நெஞ்சம் – 24
பெங்களூர் வந்து ஒரு நாள் ஓய்வு எடுத்த பின் அடுத்த நாளில் இருந்து, பழகிய வீடு என்பதால் மிகவும் சகஜமாக ஆகி விட்டாள் மலர். அன்று காலை உணவிற்கு, கேசரி, பூரி கிழங்கும் செய்து இருந்தாள். உணவருந்த அனைவரும் அமர, வழக்கம் போல் அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தான் அர்விந்த்.
“என்ன அப்பளத்துக்கு கிழங்கு சைட் டிஷ்?” கிண்டல் அடித்துக்கொண்டே உண்டான்.
“ஏன்டா இப்போவும் மலரை கிண்டல் செய்யணுமா?” தியாகு கேட்க,
“இப்போ தான் நிறைய செய்யணும் பா! என்ன விழி?” அவளிடமே அவன் கேட்க,
“உங்க இஷ்டம் போல் செய்ங்க….” என்று சிரித்தாள் அவள். சொல்லிவிட்டு அடுக்களைக்குள் செல்ல, யாரை பற்றியும் கவலை இல்லாமல் எழுந்து அவளை பின் தொடர்ந்து வந்தவன், அவளை சுவற்றில் சாய்த்து,
“நீ சொன்ன இந்த டயலாக் நல்லா நியாபகம் வைச்சுக்க, இன்னைக்கு நைட் நம்ம பெட்ரூமில் என்ன நடந்தாலும் நீ மறுக்க கூடாது!” பேசிக் கொண்டு இருந்தவனின் கரங்கள் சேலை கட்டி இருந்த அவளின் இடையில் ஊற, கூச்சத்தில் நெளிந்தாள் மலர். ப்ளீஸ், மெதுவாக அவள் சிணுங்க, சட்டென்று அவள் இதழை பற்றி முத்தமிட்டு விட்டு சென்றான்.
அவன் சென்றும் சற்று நேரம் அப்படியே அந்த சுவற்றிலேயே சாய்ந்து நின்றாள் மலர். ஐயோ, இப்படி பண்ணிட்டு போறாரே, எல்லோரையும் எப்படி பார்பேன் நான்?” வெட்கமாக வந்தது மலருக்கு.
ஆனாலும் போய் தானே ஆக வேண்டும்? அவள் என்ன மறைக்க முயன்றும் முகம் சிவந்து கிடந்தது. அனைவரும் எதையும் கண்டுகொள்ளாமல் இயல்பாக இருக்க, அர்விந்த் மட்டும் அவளை வைச்சு செய்தான்.
“விழி கிட்சன்ல போய் மேக்கப் போட்டியா? கன்னத்தில திடிர்னு ரோஸ்பவுடர் அதிகமாக தெரியுது!” குறும்பு கண்ணனாக ஆனான் அவள் கணவன்.
அவனின் சேட்டை தாங்காத பாட்டி, “நீ போட்டு விட்டுட்டு வந்து இப்படி பொண்டாட்டியை வம்பு பண்றியே ஆரும்மா” என்றார்.
அனைவரும் சிரிக்க, “உங்களுக்கு இதெல்லாம் நல்லா காதில விழுதா பாட்டி?”
“அதை விட உங்க ரெண்டு பேர் கண்ணும் முகமும் நிறைய பேசுது டா! சும்மா இரு, பாவம் பிள்ளை, நீ வந்து சாப்பிடு மா” பாட்டி அழைக்க, அருணா அவளை அர்விந்த் அருகில் அமர வைத்து பரிமாறினார்.
“சாப்பிடு சாப்பிடு நல்லா சாப்பிடு நீ செஞ்ச அப்பளத்தையும் கிழங்கையும்….” அவன் ஆரம்பிக்க,
“டேய், எல்லாம் எப்போதும் போல் நல்லா இருந்தது. மலர் சமையல் நமக்கு என்ன புதுசா?” அருணா மகனை அதட்ட,
“அவன் பொண்டாட்டி சமையலை எல்லாரும் புகழுணும் கூட இப்படி எல்லாம் ஐடியா பண்ணுவான் மா, கேடி பா அவன்…” ஜனனி தம்பியை ஓட்டினாள்.
தாராளமா புகழலாம் நம்ம வீட்டு மருமக சமையலை…. அதில பொய் ஒன்னும் கிடையாது! தியாகு கூறினார்.
அவர்கள் அனைவரும் இயல்பாக பேச, சகஜமாக இருக்க முடிந்த அவளால் அந்த வீட்டின் மருமகள் என்ற உரிமையை உணர முடியவில்லை, அது போல் அவர்களிடம் பேசவும் முடியவில்லை. அதனால் புன்சிரிப்புடன் அவர்கள் பேசுவதை கேட்டாளே தவிர அதில் கலந்து கொள்ளவில்லை. அது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று நினைத்துக் கொண்டனர்.
அன்று மதியம் அனைவரும் தூங்க, அர்விந்த் எப்படி மலரை தூங்க விடுவான்? அவன் அவளை நெருங்க, அவளால் அவனை மறுக்க முடியவில்லை. அதன் பின் அவள் அரக்க பரக்க எழுந்து குளித்து விட்டு வரும் போது மணி மாலை நாலரையை தொட்டு விட்டது. தலைக்கு குளித்து விட்டு வந்த மருமகளிடம் வேறு ஏதும் கேட்காமல், தலையை நல்லா துவட்டு மா என்றதோடு விட்டார் அருணா. மாலை வெயில் முன் பக்கம் அடிக்க, தியாகு கண்ணில் படாமல் தலையை காய வைத்து விடுவோம் என்று அந்த வெயிலில் போய் நின்றாள் மலர். அந்நேரம் சரியாக அவர்கள் வீட்டிற்கு வந்து இறங்கினாள் நிவேதா. தலையில் தண்ணீர் வடிய நிற்கும் மலரை கண்டதும் கோபமாக வந்தது நிவேதாவிற்கு. அவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் சென்று காலிங் பெல்லை அழுத்தினாள். அப்போது தான் குளித்து விட்டு வந்த அர்விந்த், மலரை தேடிக்கொண்டு, விழி என்று அழைத்தவாறு முன்பக்கம் வந்தான். அவன் கதவை திறக்க, அவன் அழைத்த விழி நிவேதாவின் காதில் விழுந்தது.
“வைப்பை விட்டுட்டு கொஞ்சம் நேரம் கூட இருக்க முடியலை யா அர்விந்த்?”
அவளை கொஞ்சமும் எதிர்பார்க்காத அர்விந்த் ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டு மறுநிமிடம் சகஜமாக அவளை வரவேற்றான்.
“வா நிவேதா” என்றவன், வெளியில் நின்ற மலரை கண்டு, “விழி உள்ளே வா, வந்து கெஸ்ட்டை கவனி” என்றான். அவன் தனக்காக நிற்பான் என்று மலர் எதிர்பார்க்க, அவன் நிவேதாவின் பின் சென்று விட்டான். மலருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. அவர்களின் பின்னே முன் வாசல் வழியாக போகாமல், பக்கவாட்டு வழியாக சென்று பின்புறம் வழியாக அடுக்களைக்கு சென்று, போன முறை நிவேதா வந்த போது வீடு தடபுடல் ஆனதை நினைத்து பார்த்துக் கொண்டே காபி போட்டாள். அப்போது அங்கே வந்த அருணா,
“இந்த பொண்ணு எதுக்கு வந்து இருக்கு தெரியலை, நான் ரூமுக்கு போறேன் மா, ஜனனி வெளியேவே வர மாட்டேங்கிறா. நீயும் எதுவும் பேச்சு கொடுக்காதே. கொடுத்துட்டு என்கிட்ட வந்துடு. அப்பாவும் பிள்ளையும் மட்டும் அவகிட்டே பேசட்டும்” என்று சொல்லி விட்டு போனார்.
இருந்த ஸ்னாக்ஸ் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அவள் ஹாலிற்கு செல்ல, அமைதியாக நடந்து வரும் மலரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அர்விந்த். தியாகு அங்கே அவர்கள் கூட இருந்தார். ஸ்னாக்ஸ் வைத்து விட்டு தன் அருகில் அமர்வாள் மலர் என்று அவன் எதிர்பார்க்க, மலர் அப்படியே திரும்பி நடந்தாள். அவன் அழைக்கும் முன்,
“ஹலோ மலர், உங்களுக்கு நிறைய வேலை இருக்குனு எனக்கு தெரியும்! பட், உங்க கல்யாணத்துக்கு விஷ் பண்ண தான் வந்து இருக்கேன் நான். வாங்க இங்க. கம் அண்ட் சிட்!” என்றாள். அர்விந்தின் முகம் கடுகடுவென்று மாறியது. அவள் வந்து அமர்ந்திருந்தால் இந்த பேச்சு தேவையே இல்லையே என்று பொண்டாட்டி மேல் கோபம் வந்தது. மலர் வந்து அவன் அருகில் அமர,
“கங்கிராஜூலேஷன்ஸ்!” என்று கிப்ட் கவர் ஒன்றை இருவரிடமும் சேர்த்து கொடுத்தாள். இருவரும் நன்றி சொல்லி வாங்கி கொண்ட பின்,
என்னால உன் லைப் வீணா போயிடுமோனு ரொம்ப கவலையா இருந்தது. “குட், யூ பைன்ட் சம்ஒன் டுடேக் கேர்!” என்றாள் குரூரமாக. தன் வஞ்சம் குரலில் தெரியாதவாறு சிரிப்புடன் பேசினாள்.
எவ்வளவு நக்கல் இவளுக்கு? இந்த கல்யாணத்தை என்னை பார்த்துக் கொள்ள ஆள் வைத்தது போல் பேசுகிறாள் என்று கடுப்பானவன்,
“ஆமா லைப் லாங்க்கிற்கு கண்டுபிடிச்சு இருக்கேன்! எல்லாம் விஷயமும் லைக், ஹாப்பி, சேட், ஹெல்த், சிக்னெஸ் எல்லாத்தையும் ஷேர் பண்றது தானே லைப்” என்றான் அவனும் குத்தலாக. அதன் பிறகு கூட அமைதியாக இருக்காமல், மலரிடம்
“பழைய பழக்கத்தில் நீங்களே எல்லாம் வேலையும் செய்யாதீங்க, ஆஸ்க் பார் ஹெல்ப்! ஒரு ஆள் வைக்க சொல்லுங்க! லாஸ்ட் டைம் என்னை எப்படி கவனிக்க சொன்னாங்க உங்களை, அப்படி இருக்கணும்….” என்றாள்.
அவளை வேலைக்காரியாக தான் நடத்துகிறார்கள் என்பது போல் நிவேதா பேசுவது மலருக்கு நன்றாக புரிந்தது, எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் என்று கோபம் வந்தாலும் அவள் போல் ஆங்கிலத்தில் தக்க பதில் கொடுக்க முடியாமல், “இட்ஸ் நாட் லைக் தட்” என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியானாள்.
நிவேதா பேசுவது பிடிக்காமல் தியாகு எழுந்து சென்று விட்டார்.
சற்று நேரம் இதே போல் பேசியவள் ஒரு வழியாக கிளம்பினாள். மலர் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவர்கள் அறைக்கு சென்று அங்கிருந்த ஜன்னனில் பார்த்தாள். கிளம்பும் முன், மரியாதை நிமித்தம் வழியனுப்ப அவள் பின்னே சென்ற அர்விந்திடம் வேண்டுமென்றே,
“சரியான பட்டிக்காடா உன் வைப்? உங்க பெர்சனல் எல்லாம் வீட்டில எல்லாருக்கும் தெரியுற மாதிரி இந்நேரத்தில் ஹேர் வாஷ் பண்ணி இருக்காங்க” என்றாள் கேலியாக.
“ஹாஹா உனக்கு ஏன் என் பெர்சனல் மேல் இவ்ளோ அக்கறை? நீதான் எங்களை பத்தி ரொம்ப இமேஜின் பண்ற! இப்போ னே தான் கொஞ்ச கூட நாகரிகம் இல்லாம பேசுற! நாங்க கோயிலுக்கு போக போறோம்!” என்றான் அர்விந்த் அவள் மூக்கை உடைப்பது போல்.
அவனை உறுத்து விழித்தவள்,
“என்னவோ நினைச்சு இந்த பட்டிக்காட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே, அவசரப்பட்டு குழந்தை பெத்துக்க நினைக்காதே, உனக்கு பிடிக்காம போயிட்டா, டைவர்ஸ் பண்றது கஷ்டம், அப்பறம் மூணாவது கல்யாணம் எல்லாம் ஈஸி இல்லை!” என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்காமல் ஓடிப்போனாள். அவள் பேசியது அட்சரம் பிசகாமல் மலரின் காதில் விழுந்தது.
நிவேதா இப்போது ஒரு முடிவோடு தான் பெங்களூர் வந்துள்ளாள். அவள் மட்டும் கல்யாண சந்தையில் இன்னும் விலைபோகாமல் இருக்க, அர்விந்த் இன்னொரு திருமணம் செய்து மகிழ்ச்சியாகவும் இருக்கிறான் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவனின் திருமண புகைப்படத்தை அவன் நண்பன் ஒருவனிடம் இருந்து கேட்டு வாங்கி பார்த்தவளுக்கு அவர்கள் இருவரின் மகிழ்ச்சியையும் அடியோடு அழித்து விட வேண்டும் என்ற வெறி வந்தது. அவனின் இந்த வாழ்க்கையை எப்படியாவது கெடுத்து விட வேண்டும் என்பதற்காகவே பெங்களூர் ஆபீஸ் ப்ராஜெக்ட்டில் சேர்ந்துள்ளாள். அது இன்னும் அர்விந்திற்கு தெரியாது.
நிவேதா சென்ற பின், மலரை தேடி அறைக்கு வந்தவன்,
“நீ என் பொண்டாட்டி…. என் பக்கத்தில் வந்து உட்காராம கண்டவ எல்லாம் கண்டது பேசுற மாதிரி நடந்துகிறே” என்றான் கோபமாக.
“நீங்க என்னை கூப்பிடலையே….? அவங்களை கண்ட உடனே என்னை கண்டுக்காம அவங்க பின்னாடியே போனீங்க, அதுவும் அவங்களை கவனிக்க ஆர்டர் வேற…. அதை தான் நான் செஞ்சேன்….” பொருமினாள் மலர்.
“கெஸ்ட்க்கு ஏதாவது கொண்டு வான்னு என் பொண்டாட்டி கிட்டே தானே சொன்னேன்.”
எனக்காக வெயிட் பண்ணி இருக்கணும், நீங்க எப்படி என்னை விட்டுட்டு அவ பின்னாடி போனீங்கனு உரிமையுடன் சண்டை போட முடியாமல் அவனின் பொண்டாட்டி என்ற வார்த்தையில் அமைதி ஆனாள் மலர்.
அறையில் தியாகு அருணாவிடம், நாளையில் இருந்து எல்லாத்துக்கு ஆள் ஏற்பாடு பண்ணு அருணா. மலர் எந்த வேலையும் செய்ய வேண்டாம். அவள் நம்ம மருமகளா மட்டும் இருக்கட்டும் கொஞ்ச நாளைக்கு என்றார். அவர் கூறியது வேறு விதமான பிரச்சனையை உண்டு செய்தது.
அன்று இரவே ஒரு ஆளை அருணா பிடித்து விட, மறுநாள் அவர் வந்து டிபன், சமையல் எல்லாம் செய்ய, மலர் பரிமாறினாள். ஒரு வாய் உண்டவுடன் அது மலர் சமையல் இல்லை என்று கண்டுகொண்டவன்,
“யார் செஞ்சது இது?” என்றான்.
“தியாகு இனிமே மலர் வேலை செய்ய வேண்டாம், யாரும் எதுவும் பேசுற மாதிரி வைச்சுக்க கூடாது” என்றார்.
“என் வீட்டில் என் பொண்டாட்டி சமைக்கிறதை யார் என்ன சொல்லுவா?” என்றவன், “நீ வேலை செய்ய மாட்டியா?” என்றான் மலரிடம்.
“ஐயோ, நான் ஒன்னும் சொல்லலைங்க” என்று பதறினாள் அவள்.
“எங்களுக்கு கல்யாணம் தான் ஆகி இருக்கு, வேற எதுவும் மாறலை, அப்போ, இப்போ எல்லாம் அவளுக்கு எல்லாம் தெரியும். அவ சமைப்பா. அதான் ஹெல்ப்பிறகு ஆள் இருக்காங்களே. அது போதும்” என்றான் அர்விந்த்.
அவன் கூறியது, அவ வேலைக்கு என்று வந்த போதே அவர்களுக்குள் இருந்த நெருக்கம். இப்போது அதை மலர் புரிந்து கொண்டு இருப்பாள் என்று நினைத்து அர்விந்த் கூறினான். ஆனால் மலர் புரிந்து கொண்டது, கல்யாணம் ஆனாலும் அவள் நிலையில் ஒன்றும் மாற்றமில்லை என்று. அவளாக தானே இவனை கல்யாணம் செய்ய விரும்பினாள்!
பொண்டாட்டி என்பது அவன் வார்த்தை மட்டுமில்லை அது அவனின் உணர்வு என்று அவள் யோசிக்கவில்லை! அவளாக அவனை இந்த பந்தத்திற்கு இழுத்து வந்த காரணத்தால் தப்பு தப்பாக யோசித்தாள் மலர்.
மக்களே கொஞ்சம் கமெண்ட்ஸ் போடுங்க!