தேவை எல்லாம் தேவதையே….

4.9
(16)

தேவதை 43 ( இறுதி அத்தியாயம்)

 

தர்ஷிக்கு இரவு முழுக்க உறக்கம் இல்லை.. எத்தனையோ இரவுகள் இவளை நினைத்து அவன் உறங்காமல் அழுதிருக்கிறான்… அத்தனைக்கும் சேர்த்து இன்று ஒரு நாள் இரவில் எவ்வளவு அழ முடியுமோ! அழுது கொட்டி தீர்த்தாள் தர்ஷினி….

விடிய விடிய பித்து பிடித்தாற் போல் இருக்க… விடிந்தது கூட தெரியவில்லை அவளுக்கு… மஞ்சுளா அவளின் அறை கதவை தட்டவும் தான் தர்ஷி சுயத்திற்கு வந்தவள், மணியை பார்க்க 10.00 என காட்டியது…

வரேன் மா.. கர கர த்த குரலில் சொல்லியவள் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்… குளித்து விட்டு வெளியே வந்தவள் கண்ணாடியில் தன் முகம் பார்க்க, கண்கள் வீங்கி போய், அழுதது அப்படியே தெரியும் படி இருக்க, அப்படியே நின்றிருந்தாள்….

போன் அடிக்கும் சத்தத்தில் யாரென பார்க்க, ஸ்ருதி தான் அடித்திருந்தாள்…. எடுத்து காதில் வைத்து ஹலோ சொல்லு ஸ்ருதி சுணக்கமாய் பேச…

தர்ஷி அந்த டைரிய படிச்சியா?

ஹ்ம்ம் டி…..

இப்போ உனக்கு எல்லாம் புரிஞ்சிருக்குமே! சரி இதுக்கு மேலயும் நீ டைம் வேஸ்ட் பண்ணாத.. இன்னைக்கு வசி பர்த்டேக்கு போறல….

இல்லடி போக பிடிக்கல, மனசுலாம் பாரமா இருக்கு….

ஏய் ச்ச.. இனி வருத்தப்பட்டு, அழுது நோ யூஸ்… நீ போகாம இருக்காத கண்டிப்பா போ, ஏனா இன்னைக்கு அவன் உங்கிட்ட கண்டிப்பா ப்ரபோஸ் பண்ண போறான்.. என்னோட மண்ணாங்கட்டி தான் என்கிட்ட சொல்லுச்சு… சோ நீ போற.. அதுவும் கலக்கலா போற.. ஓகே…

ஹ்ம்ம் சரி டி….

என்னடி சலிச்சுக்குற….

இல்லடி நொந்துட்டேன்….

ஹ்ம்ம் பரவாயில்லை விடு, நீ வசி பர்த்டேக்கு போ… இனி உன் லைஃப்ல சந்தோசமா இருப்ப… ஓகே வச்சிடுறேன் என இணைப்பை துண்டித்து விட்டாள்…

இங்கு தேவா சாவியை டேபிள் டிராயரிலிருந்து எடுத்தவன், பூட்டில் போட்டு கப்போர்ட் கதவை திறந்து பார்க்க, அங்கு ஒன்றுமே இல்லை… கண்கள் விரிய, வயிற்றில் பயபந்து உருள, தலையில் கை வைத்தான்…

மா மா மா என ஆக்ரோசமாக கத்தவும் என்னமோ ஏதோவென பதறியடித்து ஓடி வந்தார் கலாவதி….

மா இந்த கப்போர்ட யாரு திறந்தா!? சொல்லுங்க…

டேய் தெர்ல டா… நா இந்த பக்கமே வரலையே…

யாருமே வரலைனா எங்க எங்கம்மா போச்சி, என் திங்ஸலாம் காணும் மா பல்லை கடிக்க.. கலாவதிக்கு சட்டென நியாபகம் வர, டேய் நேத்து தர்ஷி தான் டா ஒரு பொண்ண கூப்டு வந்தா..நேத்தே உன்கிட்ட சொன்னனே!

ஷிட் என தலையில் அடித்து கொண்டவன், என் ரூமுக்கு வந்தாளா? என கேட்க…

ஆமா டா, ரூம்ல தான் இருந்தா… ஏன் என்னாச்சி?

ஐயோ ஐயோ போச்சி பல்லை கடித்து தலையில் அடித்து கொள்ள… .

டேய் நிறுத்து நிறுத்து என்ன டா எதுக்கு இப்டி தலையில அடிச்சிக்குற?

அந்த திருடி என் டைரியலாம் திருடிட்டு போச்சு…

ஏய் என கையை ஓங்கியவர், புள்ளய திருடி கிரு டின்னு சொல்லிக்கிட்டு, அடிச்சேனா வை, இன்னும் 5 வருஷம் கழிச்சி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறோம்.. அவ இங்க வந்து எத வேணும்னாலும் எடுத்துட்டு போகலாம் உரிமை இருக்கு..இந்த பட்டம்லாம் அவளுக்கு கட்டாத என்ன? தாடையை என் தோளில் இடித்து கொண்டு சென்று விட…

தேவா தான் அவர் சென்ற பின்னும் வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தான்.. களவாணி பய புள்ளைங்க நல்லா பிளான் போட்டு ஏமாத்திட்டாழுக… இரு டி உனக்கு இருக்கு என ஸ்ருதிக்கு போன் செய்ய.. அவள் தேவாவிடம் இருந்து கால் வந்ததை பார்த்ததுமே, போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்று விட்டாள்…

எடுக்குறாளா பாரு? படிச்சிருப்பாளோ! கண்டிப்பா படிச்சிருப்பா! அதுனால தான் நைட் போனை எடுக்கல… என்ன நெனச்சானு தெர்லயே! பிரெண்டா பழகுனதுலேந்து நீ என்ன தப்பா தான் பாக்குறியானு ஒரு வார்த்தை கேட்டுட்டா செத்து போயிருவேன்… அப்டி மட்டும் கேட்டுறாத டி, உள்ளுக்குள் அள்ளு விட்டது அவனுக்கு….

மாலை நேரம், வசியின் கெஸ்ட் ஹவுசில் பர்த்டே பார்ட்டி வெகு விமர்ச்சையாக நடந்து கொண்டிருக்க.. வசி தனது நண்பர்களுடன் நின்று சிரித்து பேசி கொண்டிருந்தான்…

ஜெய்யும், தேவாவும் முதலில் வர அவர்களை பார்த்ததும் ஹேய் வாங்க டா என அழைக்க,

ஹாய் ப்ரோ, ஹாப்பி பர்த்டே ப்ரோ என கை கொடுத்து வாழ்த்து சொல்லிய பின்… தேவா ஒரு கேரியலை எடுத்து அவனிடத்தில் கொடுக்க… வசிக்கு சந்தோஷத்தில் கண்கள் விரிந்து அதை உடனே வாங்கி கொண்டான்…

அம்மா சமைச்சி குடுத்து அனுப்புனாங்களா? என ஆசையுடன் கேட்க ஆமா ப்ரோ என்றான் தேவா… எனக்கு வந்ததுலேயே பெஸ்ட் கிப்ட்னா அது இது தான், என வாங்கிக்கொண்டவன்.. தேவாவை கட்டி தழுவி , எனக்குலாம் அம்மா சாப்பாடு வரம் மாதிரி டா என சொல்ல.. தேவாவிற்கும், ஜெய்க்கும் கண்கள் கலங்கியது…

அப்போது உள்ளே நுழைந்த தர்ஷியை கண்ட வசி, வாவ் கார்ஜியஸ் என கண்கள் மின்ன அவளை பார்த்தவன்.. உட்காருங்க டா இவங்களுக்கு ஜுஸ் குடுங்க என்றவன் தர்ஷியை அழைக்க சென்றான்…

தேவாவே அவளை பார்த்து ஜெர்க் ஆகி தான் நின்றான்… ராட்சசி என்ன அழகா இருக்கா., கொல்றியே டி. நெஞ்சை தடவி கொண்டான்….

தர்ஷி பிளாக் கலர் பிராகில், இரு பக்கமும் முடி எடுத்து கிளிப் மட்டும் போட்டிருந்தவள், பார்க்க பார்பி பொம்மை போலவே இருக்க, வசிக்கே அழகு டி நீ என்ற எண்ணம் தோன்ற அதை வாய் விட்டே சொல்லிவிட்டான்…

 

தர்ஷி அழகாக புன்னகைத்து தன்னுடைய வாழ்த்தை கூறி கிப்ட்டை கொடுக்க, அதை வாங்கிய வசி ஓபன் செய்து பார்த்தான்… உள்ளே வசியும், தர்ஷியும், ஜெய்யும், தேவாவும் முதன் முதலாக கடலில் போட்டில் செல்லும் போது ஒன்றாக எடுத்த புகைப்படம் பிரேம் போட்டு இருக்க…

அதை பார்த்த வசி, அன்னைக்கு என்னால மறக்க முடியாத மெமோரிஸ் குடுத்தீங்க, எல்லாத்துக்கும் தேங்ஸ் என்றவன் அவளை ஜென்ட்டில் ஹக் குடுத்த பின் சோபாவில் உட்கார சொல்லி விட்டு, மைக்கை எடுத்து கொண்டு முன்னாடி சென்று நின்றான்….

தர்ஷி வந்து சோபாவில் அமரும் முன் தேவாவை பார்த்து முறைத்து, உதட்டை சுழிக்க,,

இது வேறயா? என தேவா எண்ணி கொண்டான்…

அதற்குள் மூவருக்கும் ஜுஸ் வரவே, வாங்கி குடித்து கொண்டிருந்தனர்…

ஹாய் கைஸ், நீங்க எல்லாம் வந்ததுக்கு ரொம்ப நன்றி… மே பி இன்னும் 1 மந்த்ல எக்ஸாம் முடிஞ்ச பிறகு நான் இங்க இருக்க மாட்டேன்.. எங்கப்பா கூட லண்டன் போக போறேன்.. என்றதும் தர்ஷிக்கு கண் கலங்க… அதை வசியும் கண்டு கொண்டான்…

எனக்கு எப்பவுமே துணையா இருந்த என் பிரெண்ட்ஸ்க்கு நன்றி.. அண்ட் ஷில்பாக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்… இன்னைக்கு இந்த பார்ட்டி நடக்க காரணமே அவ தான் என்றதும் ஷில்பாவின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது…

என் லைஃப்ல நா கொஞ்சம் காலம் அழகான நாட்களை அனுபவிச்சேன் அதுக்கு முக்கியமா தர்ஷிக்கு தேங்ஸ் சொல்லியே ஆகணும்… அப்புறம் ஜெய் நா எப்ப வந்தாலும் உங்க போட்ல கூப்டு போகணும் சரியா என கேட்க.. ஜெய் தம்ப்ஸ் அப் காட்டினான்…

அண்ட் பைனல்லி தேங்க் யூ தேவா, எனக்கு ஒரு அம்மாவ குடுத்ததுக்கு… என்றதும் தேவாவிற்கு மனம் வலித்தது…

ஓகே லெட்ஸ் என்ஜாய் தெ பார்ட்டி ஸ்டார்ட் ம்யூசிக் என்றதும் விளக்கு அணைக்கப்பட்டு, வண்ண விளக்குகள் எரிய விடப்பட… ராப் சாங், குத்து சாங் போட அங்கிருப்பவர்கள் டான்ஸ் ஆட ஆரம்பித்தனர்… வசி நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிங்க்ஸ் அடிக்க ஆரம்பித்து இருந்தான்…

இது தான் தக்க சமயம் என்றெண்ணிய ஸ்டீபன், தனது நண்பனின் காதில் ஏதோ ஓத,, அவனும் சரி என தலையாட்டி விட்டு.. ஒரு கிளாஸ் ஜுசை எடுத்து கொண்டு தர்ஷி அருகே சென்று கொடுப்பது அவள் மேலே கொட்டி விடவும்,

ஏய் பாத்து குடுக்க மாட்டியா? லூசு என தேவா கடுப்பில் திட்ட…

உன் வாய மூடு தெரியாம தான ஊத்துனான் எதுக்கு இப்டி பேசுற? தேவாவிடம் கடுப்படித்து விட்டு எழுந்து வாஷ்ரூம் எங்க என கேட்க, அவன் மேலே உள்ள ரூமை கை காட்டினான்…

ஓகே என்றவள் மேலே ஏறி சென்றாள்..

அவள் செல்வதை பார்த்த தேவா, இந்த ராட்சசிக்கு எவ்ளோ கொழுப்பு பாத்தியா டா? மச்சான் என ஜெய்யிடம் கேட்க… நேத்து நீ கொடுத்தது பத்தல போல டா என கிண்டல் அடித்தான்…

தர்ஷி மேலே ஏறியதும், அதை கவனித்த ஷில்பா, ஏதோ பொறி தட்ட, ஸ்டீபனை அவளது கண்கள் தேட ஆரம்பித்தது, ஏதோ சரி இல்லை என உணர்ந்தவள் அவளும் மேலே ஏறி அந்த அறைக்கே சென்றாள்…

உள்ளே வாஷ்ரூம் சென்று உடையில் பட்ட கரையை தண்ணீர் தொட்டு துடைத்த தர்ஷி, கதவு சத்தம் கேட்க யார் என பாத்ரூமில் இருந்து வெளியே வந்து பார்த்தாள்,, ஸ்டீபன் தான் நின்றிருந்தான்…

தர்ஷிக்கு மூக்கிற்கு மேல் கோவம் வந்தது… டேய் பரதேசி கதவ திற டா,, வெக்கமா இல்ல ஒரு பொண்ணு வாஷ்ரூம் போயிருக்கா, நீயும் வந்து உள்ள பூருற? இடுப்பில் கை வைத்து கேட்டவளை நகைத்து ஸ்டீபன் சிரித்தான்….

வெக்கமா? அப்டினா என்ன டார்லிங்? உன்ன எப்படியாச்சும் முடிக்கணும்னு பிளான் போட்டு குடுத்ததே ஷில்பா தான் தெரியுமா? என்றவன் அவளை நெருங்க ஆரம்பித்தான்.. தர்ஷிக்கு சிறிதும் உதறல் எடுக்கவில்லை… இடுப்பில் கை வைத்து தெனாவேட்டாக தான் நின்றிருந்தாள்..

ஷில்பா மேலேறி சென்றவள், தர்ஷி சென்ற ரூமின் கதவை தட்ட ஆரம்பிக்க… ஸ்டீபன் உடனே தர்ஷியின் தோள் மீது கை வைத்தவன், எனக்கு அப்போலேந்து உன்மேல கண்ணு, ஒரு 10 நிமிஷம் நீ ஒத்துழைச்சினா எல்லாம் நல்ல படியா முடியும்? உனக்கு லேக்ஸ் ல காசு தரேன் டார்லிங்., ஏனா நீ அவ்ளோ ஒர்த் என்றதும் தர்ஷி 32 பல்லயும் காட்டி சிரித்தவள், பணமா? என அசடு வழிய… ஸ்டீபனுக்கு முகம் மலர ஆம் என்றான்…

தேவாவிற்கு சந்தேகம் வரவே, அவனும் மேலேறி வந்திருந்தான்… அங்கு ஷில்பா கதவை பதட்டத்துடன் தட்டியதை பார்த்தவனுக்கு ஏதோ விபரீதம் என தோன்ற… தர்ஷி தர்ஷி என சேர்ந்து அவனும் தட்ட ஆரம்பித்திருந்தான்…

தர்ஷி திடீரென முகத்தை ஆக்ரோசமாக மாற்றியவள், ஏண்டா பரதேசி, பண்ணாடை என்ன பாத்தா உனக்கு எப்டி இருக்கு? உன்னலாம்…. என்றவள் தன் தோள் மீது அவன் வைத்திருந்த கையை எடுத்து, இரு கைகளாலும் சட்டென முறுக்கி விட, எலும்பு நொறுங்கும் சத்தம் கேட்டது….

ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என வலியில் அலறி துடித்தான் ஸ்டீபன்.. உடைந்த கையை மீண்டும் மீண்டும் முறுக்க வலி தாங்க முடியாதவன் அவளை தள்ளி விட்டு ஓடி சென்று கதவை திறக்க பார்க்க, அவனை மீண்டும் பிடித்து இழுத்தவள், கன்னம் கன்னமாக அறைந்து அவன் வாயில் குத்த, மேல் பற்கள் உதட்டில் குத்தி ரத்தம் பீறிட்டது… இனிமேல் பொண்ணுங்கள தப்பா பேசுவ? எந்த பொண்ணயாச்சும் ரேப் பண்ணனும் நினைப்ப? என மிரட்ட…

ஸ்டீபன் கதறியவன், இ இ இல்ல நெனைக்க மாட்டேன் என்ன விட்ரு ப்ளீஸ் என கெஞ்சி பார்த்தான்…

ஆனால் அவளுக்கு மனதிற்கு ஒப்பவில்லை… நீ பண்ணுவ டா எனக்கு உன்மேல நம்பிக்கையே வர மாட்டுதே, நா ஒரு ட்ரீட்மென்ட் தரேன்.. அப்புறம் எந்த பொண்ணயும் நெருங்க முடியாது என தனது ஹீல்ஸ் செருப்புடன் சேர்த்து அவன் ஆண்மையை மிதிக்க.,, அலறி துடித்தவன், கீழே மயக்கம் போட்டு சரிந்தான் ….

ஹ்ம்ம் யார்கிட்ட, என்றவள் முடியை சரி செய்து கொண்டு சென்று கதவை திறக்க, வெளியே தேவாவும், ஷில்பாவும் கதி கலங்கி நின்றனர்..,

தர்ஷினி ஷில்பாவை பார்த்ததும், ஓங்கி பளார் என ஒரு அறை விட, ஷில்பா தேவாவின் மேல் இடித்து நின்று கன்னத்தை பிடித்து அவளை அதிர்ச்சியுடன் பார்க்க…

ச்சே நீ ஒரு பொண்ணா டி? என்ன ரேப் பண்ண சொல்லி அனுப்பியிருக்க.. ஒரு பொண்ணோட வலி இன்னோரு பொண்ணுக்கு புரியும்னு சொல்வாங்க, இல்ல வாய்ப்பே இல்ல… உனக்குலாம் புரியாது… ஏனா நீலாம் பொண்ணே இல்ல என்றவள் அவளை கை நீட்டி இன்னோரு தடவ இப்டி சீப்பா பிஹெவ் பண்ண!? நா உன்ன கொன்றுவேன் என எச்சரித்து விட்டு தேவாவை முறைத்து விட்டு தான் கீழே இறங்கினாள்…

தேவாவும், ஷில்பாவும் அறைக்கு சென்று பார்க்க அங்கு ஸ்டீபன் மயங்கிய நிலையில் கிடந்தான்.. ஷில்பாவை நிமிர்ந்து பார்க்க, அவள் அவன் மீது கொலை வெறியில் இருப்பது அவளின் சிவந்த கண்களே காட்டி கொடுக்க… இதற்கு லேடிஸ் குடுக்குற பனிஷ்மென்ட் தான் கரெக்ட், நீ என்ன செய்யணுமோ செய் என்றவன், அவனை எட்டி மீண்டும் உயர்நாடியில் மிதித்து விட்டு தான் சென்றான்….

வேகமாக கீழே இறங்கி செல்ல அங்கு தர்ஷி இல்லை… ஜெய்யிடம் சென்று எங்க டா அவ என கேட்க… அவ வெளில போய்ட்டா டா, உன்கிட்ட இத குடுக்க சொன்னா என்றவன் ஒரு பேப்பரை கொடுத்தான் .. அதில் எப்பவும் போற கடற்கரைக்கு வரும்படி எழுதியிருக்க அங்கு வேகமாக வண்டியை எடுத்து கொண்டு சென்றிருந்தான்….

20 நிமிடத்தில் அவளின் நினைவுகளுடன், அவள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் தேவா…

அங்கு கடற் கரையில் அலைகள் பாதம் தொட நின்றிருந்தவளின் பக்கத்தில் சென்று நின்றவன், தர்ஷி என அழைக்க வருவதற்குள் …..

ஏண்டா என்ன ஏமாத்துன? என கேட்க தேவா கலங்கி விட்டான்… எந்த வார்த்தை அவள் வாயிலிருந்து வரவே கூடாது என நினைத்தானோ அதை சொல்லிவிட்டாள் அவன் தேவதை…

பயத்தில் எச்சில் விழுங்கியவன் அவளை பார்க்க, அவன் சட்டை காலரை பிடித்து கண்கள் கலங்க நின்றிருந்த தர்ஷி…. சொல்லு டா எதுக்கு என்ன ஏமாத்துன? என உலுக்க தேவாவிற்கும் கண்களில் கண்ணீர் சுரந்தது….

இவ்ளோ அன்ப, இவ்ளோ லவ்வ, எனக்கு அப்போவே தராம எதுக்குடா என்ன ஏமாத்தி, மறைச்சி வச்ச? என கேட்டதும் தேவா அவளை சந்தோச கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தான்….

ஏண்டா சொல்லிருக்கலாம்ல? இவ்ளோ லவ்வ ஒரு டைரிக்குள்ள எக்ஸ்பிரஸ் பண்ணிருக்க… என்கிட்ட சொல்லிருக்கலாம்ல! உன் அன்பு உன் லவ் எனக்கு வேணும் டா…ஐ லவ் யூ டா தேவா என அவன் இரு கன்னங்களையும் பிடித்து கெஞ்சினாள்…

அவளின் கைகளை பிடித்து உள்ளங்கையை பற்றியவன் அதில் குனிந்து முகத்தை புதைத்து அழ ஆரம்பித்தான்….

தர்ஷியும் அவனுடன் சேர்ந்து அழுதவள், எனக்காக தான டா, இந்த கடலுல விழுந்து சாக பாத்த… ஏண்டா இப்டி செஞ்ச… நீ இல்லனா நானும் வாழ மாட்டேன் டா.. அது உன் லவ் எனக்கு தெரியாம போனாலும், நானும் நீ இல்லாம வேதனைய அனுபவிக்க முடியாம செத்துருப்பேன்… எவ்ளோ வலிச்சிருக்கும் உனக்கு, உன் முன்னாலேயே இன்னோருத்தனை லவ் பண்றனு சொல்லி சாரி டா தேவா என்ன மன்னிச்சிரு… என கதறியவள் தன் கையை உருவி கொண்டு அவன் பாதங்களில் விழ… தேவா பதறி விட்டான்…

அவனும் மண்டி போட்டு அமர்ந்தவன், அழாத டி… நீ இனிமே அழக்கூடாது… நாம சந்தோசமா இருக்கணும் என அவளை தேற்ற…

தர்ஷி அவனை பார்த்து சரி, அப்போ என்ன ஸ்கூலுல லவ் பண்ணல அதே மாதிரி லவ் பண்ணுவியா? என உதடு பிதுக்கி கேட்க…

கண்டிப்பா டி, அத விட அதிகமா என்றவன், அவளின் கன்னங்களை பிடித்து அவளின் கண்களை பார்க்க… அவளும் அவன் கண்களை தான் பார்த்தாள்… இரு விழிகளும் காதல் மொழி பேச… தர்ஷிக்கு உதடு துடிக்க சட்டென அவன் காலரை தன் பக்கம் இழுத்து, அவன் உதடுகளில் தன் செம்மாதுளை இதழ்கள் வைத்து முத்தமிட… தேவாவிற்கு சென்ற உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது… அவளின் கன்னம் பிடித்து, விரல்களால் வெண்சங்கு கழுத்தை வருடி, அவளின் தேனிதழை சுவைத்தவன்….

உயிர் குடிக்கும் அந்த முத்தம் ஆயுள் முழுதும் வேண்டும் என வேண்டி கொண்டான்….

பிறிதொரு நாள் என

தள்ளிவிட முடியாது….

இன்றே வேண்டும் நீ….

என் இதழுக்குள் உள்….

இதழோடு இதழ் பதித்து

இதமாய் ஒரு முத்தம்

இனிதாய் ஒரு யுத்தம்

உறவோடு நாம் கலந்தும்

பிரிவோடு முறிவு கொண்டு

நாம் வாழ்வோம் நித்தம்

காதல் பறவைகளாய் என்றும்…..

முற்றும்……

நாளைக்கு எபிலாக் வரும் டியர்ஸ்…. டோன்ட் மிஸ் இட்…..

 

என்னை ஊக்குவித்தமைக்கு நன்றி… 🙏🙏🥰🥰

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!