தேவதை 42
பார்க்கிலிருந்து தர்ஷினி வா ஸ்ருதி போவோம், என அவளின் கை பிடித்து அழைத்து சென்றவள், ஆட்டோவில் அவளை ஏற்றி, அவளும் ஏறி கொண்டு தேவாவின் வீட்டிற்கு வழியை சொல்லிவிட்டு அமர்ந்திருக்க…
ஸ்ருதிக்கு ஏண்டா உண்மையை கூறினோம்… சரியான ஆர்வக்கோளாறாக இருக்கிறாளே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை…
அப்போது ஸ்ருதிக்கு போன் வரவே,, யாரென எடுத்து பார்க்க ஜெய் தான் அழைத்திருந்தான்… இந்த மண்ணாங்கட்டி வேற சலித்து கொண்டவள், ஹலோ சொல்லுங்க என்றாள்….
ஏய் அமுலு எங்க டி இருக்க? நா வரதுக்குள்ள போய்ட்ட..! டியூட்டர் கூப்டாருன்னு சொல்லி வெயிட் தான பண்ண சொன்னேன்… நீ பாட்டுக்க போய்ட்ட.. வர வர என் மேல உனக்கு லவ் இல்லல… நா அழுத்து போய்ட்டேனா?
மண்ணாங்கட்டி தலையில் அடித்து பல்லை கடித்தாள் ஸ்ருதி…
என்னடி? யாரை சொல்ற…
உன்னையும், என் பக்கத்துல உள்ளதையும் சேர்த்து தான் சொல்றேன்…
என்னது உன் பக்கத்துல வேற ஒருத்தனா? என்ன ஏமாத்திட்டில? அவ்ளோ தானா நான்? எனக்கு அப்போவே தெரியும் டி, அதுனால தான் உன்ன லவ் பண்ண அவ்ளோ யோசிச்சேன் பயத்தில் புலம்பவே ஆரம்பிக்க….
கடவுளே என பல்லை கடித்தவள். நேர்ல வந்து மிதிச்சேன் குறுத்தெலும்பு உடைஞ்சிரும்… தெண்டம் உன் பிரெண்ட் அதான் அந்த ஆர்வகோளாறு, பைத்தியம் அது கூட தான் போயிட்டு இருக்கேன்…
யாரு நம்ம வண்டா… கண்கள் விரித்து அதிர்ச்சியில் கேட்க….
ஆமா, ஆமா நீ வை நா வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடுறேன் என்றவள் போனை வைத்து விட்டு, தர்ஷியை திரும்பி பார்க்க அவள் நகத்தை கடித்து வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்…
பூரா பைத்தியமும் என்ன சுத்தி தான் இருக்கும் போல! சைக்கோ நாய்ங்களா!மனதிற்குள் வறுத்தெடுத்தாள்..
ஜெய்க்கு தான் ஒன்றும் புரியவில்லை.. என்ன இதுங்க ரெண்டும் ஒண்ணா சுத்துது சரி இல்லையே! இவனை வேற காணும்… ஹ்ம்ம் என்னனு கண்டுபிடிப்போம் என்றவன் பைக்கை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்..
ஆட்டோ தேவாவின் வீட்டில் சென்று நிற்கவும்.. வாசலில் தேவாவின் வண்டியை தேடி பார்க்க அது இல்லை என்றதும் தான் இருவரும் கீழே இறங்கினர்.. ஸ்ருதி அவன் இன்னும் வரல, 10 நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள போறோம் அந்த டைரிய தேடி கண்டுபிடிச்சி எடுத்துட்டு வரோம்…
நானா? நா எதுக்கு தர்ஷினி.. நீ போய் எடுத்துட்டு வாயேன் நா இங்கேயே இருக்கேன்,, அமுலுவிற்கு அடி வயிறு கலக்கியது..
அந்த டைரி எங்க இருக்குனு எனக்கு ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே தெரியும்… நாம இப்போ தேட வேண்டியது அந்த கப்போர்டுக்கான சாவியை தான்..நா மட்டும் தேடுனா, லேட் ஆகிரும்… நீயும் சேர்ந்து தேடுனா சீக்கிரம் எடுத்திரலாம் ப்ளீஸ் வா ஹெல்ப் பண்ணேன் கெஞ்சி கேட்க ..
சரி சரி வரேன்… ஆனா அவங்க அம்மா இருப்பங்களே என்ன சொல்லுவ?
அது எங்கத்தை ஒரு வெகுளி எது சொன்னாலும் நம்புவாங்க… நீ வா நா பாத்துக்குறேன் என்றவள், அவளின் கையை பிடித்து விறு விறுவென உள்ளே அழைத்து செல்ல…
ஏய் இருடி நீ பாட்டுக்க உள்ளக்க போற? காலிங் பெல் அடி டி லூசு….
அதெல்லாம் தேவை இல்லை.. சின்ன வயசுலேந்து வரேன்.. எனக்கு தெரியாதா!? நீ பேசாம வா… டைம் ஆகுது.. என்றவள் உள்ளே சென்று அத்தை அத்தை என கூப்பாடு போட… அமுலுவுக்கு இதயம் படபடக்க நெஞ்சில் கை வைத்து நின்று கொண்டாள்…
கலாவதி தர்ஷினி குரல் கேட்டு வந்தவர்… வா டா கண்ணா… இது யாரு? உங்க கூட படிக்குற பொண்ணா? வா மா உட்காரு… நா போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்… இன்னும் தேவா வரல உரைத்த படியே அடுப்படிக்குள் செல்ல…
அத்தை நாங்க தேவா ரூம்ல இருக்கோம் அங்க வாங்க என அவன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்…
ஏய் ஏய் நானும் வரேன் டி … விட்டுட்டு போகாத குரல் வெளியே வராமல் பேசிய ஸ்ருதி…அடுப்படியை பயத்தில் விழி உருட்டி பார்த்து விட்டு, வேகமாக ஓடி அறைக்குள் நுழைந்து கொண்டாள்…
எதிர்பார்த்தது போலவே அந்த கப்போர்டு பூட்டி இருக்க, சீக்கிரம் டி இந்த பூட்டுக்கான சாவியை தேடு சும்மா நிக்காத என அவசரப்படுத்த… அமுலு கை கால் வெட வெடக்க சாவியை தேட ஆரம்பித்து விட்டாள்…
ஒரு 5 நிமிடம் தேடி பார்த்த பின் ., சாவி அவன் ஸ்டடி டேபிளின் டிராயரில் தான் இருந்தது.. அமுலு அதை எடுத்தவள், ஏய் தர்ஷி இதுவா பாரு? என அவளின் கையில் குடுக்க…
கண்கள் விரிந்து பார்த்து வாங்கியவள், சிறிதும் பொறுமையின்றி கை நடு நடுங்க பூட்டிற்குள் சாவியை விட பார்க்க… அதற்குள் அறை கதவு திறக்க… இருவருக்கும் உயிரே போய்விட்டது…
நல்ல வேலை, கலாதான் காபி கொண்டு வந்திருந்தார்… அமுலு மூச்சு வாங்க நின்றிருந்தவள் தொப்பேன பெட்டில் உட்கார்ந்து விட்டாள்…
அதை பார்த்த கலா, இந்தா மா காபி எடுத்துக்க என கொடுக்கவும் , தேங்க்ஸ் மா என அமுலு வாங்கி கொண்டதும்… தர்ஷி க்கு காபியை கொடுக்க… அதை வாங்கிய தர்ஷி.. அத்தை நாங்க ரெஸ்ட் ரூம் போனும்.. கொஞ்சம் வெளில இருக்கிங்களா?
ஓஹ் சரி டா, என கலாவதி வெளியே சென்று விட .. இப்போது பெருமூச்சி எடுத்து விட்ட தர்ஷி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு பூட்டில் சாவியை விட்டு திருக, பூட்டு திறந்து கொண்டது… சிறிதும் தாமதிக்காமல் அந்த சிறிய கதவினை திறந்து பார்க்க.. தர்ஷி வாயை பிளந்து விட்டாள்…
அதில் அவளது போட்டோக்கள் முழுக்க ஒட்டப்பட்டிருக்க, அவள் யூஸ் செய்த பொருட்கள் க்ளிப் முதல் ஹேர் பேண்ட் வரை இருக்கவும்… அனைத்தையும் ஆச்சரியத்துடன் கண்கள் மின்ன எடுத்து பார்த்தாள்… அவளுக்கென வாங்கிய க்ரீட்டிங் கார்ட்ஸ் முதல் கிப்ட் என அடுக்கி வைக்கப்படிருக்க… அனைத்தையும் விரித்து படித்து பார்க்க ஆசை தூண்டியது…
ஆனால் நேரம் இல்லை… நடுவில்
தேவை எல்லாம் தேவதையே என எழுதப்பட்ட ஒரு டைரி இருக்க, அதை எடுத்து பார்த்தவள்… இது தான் அந்த டைரி என கன்பார்ம் செய்து தனது பேகில் திணித்து கொண்டவள், அங்கிருக்கும் பொருட்களையும் எடுத்து பேகில் போட…
அமுலு அவளிடம் அடியேய் எதுக்கு டி எல்லாத்தையும் எடுக்குற.? டைரி போதும் சீக்கிரம் வா டி ஓடிருவோம் என கத்தினாள்,
இதோ இதோ வந்துட்டேன்… சரி வா போலாம், என வெளியே செல்ல, சோபாவில் கலாவதி அமர்ந்திருந்தார்… அவர் எதிரில் நின்ற இருவரும்., அத்தை வந்த வேலை முடிஞ்சிது நாங்க கிளம்புறோம் என வெளியில் ஓட பார்க்க…
கலாவதி அவ்வளவு எளிதில் அவர்களை விட வில்லை… தேவா வருகிறானா என வாசலை பார்த்து கொண்டே பேசிவிட்டு, ஆட்டோ நிக்குது அத்தை, ஒரு நோட்ஸ் எடுக்க தான் வந்தோம் எடுத்தாச்சு…நாங்க போயிட்டு நாளைக்கு வரோம் பை அத்தை என ஸ்ருதியை இழுத்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள்…
அவளின் நடவடிக்கையை கன்னத்தில் கை வைத்து பார்த்த கலாவதி…இந்த பொண்ணு மட்டும் எப்ப வந்தாலும் காலுல சுடு தண்ணி ஊத்துன மாதிரியே ஓடுவா என பெரிதாக அதை கண்டு கொள்ள வில்லை…
ஆட்டோவில் ஏறியவர்கள் சீக்கிரம் சீக்கிரம் வண்டிய எடுங்க னா, என வெளியே எட்டி பார்த்து பதட்டத்துடன் சொல்ல, டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்து அந்த தெருவை தாண்டவில்லை… தேவா வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தியிருந்தான்….
தர்ஷி இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. என்ன மாட்டி விட்ராத என கெஞ்ச… சரி சரி நா சொல்ல மாட்டேன்., என அவளை சமாதானபடுத்தி அவளை வீட்டில் இறக்கி விட்டு, இவளும் தன் வீட்டிற்கு சென்று விட்டாள்…
தனது அறைக்குள் சென்றவள், கதவை தாழ்ப்பால் போட்டு விட்டாள், எங்கே தேவா இங்கு வந்து அவள் படிப்பதற்குள் அந்த டைரியை பறித்து விடுவானோ என்ற பயம் தான்…உடை மாற்றி விட்டு வந்தவள், டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்திருந்தாள்..
இங்கு தேவா வீட்டிற்குள் நுழைய, கலாவதி டேய் தர்ஷினியும், இன்னோரு பொண்ணும் வந்தாங்க டா என சொல்ல… தேவாவிற்கு புரிந்து விட்டது.. எதற்கு வந்தாள்? இங்கேயும் சண்டை போட வந்திருப்பாள்… என தவறாக எண்ணியவன்… ஓஹ் சரி மா என தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்…
ஏற்கனவே தர்ஷியை அறைந்து விட்டதாலும், அவள் நான் செத்து விடுவேன் என கூறியதாலும் மன வலியில் இருந்தவன்…. என்ன ஏது என எதையும் பற்றி பெரிதாக ஆராய்ச்சி செய்யவில்லை….
குளித்து விட்டு வந்தவனுக்கு அவள் நியாபகமாகவே இருக்க… அவளை அறைந்த கையை வெறித்து பார்த்தவன்,4, 5 முறை அந்த கையை மரக்கட்டிலில் குத்தி கொண்டான்…
தர்ஷி கண்களில் கண்ணீருடன்,, அவனுடைய இத்தனை வருட கால காதலை அந்த டைரியை படித்து தெரிந்து கொண்டாள்…
தேவாவால் இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்டதில் இந்த டைரியை போல் நானும் ஒருத்தி… இவ்வளவு காதலா? யாராலும் இப்படி காதலிக்க முடியுமா? நானே சுவாசம் என வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. எப்படி அவனை தெரிந்து கொள்ளாமல் போனேன்… என்னை அணுதினமும் நொடிக்கொரு முறை காதலித்தவன் சித்ரவதை அனுபவித்திருக்கிறானே! அதுவும் என்னால்…
நிமிடத்திற்கொரு முறை என்னையே நினைத்து உருகியவனை உணராது, வேறு ஒருவனை காதலிக்கிறேன் என அவனிடமே கூறி சந்தோஷப்பட்டிருக்கிறேன்.. என்ன ஜென்மம் நான்..
தர்ஷியால் தேவாவின் இவ்வளவு காதலை தாங்க முடியவில்லை.. உடல் நடுங்க, இதழ் துடிக்க கண்கள் சிவக்க அமர்ந்திருந்தாள்… இவ்ளோ காதலா? எதுக்கு டா? என்கிட்ட சொல்லிருக்கலாமே! அவன் அளவில்லா காதலை தெரிந்து கொண்ட பின் மூச்சு முட்டியது அவளுக்கு… தொண்டை அடைக்க தேவா தேவா சா சாரி டா குரல் வெளியே வரவில்லை…
உன் காதலுக்கு நா தகுதியானவளா? இல்ல டா….. அந்த டைரியை எடுத்து நெஞ்சில் அழுத்தி கொண்டவள்.. இதயத்தின் துடிப்பையும், அவன் கொடுத்த காதல் உணர்வையும் தாங்க முடியாமல் கீழே சரிந்து விட்டாள் தர்ஷினி…
கண்கள் திறக்க முடியாமல் இருக்க.. அவனின் புன்னகை முகம் தோன்றி அவளை இம்சை செய்தது….
அதிகரித்துக் கொண்டே செல்கிறது!
உன்னை பார்க்காமல்……
உன் காதலுடன்……
நான் கடக்கின்ற நொடிகள்….
அதீத அன்பையும்…
அளவில்லா நேசத்தையும்
உளமறியா வேதனையையும்
உன் கண்ணீர் ததும்பும் விழிகளையும்
கண்காணாத சோகங்களையும்
சொல்லத் தெரியா காதலையும்
உள்ளூற வைத்துக்கொண்டு சிரிப்பது
போல் நடித்து வாழ்ந்திருக்கிறாய்….
அதீத அன்பு ஒன்று வெல்லும்
இல்லை கொள்ளுமடா
( மனதை )…..
வேரூன்றி விட்டாய் மனதில்
வேறு எங்கும் நகர்வதில்லை
என் எண்ணங்களும் உனையன்றி காத்திருக்கிறேனடா….
கொல்லாமல் வந்துவிடு… தேவா உதடுகள் முனுமுனுக்க…..
தேவாவிற்கு இதயம் எக்குத்தப்பாய் துடிக்க ஆரம்பிக்க.. தர்ஷிக்கு கால் செய்து பார்த்தான்.. அவள் எடுப்பது போல் தெரியவில்லை…ஏதோ யோசித்தவன் அடுத்து ஜெய்க்கு கால் செய்ய.. அவன் ஒரே ரிங்கில் எடுத்து காதில் வைத்திருந்தான்…
மச்சான் மனசே சரி இல்ல டா., இன்று நடந்ததை அனைத்தையும் ஒப்பித்தவன் இன்னைக்கு அவளை அடிச்சிட்டேன் டா கஷ்டமா இருக்கு டா மச்சான்.,
விடு டா நாளைக்கு எப்படியும் வசி பர்த்டேக்கு போவோம்ல,, அப்ப அவளை மட்டும் தனியா கூப்டு போய் உன் காதல சொல்லிரு என்ன புரிஞ்சிதா?
ஹ்ம்ம் சரி டா மச்சான் என்றவன் இணைப்பை துண்டித்து விட்டு அவளின் நியாபக அலைகளை ஓட விட்டிருந்தான்…
தொடரும்……