அத்தியாயம் 11
சோழபுரம்,
கவியும் சோழனும் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் கவி யாரிடமும் எதுவும் பேசாமல் பேருக்கு சாப்பிட்டு விட்டு சரியாக தூங்காமல் கவலையுடன் நாட்களைக் கழித்து வந்தாள். ராஜன் தான் கவியை நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தார்.
சோழன் அப்போது தான் வெளியே இருந்து வீட்டுக்கு வந்தான். ராஜன் ஐயா அவனை அழைத்து கவியைப் பற்றி பேசினார். சோழா நீ தான் கவியைப் பார்த்துக்கணும் ஆனால் நீ இப்படி எதுவுமே கண்டுக்காம இருந்தா அந்த பொண்ணு எப்படி தன்னோட துக்கத்தில் இருந்து வெளியே வரும். கவிக்கு நம்ம தான் ஆதரவா இருக்கணும் அப்படின்னு சொல்றார்.
அதற்கு சோழன் எந்த ஒரு பதிலும் கூறாமல் அப்படியே தன் அறைக்கு சென்று விட்டான். அங்கே கவி பால்கனியில் நின்று நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதைப் பார்த்தவுடன் சோழனுக்கு இரண்டு நாட்கள் முன்பு நடந்த எல்லாம் நினைவுக்கு வந்தது.
மும்பை,
இரண்டு நாட்களுக்கு முன்பு,
கீதா இறந்த மறுநாள் காலை சோழன் தான் முதலில் கண் விழித்தான். எழுந்ததும் அவனுக்கு எதிராக கட்டிலில் கவி தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். முகமெல்லாம் வீங்கிப் போய் மிகவும் பாவமான தோற்றத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
சோழன் அவளைப் பார்த்து விட்டு குளியலறை சென்று குளித்து விட்டு வந்தான். அப்போதும் அவளை எழுப்பாமல் வெளியே சென்று விட்டான். ராம் பிரசாத் காலையிலேயே அவனை வந்து பார்த்தார். அவனிடம் தம்பி நாளைக்கு காலையில சாமி கும்பிட்டு விட்டு நீங்கள் ஊருக்கு கிளம்பலாம் என்றும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கே தங்கி இருக்குமாறும் கேட்டார்.
அவனும் எதுவும் சொல்லாமல் சரி என்று தலையை மட்டும் ஆட்டினான். சாப்பிட கொஞ்ச நேரத்தில் கொண்டு வர சொல்றேன் என்று சொல்லி விட்டு சென்றார். சோழன் அமைதியாக அமர்ந்து யோசித்துக் கொண்டு இருந்தான். காலை உணவு வந்ததும் பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கவியை மறுபடியும் சென்று பார்த்தான்.
அவள் அப்போதும் தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது சேரனிடம் இருந்து ஃபோன் வந்தது. அதில் அண்ணா ஐயா உங்கள தங்கி இருந்து பார்த்து விட்டு வரச்சொல்லி சொன்னார் என்று கூறினான். அதற்கு சோழன் எதுவும் சொல்லாமல் ஃபோனை வைத்துவிட்டான். இந்த அண்ணா ஏன் தான் இப்படி இருக்காரோ என்று திட்டிக்கொண்டே சென்றான்.
கவியும் 11 மணி போல் எழுந்து வந்தாள். அப்போதும் அவளின் கண்ணீர் நிற்கவே இல்லை. கீதாவை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். சோழன் அவளைப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ராம் வந்து கவியை சாப்பிட சொன்னார். எனக்கு வேண்டாம் அங்கிள். நான் அப்புறமா சாப்பிடுறேன் என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து விட்டாள்.
சோழன் அவளைப் பின் தொடர்ந்து சென்று இப்போ நீ ஏன் இப்படி இருக்க, நீ சாப்பிடாம இருந்தா உன் அம்மா திரும்பி வந்திருவாங்களா, இல்லைல அப்புறம் எதுக்கு இப்படிலாம் பண்ணிட்டு இருக்க, நீ இப்படி இருக்கணும்னு தான் உங்க அம்மா விரும்புவாங்களா. எனக்கு சாப்பாடு வீணாக்கினா பிடிக்காது. இப்போ நீ வந்து சாப்பிடல அப்புறம் நான் இன்னைக்கே ஊருக்குக் அழைச்சிட்டுப் போய்டுவேன் அப்படின்னு சொல்லிட்டு போய்டுறான்.
கவியும் சிறிது நேரம் கழித்து சென்று கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் அறைக்கு திரும்பி விட்டாள். அப்படியே சோழன் மிரட்டல் விட்டே அவளை சாப்பிட வைத்து அந்த நாளைக் கடத்தினான். அன்று இரவும் அப்படியே கழிந்தது.
அடுத்த நாள் காலையிலேயே கீதாவிற்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் ராம் மற்றும் அவரது மகள் குடும்பத்திடம் சொல்லி விட்டு கிளம்பினர். கவி தன் வீட்டைத் திரும்பி பார்த்து அழுது கொண்டே விடை பெற்றாள். அப்படியே ஊர் வந்து சேர்ந்தனர்.
இதை எல்லாம் நினைத்துப் பார்த்த சோழன் கவியின் அருகில் சென்று அவளைப் பார்த்தான். அவள் அவன் அருகில் வந்தது கூட தெரியாமல் நிலவைக் கண்ணீருடன் வெறித்த வண்ணம் இருந்தாள். அப்போது சோழன் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது அது உனக்கு நியாபகம் இருக்கா.
உன் அம்மா விருப்பத்துக்காக தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்போ அவங்களுக்காக நீ இந்த வீட்டு மருமகளாக உன்னோட கடமைகளை எப்போ நிறைவேற்ற போற அப்படின்னு கேள்வி கேட்டுட்டு போய் படுத்துக் கொண்டான்.
கவி அவனைக் கண்ணீருடன் திரும்பிப் பார்த்து விட்டு அவளும் சென்று படுத்துக் கொண்டாள்.
இப்படி செல்லும் இவர்களின் வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று அடுத்தடுத்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.