அத்தியாயம் 16
கடுப்புடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தாள் சாம்பவி.
“என்ன சாம்பவி ஏன் நீ இங்கேயும் அங்கேயும் நடை பழகிட்டு இருக்க” என்ற வைதேகியிடம், “வேண்டுதல் அதான்” என்றாள் சாம்பவி கடுப்புடன்.
“என்னாச்சு டீ” என்று வைதேகி கேட்டிட, “அந்த ராகவ்க்கு ரொம்ப கொழுப்பு கூடிருச்சும்மா நான் உன்னை பார்க்கனும் வான்னு சொல்லுறேன் எனக்கு வேலை இருக்கு வர முடியாதுன்னு சொல்கிறான்” என்றாள் சாம்பவி.
“நீ என்ன லூசா சாம்பவி வேலை நேரத்தில் அவரை ஏன் தொந்தரவு பண்ணுற கல்யாணத்திற்கு அவரு லீவு போடனும் அதனால் அதற்கு முன்னாடி தன்னோட வேலைகளை முடிக்கனும்னு நினைப்பாரு இதை ஒரு விஷயம்னு சொல்லி மாப்பிள்ளையை அவன், இவன்னு ஏக வசனத்தில் பேசிட்டு இருக்க. மரியாதையா பேசு பழகு” என்றார் வைதேகி.
“என்னம்மா பேசுறீங்க” என்ற சாம்பவியிடம், “இதோ பாரு சாம்பவி உன் கல்யாணம் நல்லபடியாக நடக்கனும்னு நான் ஆசைப் படுகிறேன் தயவு செய்து அதில் மண்ணை அள்ளி கொட்டீறாதே. ஏற்கனவே ராகவ் வீட்டில் உன்னை யாருக்குமே பிடிக்க வில்லை. ராகவ் கிட்ட சண்டை போட்டு அவரும் உன்னை பிடிக்கவில்லைனு சொல்ல வச்சுறாதே. அந்த ராகவ் மேல எனக்கு துளி கூட நம்பிக்கை இல்லை. ஏற்கனவே பல்லவியை நிச்சயம் பண்ண வந்துட்டு உன்னை பிடிச்சிருக்குனு சொன்னவன் அவன் அதனால் உன் கழுத்தில் தாலி ஏறும் வரை ராகவ் மேல எனக்கு நம்பிக்கை வராது. எனக்கு இருக்கிறது நீ ஒரே ஒரு பொண்ணு அதனால் கொஞ்சம் பொறுமையா இரு” என்று கூறிய வைதேகி சென்று விட்டார்.
“இந்த அம்மா வேற அந்த ராகவ் மேல நம்பிக்கை இல்லாமல் தான் நானே அவனை பார்க்க வரச் சொன்னேன் அதை புரிஞ்சுக்காமல்” என்று பற்களைக் கடித்தாள் சாம்பவி.
“என்ன பவிமா இவ்வளவு நேரம் கழிச்சு வர” என்ற வாசுதேவனிடம், “கொஞ்சம் வேலைப்பா” என்றாள் பல்லவி. “ஆமாம், ஆமாம் இவளுக்கு ரொம்ப வேலை தான் அதுவும் சினிமா தியேட்டரில்” என்றாள் சாம்பவி.
“சாம்பவி என்ன பேசுற” என்ற பல்லவியிடம், “பார்த்தேன் டீ நான் பார்த்தேன் அந்த திலீப் கூட நீ உரு மேய்ஞ்சுட்டு இருக்கிறத பார்த்தேன். வெட்கமா இல்லை உனக்கு எவனோ ஒருத்தன் கூட சினிமா தியேட்டரில் ச்சீ என்றவள் நீயும் என்ன பண்ணுவ கல்யாண வயசு தான்டிருச்சு இனி உன்னை எவனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு உன் உடல் தேவைக்கு அவன் கூட போயிட்டியோ என்னவோ” என்று அவள் கூறி முடிக்க வில்லை அவளது கன்னம் பழுத்தது பல்லவி கொடுத்த அறையில்.
“என்ன டீ வாய்க் கொழுப்பா பேசிட்டு இருக்க நான் உன்னோட அக்கா அந்த நியாபகம் இருக்கா? இல்லையா?” என்ற பல்லவி மீண்டும் மீண்டும் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
“யாரைப் பார்த்து டீ உடல் தேவைக்கு கண்டவனோட போறவள்னு சொல்லுற என்னை என்ன உன்னை மாதிரி கேவலமான பிறவின்னு நினைச்சியா சொந்த அக்காவோட கல்யாணத்தை நிறுத்தி உனக்கு கல்யாணம் நடக்கனும்கிறதுக்காக ராகவ் கூட ஒரு ராத்திரி அதுவும் அவனோட சுயநினைவு இல்லாதப்போ அவன் கூட இருந்தவள் தானே நீ” என்று பல்லவி கேட்டிட சாம்பவி ஆடிப் போய் விட்டாள்.
“என்ன, என்ன சொல்லுற நீ” என்ற சாம்பவியின் கன்னத்தில் மீண்டும் மீண்டும் அறைந்த பல்லவி, “நீ பண்ணின விஷயத்தை சொன்னால் தெரியாத விஷயம் மாதிரி என்ன சொல்லுற நீன்னு என்னையவே கேள்வி கேட்கிற அப்படித் தானே” என்று பற்களைக் கடித்தாள் பல்லவி.
“நானும் சரி போனால் போகுது நம்ம தங்கச்சி தானேன்னு நீ என்னை பேசும் போது எல்லாம் பொறுமையா போனால் போதையில் இருந்த ஒருத்தன் கூட தப்பா நடந்துக்கிட்ட பொறுக்கி நீ, நீயெல்லாம் என்னோட கேரக்டர் பத்தி தப்பா பேசுற” என்றாள் பல்லவி.
“பல்லவி என்ன சொல்லுற நீ” என்ற வைதேகியிடம், “நீங்க பெத்த பொண்ணோட யோக்கியத்தை சொல்றேன் சித்தி” என்றாள் பல்லவி.
“ராகவ்க்கும், எனக்கும் என்கேஜ்மென்ட் ஏற்பாடு பண்ணுனீங்களே அது ஏன் நின்னுச்சு உங்க யாருக்காவது தெரியுமா? எனக்கு தெரியும் அதுவும் இப்போ இல்லை என்கேஜ்மென்ட் நின்று போன அன்னைக்கே தெரியும்” என்ற பல்லவி கூற ஆரம்பித்தாள்.
“என்ன ராகவ் இந்த டைம்ல ஃபோன் பண்ணி இருக்கீங்க” என்ற பல்லவியிடம், “உன் கிட்ட பேச தான் பல்லவி ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் உன்னை பார்க்கனும்னு சொல்லுறாங்க டின்னர் வர்றியா” என்றான் ராகவ். “நாளைக்கு என்கேஜ்மென்ட் இன்னைக்கு எப்படி வெளியே வர முடியும் தப்பா எடுத்துக்காதீங்க நான் வரலை” என்று சொல்லி விட்டு பல்லவி ஃபோனை வைத்தாள்.
“என்ன பல்லவி ஃபோன்ல யாரு” என்ற சாம்பவியிடம், “ராகவ் தான். டின்னருக்கு கூப்பிட்டாரு” என்ற பல்லவி தன் வேலையை கவனிக்க சாம்பவி மனதில் ஒரு திட்டம் உதித்தது.
“அக்கா வாயேன் நாமும் ராகவ் சொன்ன ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிட போகலாம்” என்றாள் சாம்பவி. “ஹேய் என்ன சொல்லுற இந்த டைம்ல கண்டிப்பா அப்பா விட மாட்டாங்க” என்ற பல்லவியிடம் கெஞ்சினாள் சாம்பவி.
“அப்பா கேட்டால் என்ன சொல்லுறது வேண்டாம்” என்று பல்லவி கூறிட , சாம்பவியோ விடாமல் தொந்தரவு செய்ய வேறு வழி இல்லாமல் பல்லவி ராகவ்விடம் ஃபோன் செய்து வருவதாக கூறினாள். அவனும் சந்தோஷமாக அவளை வரவேற்க ஹோட்டல் பார்க்கிங்கில் காத்திருக்க பல்லவி, சாம்பவி இருவரும் வந்தனர்.
“ரஞ்சித் வரலையா ராகவ்” என்ற பல்லவியிடம் , “இல்லை பல்லவி அவன் மத்த ஃப்ரெண்ட்ஸ் கூட போயிட்டான் இது ஸ்பெஷல் டின்னர் நமக்கு மட்டும். நீ வரேன் சொன்னதும் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் ரஞ்சித் கூட அனுப்பி வச்சுட்டேன்” என்று சிரித்தான் ராகவ்.
“ஹாய் மச்சான்” என்ற சாம்பவியைக் கண்டு எரிச்சலுற்றான் ராகவ். “ஏன் பல்லவி நீ உன் தங்கச்சியோட வந்திருக்க” என்றான் ராகவ்.
“நான் தான் அவளை கம்பல் பண்ணி அழைச்சிட்டு வந்தேன் மச்சான்” என்ற சாம்பவியை பார்த்து புன்னகைத்த ராகவ், அவளை ஒரு டேபிளில் அமர சொல்லி விட்டு பல்லவியுடன் தனி டேபிளில் அமர்ந்தான்.
“என்ன ராகவ் இது அவளை ஏன் தனியா உட்காரச் சொன்னீங்க” என்ற பல்லவியிடம், “உனக்கு எதுவுமே புரியாதா பல்லவி ஐ வான்ட் ப்ரைவசி. நாம இரண்டு பேரும் பேச தான் உன்னை டின்னருக்கு வரச் சொன்னேன்” என்றான் ராகவ். “குடிச்சுருக்கீங்களா ராகவ்” என்ற பல்லவியிடம், “ஸாரி பல்லவி ஃப்ரெண்ட்ஸ் கூட ஒரு பெக் சாப்பிட்டேன். அதுவும் நீ வரமாட்டேன்னு சொன்னதால் தான் ஸாரி நீ வரேன்னு சொன்னதும் நான் இங்கே வந்துட்டேன்” என்றான் ராகவ்.
பல்லவி அமைதியாக இருக்க , “ஸாரி பல்லவி” என்றவன், “சரி ஃபுட் ஆர்டர் பண்ணு” என்றான் ராகவ். அவளும் தனக்கான உணவை ஆர்டர் செய்தாள். சாம்பவியோ பல்லவி இருந்த டேபிளில் சர்வீஸ் செய்த வெயிட்டரிடம் பணம் கொடுத்து ஒரு பொடியை அவர்கள் குடிக்கும் ஜூஸில் கலந்து விடச் சொன்னாள். அவன் பணத்தை வாங்கி கொண்டு அவள் கொடுத்த பொடியை ஜூஸில் கலந்து கொடுத்து விட்டான்.
பல்லவி, ராகவ் இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். ராகவ் அவளை ரசித்தபடியே சாப்பிட்டான். இருவரும் அந்த ஜூஸை குடித்த சில நிமிடங்களில் மயங்கிட அதே வெயிட்டரின் உதவியுடன் அவர்கள் இருவரையும் அங்கிருந்து இழுத்து சென்றாள். பல்லவியை அங்கே காரிடாரில் தள்ளி விட்டவள் ராகவ்வை அங்கே இருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
போதையில் இருந்த ராகவ் “பல்லவி, பல்லவி” என்று புலம்பிக் கொண்டு இருக்க, சாம்பவி அவன் உடைகளை களைந்து, தன் உடைகளையும் களைந்து அவனோடு கூடினாள். அவனோ போதையின் பிடியில் தான் யாருடன் இருக்கிறோம், என்ன செய்கிறோம் எதுவும் தெரியாமல் சாம்பவியுடன் கூடலில் இணைந்து விட்டான்.
முழு ஜூஸையும் குடிக்காத பல்லவி ஒரு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்க்க தான் காரிடாரில் கிடப்பதை கண்டு பதறிப் போனாள். “ராகவ், சாம்பவி இரண்டு பேரும் எங்கே” என்று யோசித்த பல்லவி, அங்கே இருந்த ஒரு அறை சரியாக பூட்டாமல் இருப்பதைக் கண்டு அங்கே சென்று பார்த்தாள்.
அங்கே ராகவ்வோ “பல்லவி, பல்லவி” என்று முனகிக் கொண்டே சாம்பவியுடன் மெத்தையில் இருக்க சாம்பவியோ அவனை விடாமல் இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவனை தனக்குள் இறுக்கிக் கொண்டாள். அந்த காட்சியை கண்ட பல்லவியின் இதயம் நின்று விட்டது போல் இருந்தது.
ராகவ் மீது காதல் எல்லாம் இல்லை தான். திலீப் தன் வாழ்க்கையை விட்டு சென்று வெகு நாட்கள் கழிந்தது. அது மட்டும் இல்லை திலீப் தன் வாழ்வில் இல்லை என்னும் போது அவள் திருமணம் செய்து கொள்ள நினைப்பது ஒன்றும் தவறில்லையே. தன்னை திருமணம் செய்து கொள்ள வந்தவன் தன் தங்கையுடன் மெத்தையில் அதை பார்க்க ,பார்க்க பல்லவிக்கு மயக்கமே வந்து விட்டது. அவள் அப்படியே மயங்கி சரிந்து விட்டாள்.
அதிகாலை நேரத்தில் கண் விழித்து எழுந்த ராகவ் கண்டதோ அந்த அறையின் மூலையில் பல்லவி மயங்கி கிடப்பதையும், தன் அருகில் தன்னை அணைத்தபடி சாம்பவி கிடப்பதையும் தான். என்ன நடந்தது என்று எதுவும் புரியாமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான் ராகவ்.
அப்பொழுது தான் கண் விழித்து எழுந்தது போல எழுந்த சாம்பவி அழ ஆரம்பித்தாள். “என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களே ராகவ், என் அக்கா மயங்கவும் அவளை இங்கே ஒரு அறையில் தங்க வச்சு டாக்டரை வர வைக்கலாம்னு சொல்லி இங்கே அழைச்சிட்டு வந்தோம். ஆனால் நீங்கள்” என்று சொல்லி அவள் அழ ஆரம்பித்தாள். “சாம்பவி என்ன சொல்லுற நீ” என்ற ராகவ்விடம், “ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்தீங்களா?” என்றாள் சாம்பவி.
“ஆமாம் ஆனால் நான் தெளிவா தானே இருந்தேன்” என்று அவன் யோசிக்க, “அக்கா மயங்கி விழுந்தது நியாபகம் இருக்கா” என்று கேட்டாள் சாம்பவி. “ஆமாம்” என்று அவன் கூறிட , “அப்பறம் நீங்களும் மயங்கி உங்களை இங்கே அழைச்சிட்டு வந்தேன் நீங்க என்னை” என்று அழுது நாடகம் நடத்தினாள் சாம்பவி.
அவளது நாடகத்தை நம்பிய ராகவ் தலையில் கை வைத்து அமர்ந்தான். “ராகவ் நமக்குள்ள நடந்த விஷயத்தை வெளியே சொல்லாதீங்க நான் செத்துப் போறேன். நீங்களும், பல்லவியும் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழனும்” என்று மேலும் மேலும் நடிக்க ஆரம்பித்தாள் சாம்பவி.
“ப்ளீஸ் தப்பான முடிவு எதுவும் எடுத்துறாதே சாம்பவி” என்று கெஞ்சினான் ராகவ். “நான் கெட்டுப் போயிட்டேன் ராகவ் என் வாழ்க்கையே போச்சு” என்று அழுத சாம்பவியை தன்னால் முடிந்த வரை சமாதானம் செய்து பல்லவியையும் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றான் ராகவ்.
நல்ல வேளையாக அவர்கள் சென்ற நேரத்தில் வாசுதேவன், வைதேகி இருவரும் வீட்டில் இல்லை. பல்லவியை அவள் அறையில் படுக்க வைத்து விட்டு சாம்பவி நல்ல பிள்ளை போல தன் அறைக்கு சென்றாள்.
ராகவ் மனம் முழுவதும் குற்றவுணர்ச்சியோடு வீட்டிற்கு சென்றான்.
(…. அடியே…)