மின்சார பாவை-8

4.6
(7)

மின்சார பாவை-8

அன்னையின் பேச்சு வந்ததும் முகம் இறுகிய வெண்ணிலா ஒரு நொடியில் முகத்தை மாற்றியதும் இல்லாமல், பேச்சையும் மாற்றினாள்.

“ஹேய்! இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது. வாங்க உள்ள போகலாம். என் பேபியை வேற சமாதானப்படுத்தணும்.”என்றவாறே அந்த திட்டிலிருந்து குதித்தாள் வெண்ணிலா.

“உன் மேல கோவமா இருக்காங்க போல. அப்புறம் ஏன் நீ அவங்க பின்னாடி போற?” என்று சபரீகா வினவ‌.

“என் பேபி என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கணும்.”

“ம்! உன் பேபிக்கே பேபி வந்துடுச்சு. காலேஜ்ல டாப்பர் அப்படி, இப்படின்னு சீன் போட்டுட்டு இருந்த மேடம், இப்ப வேலைக்கு போகலை. வீட்ல தான் ஃபேமிலிய பார்த்துட்டு குடும்பஸ்தீரியா இருக்காங்க.” என்று மஹதி கூற.

“ஓ! ஆனால் பேபிக்கு நிறைய கனவுகள் இருந்துச்சே.” என்ற வெண்ணிலாவிற்கு தீபிகாவை நினைத்து சற்று வருத்தமாக இருந்தது.

“தீபிகா போல தான் நிறைய பேர் வேலைக்கு போகல ஆனா ஆவேரேஜா படிச்சவங்க எல்லாம் கம்பெனில ஒரு நல்ல பொசிஷன்ல இருக்காங்க.” என்றாள் சபரீகா.

“ம்! இதுல இருந்து ஒன்னுத் தெரியுது, படிப்பு, படிப்புன்னு காலேஜ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணாதவங்கள விட, ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணவங்க தான் லைஃப்ல நல்லா செட்டிலாயிருக்காங்க. சரி நான் போய் என் பேபிட்ட பேசிட்டு வர்றேன். நீங்களும் வர்றீங்களா?” என்று தனது நண்பர்களிடம் வினவ.

“ஐயோ!அவங்க லெட்ச்சரை கேட்க நான் வரலை. நான் கேண்டினுக்கு போறேன்.” என்று முதல் ஆளாக நகுலன் மறுக்க.

“ஏன் டா! இன்னும் அந்த அக்கா, உன்னைப் பார்த்தா அட்வைஸ் பண்றதே விடவே இல்லையா” என்று அவனது தோளில் தட்டியபடியே ஹரிஷ் வினவ.

“ஆமாம் டா! அந்தக் கொடுமை ஏன் கேக்குற. நான் என்னவோ அவங்களோட குட்டித் தம்பி போலவே ட்ரீட் பண்ணுறாங்க. எங்க அண்ணன் அட்வைஸ் பண்ணாலே நான் கேட்க மாட்டேன்னு அவங்கக் கிட்ட யார் சொல்றதுன்னு நகுலன் புலம்ப.

“சரி விடு மச்சி! நிலா நீ போய் பேசிட்டு வாம்மா. நாம எல்லோரும் கேண்டீன் போவோம். நீ தான் செலவு பண்ணனும். உன்னை காப்பத்த தான் நாம அங்கப் போறோம்.” என்று ஹரிஷ், நகுலனை இழுத்துக் கொண்டே செல்ல.

“டேய் ஹரி! கஞ்ச பிசி! நீ மாறவே இல்லை டா. நீ இப்போ மன்திலி ஒன் லக் இயர்ன் பண்ணுற.அப்புறமும் ஏன் டா இப்படி இருக்க.” என்ற சபரீகா அவன் பின்னே செல்ல.

அவர்களைப் புன்னகையுடன் பார்த்தவாறே, தீபிகாவைத் தேடி கல்லூரிக்குள் நுழைந்தாள்.

வழக்கம் போல லைப்ரரிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய மரத்தடியில் தான் நின்றுக் கொண்டிருந்தாள் தீபிகா.

அவளருகே மித்ரன் கையில் குழந்தையுடன் இருந்தான்.

ரகுலனை காணவில்லை. இவள் அவர்களை நோக்கிச் செல்லும் போதே அவசரமாக அங்கிருந்து நழுவியது போல் தோன்றியது.

“பேபி!” என்றவாறே வெண்ணிலா தீபிகாவின் அருகே செல்ல. அவளோ, முறைத்தவாறே முகத்தை திருப்பிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

“வாட் பேபி? உன்னைப் பார்க்க ஆசையா வந்தா, இப்படி முகத்தை திருப்பிட்டு போற? என் மேல என்ன கோவம்?” என்று அவள் முகத்தைப் பிடித்து கொஞ்சியவாறே வினவினாள்.

“நான் கோபமாக லாம் இல்ல. கொலைவெறியில இருக்கேன். பேசாம ஓடிடு.”

“ அப்படி நான் என்ன பண்ணேன் பேபி.”

“நீ என்ன பண்ணேன்னு உண்மையா உனக்குத் தெரியாதா?”

“தெரியாது.” என்பது போல் தோளைக் குலுக்கியவள், அவளுக்கு பக்கத்தில் அழுதுக் கொண்டிருந்த குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மித்திரனை பார்த்து புன்னகைத்தவள், “ஹாய் சீனியர்! எப்படி இருக்கீங்க? இது யார் குழந்தை?” என்று வினவியவள், குழந்தையின் கன்னத்தை கொஞ்ச, அந்தக் குழந்தையோ வெண்ணிலாவிடம் தாவியது.

“ ஹாய் குட்டிமா! எதுக்கு அழறீங்க?” என்று வினவ.

அந்தக் குழந்தையோ அரிசிப்பல் தெரிய சிரித்தது.

“ஸ்வீட் குட்டிமா! நீங்க பேபியோட பேபி தானே. அப்படியே பேபி மாதிரியே இருக்கியே?” என்று அவளே அவளது கேள்விக்கான விடையையும் கண்டுப்பிடித்திருந்தாள்.

மித்ரனும், தீபிகாவும் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவ்வளவு நேரம் அழுதுக் கொண்டிருந்த குழந்தையோ, அழுகையை நிறுத்தி வெண்ணிலாவுடன் ஐக்கியமாகிருந்தது.

“குட்டிமா என்னோட வர்றியா? எங்க வீட்ல ஒரு குட்டி அக்கா உன்னை மாதிரி க்யூட்டா இருப்பா. அவளோட விளையாடலாம்.” என்று கொஞ்ச.

அதைக் கேட்டதும், மறுபடியும் தீபிகாவின் முகம் மாறியது.

“அவ எங்கேயும் வர மாட்டா?”என்றவாறே குழந்தையை அவளிடம் வாங்கி மித்ரனிடம் நீட்டினாள் தீபிகா.

“உனக்கு எப்பவும் என்னை விட உன் ஃப்ரெண்டை தான் பிடிக்கும்.” என்று குரல் கம்ம வெண்ணிலா கூற.

“எனக்கு ரெண்டு பேரும் ஒன்னு தான். நீ லைஃப்ல செட்டிலாகிட்ட. அவன் பாவம் உன்னை காதலிச்ச பாவத்துக்கு சிங்கிளா சுத்துறான்.”

“வாட்? உன் ப்ரெண்ட்டு சிங்கிள்னு உனக்கு யாரு சொன்னா?” என்று வெண்ணிலா வினவ.

“ம் அவன் எனக்கு மட்டும் இல்லை, ஊருக்கே சொல்லிட்டிருக்கான். பேஸ்புக்ல எல்லாம் நீ இல்லையா? அதுல சிங்கிள்னு ஸ்டேட்டஸ் போட்டுருக்கான்.” என்று முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு தீபிகா கூற.

“பேபி! சிங்கிள்னு ஸ்டேட்டஸ் போடுறவங்களை நம்பாதே. யார் கண்டா, உன் தோஸ்த்து ஃபாரின்ல யாரோடனோ ஜோடி போட்டு சுத்திகிட்டு இருக்க வாய்ப்பு இருக்கு.”என்ற வெண்ணிலாவின் முதுகிலே மொத்தினாள் தீபிகா.

“வாவ் பேபி! உன் கையால அடி வாங்கி எவ்வளவு நாள் ஆச்சுத் தெரியுமா?” என்று சிரித்தாள் வெண்ணிலா.

“சிரிக்காதே நிலா! நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்.”

“இட்ஸ் ஓகே பேபி. நீ சீரியஸா இரு. அதுக்காக நான் சிரிக்காம இருக்க முடியுமா?”

“பாவம் யுகி.” என்று இன்னும் அவளது நண்பனுக்காகவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் தீபிகா.

“அவ்வளவு அக்கறை இருக்குறவ, நீயே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.”

“ நான் கேட்டேன். யுகி தான் ஒத்துக்கல.” என்ற தீபிகாவை,

விழிகள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அவள் உண்மையாகத் தான் கூறுகிறாள் என்பது புரிய, “, நல்லவேளை உன் வீட்டுக்காரர் வரலை. இல்லைன்னா அவ்வளவு தான். ஃப்ரெண்ட் மேல நாங்களும் தான் பாசம் வச்சுருக்கோம். ஆனாலும் உன் அளவுக்கு கிடையாது.” என்றவளைப் பார்த்த தீபிகாவோ, “என் வீட்டுக்காரர் வரலைன்னு யார் சொன்னது.”என்றாள்.

“பேபி! அவரு எங்க இருக்கார்? அவரையும் வச்சுக்கிட்டு தான் இப்படி உளறிட்டு இருக்கியா?” என்று வெண்ணிலா கடிந்துக் கொள்ள.

“பயப்படாதே வெண்ணிலா. அடியேன் தான் அவளுக்கு கிடைச்ச அடிமை‌‌” என்று குழந்தையையும் வச்சுட்டு இடைவரை குனிந்த மித்திரனைப் பார்த்ததும் விழுந்து, விழுந்து சிரித்தாள் வெண்ணிலா.

“எதுக்குமா இப்படி சிரிக்கிற?” என்று பாவமாக மித்ரன் வினவ.

“சாரி சீனியர்!” என்ற வெண்ணிலாவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“ஹேய் எருமை! உதை வாங்கப் போற.”என்று மித்ரனின் முகம் போகும் போக்கைப் பார்த்து, தீபிகா வெண்ணிலாவை அடக்கப் பார்த்தாள்.

“அது வந்து சீனியரை காலேஜ்ல எல்லாரையும் மிரட்டி விரட்டின்னு கெத்தா பார்த்துட்டு, இப்போ உனக்கும், உன் மகளுக்கும் பேக் தூக்கிட்டு இருக்குறதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துடுச்சு.”

“மித்து மட்டும் இல்லை, கல்யாணமாகிட்டா எல்லாரும் அப்படித்தான்.”என்று தீபிகா கூற.

“ அதுவும் சரிதான். எங்க மாமா கூட அப்படித்தான்.” என்றவளது கண்கள் கனிந்தது.

“எப்படி நிலா யுகியை இவ்வளவு ஈஸியா தூக்கிப் போட்டுட்ட‌ அதுவும் தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருந்தவனை,

துரத்தி துரத்தி லவ் பண்ணிட்டு, இப்போ ஈஸியா கடந்து போயிட்டுருக்க.”

“இந்த உலகத்துல எவ்வளவோ பேர் லவ் பண்றாங்க. ஆனால் எல்லாரோட லவ்வும் சக்ஸஸ் ஆகுறதில்ல. அது போலத் தான் என் காதலும் முடிஞ்சிருச்சு. சரி என் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்ணுங்க. நான் வரேன்.” என்று அங்கிருந்து நகர்ந்தவளோ, மனதிற்குள் யுகித்தை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

‘எல்லாம் அந்த வளர்ந்து கெட்டவனை சொல்லணும். நான் துரத்தி துரத்தி லவ் பண்ணினேனாம். இந்த உலகம் இப்படித்தான் நம்பிட்டு இருக்கு போல. எல்லாத்துக்கும் அந்த தடிமகடு தான் காரணம்.’ என்று எண்ணியவள், பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.

அன்று (காதல் பண்ணியது)

சீனியர் கொடுத்த நோட்ஸை எழுதி முடித்து விட்டு தாமதமாக வீட்டுக்கு கிளம்பியவளிடம் துணைக்கககூட வருவதாக நகுலன் கூற.

“வேண்டாம்! “ என்று மறுத்து விட்டு கிளம்பிய வெண்ணிலாவை எதிர்கொள்ள அவளது அன்னை கமலி வெளியிலே காத்திருந்தார்.

“அம்மா!” என்று வெண்ணிலா ஏதோ கூற முற்பட.

“ நில்லுடி! உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நீயும் என்னை கழுத்தறுக்கணும்னு முடிவு பண்ணிட்டியா?” என்று கமலி ஆங்காரமாக கத்த.

“அம்மா எதுக்கு மா சத்தம் போடுறீங்க. உள்ள போய் பேசலாம்.”

என்று உள்ளே நுழைய முயன்றாள் வெண்ணிலா.

“ஏன் அதுக்குள்ள ஏதாவது பொய் சொல்ல காரணம் தேடலாம்னு பார்க்குறியா?”என்றவரை, அயர்ந்து போய் பார்த்தாள் வெண்ணிலா.

இந்தப் பார்வைக்கெல்லாம் அசர மாட்டேன் என்பது போல் கமலி நிற்க.

வெண்ணிலா தான் இறங்கி வந்தாள்.

“அசைன்மென்ட் இருந்துச்சு மா. முடிச்சிட்டு வர லேட்டாகிடுச்சு.”

“ பொய் சொல்லாதே! எந்த காலேஜ்ல காலேஜ் ஆரம்பிச்ச உடனே அசைன்மென்ட் தரப்போறாங்க.”

“ அம்மா உண்மையா தான் சொல்றேன்.”

“அப்படியா அப்போ நாளைக்கு நீ காலேஜுக்கு போகும் போது நானும் வரேன். உங்க பிரின்ஸிபல் கிட்ட கேட்போம்.” என்று கூற.

“அது வந்துமா…”என்று வெண்ணிலா மென்று முழுங்க.

“நீ பொய் சொல்றேன்னு நல்லாவே தெரியுது. உங்கள பெத்து வளர்த்து படிக்கிறதுக்கு காலேஜுக்கு அனுப்புனா, நீங்க எங்களை ஏமாத்தணும்னு நினைக்கிறீங்க. ஒருத்தி தான், மூஞ்சில கரியை பூசிட்டு போயிட்டா, நீயாவது எங்கப் பேச்சை கேட்பேன்னு பார்த்தேன். ஆனா நீ அவளுக்கு மேல இருக்க. காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்துலேயே ஊர் சுத்த கிளம்பியாச்சு.” என்று படபடக்க

“அம்மா! நான் பொய் சொல்லல. காலேஜ்ல இருந்து தான் வர்றேன். சீனியர் ஸ்டுடண்ஸ் ராகிங் பண்ணாங்க. அவங்க குடுத்த அசைன்மெண்ட்ட எழுதி முடிச்சுட்டு தான் போகணும்னு சொன்னாங்க. அதான் லேட்டாகிடுச்சுமா.”

“மறுபடியும், மறுபடியும் பொய் சொல்லாதே. உங்க காலேஜ்ல ராகிங் எல்லாம் கிடையாதுன்னு நல்லா விசாரிச்சு தானே உன்னை சேர்த்தோம்.” என்று வீட்டுக்கு வெளியிலே ஒரு மணி நேரமாக அவளை நிற்க வைத்து, கமலி அவர் பாட்டுக்கும் பேசிக் கொண்டிருக்க.

அக்கம், பக்கம் உள்ளவர்களின் பார்வையில் கூனிக்குறுகி போனவள், இவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று புரிய, “சாரிமா! இனி மேல் லேட்டா வர மாட்டேன்.” என்று இயந்திரத்தனமான குரலில் கூறினாள் வெண்ணிலா.

உள்ளே

“இனியாவது புத்தியோட நட!” என்று ஒரு வழியாக வெண்ணிலாவை உள்ளே விட்டார் கமலி.

இவ்வளவு நேரம் நடந்த நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தந்தையை வெறுப்புடன் பார்த்தவாறே, தனதறைக்குள் நுழைந்தாள் வெண்ணிலா.

“சாப்பிடுமா!” என்றார் முகுந்தன்.

“பசிக்கலை.” என்று முணுமுணுத்து விட்டு அங்கிருந்து நகர முயன்றாள் வெண்ணிலா.

“ஹேய் நிலா! திமிரா? அப்பா கூப்பிட, கூப்பிட நிற்காமல் போற. முதல்ல சாப்பிடு. அப்புறமா போய் உன் இஷ்டத்துக்கு என்னமோ பண்ணிட்டு இரு.” என்று கமலி திட்ட

கண்கள் கலங்க, வேண்டா வெறுப்பாக அமர்ந்து உணவை வாயில் அள்ளிப் போட்டு எழுந்தாள் வெண்ணிலா.

“சும்மா ஃபோனையே நோண்டிட்டே இல்லாமல் படிக்குற வேலை இருந்தா பாரு. யார் கிட்டையாவது பேசுவது தெரிஞ்சது தொலைச்சிடுவேன். ஃபோன் வாங்கி தர வேண்டாம்னு சொன்னா இந்த மனுஷன் கேட்கல. சூடு பட்ட பூனை கூட திருத்தும். இந்த மனுஷன் திருந்த மாட்டேங்குறார்.” என்று தன் கணவனையும் திட்டிக் கொண்டே கமலி செல்ல.

 கண்ணிலிருந்து வரும் கண்ணீரை, தடுத்தவளோ தலையாட்டிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அவளது கண்ணீரையெல்லாம் தலையணை மட்டுமே அறியும். இரவு விடிய, விடிய அழுதவளது முகம் மறுநாள் வீங்கியிருந்தது.

அதைக் கண்டும் காணாமலும், கமலியிருக்க. முகுந்தனுக்கு மனதே தாளவில்லை.

“உடம்பு சரியில்லையா? காலேஜுக்கு வேணும்னா லீவ் போடேன்.” என்றுக் கூற.

“சும்மா தலைவலி தான். நான் காலேஜுக்கு கிளம்புறேன்.” என்று தப்பித்தால் போதுமென்று கிளம்பி கல்லூரிக்கு வந்தவளுக்கு, நண்பர்களைத் தான் சமாளிக்க முடியவில்லை.

எப்பொழுதும் துறுதுறுவென சுற்றுபவளின், வீங்கிய முகத்தைப் பார்த்த அவளது நண்பர்களோ, “என்னாச்சு நிலா? ஜுரமா? ஏன் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு. ஹாஸ்பிடலுக்கு போகலாம் வா னு பதற.

“ ஒன்னும் இல்லை!” என்று சமாளிப்பதற்குள் போதும், போதுமென்றானது.

நகுலன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

அவனது பார்வையை சந்திக்க இயலாமல் தலைக் குனிந்தாள் வெண்ணிலா.

“நிலா! என்னாச்சு உனக்கு? வீட்ல ஏதாவது ப்ராப்ளமா? எத இருந்தாலும் எங்களிடம் சொல்லு நிலா. ப்ரெண்ட்ஷிப்னா சுக, துக்கத்தைப் பகிர்ந்துக்குறது தான். உனக்கு எப்போ எங்கக் கிட்ட ஷேர் பண்ணனும்னு தோணுதோ அப்போ சொன்னாக்கூட போதும்.” என்ற நகுலனை நன்றியுடன் பார்த்தாள் வெண்ணிலா.

வெண்ணிலா வாய் விட்டு எதுவும் கூறாத போதும், அவளுக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை என்று நகுலனுக்குப் புரிந்தது.

அதுவும் இல்லாமல் அவளது இந்த நிலைமைக்கு தன்னுடைய அண்ணனும், அவர்களது நண்பர்களும் ஒரு காரணம் என்று புரிய, அவர்களைத் தேடிச் சென்றான் நகுலன்.

“என்னடா? மேட்டர்? உன்னை யாரும் ரேகிங் பண்றாங்களா?” என்று அங்கு வந்த நகுலனைப் பார்த்து மித்ரன் வினவ.

“என்ன யாரும் எதுவும் சொல்லலை. ஆனால் வெண்ணிலா பாவம்ணா. அவளையே ஏன் டார்கெட் பண்றீங்க?”

“டேய்! இதுக்கெல்லாம் நாங்க காரணம் இல்லை. யுகி தான் அந்த வெண்ணிலா மேல செம கோவத்துல இருக்கான்.”

“யுகி அண்ணா ! நீங்க தான் வெண்ணிலாவை அசைன்மென்ட் எழுத சொன்னதா.” என்று நம்பாமல் வினவினான் நகுலன்.

“சும்மா அசைன்மென்ட் தானே எழுதச் சொன்னோம்.” என்றான் யுகித்.

“வீட்ல எழுத சொல்லியிருக்கலாம்ணா. லேட்டா போனதால அவங்க வீட்ல பிரச்சனையாகிடுச்சுணா.”

“அச்சோ! அது எங்களுக்கு தெரியாதே. இப்படி நடக்கும் தெரிஞ்சிருந்தால் நாங்க அவளை சீக்கிரம் போ என்று சொல்லியிருப்போம் நகு.அவளும் எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்” என்று யுகித்தோ, தன் நண்பர்களைப் பார்த்து கண்ணடித்தான்.

‘அடப்பாவி! உன்னை நல்லவன்னு என் தம்பி நம்பிட்டு இருக்கான்.’ என்று மனதிற்குள் புலம்பினான் ரகுலன்.

“சரிங்கண்ணா! அவ முகத்தைப் பார்த்து மனசே ஆறலை. அதான் வந்தேன்.” என்று கவலையுடன் செல்லும் நகுலனைப் பார்த்த யுகித், “டேய் ரகு! உன் தம்பி சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் கில்டியா இருக்கு. வாடா அந்தப் பொண்ணுக் கிட்ட மன்னிப்பு கேட்கலாம்.” என்றுக் கூற.

“போடா! இதெல்லாம் சப்ப மேட்டர். இதுக்கு போய் மன்னிப்பு கேட்பாங்களா? நான் வரலை என்று அவன் கூற .

“டேய் மச்சி! நீயாவது வாடா.” என்று மித்ரனை அழைத்தான் யுகித்.

“வாட்? நான் வந்து மன்னிப்பு கேட்கணுமா? நான் தான் கேங்லீடர். என்னால முடியாது.” என்று அவனும் மறுத்து விட.

“நானே போறேன்.” என்று யுகித் மட்டும் கிளம்ப.

“யுகி! நான் வர்றேன்.” என்ற தீபிகா, அவனுடன் சென்றாள்.

 அங்கோ வெண்ணிலாவை சிரிக்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தான் நகுலன்.

ஆனால் அவளால் நேற்று நடந்த நிகழ்வில் இருந்து வெளியே வரவே முடியவில்லை.

“வெண்ணிலா!” என்ற யுகித்தின் குரல் கேட்க.

வெண்ணிலா பதில் கூறுவதற்குள், நகுலன் பதற்றத்துடன் “என்ன அண்ணா?” என்று வினவ.

“ரிலாக்ஸ் நகுல். நான் வெண்ணிலா கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்திருக்கேன்.” என்றவன், வெண்ணிலாவை ஆழ்ந்துப் பார்த்தவாறே, “என்னை மன்னிச்சிடு வெண்ணிலா.” என்றான்.

“ எதுக்கு சீனியர்!” என்று புரியாமல் வினவினாள் வெண்ணிலா.

“நேற்று நடந்ததுக்கு ரியலி சாரி! நான் வேணும்னு செய்யலை.”என்று மீண்டும் மன்னிப்பு கேட்க.

“இட்ஸ் ஓகே சீனியர்!” என்றவளது கண்களில் வெறுப்பு படர, அதை அவனிடம் காண்ப்பிக்காமல் இருக்கப் படாதபாடுபட்டாள்.

தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் யுகித். அவன் பின்னேயே சென்றாள் தீபிகா.

“நிலா! யுகிண்ணா தான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே அப்புறம் ஏன் இன்னும் கோபமா இருக்க?”

“ப்ச்! தெரிஞ்சே தப்பு செஞ்சுட்டு மன்னிப்புக் கேட்டா உடனே செஞ்சது தப்பு இல்லைன்னாகிடுமா? நான்லாம் செய்யாத தப்புக்கே எங்க அம்மா கிட்ட ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்பேன். அது எனக்கு ஜஸ்ட் ஒரு வார்த்தை. அவ்வளவு தான்.” என்று வெண்ணிலா திரும்ப.

அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் யுகித்.

பழைய நினைவை விரட்டிய வெண்ணிலா, கேண்டினை நோக்கி

இரண்டு எட்டு எடுத்து வைக்க‌.

அங்கிருந்த மரத்திற்கு பின்புறம் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் யுகித்.

தன் கண்களை நம்ப முடியாமல் கண் சிமிட்டிப் பார்த்த வெண்ணிலாவிற்கு மயக்கமே வருவது போல் இருந்தது

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!