எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 25

4.7
(17)

புயல் – 25

சூர்யாவை பொருத்தமட்டும் அவனுக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமே அல்ல. அவனுக்கு தேவை அவனின் தாய் அவன் மீது வைத்த அன்பை போலவே தன்மேல் அன்பையும், அக்கறையையும் சுமத்த ஒரு ஆள்.

அக்ஷ்ரா தனக்கு நிச்சயமாக அப்படி ஒருத்தியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் அவளை தேர்வு செய்தான்.

அவளும் ஆரம்ப கட்டத்தில் அப்படித்தான் அவனிடம் உருகி உருகி காதல் மொழிகளை பேசுவாள்.

வாய்மொழியை உண்மை என்று நம்பியவன். அவளின் அகத்தை பற்றி அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டான்.

இருவரும் காதலிக்க துவங்கிய சற்று காலத்திலேயே சூர்யா தன் தாத்தாவிடம் அக்ஷ்ராவை பற்றியும் அவளை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை பற்றியும் கூறி விட.

அவருக்குமே மகிழ்ச்சி தான். தன் பேரனின் வாழ்க்கையை நல்ல படியாக அமைத்துக் கொடுத்துவிட்டால் அதன் பிறகு தனக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தோடு தான் அவரும் அக்ஷ்ராவை சூர்யாவிற்கு மனம் முடித்துக் கொடுக்க சம்மதித்தார்.

காளிதாசிற்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.. தன் நண்பனின் பேரனுக்கு தன் பேத்தியை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு கசக்குமா என்ன..

அதிலும், சூர்யாவை பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். பணத்தை எல்லாம் தவிர்த்து நல்ல குணமானவன், கண்ணியமானவனும் கூட..

முக்கியமாக அவனின் தந்தையைப் போல் கிடையாது. இதைவிட வேறு என்ன வேண்டும் என்று அவரும் சம்மதித்து விட்டார்.

ஆனால், இவர்களின் காதலுக்கு எதிரியாக வந்து நின்றது என்னவோ காஞ்சனா தான்.

அவ்வளவு எளிதில் அவர் இவர்களின் காதலுக்கு பச்சை கொடியை காட்டவே இல்லை.

“உனக்கு என்ன பைத்தியமா அக்ஷ்ரா.. போயும் போயும் அந்த குடிகாரனோட பையனை போய் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வந்து சொல்ற.. இதுக்கு நான் நிச்சயம் சம்மதிக்க மாட்டேன்”.

“மாம் ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ.. நான் சூர்யாவ ரொம்ப லவ் பண்றேன். சூர்யா ஒன்னும் அவங்க அப்பா மாதிரி கிடையாது. ஹி இஸ் சச் அ ஜென்டில்மேன்”.

“வாய மூடு! எல்லாம் எனக்கு தெரியும்.. அவன பத்தி எனக்கு கிளாஸ் எடுக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத. அவன் எவ்வளவு நல்லவனா இருந்தாலும் சரி, அவன் உனக்கு வேண்டாம். அதுவும் அந்த கமலாவோட பையன என் மருமகனா நான் நிச்சயமா ஏத்துக்க மாட்டேன்”.

“ஓகே மாம், உங்களுடைய விருப்பத்துக்கு நானும் சம்மதிக்கிறேன். ஆனால், சூர்யா போலவே நல்ல பணக்கார பையனா உங்களால் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியுமா.. அப்படி உங்களால முடியும்னா நான் சூர்யாவை விட்டுடுறேன். எனக்கு ஒன்னும் சூர்யா தான் என் உயிர், உலகம்னு டயலாக் எல்லாம் பேச மாட்டேன். எனக்கு அவனை மாதிரி நல்ல வசதியானவன் தான் வேணும். உங்களால சூர்யாவை மாதிரி நல்ல வசதியான மாப்பிள்ளையை கொண்டு வர முடியும்னா எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” என்றாள் தன் தோள்களை குலுக்கிக் கொண்டு.

தன் மகளின் வார்த்தை காஞ்சனாவிற்கு சற்று குழப்பத்தை தான் கொடுத்தது.

தான் வேண்டாம் என்றால் அவள் அழுவாள் அடம்பிடிப்பாள் என்று எண்ணியவருக்கு, அவளின் வார்த்தை சற்று திகைப்பை தான் கொடுத்தது.

“என்ன பேசுற நீ.. அப்ப நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணலையா?”.

“லவ் பண்றோம் தான்.. சூரியா என்னை எனக்காக மட்டுமே லவ் பண்றான். ஆனா, நான் அவனை மாதிரி கிடையாது. லவ் வித் பெனிபிட்ஸ்.. எனக்கு அவனுடைய லவ்வை விட அவனுடைய லைப் ஸ்டைல் தான் பிடிச்சிருக்கு. அந்த மாதிரி ஒரு லைப் ஸ்டைல் எனக்கு வேணும்.. அதனால தான் அவனை நான் லவ் பண்றேன்”.

“நீ என்ன சொன்னாலும் எனக்கு இதுல சம்மதம் இல்லை. பட், நீ அப்படி ஒரு வாழ்க்கையை வாழ ஆசைப்படும் போது இதுக்கு மேல உன்னுடைய விருப்பம்” என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு தான் அவர்களின் திருமணம் இனிதே நிறைவடைந்தது.

திருமணமான புதிதில் அனைத்துமே நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

அக்ஷ்ராவின் உண்மை முகம் தெரியாத சூர்யாவும் அவளுடன் நல்ல கணவனாக ஒன்றிணைந்து தான் வாழ்ந்து கொண்டு இருந்தான்.

சூர்யாவிற்கு குழந்தைகள் என்றால் அத்தனை பிரியம். தன் தாயே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தான்.

ஒவ்வொரு மாதமும் அவனின் எதிர்பார்ப்பு பொய்த்துக் கொண்டே இருந்தது. ஆனாலும், அவன் துவண்டு போகவில்லை.

எது எப்பொழுது நடக்க வேண்டும் என்பது முன்பே இறைவனால் தீர்மானிக்கப்பட்டது தானே.. அதன்படியே நடக்கட்டும் என்று விட்டுவிட்டான்.

ஆனால், இங்கே எது எப்பொழுது நடக்க வேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்படவில்லை. தன் மனைவியால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை அவன் அப்பொழுது அறியவில்லை.

ஆம், அக்ஷ்ரா தான் இப்பொழுது  தங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று கருத்தடை மாத்திரையை உபயோகித்துக் கொண்டிருக்கிறாள்.

பாவம், இதை அறியாத சூர்யாவோ அவள் தனக்கு உண்மையாக இருக்கிறாள் என்று எண்ணி அவளுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தான்.

சில நாட்கள் கழித்து அவன் பிசினஸில் பிஸி ஆகிவிட.

அக்ஷ்ராவுக்கும் அது நன்கு வசதியாகி போனது. கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்தாள்.

இது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல.. ஆனாலும், முன்பை விட இப்பொழுது பெரிய பெரிய இடங்களுக்கு செல்ல துவங்கினாள்.

அவளுக்கு அது மிகவும் பிடித்தும் இருந்தது.

அப்படி அவளுக்கு பழக்கமானவன் தான் பிரேம்..

இருவருமே ஒன்றாக பார்ட்டிகளுக்கு செல்ல துவங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக பிரேமின் வலையில் அக்ஷ்ரா விழ துவங்கினாள்.

பிரேமிற்கும் பிசினஸில் சூர்யாவை வீழ்த்த வேண்டிய பழி உணர்ச்சி இருந்தது. வாழ்க்கையிலும் அவனை சேர்த்து வீழ்த்த முடிவு எடுத்து விட்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக அக்ஷ்ராவின் பழக்க வழக்கம் மாற துவங்கியது. குடித்துவிட்டு நிதானம் இன்றி வீட்டிற்கு வர துவங்கினாள்.

இதையெல்லாம் கண்ட தாத்தாவிற்கு தான் மனம் கேட்காமல் காளிதாசிடம் கூற..

காளிதாசன் கூறும் அறிவுரைகளை எல்லாம் கேட்பவளா அக்ஷ்ரா..

“எல்லாம் எனக்கு தெரியும். உங்க வேலைய பாத்துட்டு போங்க.. வயசான காலத்துல சும்மா இருக்கிறது இல்ல” என்று திட்டி விட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அக்ஷ்ராவை பற்றி சூர்யாவிற்கும் தெரியவந்தது.

அன்று சூர்யா ஏதோ ஒரு பைலை கபோர்ட்டில் தேடிக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் அது அவனின் கைக்கு கிடைத்தது.

ஆம், அது வேறு ஒன்றும் அல்ல.. அக்ஷ்ரா உபயோகித்துக் கொண்டிருக்கும் கருத்தடை மாத்திரை தான்.

அதை பார்த்தவன் புருவம் இடுங்க ‘என்ன இது?’ என்று புரியாமல் தங்கள் மருத்துவருக்கு அதை போட்டோ பிடித்து அனுப்பவும்.

அவர் அதைப்பற்றி விளக்கமாக புட்டு புட்டு வைத்து விட்டார். அதை கேட்டவனிற்கோ ரத்தக் கொதிப்பு அதிகமாக கோபத்தில் கண்கள் சிவந்து நரம்புகள் புடைத்து கிளம்பியது.

அன்றும் பார்ட்டிக்கு கிளம்பி கொண்டிருந்த அக்ஷ்ராவின் முன்பு சென்று ருத்ரமூர்த்தியாக நின்றான்.

அவனின் தோரணையை கண்டவள் எதுவோ சரி இல்லை என்பதை யூகித்து, “என்னாச்சு சூர்யா?”.

“என்ன இது?” என்று தன் பற்களை கடித்து கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் தன் கையில் அந்த மாத்திரை அட்டையை அவன் தூக்கி காட்டவும்.

“இது.. இது எப்படி உன் கையில வந்துச்சு? இது ஜஸ்ட் தலைவலி டேப்லெட்.. எனக்கு அப்பப்போ மைக்ரெயின் வரும்னு உனக்கு தெரியுமில்ல.. அதுக்காக தான் இதை யூஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்று தட்டுத் தடுமாறி ஒருவாறு சமாளித்தாள்.

“தலைவலி டேப்லெட்டா.. எப்படி உன்னால இப்படி என்கிட்ட வாய் கூசாம பொய் சொல்ல முடியுது. இது பர்த் கண்ட்ரோல் பில்ஸ்.. இதை பத்தி இப்போ தான் நம்ம ஃபேமிலி டாக்டர் கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று முகம் சிவக்க அவன் கத்தவும்.

“வாட்! டாக்டர் கிட்ட விசாரிச்சியா? அப்போ என்னை நீ சந்தேகப்படுறியா?” என்று அவளும் பதிலுக்கு எகிரிக் கொண்டு வர.

“விசாரிச்சதால தானே இப்ப என்ன உண்மைன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. எதுக்காக நீ இப்போ இதை யூஸ் பண்ணிக்கிட்டு இருக்க? எனக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை இருக்குன்னு உனக்கு தெரியுமில்ல.. தெரிஞ்சும் எதுக்காக என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இதை யூஸ் பண்ண”.

“என்ன பேசுற சூர்யா நீ.. நமக்கு என்ன அவ்வளவு வயசா ஆகிடுச்சு. இப்பவே குழந்தை குட்டினு பெத்துக்கிட்டு செட்டில் ஆகுறதுக்கு.. கொஞ்ச நாள் லைஃபை என்ஜாய் பண்ணலாமே.. அதனால தான் இதை யூஸ் பண்ணேன்”.

“அப்படி என்ஜாய் பண்ணனும்னு உனக்கு தோணுச்சுன்னா அதை நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே.. என்கிட்ட சொல்லாமல் எதுக்காக இதை நீ மறைச்ச?”.

“சொன்னா நீ இப்படி கத்துவனு தான் மறைச்சேன். உனக்கு குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும்னு எனக்கும் தெரியும். உன்னுடைய ஆசைக்காக என்னை வற்புறுத்தாத சூர்யா.. என்னால இப்போ குழந்தை எல்லாம் பெத்துக்க முடியாது. இத நான் அப்போவே சொல்லி இருந்தா இப்ப நடக்குற சண்டை அப்போவே நடந்திருக்கும். அதனால தான் நான் சொல்லல” என்று இவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவளின் செல்பேசி சிணுங்கியது, ‘மை லவ்’ என்ற வாக்கியத்துடன்.

அதை கண்ட சூர்யாவின் புருவங்கள் யோசனையில் இடுங்க. அந்த ‘மை லவ்’ அவனுக்கு எதுவோ சரி இல்லை என்பதை உணர்தியது.

அக்ஷ்ரா அழைப்பை துண்டிப்பதற்குள்ளாகவே அவளிடம் இருந்து செல்பேசியை பிடுங்கி எடுத்தவன், அதை ஆன் செய்து லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.

எதிர் முனையில் பிரேம் போதையில் இருக்கிறான் போலும், “ஹே பேபி.. எங்க இருக்க? ஐ வாண்ட் யூ நவ் பேட்லி.. இன்னைக்கு பார்ட்டிக்கு வருவதானே.. உனக்காக தான் சேஃப்டி ப்ரிகாஷன்ஸோட ரெடியா இருக்கேன்” என்று குழைந்து கொண்டு பேசியவன்.

மேலும், அவர்களின் அந்தரங்கத்தை பற்றியும் அவன் கிசுகிசுப்பாக பேசிக் கொண்டு இருந்தான்.

அதையெல்லாம் கேட்கும் பொழுதே சூர்யாவின் முகம் அருவருப்பில் சுருங்கியது. அவனால் இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவன் வேண்டாம் என்று மறுத்தும் அவனையே சுற்றி சுற்றி வந்து காதலிக்க வைத்து, திருமணமும் செய்து கொண்டவளா இன்று இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை எண்ண எண்ண அவனின் மனம் அப்படி வலித்தது.

அவனிடமிருந்து அவசரமாக தன் செல்பேசியை பிடுங்கிய அக்ஷ்ரா அதை அணைக்கவும்.

அவனுக்குள் அவ்வளவு ஏமாற்றமும் அது தந்த வலியும் இருந்தது. ஆனாலும், ஏதோ ஒரு குருட்டு தனமான நம்பிக்கை தன் மனைவி இப்படி செய்திருக்க மாட்டாள் என்று..

“இங்க என்ன நடக்குது அக்ஷ்ரா? யாரது?” என்றான் குரல் நடுங்க.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!