாடியில் இருந்த அறையில் படுக்க வைத்து போர்வையை எடுத்து போர்த்தி விட்டவன், அங்கு மேஜை டிராயிரில் இருந்த ஆயுல்மெண்ட் எடுத்து தியாவின் இரண்டு கன்னங்களில் தடவினான் லேசாக அவளின் முகத்தருகே குனிந்தபடி,
ஹாப்பி பர்த்டே பாவா என்றபடி கண் விழித்த தியா, தீடிரென அவன் எதிர்பாராத சமயம் அவன் சட்டை காலரை பற்றி தன்னருகே இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு மறுபடியும் ஹாப்பி பர்த்டே பாவா என்று கூற,
தேவாவோ கன்னத்தை தடவியபடி தியாவை முறைத்தான்..
அது ப்ர்த்டே கிஃப்ட், உங்களுக்காக வேற கிஃப்ட் கடை கடையா அலைஞ்சு பார்த்து பார்த்து வாங்கி வச்சு இருந்தேன்… நடந்த கலவரத்துல அதை அந்த வீட்டுலயே மிஸ் பண்ணிட்டேன்… அதான் விஷ் பண்ணிட்டு கிஃப்ட் கொடுக்கமா இருந்தா நல்லா இருக்காதுல்ல அதான் என் விளக்கம் கொடுக்க இன்னும் தேவா முறைக்க,
கன்னத்தில் கொடுத்தது தான் பிடிக்கலையோ என்றவள், மேலும் இப்புடி முகத்தை தூக்கி வச்சுட்டு நான் கொடுத்த கிஃப்ட் வச்சுக்க வேணாம் உங்களுக்கு பிடிக்கலைனா திருப்பி கொடுத்துருங்க பாவா என்க… தேவாவால் முறைக்க மட்டும் தான் முடிந்தது… அவளின் சிவந்த கன்னத்தை பார்த்து அடிக்க மனம் வரவில்லை…
எதுவும் பேசாமல் அறையில் இருந்து வெளியேற போக,
பாவா என்று தியா அழைக்க, திரும்பி என்ன என்னும் விதமாக பார்க்க,
நீங்க தூங்கலயா என்று தியா கேட்க,
அதற்கு தான் என் ரூம்க்கு போறேன், உனக்கு என்ன வேணும் என்றான் கடுப்புடன்,
ஏன்? இந்த ரூம்லையே படுக்கலாமே, அதான் பெட் பெரிசா தானே இருக்கு என்று கூறியவளுக்கு பதில் அளிக்கமால் திரும்பி நடக்க,
நான் உங்களை எதுவும் பண்ண மாட்டேன் பாவா, என்னை நம்பலாம்.. நான் ரொம்ப நல்ல பொண்ணு உங்க கற்புக்கு நான் கிராண்டி என்றவளை,
அடிங்கககககககக அடங்கவே மாட்டியாடி நீ உன்னை என தேவா நெருங்க….