ஹாலில் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்து இருந்தனர் அரவிந்த் குடும்பதிதினர்..
நான் என்ன தப்பா சொல்லிட்டேன்…
எனக்கு இந்த கல்யாணம் நடக்கிறதுல இஷ்டம் இல்லை…
அம்மா அவ மேல தப்பு இல்லை அத நான் கண்டிப்பாக நம்புறேன்…
டேய் நான் ஒன்னும் அந்த பொண்ண
கொலை செய்தவன்னு சொல்லவே இல்லையே..
ஆனாலும் எனக்கு நீ அந்த பொண்ண கல்யாணம் பண்றது பிடிக்கவில்லை அவ்ளோதான்..
ஏங்க அவங்க வீட்டுக்கு சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்துங்க என்று சுகுமாரிடம் கோபமாக கூறி அறைக்கு சென்று விட்டார்..
நானும் சொல்லறேன் கேட்டுக்கோங்க எனக்கு கல்யாணம் நடந்தா அது அவ கூட மட்டும் தான்..
இல்லைன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று அவனும் எங்கோ பைக்கை கிளப்பிக்கொண்டு சென்று விட்டான்..
இப்ப என்னங்க மாமா பண்றது என்று திவ்யா கேட்க?
அபிஷேக் எப்ப வரான் மா?
நாளைக்கு காலைல வரேன்னு சொன்னாருங்க மாமா..
அவன் வரட்டும்மா ; அவங்க வீட்ல இப்ப எவ்வளவு வேதனைல இருப்பாங்க ; இப்ப கல்யாண வேண்டாம்னு சொன்னா இன்னும் ஒடஞ்சிடுவாங்க.. நாம் இந்த நேரத்தில அவங்களுக்கு உதவியா இருக்கணும். கஷ்டப்படுத்தக் கூடாது. இத சொன்னா உன் அத்த புரிஞ்சுக்க மாட்டா.. இந்த வீட்டில அவ எடுக்குறது தான் முடிவு நாம எல்லாம் அவ சொல்றதா தான் கேக்கனும் அப்படின்னு இருக்கா..
அரவிந்த் கூட அந்த பொண்ண விட்டு கொடுக்க மாட்டார் ன்னு தான் தோனுது மாமா என்றாள்..
சரி மா நாளைக்கு பேசிக்கலாம் என்று கூறி விட்டார்..
இங்கு ஸ்டேசனில் கான்ஸ்டபிள் ஒருவர் பிரகதியிடம்” ஏம்மா உன்ன பார்த்தா பாவமா இருக்கு..இவரு ரொம்ப நல்ல இன்ஸ்பெக்டர்.. பார்க்க தான் கோவமா இருப்பார் ஆனா நல்லவர்…நீ மட்டும் உண்மைய சொல்லிட்டா கண்டிப்பா உதவி செய்வார் என்று கூறினார்”..
அண்ணா எனக்கு இங்க பயமா இருக்கு.. எங்க வீட்ல இருந்து யாரயாவது என் கூட இருக்க சொல்றிங்க மா?
அப்படி எல்லாம் யாரும் வரக்கூடாது மா..நாங்க எல்லாம் இருக்கோம் தானே.. ரேஷ்மா மேடம் இருக்காங்க..என்ன உன் அப்பா மாதிரி நினைச்சிக்க மா..
நீ சீக்கிரம் சொல்லிட்டா அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிப்பாங்க தானே என்று கேடீடார்…
அவளும் அழுது கொண்டே இருக்க;
அப்போது அரவிந்த் அவளுக்கு உணவு பார்சல் வாங்கி வந்தான்…
அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் “அண்ணா ஒரு பத்து நிமிஷம் அவ கூட பேசிக்கவா என்று கேட்க?”
அதெல்லாம் முடியாது பா.. அந்த மேடம் பார்த்தா திட்டுவாங்க என்றார்…
அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் நேரம்… நானே போயிடுவேன் என்று கெஞ்சி கேட்க..
சரிப்பா ஏதாவது பேசி அந்த பொண்ணு கிட்ட நடந்தத சொல்ல வச்சுட்டா நல்லது.. நீ பேசிப் பாரு..
ஆனா பத்து நிமிஷம் தான் என்றார்..
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா என்று பிரகதியை பார்க்க சென்றான்..
அவளோ அழுதழுது கண்கள் வீங்கி இருந்தது..
தலை முடி எல்லாம் கலைந்து சோகமாக அமர்ந்து இருப்பதை பார்த்து கண் கலங்கியது…
அவனைப் பார்த்து மேலும் அழுதாள்..
ஏய் அழுகாத டி…
மாமு நீயும் என்னை சந்தேக படுறியா?
இல்லை டி நான் எப்ப அப்படி சொன்னேன்..நீ தப்பே பண்ணி இருந்தாலும் நான் உன்ன விட்டு போக மாட்டேன் டி…
நெஜமாவே என்ன நம்பறியா?அம்மா அப்பா எல்லாம் எங்க? அவங்க என்னை நம்புவாங்களா?
ஹேய் அம்மா ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் இருக்காங்க… இங்க எப்படி அவங்க இருப்பாங்க…அப்பா ரெண்டு பேரும் சாப்பிட அனுப்பிட்டு தான் வந்தேன் என்றான்…
அவளுடைய கலைந்த தலையை முடியை ஒதுக்கிவிட்டு; கர்சீஃபில் முகம் துடைத்து விட்டு அவளுக்கு உணவு ஊட்டினான்.. அவள் மறுக்க அதெல்லாம் எடுபடவில்லை அவனிடம்.. அவன் தான் பேசியே அவளை கட்டுப்படுத்தி விடுவானே..
இங்க பாரு டி பயப்படாத என்ன நடந்துச்சு அத மட்டும் சொல்லிடு.. நான் வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நீ சொல்றதுல தான் எல்லாம் இருக்கு என்று அவளை அணைத்து விட்டு வெளியே வந்தான்..
அப்போது ரகு மறுபடியும் ஸ்டேசன் வந்தான்..
என்ன ! காலையில தான் வருவேன்னு சொல்லிட்டு போனாரு.. இப்ப உடனே வந்துட்டாரு என்று யோசித்த வாரே வணக்கம் வைத்தார் கான்ஸ்டபிள்..
அண்ணா அந்த பொண்ணு சாப்பிட்டுச்சா ? ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க?
அவரோ நடந்ததை கூற..
ரேஷ்மா அந்த பொண்ண உள்ள கூட்டிட்டு நீங்களும் வாங்க என்று சத்தமாக சொல்லி விட்டு சென்றான்…
அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றதும்..
அவள் அமர்ந்து கொண்டாள்..
அவளைப் பார்த்து சாப்டிங்களா என்று கேட்க?
ம்ம் என்று தலையாட்டினாள்..
ரெக்கார்டர் ஆன் செய்யுமாறு ரேஷ்மாவுக்கு செய்கை காட்ட அவளும் அப்படியே செய்தாள்..
இங்க பாரு மா அன்னைக்கு என்ன நடந்தது அதை சொல்லனும் சரியா என்று அதட்ட.. மீண்டும் பயந்து விட்டாள்…
படிச்ச பொண்ணு தானே.. எதுக்கு இப்படி இருக்க? அவனுக்கு மறுபடியும் கோபம்.. இவள் சொல்வதை வைத்துத் தானே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்..இவள் பயந்து கொண்டே இருந்தாள் அவனால் மட்டும் என்ன செய்ய முடியும்..
பிரகதி கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்க என்று ரேஷ்மா கூற…
அவளும் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்…
பிரகதி ஏதாவது சொல்லுங்க என்று ரேஷ்மாவும் கேட்க?
நான் சொல்றேன் ஆனா அவங்க என்னை எதுவும் பண்ணிடுவாங்களா?
யாரு ? என்ன பண்ணுவாங்க என்று ரகு கேட்க?
சார் அ..அது வந்து
அன்னைக்கு நான் வரும்போது கார் ஸ்டாப்லயே நின்னுடுச்சு.. நான் அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணி பார்த்தேன் எதுவேம் வரல..அதனால நடந்து போயிட்டு இருந்தேன்… கொஞ்சம் இருட்டிடுச்சு.. வேகமா போயிட்டு இருந்தேன்.. அப்ப அந்தப் பக்கம் என்னமோ சத்தம் வந்தது..
நான் பார்த்தேன் சார் என்று அழுக ஆரம்பித்து விட்டாள்…
என்ன மா பார்த்த? ரேஷ்மா கேட்க..
அது வந்து அது என்று தடுமாறினாள்..
அவளுக்கு தண்ணீர் கொடுத்தனர்..
ரிலாக்ஸ் மா.. டென்ஷன் ஆகாத என்ன நடந்ததுன்னு சொல்லு என்றான் ரகு…
அப்ப ரெண்டு பேர் ஒருத்தர அடிச்சாங்க…
நான் ஏதோ சண்டைன்னு நெனச்சு பார்த்தேன்..
திடிர்ன்னு ஒருத்தன் கத்தி எடுத்து அவர வேகமா நெறையா தடவை வெட்டிட்டாங்க என்று பயத்தில் நடுங்கிக் கொண்டு கூறினாள்…
அப்புறம் என்ன ஆச்சு என்று கேட்க?
நான் பயத்தில கத்திட்டேன்..
அவங்க என்னை பார்த்துட்டாங்க…
நான் ஓட ஆரம்பிச்சேன்..அதுல ஒருத்தன் மட்டும் துரத்திட்டே வந்தான்…அந்த வழியில ஒரு பழைய வீடு இருக்கு.. அதுக்குள்ள போயிட்டேன்…
அவனும் தேடிட்டு வந்தான்…
அப்புறம் யாருக்கோ ஃபோன் பண்ணி அந்த பொண்ணு தப்பிட்டா டா?
அவளை தேடிப் பாரு. கிடைச்சா போட்டு தள்ளிட்டு என்று அந்தப் பக்கம் கூற..சரி என்று வைத்து விட்டு மறுபடியும் தேட அவன் வேற பக்கம் ஏதோ சத்தம் கேட்டுச்சு ன்னு போயிட்டான்.. நான் அங்க ஒரு குறுக்கு வழி இருந்துச்சு..அந்த வழியா வீட்டுக்கு போயிட்டேன்…
அவங்க என்னை ஏதாவது
செஞ்சிடுவாங்கன்னு பயந்து தான் நான் எதுவும் பேசலை… அப்புறம் வீட்ல சொல்லவும் பயமா இருந்துச்சி எனக் கூறி முடித்தாள்…
அவன் சில பொருட்களை அவளிடம் காட்டி இது எல்லாம் உன்னோட தா என்று கேட்க?
ஆமா சார் ஓடி வரும் போது என்னமோ விழுந்துச்சு.. பயத்தில அது எடுககாம ஓடி வந்துட்டேன்..இந்த காப்பு என்னோடது, இந்த மோதிரம் என்னோடது சார் என்றாள்… இந்த சீப்பு என்னோடது இல்லை என்றாள்..
ஓகே நீ இந்த கடைக்கு போனியா என்று ஒரு கடையின் பெயரை அவன் கேட்க ?