அத்தியாயம் 25
“எதுக்கு டா சிரிக்கிற” என்ற பல்லவியிடம், “ஆனாலும் உனக்கு ரொம்ப கான்பிடென்ஸ் டீ ருக்மணி கார்ட்ஸ் கடைக்கு என் மாமியார் பெயர் வச்சுருக்க அதனால் கிண்டல் கூட பண்ண முடியலை” என்று அவன் மேலும் சிரித்திட , “டேய் குரங்கு ஏன் டா சிரிக்கிற” என்றாள் பல்லவி.
“பிசினஸ் வுமன்” என்று அவன் கிண்டலாக சிரிக்க, “போடா நாயே” என்று அவள் எழுந்து கொள்ள, “ஏய் தக்காளி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டீ ப்ளீஸ் சாப்பிடும் போது எழக் கூடாது சாப்பிடு” என்று அவளை அமர வைத்தான் திலீப் வர்மன்.
“ருக்மணி கார்ட்ஸையே நாம கொஞ்சம் டெவலப் பண்ணலாமே” என்று அவன் கூறிட, அவளோ அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு, “அதெல்லாம் வேண்டாம் எனக்கு இப்போ வரும் வருமானமே போதும் உனக்கு என்ன பிசினஸ் ஐடியா இருக்கோ அதையே பண்ணு” என்றவள், “நீயும் சாப்பிடு டா” என்று அவனுக்கு ஊட்டி விட அவனும் சாப்பிட்டான்.
“எருமை ஏன் டா விரலைக் கடிச்ச” என்று அவள் கேட்டிட, “உன் விரலா செல்லம் நான் நல்லி எலும்புனு நினைச்சேன் டீ” என்றான் திலீப் வர்மன். அவனது கொமட்டில் இடித்தவள் “ஒழுங்கா சாப்பிடு டா” என்று அவனுக்கு ஊட்டி விட அவனும் அவளிடம் வம்பு செய்து கொண்டே சாப்பிட்டான்.
அவன் சென்று பாத்திரம் தேய்த்துக் கொண்டு இருந்தான். அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்ட பல்லவி, “திலீப் நிஜமாகவே நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகும் நீயே எனக்கு சமைச்சு போடுவியா” என்று அவள் கேட்டிட, “நான் தான் டீ என் பொண்டாட்டிக்கு சமைச்சு கொடுப்பேன்” என்று கூறியவன் தன் வயிற்றை கட்டிக் கொண்டு இருக்கும் அவளது கையை பிடித்து அவளை முன்னால் இழுத்து அவளை அடுப்பு திண்டில் அமர வைத்தான்.
நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு கூட நீ இப்படி உட்கார்ந்து, “இந்தா பிடி, இந்த டப்பாவில் இருக்கிற முந்திரி பருப்பை சாப்பிட்டுக்கிட்டே என்னை வேலை வாங்கு போதுமா” என்று அவன் கூறிட அவனது தலை முடியை கோதி விளையாடினாள்.
கன்னத்தை அவளருகில் கொண்டு சென்று, “ஒரு இச்சு வைடி” என்று அவன் கேட்டிட, “பாத்திரம் ரொம்ப அழுக்கா இருக்கு அதை ஒழுங்கா கழுவு இப்போ தான் இச்சு வைக்கனுமாம் இச்சு ஒரு பஞ்ச் தான் வைக்கனும்” என்று அவள் கூறிட, “போடி அன் ரொமான்டிக் கேர்ள்” என்றான் திலீப் வர்மன்.
“மாமே நம்ம கல்யாணம் முடியட்டும் அப்போ தெரியும் நான் எவ்வளவு ரொமான்டிக் கேர்ள்னு” என்ற பல்லவியின் கன்னத்தில் செல்லமாக தட்டியவன், “பார்க்கலாம், பார்க்கலாம்” என்று கூறி விட்டு, “சரி எப்போ கிளம்பலாம்” என்றான் திலீப் வர்மன்.
“எங்கே டா” என்றவளிடம், “ராகவ்வை பார்த்து பேச” என்றான் திலீப். “அட ஆமாம்ல ஈவ்னிங் நான்கு மணிக்கு போகனும்” என்று அவள் கூறிட, “சரி அப்போ ஒரு குட்டித் தூக்கம் போடலாம்” என்றவன் அவளை அமர வைத்து அவளது மடியில் தலை வைத்து படுத்து உறங்க ஆரம்பித்தான். அவனது இந்த குழந்தைத் தனமான செய்கையை ரசித்தவள் அவனது தலை முடியை கோதி விட்டாள். அவன் உறங்கி விட குனிந்து அவனது கன்னத்தில் முத்தமிட்ட பல்லவி அவனது தலையை மீண்டும் கோதி விட்டபடி அப்படியே தானும் உட்கார்ந்த படியே உறங்கிப் போனாள்.
“என்ன கண்ணு எப்படி இருக்க” என்ற சதீஷ் அவளது இடையில் கை வைத்து கேட்டிட, சாம்பவியோ நெளிந்தபடி “மாமா எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும்” என்றாள்.
“என்ன உதவி கண்ணு” என்றவனிடம், “அந்த பல்லவியை நீங்க கற்பழிக்கனும்” என்று அவள் கூறிட, “ஐயோ அது பாவம் நான் உன்னை காதலிக்கிறேன் தங்கம். மாமா உனக்கு துரோகம் பண்ண மாட்டேன்” என்று அவன் கூறிட, “நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னா அந்த பல்லவியோட வாழ்க்கையை சீரழிக்கனும்” என்று சாம்பவி கூறினாள்.
“அது எப்படி சாம்பவி நான் அந்த பல்லவி பிள்ளைகிட்ட தப்பா நடந்துக்கிட்டால் அவளைத் தானே எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க நீ என்னடான்னா உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுற” என்றான் சதீஷ்.
“மாமா” என்ற சாம்பவி, அவனை நெருங்கி அவனது சட்டை பட்டனை திருகிக் கொண்டே “அவளை முதலில் கல்யாணம் பண்ணிக்கோங்க. என் அப்பா பேரில் இருக்கிற எல்லா சொத்துக்கும் அவள் தானே வாரிசு அப்பாவுக்கு நம்ம கிராமத்தில் இருக்கிற நிலத்தை எல்லாம் நீங்க தானே பராமரிப்பு வேலை எல்லாம் பார்த்து வச்சுருக்கீங்க அது எல்லாம் உங்களுக்கு சொந்தமானால் வேண்டாம்னா சொல்லுவீங்க” என்று சாம்பவி அவனது ஆசையை தூண்டி விட்டாள்.
“அதெல்லாம் சரி தான் கண்ணு ஆனால் எனக்கு என் அக்கா மகள் உன்னை கட்டிக்க தான் ஆசை நீ தான் வேற ஒருத்தனை கட்டிக்க ஆசைப்படுறியே” என்ற சதீஷை நெருங்கிய சாம்பவி, “மாமா நானே அவனை கழட்டி விட தான் திட்டம் போடுறேன். முதலில் அந்த பல்லவியை கல்யாணம் பண்ணிக்கோங்க அடுத்த ரெண்டு நாளில் நம்ம கல்யாணம் என்ன சொல்லுறீங்க” என்றாள் சாம்பவி. “எனக்கு நம்பிக்கை இல்லை தங்கம்” என்று கூறிய சதீஷ் அவளது இடையில் கை வைத்து தன் புறம் இழுத்திட , “இந்த பொறுக்கி அவனுக்கு தேவையான விஷயத்தை கொடுத்தால் தான் நம்ம பேச்சை கேட்பான்” என்று நினைத்த சாம்பவி அவன் இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுத்துப் போனாள்.
அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “நீ சொன்ன படி செய்து முடிக்கிறேன் தங்கம்” என்று கூறிய சதீஷ் தன் உடைகளை அணிந்து கொண்டு அந்த ஹோட்டல் அறையில் இருந்து வெளியே செல்ல சாம்பவியும் சென்று விட்டாள்.
“என்னடா தம்பி நீ எப்போ வந்த” என்ற வைதேகியிடம் , “நம்ம பெரிய பாப்பாவுக்கு கல்யாணம் அதைப் பற்றி சாமிக்கிட்ட குறி கேட்க சொன்னாருக்கா மாமா. கல்யாணம் நல்லபடியாக நடக்கும். அதுவும் நம்ம கிராமத்தில் இருக்கிற பூர்வீக வீட்டில் தான் கல்யாணம் நடக்கும்னு சாமியாடி சொன்னாரு அதான் அந்த விஷயத்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் சதிஷ்.
“வாடா சதிஷ்” என்ற வாசுதேவனிடம், “மாமா சாமியாடி கல்யாணத்தை நம்ம பூர்வீக வீட்டில் வைக்க சொல்லி சொன்னாரு” என்று தன் சகோதரியிடம் சொன்னதை அப்படியே வாசுதேவனிடமும் கூறினான் சதிஷ்.
“வா சதிஷ்” என்ற செல்வராணியிடம், பவ்யமாக வணக்கம் வைத்தான் சதிஷ். “அக்கா நம்ம பல்லவியோட கல்யாணம் ஊரில் உள்ள நம்ம பூர்வீக வீட்டில் தான் நடக்கனும்னு சாமி குறி சொன்னுச்சாம்” என்றார் வாசுதேவன்.
“நம்ம இரண்டு பேருக்கும் கூட கல்யாணம் அங்கே தானே நடந்துச்சு வாசு நம்ம வீட்டிலேயே பல்லவிக்கும் கல்யாணம் நடக்கட்டும்” என்று கூறிய செல்வராணி, “இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு கல்யாணத்திற்கு அதனால் நாம சீக்கிரமா ஊருக்கு போய் கல்யாண வேலையை பார்க்கலாம்” என்றார் செல்வராணி.
“சதிஷ் வீடு எல்லாம்” என்ற செல்வராணியிடம், “அதெல்லாம் பக்காவா சுத்தம் பண்ணி வச்சுருக்கேன்ம்மா” என்றான் சதிஷ். “ரொம்ப சந்தோஷம்” என்ற செல்வராணி, “சீக்கிரம் கிளம்புவதற்கு ஏற்பாடு பண்ணு வாசு” என்றார்.
“ஏன் டா நீ என்ன அவருக்கு வேலைக்காரன் மாதிரி எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்க. அந்த பல்லவியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொன்னாரே இப்போ அவளோட கல்யாணத்திற்கு நீ ஏன் வேலை பார்க்கனும்” என்றார் வைதேகி.
“அக்கா இன்னைக்கு நம்ம ஊரில் நான் தான் பஞ்சாயத்து தலைவர் அது யாரால கிடைச்ச பதவி எல்லாம் உன் புருஷனால அவரோட நிலங்களில் வெள்ளாமையை பார்த்து அதில் நான் கமிஷன் அடிச்சு கமிஷன் அடிச்சு இத்தனை வருஷத்தில் நமக்குன்னு சொந்தமா வீடு கட்டிட்டேன். நான்கு ஏக்கர் நிலம் வாங்கி தனியா விவசாயம் பண்ணிட்டு இருக்கேன் அதுக்கு எல்லாம் நன்றிக்கடன்” என்று தன் சகோதரியிடமே நடித்தான் சதிஷ்.
“சொல்லுங்க ராகவ்” என்ற பல்லவியிடம், “உனக்கு என் மேல கோபமா பல்லவி” என்றான் ராகவ். “புரியலை என்ன கோபம்” என்ற பல்லவியிடம், “நம்ம என்கேஜ்மென்ட் அப்போ நான் சாம்பவியை பிடிச்சிருக்குனு” என்று அவன் தயங்கிட, “கோபம் இருந்துச்சு ஏன் இப்போவும் இருக்கு ஆனால் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். நீங்க என்னை வேண்டாம்னு சொன்னது கூட நல்லதுக்கு தான். எனக்கு திலீப் கிடைச்சுருக்கான்” என்ற பல்லவியை அடி பட்ட பார்வை பார்த்தான் ராகவ்.
“பல்லவி அன்னைக்கு” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் ராகவ் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு நல்லாவே தெரியும் நீங்க சாம்பவியைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்க அப்படீன்னு முடிவு பண்ணி இருந்தால் அதை என்கேஜ்மென்ட் நடக்கிறதுக்கு ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னே கூட சொல்லி இருக்கலாம் ஆனால்” என்ற பல்லவி, “என்னை எத்தனையோ பேர் ரிஜெக்ட் பண்ணினாங்க அது எனக்கு பெரிய விஷயம் இல்லைன்னா கூட அவங்க எல்லோரும் ஃபோன்ல தான் வேண்டாம்னு சொல்லிட்டு போவாங்க. ஆனால் நீங்க சொந்த பந்தம் அத்தனை பேருக்கு முன்னாடி என்னை பிடிக்கவில்லைனு சொல்லி என் தங்கச்சியை பிடிச்சிருக்குனு சொன்னீங்க. அப்போ நான் பட்ட அவமானம் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துட முடியுமா? எனக்கு உங்க மேல இருக்கிற கோபம் எப்போதுமே போகாது ராகவ்” என்றாள் பல்லவி.
“சாம்பவி கூட அப்படி இருந்துட்டு எப்படி பல்லவி உன்னை கல்யாணம் பண்ணிப்பேன் என்னை கொஞ்சம் நீ புரிஞ்சுக்கலாமே” என்ற ராகவ்விடம், “ஒரு பொண்ணை ஒரு பையன் அவள் சம்மதம் இல்லாமல் அவளுக்கே தெரியாமல் ரேப் பண்ணிடுறான் அதுக்காக அவளை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது சரியா?” என்றாள் பல்லவி.
ராகவ் அமைதியாக இருக்க, “அன்னைக்கு உங்களுக்கும், சாம்பவிக்கும் நடந்தது கூட அப்படிப் பட்ட விஷயம் தான் அவளும் ரேப்பிஸ்ட் தான் அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்க எடுத்த முடிவு ரொம்ப ரொம்ப தப்பு” என்றாள் பல்லவி.
“அன்னைக்கு இந்த விஷயம் பற்றி உன் கிட்ட சொல்லி இருந்தால் என்னை கல்யாணம் பண்ணி இருப்பியா பல்லவி” என்றான் ராகவ்.
(.. அடியே….)