தேவதை (எபிலாக் )
தர்ஷியும், தேவாவும் கல்லூரி முழுதும் காதல் பறவைகளாக வலம் வந்தனர்…
வசி சொல்லியது போலவே லண்டன் சென்று செட்டில் ஆகி விட்டான்., ஷில்பாவும் அவனை ஹட்ச் டாக் போல் பால்லொவ் செய்து லண்டனுக்கே சென்று விட்டாள்…
அமுலுவும், ஜெய்யும் எலியும் பூனையும் போல் சண்டை போட்டு மீண்டும் சேர்ந்து கொள்வார்கள்… ஸ்டீபன் என்ன ஆனான் என்பதே யாருக்கும் தெரியவில்லை.. அந்த பிரச்சனைக்கு பிறகு அவன் கல்லூரிக்கே வருவதே இல்லை…
4 வருடங்கள் கழித்து……
கலாவதி, மஞ்சுளா எண்ணம் நிறைவேறியது…
வண்ண பூமாலையும், தோரணமும் கட்டிய மண மேடைகள் இரண்டு இருக்க… ஒரு பக்கம் மஞ்சுளா, மாதவன், கலாவதி செல்வம் தம்பதியரும்… மறு மணமேடை அருகே மைக்கேல், சரசுவும், அமுலுவின் குடும்பமும்… கல்லூரி நண்பர்களும் நிற்க…
கூட்டம் கலை கட்ட, மங்கள வாத்தியங்கள் முழங்கியது… பட்டு வேஷ்டி சட்டையில் மணாக்கள் இருவரும் வந்து அமர, முதலில் தங்க நிற புடவையில் வைரம் போல் ஜொலித்த அமுலு வந்து ஜெய் அருகில் அமர்ந்தாள் … ஜெய் அவளின் அழகில் வாயை பிளந்து விட்டான்…
அடியேய் எம்புட்டு அழகா இருக்க தெரியுமா? என அவளின் காதருகில் எச்சில் விழுங்கி சொல்ல… வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் அவன் அமுலு….
ஏண்டி வெட்கப்பட தெரியுமா? உனக்கு.. இப்போ தான் நீ பெண்ணாகவே உணருகிறேன்…. கிண்டலடித்தான் ஜெய்….
மூக்கு விடைக்க அவனை முறைத்தவள் வாய மூடிட்டு உட்காரு,இல்லனா உன்ன கட்டிக்க விருப்பம் இல்லனு சொல்லி எழுந்து போயிருவேன்…
ஓஹ் என்ன தவிர எவண்டி உன் கழுத்துல தாலி கட்டுவான்? மீசையை முறுக்க…
என் மாமா பையன் வந்திருக்கான்… இப்பவும் சொன்னேன்னு வை ஓடி வந்து என் கழுத்துல தாலிய கட்டிட்டு இழுத்துட்டு போவான்…பிறவு நீ அழுதுட்டு போவணும் எப்படி வசதி? சிரித்தபடி யாகத்தீயில் மந்திரத்தை ஓதி தானியத்தை போட….
இவ செஞ்சாலும் செய்வா என எண்ணியவன் வாயை மூடி அமர்ந்து கொண்டான்…
அடுத்து நம்ம ஹீரோயின் என்ட்ரி….. மெரூன் நிற புடவையில் தேவாவின் தேவதை வானத்தில் இருந்து இறங்கியது போல் ஊர்வலம் வர… அதை பார்த்த தேவாவிற்கு தான் அவள் ஸ்கூல் படிக்கும் போது சுடிதாரில் வந்தது முதல் தாவணியில் பார்த்தது, கல்லூரிக்கு முதன் முதலில் சேலை கட்டி வந்து அவனை ஒரு வழியாக்கியது அனைத்தும் கண் முன் காட்சிகளாய் ஓட.. ஆணவன் சொக்கித்தான் போனான்..
ஒரு புருவம் உயர்த்தி எப்படி இருக்கு? என அவள் கேட்க… நெஞ்சில் கை வைத்து சொக்கி விழுவது போல் செய்ய… தர்ஷி அழகாக புன்னகைத்தாள்… கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவளை பார்க்க.. அவனருகில் வந்து அமர்ந்தது அவன் தேவதை… அவன் முகம் பார்க்க… கள்ளம் கபடம் அற்ற, சிறு வயதில் இருந்து பார்த்த தேவாவா இவன்… ஷேவ் செய்யப்பட்ட தாடி, மீசையுடன் , வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் ஆணழகனாக அமர்ந்திருக்க… காது படவே உன் ஆளு செம க்யூட் டி என அவளது தோழிகள் சொல்ல, கர்வமாய் இருந்தது அவளுக்கு…
அம்ருதா தான் புடவையில் அழகாய் அவர்கள் பின்னால் நாத்தி விளக்கு பிடித்து கொண்டு நின்றருக்க… வசியும், ஷில்பாவும் மேடையில் தான் நின்றிருந்தனர்..
தேவாவின் தாய் கலாவதி என் மூத்த மகன் என அவனை செல்லம் கொஞ்சி நிற்க வைத்தார்… உள்ளம் பூரித்து நின்றிருந்தான் வசி…
துளியும் தர்ஷிக்கு கல்யாணம் ஆக போகிறது என்ற வருத்தம் அல்ல,, காலம் தானே அனைத்திற்கும் மருந்து… முழு சந்தோஷத்தில் நின்றிருந்தான்.. அதற்காக ஷில்பாவை ஏற்று கொண்டானா!? என்றால்… இல்லை தான்..
ஷில்பாவை அன்றி அவன் வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாது.. காரணம் ஷில்பா சைக்கோ அவன் அருகில் இருக்கும் வரை, அவனை . யாரும் நெருங்க முடியாதே! உனக்கு ஆப்சனே இல்ல டா என்பது போல், அவன் பின்னால் பால்லொவ் செய்து கொண்டு தான் இருப்பாள்… அவளையும் அவன் ஏற்றுக் கொள்வான் என நம்புவோம்….
மங்கள வாத்தியங்கள் முழங்க, ஐயர் மந்திரம் ஓதி பெரியவர்கள், சுற்றத்தார்கள் ஆசிர்வாதம் செய்ய, மங்கள நாணை இருவரும் தன் தேவதைகளின் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சிட, அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த.. தன் மனையாக்களின் நெற்றியில் குங்குமமிட்டு, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மென் பஞ்சு விரல்களில் மெட்டி போட்டு விட்டு, தங்கள் உரிமையை நிலைனாட்டினார்கள்…இருவரும்…..
கல்யாணம் சிறப்பாய் நடக்க இரு குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது… வீட்டிற்கு அழைத்து சென்று மற்ற சடங்குகளையும் செய்தனர்…
தேவா வின் கண்கள் அவன் தேவதையை விட்டு அகலவே இல்லை.. முதல் இரவுக்கு அடியெடுத்து வைக்க..
ஜெய் தனது அறையில் காத்திருந்தவன், அமுலு வந்து நிற்க.. எழுந்து நின்று தன் காலை தூக்கி ஆசிர்வாதம் வாங்கிக்கோ டி என காட்டவும்… கீழே குனிந்தவள் அவன் காலை இடறி விட… ஜெய் தடுமாறி பெட்டில் விழுந்தான்…
இடுப்பில் புடவையை தூக்கி சொருகியவள், அவன் மேலே ஏறி அமர, ஜெய் அரண்டு விட்டான்…
அடியேய் என்னடி பண்ற? இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் டி.. கீழ இறங்கு.. நா பண்ண வேண்டியதலாம் நீ பண்ணிட்டு கடக்க…
நீ ஏதும் பண்ண மாட்டேன்னு தெரியும் டா, அதான் நானே….!
ஏதேய், பண்ண மாட்டேனா? என்ன பாத்தா உனக்கு எப்டி இருக்கு? இப்ப பாரு டி இந்த மாமனோட பர்பார்மான்ஸ என்றவன் அவளை கீழே புரட்டி போட்டு தன் ஆட்டத்தை ஆரம்பித்து இல்லற வாழ்க்கைக்குள் இன்பமாக புகுந்தனர்…
இங்கு தர்ஷி அலங்காரத்துடன் மாடிக்கு சென்று பார்க்க.. அங்கு தேவா அழகாக டென்ட் அமைத்து அதில் மெத்தை போட்டு பூக்களால் அலங்காரம் செய்து இருந்தான்….
டேய் தேவா எதுக்கு டா மாடியில,? உன் ரூமுக்கு போகலாம்ல.. யாராச்சும் பாத்துட்டா? உண்மையான பயத்தில் கேட்டாள்…
யாரும் பாக்க முடியாது டி, மாடிய சுத்தி ஸ்க்ரீன் போட்டாச்சு… டென்ட் இருக்கு.. லைட் இல்ல.. டோன்ட் வொரி பேபி.. என அவளின் கை பிடித்து இழுத்து உட்கார செய்தான்… அவளின் முகம் பார்க்க, நிலவு, நட்சத்திர வெளிச்சத்தில் பள பள வென காட்சியளித்தது… ஆணவன் சொக்கி போனவன், போதை கண்களால் அவளின் முகம் பார்க்க… தர்ஷி வெட்கத்துடன் தலை குனிந்தாள்…
நீ கிடைக்க நா குடுத்து வச்சிருக்கணும் டி… என சொல்ல… ஒற்றை விரலால் அவன் உதடுகளில் கை வைத்தவள்.. ப்ளீஸ் டா நாம நிறைய பேசிட்டோம்… போதும்.. என சொல்ல.. அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவன்…
புன்னகைத்து அவளின் தாடை பிடித்து நிமிர்த்தி, முதலில் நெற்றியில் முத்தமிட, இமை மூடி ரசித்தாள் அவள்… அவளின் இரு குண்டு கன்னங்களில் முத்தமிட்டு, செம்மாதுளை உதட்டை போதையால் சிவந்த விழிகளில் கண்டவன்.. துடிக்கும் ஆதரங்களை தன் ஆதரங்களால் அடக்கி கொண்டான்…
தர்ஷி அவனின் பின் முடி புடித்து அழுத்தி பெட்டில் சாய அவள் மேல் விழுந்தவன்.. கழுத்தில் சுவை தேடி, காதோரம் குளிருக்கு இதம் தேடி…அங்கம் முழுதும் வீணை போல் தன் விரல் கொண்டு வாசிக்க, அவள் உடல் முழுதும் கூசி சிலிர்த்து அடங்கினாள்… அவள் இதழ்களின் சறுக்கல்களில் கடக்கவே இயலாமல் அங்கேயே தேனை பருகினான்…
ஆழ் கடலுக்குள் நுழைந்து மூச்சடைக்கி சிப்பிக்குள் இருக்கும் முத்தை எடுப்பது போல், பெண்ணின் மனம் எனும் ஆழ்கடலுக்குள் முழ்கி விட்டான்.. இனி மீள்வது சிரமமே!
பெண்ணவளின் அங்கம் முழுதும் மூச்சி வாங்க முத்தமிட்டு, பெண்ணின் கடலுக்குள் முழ்கி முத்தெடுக்க,, வலியுடன் கூடிய இன்பத்தில் முனகினாள் அவன் தேவதை… நிலவு மகளே வெட்கத்தில் மேகத்திற்குள் சென்று முகம் மறைத்து கொண்டது…
விட்டப்பாடில்லை விடிந்தும் முத்துக்களை தேடி ஆழ்கடலுக்குள் பயணம்,,. தேகம் எனும் கூடத்தில் ஆராய்ச்சி நடத்தியே நகர்ந்தது அவ்விரவு…
தன் நெஞ்சில் படுத்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன், ஆசைகள் இல்லாத என் வாழ்வில் பேராசையாக பார்த்தது நீ மட்டும் தான டி… தேவதையடி நீ….
தேவாவின் வாழ்க்கை முழுதும், அவன் தேவதையுடனும், நண்பர்கள் கூட்டத்துடனும் மகிழ்ச்சியாக கழிய வாழ்த்தி விடை பெறுவோம்
முற்றும்….
நன்றி…… 🥰🥰
எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி 🥰🥰🙏