23. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.7
(9)

தேன் 23

ஆடையற்ற வசீகரிக்கும் அழகுடைய பெண்ணின் உடலை ஒரு வலிமை மிகுந்த கரம் வருடி கானம் மீட்ட, மோக தாபங்கள் அலையாய் இருவருக்குள்ளும் மோதி எழுந்தன.

ஆடவனின் மீட்டலுக்கேற்ப மங்கையின் உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்தன. அதில் அவன் மது அருந்திய போதையை விட இந்த மாதுவின் போதையே அவனைக் கிரங்க வைத்தது.

அதில் அவனது உடலோ அவளை முழுமையாக ஆட்கொள்ளும் அவாவில் வேகமாக செயல்பட மீண்டும் மீண்டும் சோர்ந்து போனால் அந்த விலை மாது.

சோர்வுடன் மெத்தை மேல் கிடந்த அந்த விலை மாது நினைத்தது ஒரே ஒரு விடயம் மட்டும் தான்,

“என்ன மனுஷன் இவன் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், காமப் பேய், பிசாசு போல் இப்படி நடந்து கொள்கிறானே ச்சே.. நான் பார்த்த கிராக்கிகளில் இவன் பெரிதும் வித்தியாசம் என்னோட எட்டு வருஷ சர்வீஸ்ல இப்படி ஒரு அரக்கன பார்த்ததே இல்லை காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி இரவுல இருந்து என்ன தூங்க விடாம 8 தடவைக்கு மேல கடவுளே முடியல..” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு அவள் கண்களை மூட,

அதைப் பார்த்ததும் அந்த அரக்கன்,

“என்னடி கண்ண மூடுற தூங்குறியா வந்த வேலைய பாருடி..” என்று அவளது கன்னத்தில் பளார் என அறைந்தான்.

கன்னத்தில் இடியென விழுந்த அறையை வாங்கிக் கொண்டு விசும்பலுடன் அவன் கூறிய விடயங்களை இயந்திரம் போல் செய்தாள்.

கூண்டிற்குள் இருக்கும் ஒரு சிறு கோழியை வெறி பிடித்த நாய் வேட்டையாடுவது போல காமம் எனும் தீயினால் அவளை முழுமையாக காயப்படுத்திக் கொண்டு இருந்தான்.

அந்த நேரம் பார்த்து அந்த அறைக் கதவு பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது.

செந்நிறக் கண்களால் விழித்து உறுத்துப் பார்த்தவன், அவளை உதறித் தள்ளிவிட்டு சலிப்புடன் எழுந்து கதவின் அருகே சென்றான்.

“ யார்டா ம*****..” என்று அவனது முகப்பசியைக் கெடுத்தவன் யார் என்று தெரியாமல் வாயில் வந்த தீய வார்த்தைகளை அள்ளிக் கொட்ட,

கதவிற்கு வெளியில் இருந்தவனோ காதைப் பொத்திக்கொண்டு “குரு நான்தான் நான் தான்..”

“என்ன மருது சொன்ன வேலையை முடிச்சிட்டு வந்துட்டா போல..”

“அது வந்து பாதி.. பாதி வேலை முடிஞ்சிடுச்சு..” என்று சிறு தடுமாற்றத்துடன் கூறினான் மருதமுத்து.

“என்னது எனக்கு சரியா கேட்கல விளக்கமா சொல்லு..” என்று கோபத்துடன் கர்ச்சிக்க,

“அது வந்து குரு நீங்க சொன்னது போல ஆக்சிடென்ட் பண்ணிட்டோம்..”

“அப்புறம் என்ன நம்மளோட பிளான் சக்சஸ்தானே..!”

“இல்ல குரு அவளுக்கு ஆயுசு கெட்டி அவ பொழச்சிட்டா ஆனா..?”

“ஆனா என்ன..?”

“பழ…பழசை எல்லாம் மறந்துட்டா..” என்று அவன் கூறி முடிப்பதற்குள் கதவை எட்டி உதைய, கதவோடு சேர்த்து அவனும் தூக்கி எறியப்பட்டான்.

“என்னடா விளையாடுறியா உன்னை நம்பி ஒரு வேலையை கொடுத்தா இப்படியா அரைகுறையாக செஞ்சுட்டு வர்றது அது மட்டுமில்லாம என்ன துணிவிருந்தா என்கிட்ட வந்து இப்படி வேலை முடியல குருன்னு சொல்லுவே

சொன்ன காரியத்தை முடிச்சிட்டு வந்து என் கண் முன்னுக்கு நிக்காத உனக்கு உடம்புல உயிர் இருந்து பிரயோசனமில்லை நீ பரலோகம் போறதுதான் நல்லது இப்படி ஒன்னுக்கும் உதவாத வேலைக்காரன் எனக்கு தேவையில்லை..” என்று அருகில் இருந்த மேசையில் இருந்த கன்னை கையில் எடுக்க,

இவனது தாக்குதலை பார்த்து அச்சத்தில் நடுங்கிப் போன விலைமாது ஆடையற்ற தன் உடலை போர்வையால் சுற்றிக்கொண்டு கட்டிலுக்கு அருகில் சிறு எறும்பாகக் குறுகி ஒழிந்து கொண்டாள்.

அதோடு இவன் கன்னைக் கையில் எடுக்கவும் அவனது செயலை பார்க்க முடியாமல் சத்தமாக கத்திக்கொண்டு அருகில் இருந்த குளியல் அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டவள் தப்பிக்க வழி தெரியாது முழித்தாள்.

அதைப் பார்த்து ஆக்ரோஷமாக சிரித்தவன்,

“என்கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது..” என்று கன்னைத் தூக்கி மருதமுத்துவை குறி வைத்து சுட்டான்.

அந்தோ பரிதாபம் மருதமுத்து பரலோகம் சென்று பத்து நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. ஆம் அந்தக் கொடிய அரக்கன் உதைந்த உதையில் அப்படியே காற்றில் மிதந்து வந்து பின்னே இருந்த பெரிய மீன் தொட்டியின் மேல் விழுந்ததான்.

அந்த கண்ணாடி மீன் தொட்டி அவன் விழுந்த வேகத்தில் உடைந்து அவனது உடலை குத்தி கிழித்து பதம் பார்த்து விட்டது. அதனால் அதிக இரத்தம் வெளியேற அவனது உயிர் அவ்விடத்திலேயே பிரிந்து சென்று விட்டது.

அதனைக் கண்டு சிறிது கூட கவலை கொள்ளாமல் கர்வத்துடன் சிரித்தபடி மெத்தை மேற்கோய் படுத்தவன்,

“அடியேய் எங்கடி இருக்க..?” என்று பலத்த சத்தத்துடன் அவன் உரும அடுத்த நிமிடமே குளியல் அறைக்குள் இருந்து விலைமாது அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டாள்.

அவளைக் கட்டி அணைத்து மீண்டும் மோகத்தில் திளைத்தவன், உடல் சோர்வடைய, கண்களை மூடி,

“நீ எங்க இருந்தாலும் என்கிட்ட இருந்து தப்ப முடியாது..” என்று கூறி வாய்விட்டுச் சிரித்தான்.

நிவேதாவை கொள்ளும் அளவு வெறி கொண்ட வேங்கையாக திரியும் மர்ம நபர் யாராக இருக்கும்..?

************************************

அவளின் நினைவிழப்பு மட்டுமல்ல, அவளது ஒட்டுமொத்த இயல்பும் மாறி போனது. ஒரு காலத்தில் அன்பிற்கு ஒரு பைசா மதிப்பும் கொடுக்காத நிவேதா இன்று குழந்தையைப் போல அப்பாவியாக இருக்கிறாள்.

அந்த மாற்றத்தைப் பார்ப்பதற்கே கார்த்திகேயனுக்கு வலி ஏற்பட்டது.

அதனால் தான், கருணாகரன் மற்றும் காயத்ரிக்கு தெரியாமலேயே, சிறிய சிறிய வழிகளில் அவளது பழைய நினைவுகளை மீட்டெடுக்க முயன்றான்.

பழைய புகைப்படங்கள், அவளுக்கு பிடித்த இசை, பள்ளிக் கால நினைவுகள் அனைத்தையும் மெதுவாக அவளிடம் மீண்டும் அறிமுகப்படுத்தினான்.

அவளது கண்களில் ஒரு சிறிய எண்ணத் துளி கசியும் போது கூட, “அவள் நினைவுகளின் அடியில் ஏதேனும் ஒளிந்து இருக்கிறதோ?” என்ற நம்பிக்கையுடன் அவன் மனம் துடித்தது.

அவளுக்கு முன்னேற்றம் இருந்ததோ இல்லையோ, அவன் போராட்டம் தொடர்ந்தது.

அவன் முயற்சியில் ஒரு சொந்தமில்லா, பாசமில்லாமல் கட்டாயத்தால் பார்க்கும் ஒருவனாக அல்ல, பாவத்தின் பிணையால் பின்னப்பட்டவன் போலவும், பிழையை திருத்த நினைக்கும் தவமிருப்பவனாகவும் அவன் இருந்தான்.

ஒரு காலத்தில் அவளை தன் வாழ்க்கையிலிருந்து விலக்க நினைத்தவன் தான் இன்று, தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவளுக்காக செலவழித்து வந்தான்.

அவளை பழைய நிலையில் கொண்டுவருவதே தான் அவன் வாழ்நாளின் முக்கிய நோக்கம் போல மாறியது.

அந்த பயணத்தில் தனக்கு இடையே உள்ள காதல் என்ற உணர்வும் கூட அவனுக்கே தெளிவாகப் புரியாமல் ஒரு நுண்ணுயிராய் வளர்ந்தது.

அவளது சிரிப்பின் ஓசையில் ஒரு துளி ஆனந்தம், அவளது வலியின் வெளிப்பாடுகளில் ஒரு சிறு ஆழம்… அவனது மனதை மெதுவாக மாற்றியது.

அவள் மீண்டும் பழைய நிவேதாவாகும் நாள் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் கொண்டு,

“நீ இப்போது யாரும் நினைக்கவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் நீ யாரோ என்ற நினைவு மட்டும் திரும்பி வந்தாக வேண்டும்…”

என்ற எண்ணத்தில், கார்த்திகேயன் தினமும் அவளுடன் உயிராய் இருந்தான்.

கருணாகரனும் காயத்ரியன் கூடிய சீக்கிரத்தில் இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்து வைக்கும் எண்ணத்தில் இருக்க,

கடவுள் போட்ட முடிச்சோ மிகவும் விபரீதமான சிக்கல்களை கொண்டு வந்து அவர்களின் வாழ்வில் திணித்தது.

அந்த சிக்கல்களை இருவரும் ஒன்றிணைந்து தகத்தெறிவார்களா? அல்லது சிக்கலுக்குள் மாட்டி முழிப்பார்களா..?

பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!