13. தொடட்டுமா தொல்லை நீக்க..!

4.8
(106)

தொல்லை – 13

இரவு வரவே கூடாது என்று பரிதவிப்போடு எண்ணினாள் அஞ்சலி.

இன்று அவள் எவ்வளவு தடுத்தாலும் மாமா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவளுக்குப் புரிந்தது.

இன்றே வாழ்க்கையை ஆரம்பித்து விட வேண்டும் என்ற உறுதியில் இருப்பவரிடம் இனி என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது என எண்ணி மனம் கலங்கிப் போனாள் அவள்.

மதுராவின் மிரட்டல் வேறு அவளை வருத்தத்தில் ஆழ்த்தியது.

“கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம எப்படி அவளால கதிர் மாமாகிட்ட பணம் கேட்க முடியுது..? இந்த தாலிக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கவே இல்லையே…” என்று மனம் வெம்பிப் போனாள் அவள்.

அதே நேரம் சுதாலட்சுமியோ முகப்பறையிலிருந்து அவளை அழைத்தார்.

“மது… சாப்பிட வா… உனக்கு பிடிச்ச கத்தரிக்காய் கறி செஞ்சிருக்கேன்…” என்றார் அவர்.

அஞ்சலியோ வேகமாக கண்ணீரைத் துடைத்தவாறு “வரேன் அத்தை…” என்று முனகி முகத்தைச் சரி செய்து வெளியேறினாள்.

உணவு மேசையில் அனைத்து உணவுகளும் தயாராகி அடுக்கப்பட்டிருந்தன.

அங்கே கதிர் அமர்ந்திருந்தான்.

அவனுடைய பார்வை அவளைத் தொட்டுத் தழுவியது.

அவனைச் சந்திக்க முடியாமல் அஞ்சலி தலையைக் குனிந்து உணவைப் பரிமாறினாள்.

“அம்மு… நீ ஏன் இப்படி டல்லா இருக்க?” என கதிர் கேட்டான்.

அவளுக்கோ பதில் சொல்ல முடியவில்லை.

“ஒன்னும் இல்ல மாமா…” என முனகி அமைதியானாள் அவள்.

சாப்பிட்டு முடித்து அறைக்குத் திரும்பியவள் இரவை நினைத்துப் பதறினாள்.

அவள் பதறித் தவித்தாலும் நேரம் நகராமல் இருந்து விடுமா?

சற்று நேரத்தில் இரவு வந்தே விட்டது.

அதைத் தொடர்ந்து அந்த அறைக்குள் கதிரும் வந்தான்.

மதியநேர உணவிற்குப் பின் இப்போதுதான் அவனைப் பார்க்கிறாள்.

எப்போதும் வந்தவுடன் அவளைப் பார்த்து புன்னகைப்பவன் இன்று அவளுடைய முகத்தைக் கூட பார்க்காமல் படுக்கையில் சென்று அமர்ந்ததைக் கண்டதும் இவளுக்கு எதுவோ சரியில்லை எனத் தோன்றியது.

அவனுடைய முகம் வாடி இருப்பதும் அவன் உடைந்து போன தோற்றத்தில் அமர்ந்திருப்பதும் அவளுக்குப் புரிந்தது.

ஒரு வாரத்திற்கு மேலாக அவனுடன் நேரம் கழித்தவளுக்கு அவனுடைய உணர்வுகள் தெரியாமல் போகுமா என்ன..?

மெல்ல அவனை நெருங்கி “என்னாச்சு மாமா?” எனக் கேட்டாள் அஞ்சலி.

கதிர் அவளை வெறித்துப் பார்த்தான்.

அவனுடைய விழிகள் கலங்கி விட்டிருந்தன.

“ஐயோ மாமா… கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு… என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” எனப் பதறிப் போனவளாய் கேட்டாள்.

கதிர் உடைந்து போனான்.

“என்னோட ஃப்ரெண்ட் ஆகாஷ்… உனக்கு தெரியும்ல?”

“ஆமா மாமா… அவர எப்படி தெரியாம போகும்..? கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமும் நம்ம வீட்ல தானே இருந்தாரு…” என்றாள் அவள்.

“அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருந்தான்… அந்தப் பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்… அவன் மனசு உடைஞ்சு போய்ட்டான் மது… என்னால அவனை இப்படி பாக்கவே முடியல… எப்பவுமே ரொம்ப ஜாலியா சிரிச்சு பேசிட்டே இருப்பான்… ஆனா இப்போ அவன் உடைஞ்சு போய் அழுததைப் பார்த்து என்னால தாங்கிக்க முடியலடி…” எனக் கூறியவனுக்கு விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து விட்டது.

பதறி விட்டாள் அவள்.

நண்பனுக்காக துடிக்கும் கதிரைப் பார்க்க முடியாமல் அஞ்சலி அவனை நெருங்கினாள்.

“ஐயோ ஏன் மாமா..? அந்தப் பொண்ணுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களா..?”

“இ.. இல்ல மது.. அந்தப் பொண்ணோட விருப்பத்தோடதான் கல்யாண‌ ஏற்பாடெல்லாம் நடந்திச்சு..”

“கடவுளே… அந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணினா..? ஆகாஷ் அண்ணாக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதாவது பிரச்சனையா மாமா..?” கலங்கியவளாய் கேட்டாள் அவள்.

“அப்படியெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல மது.. ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க.. இப்போ நல்ல பணக்கார சம்பந்தம் வந்ததும் அந்தப் பொண்ணு இவன வேணாம்னு சொல்லிட்டு இன்னொரு பையனை கட்டிக்கிட்டாளாம்… இவன் கூட சண்டை போட்டு பிரிஞ்சிடுவோம்னு மட்டும் சொல்லிருக்கா… இவனுக்கு அவ கல்யாணத்தை பத்தி எதுவுமே தெரியாது.. அந்தப் பொண்ணோட ஊர்க்காரங்க சிலர் சொல்லித்தான் அந்தப் பொண்ணுக்கு கல்யாணம்னே இவனுக்கு தெரிஞ்சிருக்கு… அவனோட மனசு எப்படி உடைஞ்சு போயிருக்கும்ல..?” என்றவனுடைய விழிகள் அப்பட்டமாக வலியை வெளிப்படுத்தின.

நண்பனுடைய வாழ்க்கை பரிபோனதற்கே இவ்வளவு வேதனைப்படுகின்றாரே..

கதிரைப் பார்த்தவளுக்கு இதயம் துணுக்குற்றது.

“மாமா… நீங்க கவலைப்படாதீங்க… ஆகாஷ் அண்ணா நல்லா இருப்பாரு…” என ஆறுதல் கூறி அவனுடைய கைகளை மெதுவாகப் பற்றினாள்.

“ஆமா மது.. அவன எப்படியாவது இதுல இருந்து வெளியே கொண்டு வரணும்..” என்றவன் அவளுடைய கரங்களை தானும் பற்றிக் கொண்டான்.

நம் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவரை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய தவறு என்பது அக்கணம் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அவனுடைய கலங்கிய கண்களைப் பார்த்தவள் ‘சாரி மாமா… இவ்வளவு மென்மையான மனசு உங்களுக்கு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா… நான் இந்த துரோகத்தை சத்தியமா உங்களுக்கு பண்ணி இருக்கவே மாட்டேன்… எங்க அக்காவ பத்தி யோசிச்ச நான் உங்க மனசப் பத்தி யோசிக்கலையே..’ என மனதில் எண்ணி வேதனை கொண்டாள் அஞ்சலி.

மனதிற்குள் அவளை குத்திக் கொண்டே இருந்த குற்ற உணர்ச்சி இன்று கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

அதற்கு மேலும் அவனுடைய வேதனையைப் பார்க்க முடியாமல் மெல்ல அவனுடைய தோளில் தலை சாய்த்துக் கொண்டவள் “மாமா… எல்லாம் சரியாகிடும்… நீங்க இப்படி அழாதீங்க… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என தழுதழுத்த குரலில் கூறினாள்.

அவளுடைய நெருக்கமும் அவளுடைய மென் வார்த்தைகளும் அவனுக்கு ஆறுதலை அளித்தன.

“தேங்க்ஸ் அம்மு..” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

அவளை அணைத்த கணம் அவனுடைய மனம் சற்றே அமைதி கொண்டது.

“இப்படியே என் பக்கத்திலேயே இரு மது.. எனக்கு அதுவே போதும்… என்னோட கஷ்டம் கவலை எல்லாம் நீ பக்கத்துல இருக்கும்போது காணாம போயிடுது…” என அவன் கூறியதும் தன்னை மறந்து விழிகளை மூடிக்கொண்டவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அவன்.

அவனது உதடுகள் அவளது காது மடல்களைத் தீண்டி அவளுடைய தேன் கன்னத்தில் முத்தத்தைப் பதித்தது.

அஞ்சலி அவனுடைய அணைப்பில் மயங்கினாள். அவனுடைய தேகத்தின் வெப்பம் அவளை உருக்கியது.

படுக்கையில் அமர்ந்திருந்தவளை அப்படியே சரித்து படுக்க வைத்தவன் அவள் மீது படர்ந்ததும்தான் அவளுக்கு நிதர்சனம் உரைத்தது.

சட்டென அவனை விலக்க முடியாது தடுமாறியவள் “மாமா..” என அழைத்து தடுமாற வேகமாக அவளுடைய உதடுகளை கவ்விக் கொண்டான் அவன்.

திணறிப் போனவளுக்கோ தேகம் படபடத்துப் போனது.

அவனுடைய முன் தேகம் முழுவதும் அவளுடைய முன் தேகத்தை உரச அவளுக்கோ விழிகள் கலங்கின.

நீண்ட நேரம் அவளுடைய உதடுகளை சுவைத்தவன் அப்படியே கீழ இறங்கி அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து அவளுடைய இடையை வருட,

“இப்ப வேணாம் மாமா…” என முனகினாள் அவள்.

அவள் பேசியது அவளுக்கே கேட்காத போக அவனுக்கு எப்படிக் கேட்கும்…?

அவனோ இன்னும் முன்னேறி அவளுடைய புடவை முந்தானையை விலக்கி விட பதறித் துடித்தவள் வேகமாக அவனைத் தன்னில் இருந்தும் தள்ளி விட்டாள்.

அவள் தள்ளிய வேகத்தில் அவளை விட்டு விலகி அவளை அதிர்ந்து பார்த்தவனுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன ஆச்சு மது..? நான் உன்ன ஏதாவது கஷ்டப்படுத்திட்டேனா..?” என அவன் புரியாமல் கேட்க அவளுக்கோ அழுகை பொங்கியது.

“இ.. இல்ல.. சாரி மாமா என்னால முடியல.. என்ன மன்னிச்சிடுங்க.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க..” என அழுதாள் அவள்.

“என்னடி சொல்ற..? உன்னால முடியலன்னா என்ன முடியல..? தெளிவா சொல்லு மது..” என்றான் அவன்.

“உங்க கூட என்னால இப்படி இருக்க முடியாது மாமா.. உங்க கூட என்னால வாழ்க்கையை ஆரம்பிக்கவே முடியாது..”

“ஏன் மது..? என்ன புடிக்கலையா..?”

“ஐயோ மாமா நான் மதுவே இல்லை.. நான் அஞ்சலி.. நான் உங்க பொண்டாட்டி இல்ல.. நான் உங்க பொண்டாட்டி இல்ல…” எனக் கதறி விட்டாள் அவள்.

ஒரு கணம் அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

தன் செவிகளில் விழுந்த வார்த்தைகள் சரிதானா என திகைத்துப் போய்விட்டான் அவன்.

அவளுடைய அழுகை சத்தத்தில் மீண்டும் சுயத்திற்கு வந்தவனுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.

“அஞ்சலியா…?” குரல் கரகரப்பாக மாறியது.

“ஏய் நீ என்ன சொல்ற..? எனக்குப் புரியல…” என நம்ப முடியாமல் அவளை அழுத்தமாகப் பார்த்தவாறு கேட்டான் அவன்.

“எ.. என்ன மன்னிச்சிடுங்க மாமா.. நான் மதுரா இல்ல.. நா.. நான் அஞ்சலி…” என அவள் உண்மையைக் கூறிவிட பதறி படுக்கையில் இருந்து எழுந்து நின்றவனுக்கு தலை விறைத்துப் போனது.

அடுத்த நொடியே அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கதிர்வேலன்.

💜💜

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 106

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “13. தொடட்டுமா தொல்லை நீக்க..!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!