26. சிறையிடாதே கருடா (இறுதி அத்தியாயம்)

5
(21)

கருடா 26

 

“வண்டிய நிறுத்துங்க!” என்றதும் அந்த நான்கு சக்கர வாகனம் இரண்டாவது முறையாகக் கதறிக் கொண்டு நிற்க, “உங்க பையனைக் கூட்டிட்டு வரேன்.” என்றுவிட்டு அவள் இறங்கியதும் வாகனம் நகர ஆரம்பித்தது.

 

“ஹே நில்லுப்பா, ஆள் வரணும்…” என்பதைக் காதில் வாங்காமல் அந்த ஓட்டுநர் இயக்க, “என்னப்பா, நீ பாட்டுக்குப் போற? என் மகனும் மருமகளும் வரணும்.” எழுந்து சென்று கத்தினார் சத்யராஜ்.

 

“உங்க பையன் தான் சார், நான் இறங்கினதுக்கு அப்புறம் என் பொண்டாட்டியும் இறங்குவா… அதுக்கப்புறம் யாரு எப்படிக் கத்தினாலும் வண்டியை நிறுத்தாதன்னு சொன்னாரு.”

 

“எப்போ?”

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சார்…” என்றதைக் கேட்ட அவன் வீட்டு ஆள்கள் நால்வரும் நெற்றியில் பெரிய நாமம் போட்டதாக உணர்ந்தார்கள்.

 

அதைவிடப் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, அவன் வீட்டு வாசலில் நின்றாள் ரிது. கதவு சாற்றப்பட்டு இருப்பதால் பயந்து கொண்டு திறக்கப் போனாள். அதுவோ திறந்து தான் இருந்தது. வேகமாக ஓடி வந்தவள் கதவில் கை வைத்து நிலை தடுமாறி விழப்போக, “நான் இருக்கேன் முதலாளி!” தாவிப் பிடித்துப் பல்லைக் காட்டினான்.

 

“ச்சீ!” என உதறித் தள்ளி நின்றவள், “எதுக்குடா அப்படிச் சொல்லிட்டு வந்த?” கேட்டாள்.

 

“எப்படி?”

 

“நீ வரும்போது நான் இருக்க மாட்டேன்னு.”

 

“ஆமா. இருக்க மாட்டேன்.”

 

“பைத்தியமாடா நீ… சாகப் போறேன்னு பிளாக்மெயில் பண்றியா?”

 

“எது! அட அரைலூசு… நான் வேலைக்குப் போயிடுவேன்னு சொன்னேன்.” என்றதும் தான் தாமதம், வந்த கடுப்பில் அடித்துத் துவைத்து விட்டாள்.

 

அத்தனை அடிகளையும் விரும்பியே வாங்கிக் கொண்டான் கருடேந்திரன். பல மாதங்கள் கழித்து, மனைவியின் பட்டுக் கைகள் தேகத்தைத் தீண்டுவதால். அவனின் சுகத்தை அறியாதவள் கை ஓய அடித்து விட்டு, “நான் உன்னை மன்னிப்பேன்னு கனவுலயும் எதிர்பார்க்காத…” என்றாள்.

 

கிளம்பப் பார்த்தவளுக்கு முன் ஓடி, கதவைப் பூட்டிச் சாவியை அவளுக்கு முன் ஆட்டினான். திறக்கச் சொல்லிக் கத்தியவள் முன்பு அந்தச் சாவியைத் தன் பேண்டுக்குள் போட்டான். அவனிடம் இப்படி ஒன்றை எதிர்பார்க்காதவள் கண்கள் விரிந்தது.

 

“வேணும்னா எடுத்துக்கிட்டு கிளம்பு!”

 

“அறிவு இருக்கா உனக்கு?”

 

“இந்த சீன் எல்லாம் நீங்கதான் பண்ணனுமா, நாங்க பண்ணக் கூடாதா?” கண்ணடித்தான்.

 

“சாவியக் குடு!”

 

“எடுத்துக்க…” எனச் சட்டையைத் தூக்கிக் கால் சட்டையில் கை வைக்க, “ஏய்!” முகத்தை மூடிக் கொண்டாள்.

 

“ரொம்ப ஆசைப்படாத!”

 

“சாவியக் குடுக்கலேன்னா, போலீஸ்க்கு போன் பண்ணுவேன்.”

 

“தாராளமா பண்ணு. வந்தவங்க கிட்ட நீ என்னை ரேப் பண்ணப் பார்த்தேன்னு கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.”

 

மூக்கு விரிக்க முறைத்துக் கொண்டிருப்பவளை முழுதும் சீண்டிப் பார்க்க எண்ணி, “பொய் கம்ப்ளைன்ட் கொடுக்க விருப்பம் இல்லன்னா, உண்மையாவே பண்ணிக்கலாம். நான் கத்த மாட்டேன்! கதற மாட்டேன்!” அப்பட்டமாக வழிந்தான்.

 

“செத்துடப் போறேன்னு ஓடிவந்தேன் பாரு, எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்…”

 

“அடியே! நான் மட்டும் தான் உனக்குப் புருஷன்! இன்னமும் வேணும்னுலாம் கேட்கக் கூடாது.”

 

“செருப்பு பிஞ்சிடும்!”

 

“அப்பாடா!” நெஞ்சில் கை வைத்தவனைக் குழப்பமாகப் பார்க்க, “ரெண்டு பிரம்மாஸ்திரத்தை யூஸ் பண்ண நீ கடைசி ஒன்ன யூஸ் பண்ணாமல் போயிடுவியோன்னு பயந்துட்டேன். இப்பத்தான் மனதிருப்தியா இருக்கு.” என்றான்.

 

“என்னடா உளறிட்டு இருக்க?”

 

“புரியலையா முதலாளி!” எழுந்து வந்தவன், அன்று அவள் சுற்றியது போல் சுற்றி வந்து,

 

“நீயும் சராசரிப் பொண்ணு இல்லையா… எவ்ளோ நாள் தான் கெத்துக் காட்டுறேன்னு நடிச்சுக்கிட்டு இருப்ப… சாகப் போறன்ற ஆயுதத்தை யூஸ் பண்ணி, கண்ணீருன்ற காவிரிய யூஸ் பண்ணி, இப்பக் கடைசியா செருப்பு பிஞ்சிடும் வரைக்கும் நானும் பொண்ணு தான்னு ப்ரூப் பண்ணிட்ட… இனிமே உன்ன விட நான் கெத்து!

 

ரிது அப்படிப்பட்ட ஆளு, இப்படிப்பட்ட ஆளு… விஷமுள்ள பாம்பு, இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசக்கூடாது. நான் ஆம்பளையா ரொமான்ஸ் பண்ணிட்டுச் சம்பாதிக்கப் போவனாம். நீ பொம்பளையா வீட்டு வேலை எல்லாம் செஞ்சுட்டு, என் பிள்ளைங்களை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் விடுவியாம். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வெளிய கூட்டிட்டுப் போவேன். அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை புடவை எடுத்துக் கொடுப்பேன். கம்முனு எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு குடும்பம் நடத்தணும்.” என்றவன் அவள் கன்னத்தைத் தட்டி,

 

“மாமாக்குப் போய் ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா, போ…”

 

ரிதுசதிகாவின் கோபத்தில் அந்த வீடு இடிந்து விழும் கதியில் இருந்தது. அதை உணர்ந்தவனோ தணிக்க இறங்கி வராது, “புருஷன் சொன்னா உடனே ஓடணும், இல்லன்னா கால்ல சூடு வச்சுருவேன்.” என்றான் ஆணவமாக.

 

“சாவியக் குடுடா!”

 

எவ்வளவு சொல்லியும், கேட்காதவன் மீது காட்ட முடியாத கோபத்தைக் கதவின் மீது காட்ட ஆரம்பித்தாள். அதில் பயந்தவன் ஓடிச் சென்று தடுத்தான். அவன் கைக்கு அடங்கவில்லை. தடுத்துத் தோற்றவன், குண்டுக் கட்டாகத் தூக்கி வந்து மெத்தையில் போட்டான். துள்ளும் அவளை மெத்தையாக்கி மேல் படுக்க, “விடுடா” கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பித்தாள்.

 

இந்த முறை, அடிகள் ஆயுதங்களாக மேனியில் விழுவதால் வாங்கத் தைரியமின்றி, இரு கைகளையும் ஒரு கையில் சுருட்டித் தலைக்கு மேல் உயர்த்தி வைத்தவன், “என்னடி? ரொம்பப் பண்ற… ரொம்ப சீன் போட்டுட்டு இருந்த, உதட்டைக் கடிச்சு வச்சுருவேன். நான் பண்ண எல்லாத்துக்கும் பதிலுக்கு பதில் நீயும் பண்ணிட்ட. என்னமோ ஒண்ணுமே பண்ணாத குழந்தை மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்காத… எல்லாத்தையும் சரிக்குச் சரி பண்ணிட்டு இப்ப நான் சாரி கேட்க வரும்போது மட்டும் வீம்பு பிடிக்கிற. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உனக்கு? நமக்காக இப்படி ஒரு தியாகத்தைப் பண்ணி இருக்கானேன்னு என்னைக் கட்டிப்புடிச்சுக் கொஞ்சாம, கதற வச்சிக்கிட்டு இருக்க…” உதட்டைப் பிடித்து வளைக்க வலி பொறுக்க முடியாது கதற ஆரம்பத்தாள்.

 

அந்த வலியோடு வலியாக முத்தம் வைக்க முயன்றவன் தாடையில், நகத்தை வைத்துக் கீறியவள் இடைவெளி கிடைத்ததும் தள்ளிவிட்டு, “நான் ஒன்னும் காதலிக்கிற மாதிரி நடிச்சு வேண்டாம்னு சொல்லல. அத்தனைப் பேருக்கும் முன்னாடி, பிடிச்சுத் தொடுற மாதிரி தொட்டேன்னு சொல்ற… அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்றாள்.

 

“நீ கூடத்தான் இப்பக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தப்பா பிஹேவ் பண்றான்னு சொன்ன…”

 

“நீ சொன்னதும் நான் சொன்னதும் ஒன்னா?”

 

“ஒன்னு தான்! நம்ம ரெண்டு பேர் மனசார லவ் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் பழி வாங்கத்தான் எல்லாமே பண்ணிட்டு இருந்தோம். லவ் பண்ணதுக்கு அப்புறம், நான் பண்ண ஒரே தப்பு அன்னைக்கு அப்படிப் பேசுனது மட்டும்தான். அதுக்காக, இந்த ஆறு மாசமா உன் பின்னாடி அலைஞ்சுகிட்டு இருக்கேன். இதுக்கு மேல என்ன பண்ணச் சொல்ற?”

 

“ம்ம்… நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க!”

 

“சத்தியமா?”

 

“ம்ம்!”

 

“ஆமா, உடம்பு ஃபுல்லா மேக்கப் தூக்கலா இருந்தாலும், உதட்டுல ஒண்ணுமே இல்லையே…” என்றவன் அவள் காதுக்குள் மீசை நுழைத்து, “எனக்காகவா?” கேட்டான்.

 

கூச்சம் தாங்காது நொந்து போனாள்.

 

உடல் அசைவுகளை வைத்து உணர்வுகளைப் படித்தவன், திக்குத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவனுக்கு வழி கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான்.

 

“பிடிக்காதவன் தொட்டா கூச்சம் வருமா முதலாளி…” கேட்டு மீசையை உறவாட விட, பேச வந்தவளின் பேச்சுக்கள் சிதறி அவளுக்குள் அடங்கிப் போனது.

 

“முதலாளி நாக்கு, பாம்புன்னு கேள்விப்பட்டேன். இப்படித் தவளை மாதிரித் தந்தி அடிக்குது.”

 

நாக்கைப் பிடுங்கும் அளவிற்குக் கேள்வி கேட்பவன், அவள் பதில் கொடுக்க முயலும் நேரம் தந்திரமாக அவளை ஆளத் தொடங்க, சிக்கிக் கொண்டது புள்ளிமான்! அவன் வசதிக்குச் சேலை ஒத்துழைத்தது. இடைக்குள் விரல் நுழைத்து மதி மயங்கிப் போனவன், ஆறு மாத காலமாகப் பட்டினி கிடந்த விரதத்தைத் தீர்த்து வைத்தான்.

 

கால் இரண்டும் பின்னிக்கொண்டு, அவன் ஆசைக்கு மறைமுகச் சம்மதம் தெரிவித்தது. ஒப்பனை இல்லாத உதட்டை உரசி உயிர் நோக வைத்தான். அவன் மட்டுமா விரதம் இருந்தது? வேண்டாம் என்ற நினைப்புத் தான் ஓயாமல் மூளைக்குள் உலா வரும்! நினைக்க வேண்டாம் என்றதுதான் நொடி குறையாது நினைவுக்கு வரும்!

 

அவனைக் காதலிக்கவில்லை என்றவள், இந்த இடைவெளியில் அளவுக்கு அதிகமாகத் தனிமையில் காதலித்தாள். முதல் முறை அவனை ரோட்டில் தள்ளி, காலணிகளை உயர்த்திக் காட்டியது முதல் கொண்டு, கடைசியாகப் பதில் கொடுத்து அனுப்பி வைத்தது வரை எல்லாம் காதலாகத் தெரிந்தது. சண்டையிட்டு முறைத்தது அன்பாகத் தெரிந்தது. தனிமையில் இருந்த தருணங்கள் பொக்கிஷமாக இருந்தது. காதல் செய்த நினைவுகள் தேனாகத் தித்தித்தது. அதனோடு பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு நிஜமானது போல் இருக்க, தன்னையும் அறியாமல் மனதுக்குள் ஒளித்து வைத்ததை வெளிக்காட்ட ஆரம்பித்தாள்.

 

எதிரெதிர் துருவங்கள் மட்டுமல்ல! ஒன்றைப் போல் இருக்கும் ஒன்றும் கூடத் தன் துணை கிடைத்ததும் ஓடிச் சென்று சேர்ந்து கொள்ளும். அவன் மூச்சுக்காற்று தனக்குள் பட்டதும் உருகிப் போனவள், இதழ்கள் உரசிக் கொண்டதில் மீண்டும் பிறந்தாள். அமைதியாகத் தன் ஆட்சிக்கு ஒத்துழைக்கும் அவள் எண்ணம் சிதறாது, மென்மையாகக் கையாண்டவன் கீழ் இதழைத் தன் இதழுக்குள் சிறைப் பிடிக்க அவளது மேல் இதழ் துணைக்குச் சென்றது.

 

தன்னுடைய மோகத்தைத் தாங்கிக் கொள்ளாது, உடல் குறுகிப் படுக்கும் மனைவியைப் பின்பக்கம் இருந்து அணைத்தவன், கழுத்துக்குள் ஊடுருவி நெஞ்சுக் குழிக்குள் இதழ் பதித்தான். அங்கேயே அவனைச் சிறைப் பிடித்தாள். விடுதலை பெற எண்ணம் இல்லாத கைதி, அவள் தேகம் என்னும் சிறைக்குள் சிக்கிச் சிதைய, ஆடைகள் மெல்ல விலகியது.‌

 

அடிக்கடி அவன் முகத்தில் வந்து உறவாடும் கூந்தலை ஒதுக்கி விட்டு நொந்து போனவன், நெற்றியில் சூழ்ந்திருந்த சின்ன முடிகளை ஒதுக்கிவிட்டுக் குங்கும வகுட்டில் இதழ் பதித்தான். மீசை நுனியில் முத்தம் கொடுத்தாள். தாடைக்குக் கீழ் உண்டான குழியில் தன்னைத் தொலைத்தவள், ஆடை இல்லாத வெற்று முதுகை இரு கைக்குள் சுருட்டிக் கொண்டாள்.

 

அவன் வாங்கி வைத்த குளிரூட்டி புதிது என்பதால், பந்தாவாகக் குளிர்ந்து கொண்டிருந்தது. அதைச் சிறிதும் மதிக்காத வேர்வைத்துளி, இருவரையும் நீருக்குள் மீனாக நீந்த வைத்தது. நான்கு சுவருக்குள் தன்னவளின் முனங்கலை ஒளித்து வைத்தவன், அவளுக்குள் தன் ஆண்மையைப் பதுக்கி வைத்தான்.

 

முத்த மருத்துவத்தைக் கையாண்டான் கருடேந்திரன். முத்த மருந்தை வாங்கிக் கொண்டு மனம் மாறினாள் ரிதுசதிகா. சண்டை சச்சரவு ஆயிரம் இருந்தும் காதல் வென்றிருக்கிறது.

 

பிரிவுக்குப் பின் கிடைத்த முத்தத்தை விடாமல் தொடர்ந்தான். முதுகை இறுக்கிப் பிடித்தவளின் கண்ணாடி வளையல்கள் கதறியது. தனக்காக உருவான கூந்தலுக்குள் முகம் நுழைத்து இதழ் பதித்தவன், அதை உருவாக்கியவளுக்குத் தன்னையே கொடுத்தான்.

 

சேலை விலக அங்கம் அவனுக்கானது! முத்தங்கள் தொடர வெட்கம் அவளுக்கானது! தொடுதல்கள் தொடரத் தேவைகள் அவனுக்கானது! கட்டி அணைக்க மோகம் அவளுக்கானது! இருவரும் காதலிக்கத் தாம்பத்தியம் அவர்களுக்கானது!

 

***

 

தாம்பத்தியத்திற்கு நேரமென்ன, காலமென்ன? பகல் பொழுதில் ஆரம்பித்தவர்கள், இருட்டின் துணையைத் தேடிக் கொண்டனர். இனிக்க இனிக்கக் காதல் செய்தவர்கள் உடல் சோர்வில் கண் அயர்ந்தனர். காதல் ஆட்டத்தில், பூட்டி வைத்த மனத்தைத் திறந்தவர்கள் பூட்டிய வீட்டைத் திறக்க வேண்டிய சாவியைத் தொலைத்து விட்டனர். அந்தோ பரிதாபமாக அந்த அறைக்குள் அது காணாமல் போக, கருடனை நம்பி அவன் வீட்டு ஆள்கள் வாசலில் நின்றார்கள்.

 

உள்பக்கம் பூட்டு போட்டிருப்பதை அறியாது தட்டிக் கொண்டிருந்தனர். காதல் மயக்கம் அவர்கள் காதிற்குள் அந்தச் சத்தத்தைச் சேர்க்கவில்லை. இருவர் எண்ணையும் மாற்றி மாற்றித் தொடர்பு கொண்டார்கள். நடுக்கூடத்தில் அவை தனியாகக் காதல் செய்து கொண்டிருந்தது.

 

வந்து இரண்டு மணி நேரமாக, வாசலிலேயே நின்றிருந்தவர்கள் இரவு பத்து ஆனதில் கடுப்பாகி, “கருடா கருடா…” கும்பலாகக் கத்த ஆரம்பித்தனர்.

 

அதில் அவனின் காதுகள் உணர்வுகள் பெற, ரிதுவின் கண்கள் திறந்தது. ஒரே நேரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தவர்கள், ஆடை இல்லாத தேகத்தைக் கண்டு முகம் சிவந்து போனார்கள். அதை இரு நிமிடத்திற்குப் பின் நீடிக்க விடவில்லை குடும்பத்தார்கள். புத்தி தெளிந்து, ஆடைகளை உடுத்திக் கொண்ட இருவரும் சாவியைத் தேட ஆரம்பித்தார்கள்.

 

“எங்கடி போட்ட?”

 

“என்னைக் கேட்டா?”

 

“நீதான எடுத்த?”

 

“எடுத்து உன்கிட்டத் தான் கொடுத்தேன்!”

 

“பொய் சொல்லாதடி!”

 

“கொடுக்கும்போது பல்லக் காட்டி, முத்தம் கொடுத்துக் கொஞ்சுனது மறந்து போச்சா?”

 

“ஆ..அது… நான் உன் மேல தான் போட்டேன்!”

 

“எரும மாடு, நீயே என் மேல தான் இருந்த…”

 

“தப்பு தப்பாப் பேசாதீங்க முதலாளி!”

 

“பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு என் மேல பழிபோடாத.”

 

“நான் என்னடி பண்ணேன்?”

 

“நீ என்னடா பண்ணல? சிவனேன்னு கோவிலுக்கு வந்தவளை உள்ள தள்ளிப் பூட்டி…”

 

“ஏய்!”

 

“உங்க அம்மாவும், அப்பாவும் உள்ள வரட்டும்… நீங்களே பாருங்கன்னு காட்டுறேன்.”

 

“வெக்கமே இல்லையாடி உனக்கு?”

 

“இப்படிக் கன்னத்தைக் கடிச்சு வைக்கும் போது உனக்கு எங்கடா போச்சு வெட்கம்?”

 

“அப்பவே வேணாம்னு சொல்ல வேண்டியது தான…”

 

“எங்கடா சொல்ல விட்ட?”

 

“டா போடாதடி!”

 

“நீ டி போடாதடா…”

 

“அப்படித்தான்டி போடுவேன்!”

 

“அப்படியா… ஐயோ அடிக்கிறானே, அய்யய்யோ! சித்திரவதை பண்றானே…” என்றதும் தாவி மனைவியின் வாயை மூடியவன், “ராட்சசி!” கரகரத்தான்.

 

“டேய்! இன்னும் என்னடா பண்ற? எவ்ளோ நேரம் தட்டிட்டு இருக்கோம். கதவைத் திறடா.” கத்தினார்கள்.

 

“இவங்க வேற…”

 

“ஹா ஹா… சாவிய எடுத்துப் பேண்ட்டுக்குள்ளயா போடுற, பேண்ட்டுக்குள்ள…. குடும்பமா சேர்ந்து கும்மப் போறாங்க பாரு.”

 

“அப்படியெல்லாம் புருஷனைக் கைவிடக் கூடாது பொண்டாட்டி!” சிணுங்கல் கொஞ்சத் தோன்றியது.

 

தன்னை ரசித்து கொண்டிருப்பவள் செயலில் உடல் குறுகிக் குழைந்து நின்றவன், “அப்படியெல்லாம் பார்க்காதடி!” கன்னத்தை இடித்தான்.

 

“எப்படியோ கவுத்துட்ட.”

 

“அதுக்கு நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்!”

 

“என்னத்தப் பெருசா பட்ட? ஒரு முத்தத்தைக் கொடுத்து ஆஃப் பண்ணிட்ட.”

 

“ஆப் ஆகிட்டியா…” கேட்டுக் கொண்டு கட்டி அணைத்தவன், கண்ணாடி முன் நிறுத்தித் தான் கடித்த கன்னத்தை இதழால் வருட, “டேய்!” என்ற சத்தம் அதைக் கெடுத்தது.

 

தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தவன் சட்டையைப் பிடித்து இழுத்து, கண்ணாடியை ஒட்டி நிற்க வைத்தவள், “நிஜமாவே பிடிக்குமா என்னை…” தலை சாய்த்துக் கேட்க, வளைவு நெளிவான இடை அவன் இரு கைக்குள் அடங்கிப் போய் அவன் வயிற்றோடு ஒட்டி நின்றது.

 

“ஏன்டி இப்படிக் கேக்குற?”

 

“சும்மாதான்!”

 

“சொல்லு?”

 

“என்னை உனக்குப் பிடிச்சாலும்… என் கூட வாழக் கஷ்டமா இருக்கும்னு தோணுதா?”

 

ஒரு கை இடைக்குள் இருப்பதால், ஒரு கையால் கன்னத்தைப் பிடித்து மெதுவாக வருடி விட்டவன், “நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிற…” என்றான்.

 

“நான் உன் கூட இருந்தா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்!”

 

“யாருக்கும் அடங்காதவள், எனக்கு மட்டும் அடங்கி இப்படி முகம் சிவக்க நிற்கிறதைப் பார்க்கிறது எவ்ளோ பெரிய கொடுப்பினை தெரியுமா? அதை எனக்காகக் கொடுத்துட்டுக் கஷ்டமா இருக்கான்னு கேக்குறியேடி மக்கு…”

 

“அப்புறம் ஏன் வேண்டாம்னு சொன்ன?”

 

“ஃபியூச்சர்ல, இவனை விட நல்ல லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணி இருக்கலாம்னு நீ நினைச்சிடக் கூடாதுல்ல.”

 

“நான் அப்படி நினைப்பேன்னு நம்புறியா?”

 

“நினைப்பேன்னு தப்பா நினைச்சுட்டேன். இப்பத்தான் உண்மை எதுன்னு புரிஞ்சுகிட்டேன்.”

 

“என்ன?”

 

“என் பொண்டாட்டிக்கு, நான் இல்லாம ஒரு நொடி கூட நகராதுன்னு…”

 

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையே!” என்றவள் நெற்றி முட்டி,

 

“அன்னைக்கு நான் ரூமுக்கு வரும்போது உன்ன மட்டும் பார்க்கல. என் டிரெஸ்ஸையும் தான்…” என்றதும் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், அவன் இல்லாத அவன் ஆடையோடு உறங்கிய தருணத்தை எண்ணி மனம் கலங்கினான்.

 

முகம் நிமிர்த்தி, நெற்றியில் ஆரம்பித்து அவள் தாடை வரை திகட்டத் திகட்ட இதழ் பதித்து முத்தத்தால் முகம் சிவக்க வைத்தவன், பேச வருவதற்குள் கதவை இடிக்கவே ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு ஒரு முடிவைக் கட்ட எண்ணிச் சாவியைத் தேட ஆரம்பித்தார்கள். எவ்வளவு நேரம் தேடியும் கிடைக்காததால்,

 

“உண்மையச் சொல்லுடி சதிகாரி! என்னைப் பழி வாங்கப் பிளான் பண்ணிட்டியா?” இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேட்க, அந்நொடிதான் சரியாக ரிதுவின் கையில் அந்தச் சாவி கிடைத்தது.

 

மகிழ்வோடு அதைக் காண்பிக்கக் கை உயர்த்தியவள், அவன் சொன்ன வாசகத்தில் ருத்ரதேவியாக முறைக்க, “ஹா‌ ஹா… என் பொண்டாட்டி சமத்து! புருஷனுக்காக மலையவே துரும்பாக்குவா… ஒரு சாவியைத் தேடி எடுக்க மாட்டாளா…” எனக் கண்ட மேனிக்கு வழிந்து கொண்டு சாவியை வாங்கச் சென்றான்.

 

தலையாட்டிக் கொண்டு பின்னால் நகர்ந்தவள், திறந்திருந்த ஜன்னல் வழியாகச் சாவியைத் தூக்கி அடிக்கப் பார்த்தாள்.

 

“அடிப்பாவி! ரத்தக்காட்டேரி… திமிரு புடிச்சவளே… எதுக்குடி தூக்கிப் போடப் பார்க்குற?”

 

“உன்னப் பழி வாங்கத்தான்!”

 

“இங்கப் பாரு ரிது, ரத்தத்துக்கு ரத்தம்! பழிக்குப் பழி! குடும்பத்துக்கு நல்லதில்ல.”

 

“உன்ன மாதிரி ஓவரா பேசுறவனுக்கு நல்லது!”

 

“வேணாம் ரிது!”

 

“வேணும் கருடா…”

 

“வெளிய உன் அத்தை தான்டி நிக்கிறாங்க.”

 

“இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்காக நிக்கட்டும்!”

 

“அடியே…”

 

“ப்ச்! நானும் நல்லவளா நடக்கத் தான்டா பார்க்கிறேன்…” எனச் சாவியைத் தூக்கி அடிக்கப் பார்க்கும் அந்தக் கையைத் தாவிப் பிடித்தவன், “போட்டுருவியா?” அவள் தேகம் உரச நின்று கொண்டு கேட்டான்.

 

“ம்ம்!”

 

“எங்க போடு?”

 

“இன்னும் ஒரு இன்ச் கிட்ட வந்தா போட்டுடுவேன்!”

 

“ஆஹான்…”

 

ஆடையைத் தாண்டி தேகத்தைக் களவாடத் துடிக்கும் அவனது தேக அசைவில் மதி மயங்கிப் போனவள், வரும் வெட்கத்தை சிரிப்புக்குள் ஒளித்து வைத்து, “கருடா…” என்றழைக்க, அவனது ஓசை வழக்கம் போல் அவள் நெஞ்சுக் குழிக்குள் அடங்கிப் போனது.

 

சிறிது நேரத்திற்கு முன், கொஞ்சத் தோன்றிய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, இருக்கும் இடைவெளியைக் குறைத்து நின்றவள் இரு கைகளையும் அவன் தோளுக்கு மேல் உயர்த்தி வைத்து, “சாவியப் போட்டுட்டா என்னடா பண்ணுவ?” கேட்டுக்கொண்டு மூக்கு நுனி உரசி வார்த்தையை அவன் இதழுக்குள் நுழைத்தாள்.

 

“நாலாவது ரவுண்டுக்கு ரெடியாயிடுவேன்!”

 

“சாவி வேணாமா?”

 

“இப்படிப் பக்கத்துல பொண்டாட்டி நின்னா எவனுக்கு வேணும்?”

 

“ப்ச்! அவங்க இன்னும் கொஞ்ச நேரம் வெளியவே இருக்கட்டுமா…”

 

“பொண்டாட்டி சொன்னா வேணாம்னா சொல்லப் போறேன்!”

 

“அப்போ சரி!” என்றவள் அந்தச் சாவியை ஜன்னல் வழியாகத் தூக்கி அடிக்க, “அடிப்பாவி!” அதிர்ந்தான் கருடேந்திரன்.

 

மோகம் கலைந்து கண்களை விரித்துக்கொண்டு நிற்கும் கட்டியவனைக் கண்டு சத்தமிட்டுச் சிரித்தவள், மீண்டும் கைகளைத் தோளுக்கு மேல் உயர்த்தி வைத்து, “அழகா இருக்கடா!” என்றாள்.

 

“இவ்ளோ நேரம் மக்கர் பண்ணி, உனக்கும் சேர்த்து என்னைப் போராட வச்சிட்டு, இப்ப இப்படிப் பேசுறியே… உனக்கே நல்லா இருக்கா?”

 

நெஞ்சில் முளைத்திருக்கும் சிறு முடிகளை, ஒரு விரலால் சுருட்டி இழுத்து அவன் மனத்தை நோகடித்தவள், “இப்பத் தான்டா உன்னைக் கொஞ்சத் தோணுது…” கன்னத்தில் இதழ் பதிக்க, வெட்கம் ஆட்கொண்டது அவனை.

 

“கொஞ்சிக்கவா?”

 

“பழி வாங்க முடிவு பண்ணிட்ட!” என முறைப்பை வாங்கிக் கொண்டவன்,

 

“எல்லாம் பொண்டாட்டி இஷ்டம்!” சரணடைந்தான்.

 

வெளியே நின்றிருந்தவர்கள் தட்டிப் பார்த்து, கத்திப் பார்த்து, சோர்ந்து மொட்டை மாடிக்கு உறங்கச் சென்றுவிட, கொஞ்சித் தீர்த்தவள் விலகும் நேரம் சிறைப்பிடித்தான் கருடேந்திரன்.

 

அவள் நேரம் முடிந்து அவன் நேரம் தொடங்கியது. தான் கொடுக்கும் பொழுது அவன் ஒத்துழைப்பை முழுதாக அனுபவித்தவள், அதைச் சிறிது கூடக் கொடுக்காது போக்குக் காட்டிக் கொண்டிருக்க, கொஞ்சலுக்குச் சிறையே சரி என்று சிறையிடுதலைக் கையாண்டான்.

 

சிறைக்குள் இருக்கும் பெண்மையைச் சிறையிட்டுக் கையாண்ட அவன் செவிக்குள், “சிறையிடாதே கருடா!” என்ற அவளின் வார்த்தை தான் ஓயாது கேட்டுக் கொண்டிருந்தது.

 

முற்றும்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!