அடியே என் பெங்களூர் தக்காளி…(28)

4.9
(20)

அத்தியாயம் 28

 

 

“இவள் உண்மையைத் தான் சொல்லுறாளா? உண்மையா இருந்தால் இவள் இப்படித் தான் கேஷுவலா இருப்பாளா? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டாளா” என்று யோசித்தவன் அவளைப் பார்த்திட, அவளோ கஷ்டப்பட்டு முகத்தை திருப்பி சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தாள். அதை உணர்ந்தவன் “அடிக் கிராதகி என் கிட்டேயே ப்ராங்க் பண்ணுறியா இரு டீ உன்னை வச்சுக்கிறேன்” என்று நினைத்த திலீப், “பவி ப்ளீஸ் என்னை பாரு டீ” என்று அவன் கூறிட மெல்ல அவன் பக்கம் திரும்பினாள் பல்லவி.

 

“பவி நல்லா யோசிச்சு பார்த்துட்டேன் நமக்குள்ள ஏதோ நடந்தது மாதிரி தான் ஃபீல் ஆகுது. இட்ஸ் ஓகே நமக்கு தான் நாளைக்கு கல்யாணமாச்சே அதனால் தப்பு ஒன்னும் இல்லை. நைட்டு நான் போதையில் இருந்ததால எனக்கு எதுவும் நியாபகத்தில் இல்லை அதனால” என்று அவன் நிறுத்திட, “இவன் என்ன சொல்ல வரான்” என்று கலவரமான பல்லவி, “அதனால என்ன புரியலை திலீப்” என்றாள்.

 

அவனோ “மவளே பதட்டமாகிட்டியா இரு டீ வச்சுக்கிறேன்” என்று நினைத்து விட்டு, “நிதானம் இல்லாமல் நடந்ததை திரும்ப ஒரு தடவை நிதானத்தோட நடத்தலாம்னு யோசிக்கிறேன்” என்றான் திலீப் வர்மன்.

 

“என்ன நடத்தப் போற” என்றவளிடம், “ஃபர்ஸ்ட் நைட் தான் டீ” என்றவன், “ஓ விடிஞ்சுருச்சுல சரி இருக்கட்டும் ஃபர்ஸ்ட் மோர்னிங்னு வச்சுக்கலாம் என்ன சொல்லுற” என்று அவளை நெருங்கி வந்தான். 

 

“ஐயோ திலீப் அப்பா, அத்தை எல்லாம் வரும் நேரம்” என்று பல்லவி கூறிட, “மணி ஆறு தான் ஆகுது அம்மா சொல்லிட்டு தான் போனாங்க காலையில் அலங்காரம்,‌ஆராதனை எல்லாம் முடிஞ்சு வர எட்டு மணி ஆகிரும்னு நமக்கு தான் இரண்டு மணி நேரம் டைம் இருக்கே” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தாள் திலீப்.

 

“ஒரு தடவை தெரியாமல் தப்பு பண்ணிட்டோம் அதை திரும்ப எல்லாம் பண்ண கூடாது” என்று அவள் கூறிட, “இது ஒன்னும் தப்பு இல்லையே நீ என் பொண்டாட்டி தானே” என்ற திலீப் அவளை நெருங்கி அணைக்கப் பார்க்க, “அடேய் பாவி நமக்குள்ள இன்னும் எதுவும் நடக்கவில்லை டா என்னை விட்டுரு” என்று அவள் கத்திட, அவனோ கலகலவென சிரித்தான்.

 

“தெரியும் டீ என் தக்காளி” என்று சிரித்தவன் , “எனக்கு ஏன் டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டுருக்க” என்றான் திலீப்.

 

“அரை குறை மூதேவி போயி ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வா சொல்லுறேன்” என்றாள் பல்லவி. அவனும் பனியனை அணிந்து கொண்டு, “சொல்லு டீ” என்றான்.

 

“உனக்கு யாரு டா கள்ளு கொடுத்தது” என்றாள் பல்லவி. “உன் மாமா அந்த சதீஷ் தான் கொடுத்தாரு ஏன் டீ” என்றான் திலீப். “உனக்கு கள்ளு கொடுத்துட்டு அந்த ஆளு எங்கே போனாரு” என்ற பல்லவியிடம், “தெரியலை பவி” என்றான் திலீப் வர்மன்.

 

“அவன் எங்கேயும் போயிட்டு போகிறான் அதை விடு சரி ஏன் எனக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்ட” என்றான் திலீப் வர்மன்.

 

“குடிகார நாயே வயிறு முட்ட கள்ளு குடிச்சிட்டு வந்து வாந்தி எடுத்து வச்சுட்ட நாயே அதான் உன்னை குளிக்க வச்சு டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டேன்” என்றாள் பல்லவி.

 

“ஏய் கண்ணை மூடிட்டு தானே டீ டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்ட” என்ற திலீப்பை முறைத்தவள், “அதில் மட்டும் தெளிவா இரு” என்றவள் கிளம்பிட, “ஏய் சொல்லிட்டு போடீ” என்றான் திலீப்.

 

“சொல்ல முடியாது போடா” என்று பல்லவி ஓடி வர, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அவள் சென்று கதவை திறக்க அவளது குடும்பத்தார் தான் கோவிலில் இருந்து வந்திருந்தனர்.

 

“இந்தா பவிமா பிரசாதம்” என்று அவளது நெற்றியில் திருநீறு பூசி விட்டார் அவளது அத்தை செல்வராணி. 

 

“அம்மா எல்லோரும் வந்துட்டீங்களா” என்று வந்த தீலீப்பின் நெற்றியிலும் விபூதி பூசி விட்டார் செல்வராணி. “இருங்க எல்லோருக்கும் காஃபி போடுறேன்” என்று கிச்சனுக்குள் செல்லப் போன திலீப்பை தடுத்த சங்கவி, “வரும் போது தான் டீ குடிச்சிட்டு வந்தோம் திலீப்” என்றாள்.

 

வைதேகியோ திலீப்பை பார்த்து அதிர்ந்து போனார். அதுவும் பல்லவி வந்து கதவு திறக்கவுமே அதிர்ந்து தான் போனார். கூடவே திலீப் வேற வந்து நிற்க, “சாம்பவியோட திட்டம் ஊத்திக்கிச்சா கடவுளே என் பொண்ணு மாட்டிக்கிட்டாளா” என்று யோசித்தார் வைதேகி.

 

“என்ன பவி நீயும், மாப்பிள்ளையும் இருக்கீங்க சாம்பவி எங்கே” என்றார் வைதேகி. “அவளோட அறையில் தூங்கிட்டு இருப்பாள் சித்தி” என்ற பல்லவி ரஞ்சித், ராகவ், திலீப் மூவருடன் பேசிக் கொண்டு இருந்தாள்.

 

வேக வேகமாக படியேறி மகளின் அறைக்கு சென்று அறைக் கதவை திறந்து பார்த்த வைதேகி அதிர்ந்து போனார்.

 

“சதீஷ் என்ன காரியம் டா பண்ணி வச்சுருக்க” என்று கத்தினார் வைதேகி. அவரது கூச்சல் சத்தம் கேட்டதும் மொத்த குடும்பமும் சாம்பவியின் அறைக்குள் செல்ல அங்கே போர்வைக்குள் ஆடைகள் எதுவும் இன்றி சதீஷின் மார்பில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் சாம்பவி.

 

மொத்த குடும்பமும் இந்த காட்சியைக் கண்டு ச்சீ என்று முகத்தை திருப்பிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றனர்.

 

கோபம் தலைக்கேறிய வைதேகி அவர்கள் இருவரையும் அடித்து வெளுக்க ஆரம்பித்தார். தங்கள் மீது அடி விழவும் இருவரும் கண் விழித்து எழுந்தனர். சாம்பவி தான் சதீஷுடன் இப்படி ஒரு நிலையில் அதுவும் தன் தாயின் முன்பு இருக்க அவளோ கூனிக் குறுகிப் போனாள்.

 

“என்ன கருமம் டீ இது இவனும், நீயும் எப்படி சாம்பவி” என்ற வைதேகியிடம், “எனக்கு ஒன்றும் புரியவில்லைம்மா” என்று அழுத சாம்பவி சிதறிக் கிடந்த தன் உடைகளை பொறுக்கி எடுத்துக் கொண்டு குளியலறைக்கு ஓடினாள். வைதேகி அந்த அறையை விட்டு வெளியே செல்லவும் தன் உடையை அணிந்து கொண்டு சதீஷ் வெளியே வர, “என் குடியை கெடுத்துட்டீயேடா பாவி” என்று அழுதார் வைதேகி.

 

“ஏன் டா ஏன் என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்த” என்ற வைதேகியிடம், “அப்போ பல்லவியோட வாழ்க்கையை கெடுத்திருந்தால் உங்களுக்கு சந்தோஷமா அக்கா” என்றான் சதீஷ்.

 

 

“என்ன சொல்லுற சதீஷ்” என்ற வாசுதேவனிடம், “ஆமாம் மாமா அம்மாவும், மகளும் உங்க மகளோட வாழ்க்கையை கெடுக்க திட்டம் போட்டாங்க. அதுக்காக என் அக்கா மகள் தன்னோட மானத்தை கூட இழக்க தயாரா இருந்தாள்” என்றான் சதீஷ்.

 

“என்ன அக்கா அதிர்ச்சியாக இருக்கா நீயும், உன் மகளும் திட்டம் போட்டீங்களே பல்லவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவளை என்னை வச்சு கெடுத்துட்டால் அவளும் வேற வழி இல்லாமல் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவாள். அதே சமயம் உன் மகள் திலீப் மாப்பிள்ளை கூட தப்பா இருந்து அவரை கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணிக்கனும் இது தானே உங்க திட்டம்” என்றான் சதீஷ்.

 

வைதேகி முகத்தில் ஈ ஆட வில்லை‌. “உன் பொண்ணு மேல நான் உயிரையே வச்சுருக்கேன் அதுக்காக நமக்கு சோறு போட்ட மாமாவுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது. உன் பொண்ணு பல்லவியை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போட்டு தான் என்னை ஊருக்கு வரச் சொன்னாள். என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்துனா அவள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் வருவேன்னு நினைச்சுட்டாள் போல. அவளுக்கு சரியான பாடம் சொல்லிக் கொடுக்கனும்னு அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன்.

 

நேற்று பல்லவிக்கு தூக்க மாத்திரை போட்டு பாலை கலக்கிட்டு இருந்தாள். நல்லவேளை மாப்பிள்ளை பாலை மாத்தி வச்சாரு அதை உன் பொண்ணு கவனிக்கலை நான் கவனிச்சேன். மாப்பிள்ளைக்கு கள்ளு கொடுத்து அவரை மட்டையாக்கி ஹாலில் படுக்க வச்சுட்டு தான் உன் மகளோட அறைக்கு போனேன். தூக்க மாத்திரை கலந்த பாலை குடிச்சிட்டு அவள் மயங்கி கிடந்தாள். அவள் எனக்கு மட்டும் தான் சொந்தமாகனும் அதான் அவளை எனக்கு சொந்தமாக்கிட்டேன்” என்றான் சதீஷ்.

 

“அடப்பாவி அதுக்காக மயங்கி கிடந்த என் கிட்ட தப்பா நடந்துக்குவியா” என்று ஆர்ப்பாட்டம் செய்தாள் சாம்பவி.

 

அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்த ராகவ், “அன்னைக்கு நீ என் கிட்ட அப்படித் தானே டீ நடந்துகிட்ட உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா” என்றான்.

 

“என்ன சாம்பவி இது என்னம்மோ நமக்குள்ள முதல் தடவை நடந்தது மாதிரி நடிக்கிற” என்றான் சதீஷ். 

 

“ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா அசிங்கம் பிடிச்சவளே” என்று அவளைப் பார்த்து காரி உமிழ்ந்தார் செல்வராணி. “அப்பறம் வைதேகி நீயெல்லாம் ஒரு அம்மாவா புள்ளை தப்பு பண்ணினால் அடிச்சாவது அந்த புள்ளையை திருத்துறவள் தான் அம்மா. பொண்ணு பண்ணுற தப்புக்கு எல்லாம் துணை போகிறவள் இல்லை” என்றார்.

 

 

வாசுதேவன் வைதேகியை பார்த்த பார்வையில் அவர் கூனிக் குறுகிப் போனார். “எத்தனை தடவை டீ உனக்கு சொன்னேன் கெடுவான் கேடு நினைப்பான், பல்லவி வாழ்க்கையை கெடுக்கிறதைப் பற்றி நினைக்காமல் உன் வாழ்க்கையை பாருன்னு பாரு டீ இப்போ உன் வாழ்க்கையே அழிஞ்சி போச்சு” என்று கதறினார் வைதேகி.

 

“இப்போ என்ன பண்ணலாம் வாசு” என்ற செல்வராணியிடம், “எந்த நாயோட வாழ்க்கை எப்படி போனால் என்னக்கா இப்படி ஒரு ஒழுக்கம் கெட்டவள் எனக்கு மகளே இல்லை. அவளை நான் தலை முழுகிட்டேன். நாளைக்கு சந்தோஷமா என் பொண்ணு பல்லவியோட கல்யாணம் நடக்கும் நடந்தே தீரும்” என்று உறுதியாக கூறினார் வாசுதேவன்.

 

“ஸாரி ராகவ் என்னை மன்னிச்சுருப்பா நான் பெத்த இந்த தருதலையால உன்னோட வாழ்க்கை தான் மோசமா பாதிக்கப்பட்டு இருக்கு” என்று வருந்தினார் வாசுதேவன்.

 

“விடுங்க அங்கிள் இப்போவாச்சும் நான் தப்பிச்சுட்டேன்னு நினைச்சு சந்தோஷம் பட்டுக்கிறேன்” என்றான் ராகவ்.

 

“என்ன திலீப் யோசிக்கிற” என்ற பல்லவியிடம், “ஏன் இந்த சாம்பவி இவ்வளவு மோசமா நடந்துக்கிறாள்” என்றான் திலீப் வர்மன்.

 

“அவள் அப்படி நடந்துக்கலைனா தான் அதிசயம்” என்றாள் பல்லவி.

 

(…அடியே..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!