அடியே என் பெங்களூர் தக்காளி…(21)

4.7
(24)

அத்தியாயம் 21

 

 

“நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் திலீப்” என்ற பல்லவியிடம் , “என்ன ஹெல்ப் பண்ணுவ” என்றான் திலீப் வர்மன்.

 

“காய்கறி கட் பண்ணி தரேன் டா” என்ற பல்லவியிடம் , “சரி இந்தா கட் பண்ணு நல்லா பொடிசா கட் பண்ணனும்” என்று கூறி விட்டு, ஒரு அடுப்பில் உலை வைத்து விட்டு மற்றொரு அடுப்பில் பருப்பு வேக வைத்தான்.

 

அவளோ வெண்டைக்காயை பொடி பொடியாக வெட்டிக் கொண்டு இருந்தவள் தன் விரலை வெட்டி விட்டு ஆ என்று கத்தினாள். “ஏய் பவி என்னாச்சு டீ” என்று அவன் பதறிட, “ஒன்றும் இல்லை டா கையை வெட்டிக் கிட்டேன்” என்று அவள் கூறிட, “லூசு” என்றவன் அவளது காயம் பட்ட விரலை தன் வாயில் வைத்து இரத்தத்தை உறிஞ்சிட, “அடப்பாவி என் இரத்தத்தை இப்படி ஸ்ட்ரால ஜூஸை உறிஞ்சிற மாதிரி உறிஞ்சுறியேடா” என்று கத்தினாள். “இரு டீ” என்றவன் அவளது காயத்திற்கு மஞ்சள் பொடி வைத்து கட்டுப் போட்டு விட்டு, “அம்மா தாயே மகமாயி நீ போயி டீவி பார்த்துட்டு இரு நான் சமைச்சு வச்சுட்டு கூப்பிடுறேன்” என்று கூறிட ,அவளோ சிரித்து விட்டு சென்று விட்டாள்.

 

இருவரும் இணைந்து மதிய உணவு சாப்பிட்ட பிறகு தான் பல்லவிக்கு தன் வேலையை பற்றிய நினைப்பே வந்தது. “அச்சச்சோ நான் மறந்தே போயிட்டேன் திலீப் எனக்கு நிறைய ஆர்டர் இருக்கு நான் உடனே கிளம்பனும்” என்று அவள் கூறிட, “இவள் ஒருத்தி” என்றவன் , “சரி வா” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான் திலீப் வர்மன்.

 

“நான் காண்பது கனவா இல்லை நிஜமா” என்ற அபிநயாவின் தலையில் கொட்டியவள் “வலிக்குது தானே அபாபோ நிஜம் தான்” என்று கூறினாள் பல்லவி.

 

 

“என்ன பவி நேற்று அவன் வேண்டாம்னு அழுத இன்னைக்கு” என்ற அபியிடம், “நாங்க சமாதானம் ஆகிட்டோம் சிஸ்டர்” என்ற திலீப், “சரி, சரி வேலையை பாருங்க” என்றான்.

 

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க திலீப்” என்ற பல்லவியிடம், “என் தக்காளியை ரசிச்சுட்டு இருக்கேன்” என்றான் திலீப் வர்மன். “ரசிக்கிறதுக்கு இங்கே என்ன இருக்கு” என்று அவள் கேட்டிட, “என்ன டீ இல்லை குண்டு குண்டு கன்னம் பெங்களூர் தக்காளி மாதிரி அப்படியே கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கு. கோலிக்குண்டு கண்ணு, ஜெர்ரி பழ உதடு, அழகான கிளி மூக்கு” என்று அவன் கூறிக் கொண்டே போக , “போதும் போதும் ஓவரா வர்ணிக்காதே” என்று சிரித்தாள் பல்லவி.

 

“நீ இப்படியே சிரிச்சுட்டே இருக்கனும் பவி” என்ற திலீப்பை பார்த்து புன்னகைத்த பல்லவி, “இது நிஜம் தானே திலீப்” என்று அவள் கேட்டிட, “உன் கையில் காயம் நிஜம் தானே அப்போ எல்லாமே நிஜம் தான்” என்று கூறினான் திலீப் வர்மன்.

 

“நீ திரும்பவும் ப்ராங்க்” என்று அவள் கூற வர, “அன்னைக்கே நான் ப்ராங்க் பண்ணலை பவி நிஜமாகவே உன்னை லவ் பண்ணினேன். லவ் பண்ணுறேன் சாகும் வரை உன்னை மட்டும் தான் லவ் பண்ணுவேன் என்னை நம்பு” என்றான் திலீப் வர்மன். அவனைப் பார்த்து புன்னகைத்த பல்லவி, “நம்புறேன் டா” என்று சிரித்தாள்.

 

“சீக்கிரம் வேலையை முடி இனி டெய்லி ஷாப்பிங், சினிமா, பீச்னு நாம ஜாலியா லவ் பண்ணிட்டு சுத்தனும் ஓகே வா” என்றான் திலீப். அவனைப் பார்த்து புன்னகைத்த பல்லவி, “இப்போ என்னை வேலை பார்க்க விடுறியா” என்றிட “சரி, சரி நீ உன் வேலையை பாரு நான் உன்னை பார்த்துட்டு இருக்கேன்” என்றான்.

 

“என்ன வைதேகி கவலையா இருக்க போல” என்ற செல்வராணியை பார்த்து அதிர்ந்து போனார் வைதேகி.

 

“இவங்க ஏன் இப்போ வந்தாங்க” என்று யோசித்த வைதேகியை பார்த்து புன்னகைத்த செல்வராணி , “நான் ஏன் இப்போ இங்கே வந்தேன்னு யோசிக்கிறியோ” என்றிட, “இல்லை அண்ணி” என்று அவசரமாக மறுத்தார் வைதேகி.

 

“நீ அப்படி தான் நினைச்சுருப்ப சும்மா மழுப்பாதே” என்ற செல்வராணி, “உன்னை மாதிரியே உன் பொண்ணையும் வளர்த்து வச்சுருக்க என்னத்த சொல்ல” என்றார்.

 

வைதேகி தலை குனிந்து நிற்க, “தலையை குனிஞ்சுகிட்டா எல்லாம் சரியா போயிருமா” என்ற செல்வராணி, “நாளைக்கு பல்லவியை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வர்றாரு அதான் நான் வந்திருக்கிறேன். உன் பொண்ணு கல்யாணம் எந்த தடையும் இல்லாமல் நடக்கும் நீ பயப்பட வேண்டாம்” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

 

“நான் வீட்டுக்கு போகனும் விடு” என்று பல்லவி கூறிட, “இன்னும் கொஞ்ச நேரம் என் கூட இருக்கலாமே பவி” என்றான் திலீப் வர்மன்.

 

“இன்னைக்கு முழுக்க உன் கூட தான் இருந்தேன் திலீப் மதியம் வரை உன் வீட்டில், அப்பறம் ஆஃபீஸ்ல” என்ற பல்லவியை முறைத்தவன், “அது என் வீடு இல்லை நம்ம வீடு” என்றான் திலீப் வர்மன்.

 

“சரி ,சரி நம்ம வீடு தான்” என்றவள், “நேரம் ஆச்சு நான் கிளம்பனும்” என்று அவள் கூறிட, “ஒரே ஒரு கிஷ் கொடு” என்றான் திலீப் வர்மன்.

 

“டேய் இது என்ன வம்பு அதான் காலையில் வீட்ல கொடுத்தேன்ல இது ரோடு, ரோட்டில் வச்சு எப்படி புரிஞ்சுக்கோடா” என்ற பல்லவியிடம், “புரிஞ்சுக்க மாட்டேன் எனக்கு இப்போ கிஷ் வேணும் நீ கொடுத்தால் மட்டும் தான் உன்னை விடுவேன்” என்றான் திலீப் வர்மன்.

 

“பைத்தியம் மாதிரி பண்ணாதே திலீப் யாராவது பார்த்தால் அசிங்கமா போயிரும்” என்று அவள் கூறிட, அவனோ சோகமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். “கிரிஞ்சு பண்ணுற திலீப் நீ” என்ற பல்லவியிடம், “அடிப்பாவி லவ் பண்ணுற பொண்ணு கிட்ட ஒரே ஒரு முத்தம் கேட்டேன் இதுக்கு பேரு க்ரிஞ்சா அநியாயம் டீ” என்றான் திலீப்.

 

“அநியாயம் தான்” என்றவள், “அங்கே பாரு” என்று அவன் முகத்தை திருப்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டு ஓடியே விட்டாள் அவளது வீட்டிற்குள். அவனோ தன் கன்னத்தை பிடித்துக் கொண்டு வெட்கப் பட்டு முகம் சிவந்து அங்கிருந்து கிளம்பினான்.

 

மங்கை அவளோ சந்தோஷமாக வீட்டிற்குள் வந்தாள். அவர்களது முத்தக் காட்சி சாம்பவியின் கண்ணில் பட்டு விட அவளது வயிற்றில் அமிலம் சுரந்தது.

 

“ச்சே இவளுக்கு போயி இவனா பேசாமல் அந்த ராகவ் கூடவே இவளுக்கு கல்யாணம் நடந்து இருந்திருக்கலாம் போல” என்று நொந்து கொண்டாள் சாம்பவி.

 

“என்ன மச்சி கன்னம் எல்லாம் சிவந்து போயி வந்திருக்க” என்ற ரஞ்சித்திடம், “ச்சீ போடா” என்று வெட்கத்துடன் கூறினான் திலீப் வர்மன்.

 

“என்ன டா கருமம் இது வெட்கம் எல்லாம் படுற” என்ற ரஞ்சித்திடம் , “பல்லவி என்னை கிஷ் பண்ணீட்டாள் மச்சி” என்று அவனை சுற்றிட, “டேய் பைக்ல வரும் போதே கனவு கண்டியா என்ன” என்றான் ரஞ்சித்.

 

“போடா எருமை உன் கிட்ட போயி சொன்னேன் பாரு” என்ற திலீப், “நாளைக்கு லீவு போட்டுரு பல்லவியை பொண்ணு பார்க்க போறேன்” என்று கூறினான்.

 

“டேய் நிஜமாவா சொல்லுற” என்ற ரஞ்சித்திடம், காலையில் இருந்து நடந்த நிகழ்வுகளை கூறினான் திலீப் வர்மன்.

 

“மச்சி சூப்பர் டா ஒரு வழியா பல்லவியை சமாதானம் பண்ணிட்ட போல” என்றான் ரஞ்சித். “ஆமாம் டா இனி என் பவியோட வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும்” என்றவன், “சரி வா சாப்பிடலாம்” என்றான் திலீப் வர்மன்.

 

 

“என்ன டீ பெரிய யோக்கியம் மாதிரி நேற்று பேசிட்டு இன்னைக்கு அவனுக்கு முத்தம் கொடுத்துட்டு இருக்க” என்ற சாம்பவியை அமைதியாக கையை குறுக்காக கட்டிக்கொண்டு பார்த்தாள் பல்லவி‌.

 

“உன் கிட்ட தான் பேசுறேன்” என்ற சாம்பவியிடம், “நான் ஒன்றும் உன்னை போல அக்காவுக்கு நிச்சயம் பண்ண இருந்த மாப்பிள்ளை கூட தப்பு பண்ணலை என்னை காதலிக்கிற ஒருத்தன், நான் காதலிக்கிற ஒருத்தனுக்கு தான் முத்தம் கொடுத்தேன் அது ஒன்னும் தப்பு இல்லை. சும்மா லூசுத் தனமாக என் கிட்ட வந்து பேசி வாங்கி கட்டிக்காதே” என்றாள் பல்லவி.

 

“ரொம்ப ஆடாதே பல்லவி உன் ஆட்டத்தை அடக்காமல் விட மாட்டேன்” என்ற சாம்பவியைப் பார்த்து புன்னகைத்த பல்லவி, “நான் எங்கே டீ ஆடிட்டு இருக்கிறேன் உன் கண்ணு என்ன குருடா” என்றாள்.

 

“முதலில் அப்பாகிட்ட சொல்லி உன்னை நல்ல டாக்டர் கிட்ட காட்டி கண்ணை செக் பண்ண சொல்லனும்” என்றாள் பல்லவி. “பல்லவி” என்று பற்களைக் கடித்த சாம்பவியை பார்த்து புன்னகைத்த பல்லவி, “எனக்கு தூக்கம் வருது அதனால் கொஞ்சம் வெளியே போயி பல்லை கடிச்சுட்டு இரு” என்று கூறிட கடுப்புடன் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள் சாம்பவி.

 

“என்ன டீ சின்ன சாத்தான் உன் ரூம்ல இருந்து கடுப்பா போயிட்டு இருக்கு” என்று வந்த சங்கவியை பார்த்த பல்லவி, “அத்தாச்சி” என்று அவளைக் கட்டிக் கொண்டாள்.

 

“எப்போ வந்தீங்க அண்ணன், பசங்க எல்லோரும் எப்படி இருக்காங்க” என்றாள் பல்லவி. “எல்லோரும் நல்லா இருக்கோம் பவிமா” என்ற குரல் கேட்டு திரும்பியவள், “அண்ணா” என்று அங்கே நின்றிருந்த சங்கவியின் கணவன் ஆதித்யனின் அருகில் சென்றாள்.

 

“எப்படி இருக்க பவிமா? என் செல்லத் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கப் போகுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா” என்றான் ஆதித்யன்.

 

“நல்லா இருக்கேன் அண்ணா பெரியம்மா எப்படி இருக்காங்க? இப்போ கூட இங்கே வரவில்லையா?” என்ற பல்லவியிடம், “அம்மாவை பத்தி உனக்கு தெரியாதா பவி சித்தப்பா மேல இன்னும் கோபமா தான் இருக்காங்க ஆனால் கண்டிப்பா என் தங்கச்சியோட கல்யாணத்திற்கு அம்மா வருவாங்க உன் அண்ணன் கூட்டிட்டு வருவேன் என்னை நம்பலாம்” என்றான் ஆதித்யன்.

 

“அத்தை” என்று வந்தனர் சங்கவியின் இரட்டை பிள்ளைகள் நிரஞ்சன், நிரஞ்சனா. அவர்களைக் கட்டிக் கொண்டாள் பல்லவி. “செல்லக்குட்டி இப்போ தான் அத்தையை பார்க்க வழி தெரிஞ்சதா” என்ற பல்லவியிடம், “உன் அண்ணன், அத்தாச்சி இரண்டு பேரும் எங்களை அழைச்சிட்டு வந்தால் நாங்களும் வரப் போறோம்” என்றாள் நிரஞ்சனா.

 

“ஏய் வாயாடி வந்ததும் வாயாட ஆரம்பிக்காதே அத்தை தூங்கட்டும்” என்று சங்கவி கூறிட, “அத்தாச்சி இன்னைக்கு பசங்க என் கூடவே தூங்கட்டுமே ப்ளீஸ்” என்றாள் பல்லவி.

 

(…அடியே…)

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!