அத்தியாயம் 31
“வந்தால் வேண்டாம்னா சொல்லப் போறேன் ஆனால் ஒன்று உன் அக்கா உண்மையிலே மனசு மாறி செஞ்ச தப்பை எல்லாம் உணர்ந்து தான் இங்கே வரணும் அப்படி வந்தால் கண்டிப்பா அவளை ஏத்துக்குவேன்” என்று கூறினார் வாசுதேவன்.
“சந்தோஷம் மாமா” என்ற சதீஷ் சென்று விட்டான்.
“என்ன பவி ரெடியா” என்று வந்தனர் பைரவி, பார்கவி, சங்கவி மூவரும். “ரெடி தான் அத்தாச்சி” என்று அவள் கூறிட, “அழகா இருக்க டீ ரொம்ப, ரொம்ப அழகா இருக்க” என்றாள் சங்கவி.
“பவிமா” என்று வந்த சிந்தாமணி அவளுக்கு திருஷ்டி பொட்டு வைத்து விட்டு, “அப்படியே உன் அம்மா ருக்மணி மாதிரியே இருக்க என்ன அவள் தான் உன் கல்யாணத்தை பார்க்க கூட இல்லை” என்று கண் கலங்கியவர், “அதனால் என்ன அதான் அவளோட ஸ்தானத்தில் உன் பெரியம்மா இருக்கேனே” என்று அவளை அணைத்துக் கொண்டார்.
“திலீப்” என்று வந்த ஆதித்யனிடம், “ரெடியாகிட்டேன் மாமா” என்று புன்னகையுடன் கூறினான் திலீப். அவனை ராகவ், ரஞ்சித், ஆதித்யன் மூவரும் மணமேடைக்கு அழைத்து வந்தனர்.
“என்ன வாசு யாருக்காக காத்துட்டு இருக்க” என்ற செல்வராணியிடம், “வைதேகி இன்னும் வரவில்லையே அக்கா அதான்” என்றார் வாசுதேவன்.
“அவள் எப்படி வருவாள் வாசு இன்னைக்கு தானே சாம்பவிக்கும் கல்யாணம் அங்கே வேலை எல்லாம் பார்க்கனுமே ஒரே மேடையில் வச்சுருக்கலாம் நீ தான் சம்மதிக்கலை விடு எப்படியும் பல்லவி புருஷன் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி வந்துருவாள்” என்றார் செல்வராணி.
ஐயர் மந்திரங்கள் கூறி கெட்டிமேளம் கொட்டிட திலீப் வர்மன் பல்லவியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.
திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. திருமண சடங்குகள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. வீடு முழுக்க சொந்த பந்தங்கள் நிறைந்து திருமண விருந்து எல்லாம் தடபுடலாக நடந்து முடிந்தது. வைதேகி இல்லாதது ஒன்று தான் குறையே தவிர மற்றபடி எந்த குறையும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்தது.
இரவு சடங்கிற்காக பல்லவியை அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள் சங்கவி. அவளுக்கு புத்திமதிகள் எல்லாம் சொல்லிய சங்கவி, “ஏன் டீ ஒரு மாதிரி இருக்க” என்றாள்.
“சித்தி ஏன் அத்தாச்சி என் கல்யாணத்துக்கு வரவில்லை அப்படி என்ன கோபம் என் மேல” என்றாள் பல்லவி. “ஏன் வரணும் நீ நல்லா இருக்கனும்ங்கிற எண்ணம் கொஞ்சம் கூட அவங்களுக்கு கிடையாது அப்பறம் எப்படி வருவாங்க. நீ அவங்களைப் பற்றி யோசிக்காமல் திலீப் பற்றி மட்டும் யோசி சரியா” என்ற சங்கவி அவளை அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அறைக்குள் அவன் அமர்ந்திருக்க அடி மீது அடி வைத்து அவனருகில் சென்றாள் பல்லவி.
“பவி செம்மையா இருக்க டீ இந்த புடவையில்” என்றவன் பால் சொம்பினை வாங்கி ஓரமாக வைத்து விட்டு அவளது கை பிடித்து தன் அருகில் அமர வைத்தான்.
அவளோ தலையை குனிந்த படி அமர்ந்திருக்க, “என்னாச்சு டீ ஏன் நெவர்ஸா இருக்க” என்றான் திலீப் வர்மன்.
“இல்லைங்க அப்படிலாம் ஒன்றும் இல்லை” என்றாள் பல்லவி. “என்ன சொன்னீங்க இல்லைங்க ஓ உங்க புருஷனானதும் மரியாதையா சரி, சரி” என்றவன், “பால் குடிக்கிறீங்களா” என்று அவளிடம் நீட்டினான்.
“என்ன இது போங்க வாங்கனுட்டு” என்ற பல்லவியிடம், “அப்போ நீ மட்டும் அப்படி கூப்பிடலாமா?” என்றான் திலீப்.
“அது வந்து அத்தாச்சி தான் இனி உன்னை மரியாதையா பேசனும்னு சொன்னாங்க போடா, வாடான்னு எல்லாம் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னாங்க” என்றாள் பல்லவி.
“அவங்க முன்னாடி கூப்பிடாதே ஆனால் நம்ம ரூம்ல போடா வாடான்னு தான் கூப்பிடனும் சரியா” என்றவன் அவளிடம் பாலை நீட்டிட, “நீ குடிச்சிட்டு கொடு” என்றாள். “நீ ஃபர்ஸ்ட் குடி டீ” என்றவனை முறைத்தவள், “சொல்றேன்லடா நீ குடி” என்றாள் பல்லவி. அவனும் சிரித்து விட்டு குடித்தான். மீதி பாலை அவள் குடித்துக் கொண்டு இருக்க, சட்டென்று அவள் கையில் இருந்த பால் சொம்பை பறித்தவன் அவள் இதழில் தன் இதழைப் பதித்தான்.
அவள் அருந்திய பாலை அவள் இதழ் வழி தன் இதழுக்கு இழுத்துக் கொண்டு பசியாறினான் அவளது மன்னவன்.
அவனது இந்த திடீர் தாக்குதலில் அதிர்ந்து அவனது சட்டையை இறுக்கிக் கொண்டாள் பல்லவி. அவளை மெல்ல விடுவித்தவன் அவளது கண்களைப் பார்த்திட அவளோ வெட்கத்தில் கன்னம் சிவந்தாள். குப்பென்று சிவந்து போன அவளது கன்னத்தில் முத்தமிட்டவன், “உனக்கு சம்மதம் தானே பவி” என்றிட அவனது இதழில் தன் இதழைப் பதித்து தன் சம்மதத்தை கூறினாள் பல்லவி.
மனைவி அவளின் சம்மதம் கிடைத்தவுடன் அவளது மணவாளனோ அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். காற்று கூட புக முடியாத அளவிற்கு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
இதழ்களின் சங்கமம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க அவனது விரல்கள் அவளது மேனியின் மேடு பள்ளங்களை ஆராய்ந்து கொண்டிருக்க மங்கை அவளோ நாணத்தில் அவனது இதழை இன்னும் தன் இதழுக்குள் சிறை பிடித்தாள்.
மங்கை அவளது மேனியின் அழகினை மறைத்திருந்த வஸ்திரங்களுக்கு விடை கொடுத்தவன் தானே உடையாக அவளைப் போர்த்திக் கொண்டான். மங்கை அவளோ நாணத்தில் முகம் சிவந்து மேலும் தன் மன்னவனை தன் உடையாக இறுக்கிக் கொண்டவள் தானும் அவனுக்கு உடையாகிப் போனாள்.
மங்கை அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டவன் மீண்டும் இதழில் நிறுத்தி அவள் உயிரை உறிஞ்சிக் குடித்தவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்திட மங்கை அவளோ சிலிர்த்து விட்டாள். அவனது ஒவ்வொரு தீண்டலிலும் தன்னை தொலைத்து அவனிடம் தன்னை தேடினாள். அவனும் அவளின் தேடலில் தொலைந்து தானும் அவளில் புதையல் வேட்டையை தொடங்கினான். மனைவி அவளின் இன்பராகங்கள் தந்த போதையில் அவளோடு ஒன்றிப் போனான். மீண்டும் மீண்டும் ஒருவரில் ஒருவரின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்க இன்பமாக அந்த இரவினைக் கழித்தனர்.
இருவரின் காதலும் திருமண பந்தத்தில் இணைந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது.
அதிகாலை சேவல் கூவியதும் தான் உறக்கமே அவர்களின் கண்ணில் வந்தது.
“என்ன சொல்லுற சதீஷ்” என்ற வாசுதேவன், “இதோ இப்போவே வரேன்” என்று கிளம்பினார். “எங்கே கிளம்பிட்ட வாசு” என்ற சிவச்சந்திரனிடம், “வைதேகி ஹாஸ்பிடலில் இருக்காளாம். ரொம்ப சீரியஸ்னு சதீஷ் ஃபோன் பண்ணினான் அதான் நான் கிளம்புறேன்” என்ற வாசுதேவன், “வீட்டில் யாருக்குமே தெரிய வேண்டாம். பல்லவியும், மாப்பிள்ளையும் சந்தோஷமா அவங்க வாழ்க்கையை தொடங்கட்டும் நான் ஹாஸ்பிடலில் என்ன ஏதுன்னு ஃபோன் பண்ணுறேன் நீ கொஞ்சம் இங்கே இரு” என்றார் வாசுதேவன்.
“நீ எப்படி தனியா போவ இரு நானும் வரேன்” என்று சிவச்சந்திரனும் தன் நண்பனுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
பித்துப் பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள் சாம்பவி.
சதீஷோ அந்த ஐசியு வாசலில் நேற்று இரவில் இருந்து கண் விழிக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் சகோதரியை நினைத்து அழுது கொண்டு இருந்தான்.
“சதீஷ் என்ன நடந்தது வைதேகிக்கு என்ன” என்று வந்த வாசுதேவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான். “மாமா அக்கா நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிரும் போல மாமா” என்று அழுதான் சதீஷ்.
“என்ன நடந்துச்சு சதீஷ்” என்ற வாசுதேவனிடம், “தெரியலை மாமா உங்க கிட்ட பேசிட்டு வீட்டுக்கு போனேன். அங்கே அக்கா வயிற்றில் கத்தி குத்துப்பட்டு இரத்தம் கொட்டுது. என்னாச்சுக்கானு தூக்கினேன். அக்காவும் சொல்லவில்லை. இவள் என்னன்னா பித்து பிடிச்சது போல உட்கார்ந்து இருக்காள். இவளோட கையிலும் இரத்தம் இவள் தான் அக்காவை எதுனாலும் பண்ணிட்டாளோன்னும் தெரியலை. எதுவுமே பேச மாட்டேங்கிறாள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல்லவி கல்யாணம் முடியும் வரை உங்க கிட்ட சொல்லக் கூடாதுனு அக்கா சத்தியம் வாங்கிட்டு அக்கா மயங்கிருச்சு அப்பறம் ஹாஸ்பிடலில் சேர்த்தேன். இதுக்கு மேல உங்களுக்கு சொல்லாமல் மறைக்க கூடாதுன்னு தான் சொன்னேன்” என்றான் சதீஷ்.
வாசுதேவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன தான் வைதேகி மீது கொலைவெறியே இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கூட வாழ்ந்தவர் ஆயிற்றே.
“சாம்பவி என்ன நடந்துச்சு சொல்லு சொல்லு” என்று மகளை உலுக்கினார் வாசுதேவன். சட்டென்று நினைவு வந்தவள், “அப்பா, அப்பா, அம்மா எங்கேப்பா அம்மாவை நானே கொன்னுட்டேன்பா என்னை கொன்னுருங்கப்பா ப்ளீஸ் என்னை கொன்னுருங்க” என்று கதறி அழுதாள் சாம்பவி.
“என்ன டீ சொல்லுற உன் அம்மாவை நீ தான் கத்தியால் குத்துனியா” என்று அவளை உலுக்கினான் சதீஷ். “ஆமாம் மாமா நான் தான் நான் தான் கத்தியால குத்தினேன். சத்தியமா வேணும்னு குத்த வில்லை அது ஒரு விபத்து” என்ற சாம்பவி நடந்த நிகழ்வுகளை கூற ஆரம்பித்தாள்.
“தப்பு பண்ணாதே சாம்பவி பல்லவியை வாழ விடு” என்று கத்தினார் வைதேகி. “அவள் ஏன் வாழனும் நான் மட்டும் உன் தம்பியை கல்யாணம் பண்ணி இந்த கிராமத்தில் கஷ்டப்பட்டு சாகனும் அந்த பல்லவி அந்த திலீப் கூட சந்தோஷமா வாழனுமா விட மாட்டேன் விடவே மாட்டேன். அவள் உயிரோடவே இருக்க கூடாது” என்று கத்திய சாம்பவி அந்த கூர்மையான கத்தியை எடுத்துக் கொண்டு வேக வேகமாக வீட்டை விட்டு கிளம்ப எத்தனிக்க அவளிடம் இருந்து அந்த கத்தியை பறிக்க போராடினார் வைதேகி. அந்த போராட்டத்தில் அவள் கையில் இருந்த கத்தி வைதேகியின் வயிற்றில் குத்திவிட சாம்பவி பயந்து “அம்மா” என்று கத்தினாள்.
அதிகப்படியான இரத்தத்தை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். தன் தாயை தானே கொலை செய்து விட்டோம் என்ற அதிர்ச்சியில் அவள் சிலையாகிப் போனாள்.
“அடிப்பாவி நீ எல்லாம் ஒரு பொண்ணா உன் வெறிக்கு பெத்த அம்மாவை கொலை பண்ண பார்த்திருக்கியே” என்று அவளை அடிக்க ஆரம்பித்தான் சதீஷ்.
“இப்படி ஒரு பொண்ணை பெத்து வளர்த்ததற்கு வைதேகிக்கு இப்படி ஒரு தண்டனை அந்த மகள் மூலமே கிடைத்திருக்கிறதே” என்று நொந்து கொண்டார் வாசுதேவன்.
(…அடியே….)