அத்தியாயம் 10
“ஏமி அர்ச்சனா இங்கா பயலுடுரே லேது(இன்னும் கிளம்பாமல் இருக்க)” என்ற அருணாவிடம், “நேனு அக்கடக்கி எலா வெல்லாகலானு மீ வதனை கொருகுனே டானி கோசம் மீரு வெலிட்டே, இடாருலு ஏமனுகுன்டாரு? (நான் எப்படி அங்கே போவேன், அண்ணி ஆசைப் பாட்டால் மத்தவங்க என்ன நினைப்பாங்க?)” என்றாள் அர்ச்சனா.
“மத்தவங்க என்ன நினைத்தால் என்ன அர்ச்சனா உன் வதனை நீ வரணும்னு ஆசைப் படுகிறாள் அவளுக்காக வா” என்றான் கார்த்திகேயன்.
“அண்ணையா” என்று அவள் ஏதோ சொல்ல வர, “உன் அண்ணையா சொன்னால் கேட்கனும்” என்று அவன் கூறிட அர்ச்சனாவும் அமைதியாக கிளம்பினாள்.
“அத்தைம்மா நாங்க போயிட்டு வரோம் நீங்களும், மாமாவும் எங்க தொல்லை இல்லாமல் நிம்மதியா இருங்க” என்ற தெய்வானையின் கன்னம் கிள்ளிய சௌந்திரவள்ளி, ஆயிரம் பத்திரம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
“பாவா எதுக்கு பஸ்ல போகனும் அதான் உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமே அதனால் கார்லையே போகலாமே” என்றாள் தெய்வானை. “ஆமாம் மாவா அத்தைகாரு செப்புறது போல கார்லையே போகலாம் ப்ளீஸ்” என்று வைஷ்ணவியும் கார்த்திகேயனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.
“வைஷு அமைதியா இரு” என்ற அர்ச்சனாவிடம், “நுவ்வு அமைதியா இரு சித்தி” என்ற வைஷ்ணவி மீண்டும் , “மாவா, மாவா” என்று கார்த்திகேயனை நச்சரிக்க, அவளோடு சேர்த்து தெய்வானையும் கெஞ்சலாக பார்த்திட அவனும் சரியென்று காரிலேயே ஹைதராபாத் செல்ல சம்மதித்தான்.
“வாங்க , வாங்க மாப்பிள்ளை, தெய்வானை” என்று மகளையும், மருமகனையும் வரவேற்றார் கலா ராணி, கோகுலகிருஷ்ணன் தம்பதியர். “பாவா வாங்க என்று பிரசாந்த்தும் அவர்களை வரவேற்றான். அர்ச்சனா அவர்களுடன் வந்திருப்பதைக் கண்ட பிரசாந்த் “வாங்க அர்ச்சனா” என்றிட அவளை பார்த்த கலாராணி , “வாம்மா அர்ச்சனா நல்லா இருக்கியா?” என்றிட, “நல்லா இருக்கேன் அத்தைகாரு” என்றாள் அர்ச்சனா.
“என்னமா உன் அண்ணையாவோட கல்யாணத்துக்கு கூட நீ வரலை உன்னை ரொம்ப எதிர்பார்த்தேன் தெரியுமா? உன்னை பார்க்கணும்னு அவ்ளோ ஆசைப்பட்டேன். கல்யாணத்துக்கு உங்க வீட்டுக்கு வந்து இருந்தப்ப கூட நீ அந்த அறையை விட்டு வரவில்லை இப்போவாச்சும் மனசு இறங்கி எங்க வீட்டுக்கு வரணும்னு உனக்கு தோன்றியிருக்கே என்றார்.
“ ஏமிம்மா மீரு வீட்டுக்கு விருந்துக்கு வந்தவங்களை வாசலிலே நிக்க வச்சு பேசிட்டே இருப்பீங்களா? பசிக்குது முதலில் சாப்பாடு போடு கலா” என்றாள் தெய்வானை.
“ சரியான சோத்து மூட்டை டி நீ முதலில் போய் குளிச்சு குளிச்சிட்டு பிரஷ்ஷாகிட்டு வா அப்புறமா தான் உனக்கு சோறு” என்று கலாராணி கூறிட “நைனா இ அம்மாயி ரொம்ப மோசம்” என்று தன் தந்தையிடம் தாயை குறைபட்டுக் கொண்டாள் தெய்வானை.
“மோசம் தாண்டி முதலில் போய் குளிச்சிட்டு வா, மாப்பிள்ளை நீங்களும் போய் பிரஷ் ஆகிட்டு வாங்க” என்றவர் “அர்ச்சனா நீ என் கூட வாம்மா, வைஷ்ணவி நீயும் தான்” என்று கலாராணி அர்ச்சனாவையும், வைஷ்ணவியையும் அழைத்து சென்றார்.
“ஏமி பாவா யோசனை” என்ற தெய்வானையிடம், “இல்லை தெய்வா அத்தம்மா அர்ச்சனாவை கூட்டிட்டு வந்ததுக்கு எதுவும் நினைச்சுப்பாங்களோனு யோசிச்சேன் உன் வீட்ல உள்ளவங்களும் உன்னை மாதிரி தான்” என்றான் கார்த்திகேயன்.
“பாவா நீங்களும் ஏன் உங்க அக்கா மாதிரியே பத்தாம் பஸ்லித்தனமா பேசிட்டு இருக்கீங்க அர்ச்சனா ஒன்னும் தீண்டத்தகாதவள் கிடையாது சரியா, அவளும் மனுஷி அவளுக்கு உணர்வுகள் இருக்கு ,அவளுக்கும் ஆசைகள் இருக்கு அவள் சின்ன பொண்ணு இந்த வயசுல அவளை எதுக்குமே ஆசைப்படக்கூடாதுன்னு சொல்லி ரூம்ல அடைச்சு வைக்கிறது ரொம்ப பெரிய தப்பு இப்போதானே அவளை வெளியில் கொண்டு வந்து இருக்கேன் பாருங்க போகப்போக அவளை எப்படி மாத்துறேன்னு” என்று தெய்வானை கூறினாள்.
அவளை பார்த்து புன்னகைத்தான் கார்த்திகேயன் . “சரி சரி இப்படியே சிரிச்சிட்டே இருந்தால் என்ன அர்த்தம் ஃபர்ஸ்ட் நீங்க குளிக்க போறீங்களா? இல்லை நான் குளிக்க போகட்டுமா?” என்றாள் தெய்வானை.
“எதுக்கு தனித் தனியா குளிக்கும். நாம சேர்ந்தே குளிக்கலாம்” என்று அவளை கைகளில் ஏந்தி கொண்டான் கார்த்திகேயன்.
“ஏமி பாவா நுவ்வு இலா சேஸ்டுனாவ்வு” என்ற தெய்வானையிடம், “உங்க வீட்ல தான் அட்டாச் பாத்ரூம் இருக்கு நம்ம வீடு மாதிரியா வெளியில போய் குளிக்கணும். அதனால நீ ஒரு பாத்ரூம்ல நான் ஒரு பாத்ரூம்ல குளிச்சோம். இங்கே நாம சேர்ந்து குளிக்கலாம்” என்று அவன் கண்ணடித்து கூறிட, அவளோ வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள மனைவியை கைகளில் ஏந்திக் கொண்டான் கார்த்திகேயன்.
“ஏமி அண்ணையா பேசணும்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு ஒன்னும் பேசாமல் நின்னுட்டு இருக்க பசிக்குது பாவா வேற வெயிட் பண்ணுவாரு சொல்லு” என்ற தெய்வானையிடம், “தெய்வா நீயும் பாவாவும் மத்தியானம் ஃப்ரீ தானே” என்றான் பிரசாந்த்.
“ அடுத்த ரெண்டு நாளைக்கு நாங்க ஃப்ரீ தான் நம்ம வீட்ல தான் இருப்போம் ஏமி விஷயம்” என்றாள் தெய்வானை.
“இல்லை நீயும் பாவாவும் இங்க தங்கறதுக்கு நான் ஒரு வீடு பார்த்து வச்சிருக்கேன் அதை போய் நம்ம பாத்துட்டு வந்துருவோம்” என்றான் பிரசாந்த் .
“நாங்க தங்குவதற்கு வீடு பார்த்து இருக்கியா நம்ம வீட்ல தான் மூன்று பெட்ரூம் இருக்கே அப்பறம் ஏன் நாங்க தனியா இருக்க வீடு பார்க்கணும்” என்று தெய்வானை கேட்டிட, “தெய்வா நீயும், பாவாவும் தனிக்குடித்தனம் போக வீடு பார்த்து இருக்கேன்” என்று பிரசாந்த் கூறிட, “அண்ணையா என்ன பேசிட்டு இருக்க நான் ஏன் தனிக்குடித்தனம் வரணும் நானும், பாவாவும் எங்க வீட்ல தானே இருக்கோம் எதுக்கு நாங்க தனியா வரணும்” என்றாள் தெய்வானை .
“என்ன தெய்வா பேசுற அந்த ஊர்ல நீ எப்படி வாழ முடியும் .உனக்கு அங்கே என்ன வேலை இருக்கு இங்க நீ வேலை பார்த்துட்டு இருக்க நீ எதுக்காக அந்த ஊர்ல கஷ்டப்படணும் அது ஒரு கிராமம், பட்டிக்காடு” என்ற பிரசாந்திடம், “அண்ணையா நான் ஆல்ரெடி என்னோட வேலையா ரிசைன் பண்ணிட்டேன் அதை நான் உன்கிட்ட சொல்லாமல் இருந்தது தப்புதான் மன்னிச்சுக்கோ. நீ ஏன் இப்படி அதிக பிரசங்கித்தனமா வீடு எல்லாம் பார்த்து வச்சிருக்க நல்லவேளை என்கிட்ட சொன்ன பாவா கிட்ட சொல்லலை அவரு என்ன நினைப்பாரோ இதோ பாரு அண்ணையா எனக்கு சிட்டி லைஃப் கொஞ்சம் போர் அடிக்குது நான் கொஞ்ச நாளைக்கு அங்கே இருக்கிறேன் அந்த ஊர்ல உள்ள அட்மோஸ்பியர் எனக்கு ஒத்து வரலை, பிடிக்கலை அப்படிங்கிற பட்சத்தில் நானே பாவாகிட்ட சொல்லி இங்க வந்து செட்டிலாக பார்க்கிறேன் ஆனால் தேவை இல்லாம நீ இப்படி அதிக பிரசங்கித்தனம் பண்ணாதே” என்றாள் தெய்வானை .
“தெய்வா என்ன சொல்ற” என்ற பிரசாந்திடம், “நான் என் பாவா கூட இருக்கிறது தான் சந்தோஷம்னு நினைக்கிறேன் அவரோட சந்தோஷம் அந்த ஊர்ல இருக்கிறது அவரோட சந்தோசம் தான் என்னோட சந்தோஷம் அதனால கண்டதை யோசிக்காமல் இரு. இந்த வீடு பார்க்கிற வேலை எல்லாம் விட்டுட்டு போலீஸ் காரனா ஒழுங்கா அக்யூஸ்ட்டை பிடி” என்று கூறிவிட்டு, “சரி வா எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிடலாம்” என்றாள் தெய்வானை.
“ஏமி வைஷு ஊருக்கு போய்ட்டீங்களா? அங்கே அர்ச்சனாவை யாரும் எதுவும் சொன்னாங்களா?” என்ற அருணா தேவியிடம் , “சித்தியை யாரும் எதுவும் சொல்லலையே” என்றாள் வைஷ்ணவி.
“ஏமி வைஷு தெய்வானையோட அம்மா ஒன்னுமே சொல்லலையா?” என்ற அருணாவிடம் , “ஐயோ அம்மா நம்ம வீட்ல நீயும், அவ்வாவும் சித்தியை போட்டு திட்டிக்கிட்டே இருப்பீங்க, இங்கே சித்தியை அத்தையோட அம்மா எவ்ளோ பாசமா நடத்துறாங்க தெரியுமா? அர்ச்சனா ,அர்ச்சனானு எல்லா விஷயத்திலும் சித்திக்கு தான் ஃபர்ஸ்ட் பிரிபரன்ஸ் கொடுக்குறாங்க. நம்ம வீட்ல நீயும் சரி , அவ்வாவும் சரி சித்தியை அந்த ரூம்குள்ளே அடைச்சு வச்சிருந்தீங்க ஆனால் இங்க அவங்க சித்தியை சாமி அறையில் விளக்கேத்தவே விடுறாங்க இங்கே சித்தி ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்றாள் வைஷ்ணவி.
“ஏமி வதனை வைஷு கிட்ட பேசுனிங்களா?” என்ற பவித்ராவிடம், “பேசுவேன் பவி நம்ம நினைச்சதை விட எல்லாமே தலைகீழா நடக்கும் போல, அந்த வீட்டுல இவளை பார்த்துட்டு மூஞ்சிய சுழிப்பாங்கன்னு பார்த்தால் எல்லாரும் ஆஹா ஓஹோன்னு புகழ்றாங்களாம். அவள் வந்ததை ஏதோ விஷேசம் மாதிரி கொண்டாடுறாங்களாம். தெய்வானையை விட இவளைத் தான் கொண்டாடிட்டு இருக்காங்கன்னு வைஷ்ணவி சொல்லிட்டு இருக்கா. என்ன நடக்குது இவங்க அவ்வளவு முற்போக்கு சிந்தனை உள்ள குடும்பமா” என்றாள் அருணா தேவி .
“அந்த தெய்வானை அப்படித்தான் இருக்காள் அப்போ அவளோட குடும்பமும் அப்படித்தானே இருக்கும். அவளோட அண்ணையா வேற போலீஸ்காரன்னு சொல்றீங்க வேற எப்படி இருப்பாங்க நம்மதான் தப்பு பண்ணிட்டோம் அர்ச்சனாவை அனுப்பி இருந்திருக்க கூடாது நீங்க போயிருந்திருக்கணும் நீங்க போனால் அங்கே ஏதாவது பிரச்சினை பண்ணி இருப்பீங்க” என்று பவித்ரா கூறிட, “சரி விடு அவளை என் தம்புடு வாழ்க்கையை விட்டு துரத்துவதற்கு வேற ஏதாவது ஒரு சான்ஸ் கிடைக்காமலா போகும் பார்த்துக்கொள்ளலாம்” என்றாள் அருணா தேவி.
“பாவா சாப்பாடு நல்லா இருந்துச்சா, உங்களுக்கு பிடிச்சுருந்துச்சா” என்ற தெய்வானையை தன் அருகில் அமர வைத்தவன் , “சாப்பாட்டை விட உங்க வீட்டு மனுஷங்களை ரொம்ப பிடிச்சிருக்கு தெய்வா. அர்ச்சனாவை என் அம்மா கூட ராசியில்லாதவள், விளங்காதவள் அது , இதுன்னு எவ்வளவோ திட்டி இருக்காங்க ஆனால் அத்தைகாரு, மாவய்யா, பிரசாந்த் மூன்று பேரும் ரொம்ப மரியாதையா நடந்துனாங்க. நிஜமா சொல்றேன் அர்ச்சனாவை கூட்டிட்டு வர்றோமே அவளுக்கும் சரி, உன் வீட்டாளுங்களுக்கும் சரி எந்த சங்கடமும் வரக் கூடாதுன்னு நினைச்சு பயந்தேன். இப்போ ரொம்ப திருப்தியா இருக்கேன்” என்றான் கார்த்திகேயன்.
அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், “என் வீட்டை பற்றி எனக்கு தெரியாதா பாவா. இங்கே வந்தால் கண்டிப்பா அர்ச்சனாவுக்கு ஒரு சேஞ்சா இருக்கும்னு தான் அழைச்சிட்டு வந்தேன்” என்றாள் தெய்வானை.
(…மயக்கியே..)