“மருது போதும்டா குடிச்சது. இதுக்கு மேல குடிச்சா குடல் வெந்து செத்துடுவ”
நான் சாக மாட்டேன். அந்த செம்பாவை அடையாமல் செத்துபோனால் என் ஆத்மா கூட சாந்தி அடையாது சேர்மா.
“உலகத்துல உனக்கு வேற பொண்ணா கிடைக்கலை. அந்த பொண்ணு அழகா இருக்கு அதை நான் ஏற்றுக்குறேன். ஆனால் வசதி இல்லையே. உனக்கு இருக்குற வசந்திக்கு இன்னும் மூனு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம். நீ போய் ஏன்டா அவ பின்னாடி சுத்துற?”
“வசதி எனக்கு தேவையில்லை சேர்மா, அவளை நான் கல்யாணம் பண்ணியே ஆகனும். என்னை கை நீட்டி அடிச்சவளை தினம் தினம் சித்ரவதை பண்ணணும். என்னோட கொடுமை தாங்காமல் சாகவா இருக்கவான்னு தெரியாமல் தினமும் மனதால் நொந்து சாகனும். அதுதான் எனக்கு வேணும்.”
“அப்போ போய் பொண்ணு கேளு”.
“அது நடக்காத விஷயம்டா சேர்மா”
ஏன்? அந்த நல்லசிவத்துக்கு சரக்கை ஊத்திவிடு… ஏதாவது பிரச்சனையை இழுத்துவிட்டு, அப்புறம் அந்த செம்பாவை உன் வழிக்கு கொண்டு வந்துடலாம்.
“நீ என்ன நினைச்ச செம்பாவை பற்றி, எங்க வீட்ல சம்பாதித்தாலும் அந்த செம்பா சம்மதிக்க மாட்டாள். எதையாவது வச்சி அவளை நான் மடக்கனும். சரியான சந்தர்ப்த்துக்காக காத்துட்டு இருக்கேன்”.
“நான் ஒரு ஐடியா சொல்லவா”
“என்ன சொல்லு?”
“அந்த கோகியை தூக்கிட்டு”
“அந்த வாயாடியை தூக்கி நான் என்ன பண்ண போறேன்.”
“அவளை வச்சி செம்பாவை உன் வழிக்கு கொண்டு வா”.
“எப்படி…?”
“அவளை கடத்தி உன் தோட்டத்துல எங்கேயாவது அடைத்து வை. அதை வச்சி மிரட்டு. கண்டிப்பா செம்பா வருவாள்.”
“இதை எப்போ செய்றது?”.
“திருவிழா முடியட்டும். அதுக்கு அப்புறம் செய்வோம். விடிந்தால் கடைசி திருவிழா. இன்னைக்கு ஜல்லிக்கட்டு நியாபகம் இருக்குல்ல… வருஷா வருஷம் நீ கலந்துக்குவ, இன்னைக்கு நீ இருக்குற நிலமையை பார்த்தாள் கஷ்டம் போல மரூது”
“நான் இந்த தடவை கலத்துக்க நினைக்கவில்லை சேர்மா. சில பேரை கலந்துக்க வைக்கனூம்.”
“யாரைடா?”
“நடக்கும்போது பாரு, இந்த மருது யாருன்னு. நம்ம காளை இறங்குதுல்ல”
“ஆமாடா. இதுக்காக எத்தனை நாளாக பயிற்சி கொடுத்து இருக்கோம். விடுவோமா? எப்பவுமே நம்ம காளை மாஸ் காட்டி நிற்கும்ல,”
“ம்ஹிம்.. இன்னைக்கு ஜல்லிக்கட்டுல பல சம்பவம் இருக்கு”.
“டேய், நீ சொல்றதை பார்த்தால் ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கு. திருவிழா சமயத்துல சாவு விழுந்தால் ஐந்து வருஷம் திருவிழா நடக்காது நியாபகம் இருக்குல்ல”
‘சாவுலாம் விழாது சேர்மா. சின்ன விளையாட்டு காட்ட போறேன்.”
“என்னமோ சொல்ற… உனக்கு எதுவும் ஆகிடாமல் இருந்தால் சரி.”
“எனக்கு எதுவும் ஆகாது என மீண்டும் வயிறுமுட்ட குடிக்க ஆரம்பித்தான் மருது.”
சந்திரவுக்கு இன்னும் உடல்நலம் சரியில்லாததால் மதியம் வேலைக்குதான் செல்கிறாள் செம்பா.
வாசலில் நல்லசிவம் அமர்ந்து பூ கட்டிகொண்டிருந்தார்.
“மாமா எனக்கு நிறைய பூ வேணும். இதோ இந்த நீளத்துக்கு என கையை நீட்டி காண்பித்தால் கோகி”
“ஆமா உன் ஒரு ஜான் முடிக்கு தரையை தொடும் அளவுக்கு பூ வச்சிக்க சரியா” என ராசாத்தி வர…
“உண்மையாவே நீ எனக்கு தாய் தானா?”
“ அதுல என்னடி உனக்கு சந்தேகம்”
“எப்போ பாரு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்கியே”
“பின்ன உனக்கு அறிவு இருந்தால் பூ கேட்பியா…”
“என் அறிவுக்கு என்ன குறைச்சல்”
“ஆமா நிரஞ்சி வழியிது எடுத்து டப்பால போட்டு பூட்டி வச்சிக்கோ”
ம்மா… என கோகி சினுங்க..
“பின்ன என்னடி நீ போறது ஆஸ்பத்திரி வேலைக்கு, அங்கே பூ வைக்கவிடமாட்டாங்க, இதுல நிறைய பூ வேணும்னு கேட்குற”
“ஆமால்ல மறந்துடச்சி ஆத்தோவ்…”
இந்தா என கையில் சாப்பாடு பாத்திரத்தை கொடுத்தார்.
“இப்போதான்ம்மா நான் சாப்டேன்”.
“எப்படியும் இடையில் பசிக்கும்ல சாப்பிடுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சிடும் நாங்க பாக்க போறோம். நீங்க பத்திரமா போங்க சரியா”
“சரி” என அதை தன் பையில் பத்திரபடுத்திகொண்டாள் கோகி.
செம்பா வந்ததும் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு கிளம்ப செம்பா கோகி இருவரும் வேலைக்கு கிள்மபினர்.
மாலை மணி ஆறு கடந்திருந்தது.
வெளியே வீசும் காற்றோடு,
மழைதூறல் விழும் மெல்லிய ஓசையும் கேட்டுகொண்டிருந்தது. மருத்துவமனையின் அவசர பிரிவில் வாடிக்கையாளர்களை பார்த்துகொண்டிருந்தாள் செம்பா. முகத்தில் ஒரு சோர்வும் கண்களில் மட்டும் விழிப்பும் இருந்தது.
அந்த சமயத்தில்தான் அவசரமாக உள்ளே ஒருவன் வந்தான். நன்றாக பார்க்க பாலாவை போல் இருந்தது.
“இவர் இங்கே ஏன்? இவ்வளவு பதட்டமான வர்றார்” என எழுந்தவள் அவனிடம் வந்தாள்.
செம்பாவை பார்த்ததும் ஒரு வித நிம்மதி அவன் கண்களில்…
“என்ன? ஏன் இவ்வளவு பதட்டம்?”
“அது என் ஃப்ரெண்ட் கையில் காயம் ட்ரெஸ்சிங் பண்ணணும்.” தையல் போடுற அளவுக்கு காயம் இருக்கும்னு தோணுது”
“கூப்பிட்டு வாங்க, என ஒரு அறையை நோக்கி கை நீட்டி அந்த ரூம்க்கு கூப்பிட்டு போங்க” என்றவள் தேவையான மருந்து உபகரணங்கள் எடுத்துகொண்டு உள்ளே சென்றாள்.
கதவை திறந்து உள்ளே வந்த உருவத்தை பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சி அடைய, அடுத்த நொடியே அவன் உடலில் எங்கே காயம் என கண்கள் தானாக ஆராய்ந்தன.
அவன் தோள்பட்டையில் காயம் இருப்பது போல் தெரிந்தது துணியால் கட்டியிருந்தான்.
செம்பாவை பார்த்த ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருந்தான் சமர்.
“இங்கே உட்காருங்க” என அங்கிருந்த நாற்காலியை கை காட்டினாள். அவளை பார்த்தபடியே அதில் அமர்ந்தான் சமர்.
செம்பா அவன் காயத்தில் கட்டப்பட்டிருந்த துணிகளை மெல்ல அவிழ்த்தாள். குருதி காய்ந்தும் வந்தும் கொண்டிருந்தது. காயம் கொஞ்சம் அதிகம்தான். ஆழமாக பட்டிருந்தது.
செம்பா நெஞ்சத்தில் ஒருவித பதட்டம். கண்களும் கலங்கின. ஏதேதோ நினைவுகள் உள்ளுக்குள் மின்னி மின்னி மறைந்தன. அந்த காயத்தின் அருகே சில காயங்கள் தெரிய அதனை கூர்மையாக பார்த்தாள். அவன் காயங்கத்தினை துடைத்து சுத்தம் செய்தவள்.
பாலாவிடம் நீங்களும் டாக்டர்தானே இதை நீங்களே பண்ணிருக்கலாம் என்க, “எங்ககிட்ட எந்த பொருளும் இல்லை. நாளைக்கு தான் வரும். அதான் ஹாஸ்பிடல் வந்தோம்” என்றான் பாலா.
“காயம் ஆழமாக இருக்குறதால் தையல்தான் போடனும்.”
“உடனே பாலா, சரி பாப்பா நீ தையல் போடு என்க… சமர் பாலாவை பார்த்தான். செம்பா தையல் போட போகவும் கதவை திறந்தது கொண்டு உள்ளே வந்தாள் ஆத்வி.
“ஏய் நிறுத்து, நீ ஒன்னும் தையல் போடவேண்டாம். டாக்டர் எங்கே…”
“ஆப்ரேஷன் தியேட்டர்ல இரூக்காங்க, வர இன்னும் அரைமணிநேரம் ஆகும். அதான் நான் தையல் போடுறேன்” என்றாள் செம்பா.
“ஒன்னும் வேணாம், அதை கொடு நானே தையல் போடுறேன்” என ஆத்வி வர
“பாலாவிடம் திரும்பியவள் உங்க ஃப்ரெண்ட் அமைதியா போக சொல்லுங்க, அதுதான் அவங்களுக்கு நல்லது. இது எங்க ஹாஸ்பிடல். நாங்க இங்கே வேலை செய்றோம். நாங்களும் படிச்சிட்டுதான் இந்த வேலைக்கு வந்திருக்கோம். அவங்க டாக்டராவே இருந்தாலும் கேட்குற முறைன்னு ஒன்று இருக்கு. முதல்ல எப்படி பேசணும்னு கத்து கொடுங்க” என்றவள் தையலிட போக சமரோ இவ்வளவு நேரம் நடந்த எதையும் கருத்தில் கொள்ளாமல், இளஞ்சிவப்பு வண்ண புடவை அணிந்த தன்னுடைய தேவைதையை பார்வையால் வருடி கொண்டிருந்தான். அவளை பார்த்த நேரத்தில் இருந்து காயத்தின் வலியும் காணாமல் போய்ருந்தது.
சமரின் பார்வையை கண்டும் காணாமல் வேலையை பார்த்தாலும் உள்மனது அவனின் செயலை ரசித்தது. செம்பாவின் விழிகளும் கலங்கிதான் இருந்தன.
“ஸ்ஸ் ஆஹ்” என்க, “வலிக்குதா கொஞ்சம் பொறுத்துக்கோங்க” என்றவளின் விரல்கள் லேசாக காயங்களை வருடிவிட்டபடி, மருந்தை தடவினாள். அவள் விரல்களில் நடுக்கம் தெரிய, அவளது பார்வை அவனிடம்..
பாலா ஆத்வியை அங்கிருந்து வெளியே அனுப்பி இருந்தான்.
சமரன் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. இருமனம் மட்டும் ஆயிரம் வாதங்கள் நடத்தி கொண்டிருந்தன.. வெளியே மட்டும் மௌனம் ஆட்சி செய்தது. ஒரு நொடி இருவர் பார்வை சந்தித்தன…
கோபத்தால் பிறந்த மௌனம். நினைவுகளில் அழிந்த தூரம் பார்வைகளில் மட்டூம் இருவரின் காதல் உயிர்ப்புடன் இருந்தது. இருவருக்கும் இடையில் சத்தமில்லாமல் வசனங்கள் ஒலித்துகொண்டிருந்தன.
“உன் மனதில் நான்தானடி இருக்கேன்” என சமர் கேட்க…
அவன் பேசுவான் என எதிர்பார்க்காதவள் எதுவும் காதில் விழாது போல துணியை வைத்து கட்டிவிட்டு கொண்டிருந்தாள்..
“பேசமாட்டல்ல, நீ பேசனும்னு ஆசை படும்போது நான் இருக்கமாட்டேன் பட்டாசு”.
“இவ்வளவு நாள் நான் பேசணும்னு ஆசைப்படும்போது நீங்க இல்லைதான்” என்றால் செம்பா.
“சுயநினைவு இழந்து உன் நினைவுகளோட வாழ்ந்தவன் தான். நீ எனக்காக ஏங்கிய நேரம் நான் உன்னோடு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் எப்போதும் உன்கூடவே இருக்கனும்னு நினைத்து வந்த என்னை நீ கண்டுக்கவே இல்லையே”
“நான் வேணாம்னு சொல்றேனே” உங்க மூளையில் ஏறலையா?”
அவன் சுயநினைவோடு இல்லாமல் இருந்தேன் என சொன்னதை செம்பா கவனிக்கவிலலை.
“அப்போ நான் உனக்கு வேணாமா பட்டாசு?”
“பதில் முன்னாடியே சொன்னதா நியாபகம்”
“இப்போது என்னை பார்த்து சொல்லு” என்க..
செம்பா கண்டுகொள்ளாமல் நகர போக, அவள் கையை பிடித்து இழுதுதான்.
“எதுக்கு இப்படி பொறுக்கி மாதிரி நடந்துக்குறிங்க…”
“நான் பொறுக்கியா, ஆமாடி உன் விஷயத்துல நான் கேடுகெட்ட மட்டமான பொறுக்கியாவே இருந்துட்டு போறேன். எனக்கு தேவை ஒழுங்கான பதில் செம்பா” என அவன் பிடித்த கரங்களை விடவில்லை சமர்”
“ஆமா நீங்க எனக்கு வேணாம். எனக்கு உங்களை பிடிக்கலை. இந்த உலகத்துலேயே நான் வெறுக்கும் முதல் ஆள் நீங்கதான் போதுமா என்றவள் “மெடிக்கல்ல மாத்திரை வாக்கிக்கோங்க. உங்களுக்கு எப்படி இருக்கனும் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாளைக்கு மருந்து வைக்க வந்தால் சரி, இல்லை நீங்களே வைத்தாலும் சரி ரிசெப்ஷன்ல பணம் கட்டிட்டு நீங்க கிளம்பலாம்” என்றாள்
“உயிரோடு கொல்லுற பட்டாசு.”
“இப்படி நீங்க என்னை சொல்லும்போது நானும் உயிரோடுதான் எறிகிறேன். முடிந்தவரை என்னை அந்த பெயரை வைத்து அழைக்காதிங்க”.
“ஏன்…?”
“சொல்லனும்னு தோணலை”
“வலியை உனக்குள்ளே புதைக்க போறியா?”
“ஏற்கனவே நான் எனக்குள்ளே புதைந்து பல வருஷம் ஆகிடுச்சி”
“பைத்தியம் மாதிரி பேசாதே செம்பா”.
“நீங்கதான் நான் அப்படி பேசுற மாதிரி நடந்துக்குறிங்க, உங்களுக்கான வாழ்க்கை உங்க பக்கத்தில்தான் இருக்கு” என ஆத்வியை மனதில் வைத்து சொன்னால் செம்பா.
“ஆமா நான் கட்டிபிடிக்கும் தூரம்தான். அணைத்தால் அவள் அடித்து விட்டால் என்ன செய்வதுன்னு யோசிக்கிறேன். என்றவனை முறைத்தவள் விறுவிறுவென வெளியை வர பாலா அவன் நண்பர்களுடன் பேசியபடி இருந்தான். செம்பா வெளியே வந்ததும் “மருந்து போட்டியா பாப்பா” என கேட்க, “ம்ம்ம்.. நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு போங்க, நாளைக்கு மருந்து வைக்கனும்” என செம்பா சொல்லவர,
“அதையெல்லாம் நாங்களே பண்ணிடுவோம்” என்றாள் ஆத்வி.
சரி என்றவள் அவளுக்கு வேலை நேரம் முடிய வெளியே வர, அவளுக்காக காத்திருந்தாள் கோகி.
“என்னடி நேரம் ஆகிடுச்சி.?”
“இப்போ ஒருத்தர் கையில் அடிப்பட்டு வந்தாங்க, அதான் தையல் போட்டேன்.”
“ம்ம்ம்.. பாலா அண்ணா பார்த்து பேசினேன் சொன்னார்.”
“ கம்பி கையை கிழிச்ச மாதிரி இருந்தது என்றாள் செம்பா”
“ஆமா கிழிச்சிச்சதுதான். ஆனால் கம்பி இல்லை காளைமாடு”
“அந்த மருது இருக்கான்ல அவன் வேலைதான். அவன் தான் அசலூர்ல இருந்து வந்த ஆம்பளைங்க அதாவது ஆம்பளைங்க மட்டும் காளையை அடக்க வாங்கன்னு சொல்ல, சமர் அண்ணா அதை கண்டுக்காம நின்னுருக்கார்.
உடனே அந்த மருது “ஏம்பா நீல சட்டை என்றதும் திரும்பிய சமர் “என்னையா” என கேட்க, ஆமா உன்னைதான் தம்பி, நல்ல ஜிம்பாடி வச்சி ஹிரோ மாதிரி இருந்தால் மட்டும் போதாது. எங்களை மாதிரி காளையை அடக்குற அளவுக்கு தில்லும் தைரியமும் வேணும். அவன்தான் உண்மையான ஆம்பளை” என சிரிக்க…
“ சமர் அவன் வம்பு இருக்கிறான் கண்டுக்காதே” என்றான் பாலா. அதை கேட்காமல் அங்கிருந்த மருதுவை நோக்கி சமர் செல்ல.. பாலாவும் அவன் நண்பர்கள் எல்லாரும் தடுத்தும் கேளாமல் காளையை அடக்க அந்த இடத்துக்குள் இறங்கினான் சமர். அப்போது வந்தது மருதுவின் காளை, அதை லாவகமாக பிடிக்க போகும் சமயம், அந்த காளை தன் கொம்பால் சமரன் கையில் ஒரு கோடே போட்டுவிட்டது. அவன் ஆடை நிறத்திற்கு மொத்தமாக சிவப்பாய் மாறின. அவனின் நண்பர்கள் அனைவரும் “ வெளியே வா சமர்” என குரல் கொடுக்க, அந்த வலியையும் பொருத்து கொண்டு மாட்டை அடக்கி விட்டுதான் வெளியே வந்தான். அதன் பின்தான் மருத்துவமனைக்கு வந்தது என்றாள் கோகி.
ஓஹ்… என்பதோடு நிறுத்தியவள். மனதிற்குள் மருது ஏன் இப்படி செய்கிறான் என்பது தெரியதான் செய்தது. இதனை தடுக்க வேண்டும் என்றாள், சமர் உடனே ஊரைவிட்டு செல்லவேண்டும். ஆனால் முடியாது அவன் மெடிக்கல் கேம்ப்க்காக வந்திருக்கிறான். “அது முடியாமல் எப்படி போவார் அவரிடம் பேசனும்” என்ற முடிவுடன் நடந்தாள் செம்பா.