உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.9
(8)

சரி அந்த கொலை செய்தவன நீ பார்த்தா அடையாளம் சொல்லுவயா என்று கேட்க?

நான் சொல்லனுமா?

நீங்க தானே பார்த்தீங்க நீங்க தான் சொல்லணும்..

இறந்தது யாரு தெரியுமா?

அவர் RTI ஆக்டிவிஸ்ட்..ஏதோ அவர் கிட்ட ப்ரூஃப் இருக்கு அதனால தான் அவர கொண்ணுட்டாங்க..

நீ அதை பார்த்து இருக்க.. கண்டிப்பா நீ சாட்சி சொல்லனும்…

இப்போதைக்கு நீ மட்டும் தான் முக்கிய சாட்சி புரியுதா?

அவளும் சரி என்று தலையாட்டினாள்..

வேற எதுவும் என்கிட்ட மறைக்கிறயா என்று கேட்டான் ரகு?

நோ சார்.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை..

கான்ஸ்டபிளை அழைத்த ரகு இந்த பொண்ணு கூட வந்த அவங்களோட பேரன்ட்ஸ கூப்பிடுங்க என்றான்…

வெளியே அரசு முதல் பேசிக் கொண்டிருந்த அருணாச்சலம் கண்ணனையும் கான்ஸ்டபிள் உள்ளே அழைத்துச் சென்றார்…

ரகுவும் அவர்களிடம் பிரகதி தான் இதுல முக்கியமான சாட்சி.. அதனால அவங்கள கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க நாங்க எப்ப கூப்பிட்டாலும் நீங்க வரணும்..

அவங்களை எங்கேயும் தனியா விடாதீங்க..

கொஞ்சம் பார்மாலிட்டிஸ் இருக்கு அதை முடிச்சுட்டு அவங்கள கூட்டிட்டு போங்க…

ஓகே சார் என்று மூவரும் எழுந்து கொண்டார்கள்…

அரவிந்த் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்க கிட்ட பேசணும் என்று ரகு சொல்ல..

சரிங்க மாமா நீங்க பிரகதியை பாருங்க , நான் கொஞ்சம் பேசிட்டு வரேன்…

அரவிந்த உடன் சிறிது நேரம் ஏதோ பேசிவிட்டு…

ஓகே அரவிந்த் கங்கிராட்ஸ்…

பிரகதி கொஞ்சம் சேஃபா பார்த்துக்கோங்க என்றான் ரகு…

ஓகே சார் நீங்களும் உங்க பேமிலியோட என்ன மேரேஜ்க்கு வரணும் என்று அவனுக்கு அழைப்பு விடுத்தான்…

லவ் மேரேஜா என்று கேட்க?

அவனோ சிரித்துக் கொண்டே அது வந்து அரேஞ்ச் மேரேஜ் தான் சார் என்றான்…

ம்ம்ம்ம் பார்த்தா அப்படி தெரியல யே ?

சார் நிஜமாவே அரேஞ்ச்டு மேரேஜ் தான்.

ஓகே அரவிந்த் நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு அவனை அனுப்பி வைத்தான்…

மாமா நீங்க பிரகதியை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க.. நான் நாளைக்கு அப்பா கூட வீட்டுக்கு வரேன் என்று அவர்களை அனுப்பி வைத்தான்…

மாப்பிள்ளை பார்த்து போங்க ரொம்ப லேட்நைட் ஆயிடுச்சு…

வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்க என்று அவர்கள் சென்று விட்டனர்…

இதுக்கு மேல வீட்டுக்கு போன தேவகி திட்டுமே!

திட்டினாலும் பரவால்ல நம்ம முடிவு மாத்திக்க கூடாது..

  1. எப்படியோ எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க இது தேவகிய  தான் சமாளிக்கணும் என்று யோசித்தவாரே வீட்டுக்கு சென்றான்..

வீட்டுக்கு வந்து கேட்டு லாக் செய்துவிட்டு கதவைத் தட்ட சுகுமார் திறந்து விட்டார்.

என்னப்பா ஆச்சு ஸ்டேஷன்ல?

அவனும் அங்கு நடந்ததை சொல்ல..

என்ன சொல்றது ஏதோ கெட்ட நேரம்;

இது நடந்துருச்சு நம்ம போய் நாளைக்கு அவங்கள  பாத்துட்டு வரலாம்..

உங்க அம்மா என்ன பேசினாலும் நீ திருப்பி எதுவும் பேசாத..

நான் உனக்கு கல்யாணம் நடக்க ஹெல்ப் பண்றேன்..

ரொம்ப தேங்க்ஸ் பா என்று அவரை அனைத்துக் கொண்டான்..

காலைல அபிஷேக் வரான்.. அவன வெச்சு தான் உன் அம்மா கிட்ட பேசணும்.. சரிப்பா போய் தூங்கு காலைல பாக்கலாம்…

ரகுவும் ரேஷ்மாவும் அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்…

சார் எனக்கு என்னமோ அந்த பொண்ணு பாதி தான் உண்மையை சொன்ன மாதிரி தோணுச்சு என்றாள்..

சம்திங் ராங் நானும் அதை கெஸ் செய்தேன்..

பாக்கலாம் விக்டிம் கிடைச்சதுக்கு அப்புறம்தான் எல்லாமே தெரியும்..

ஓகே நான் நாளைக்கு ஆப்டர்நூன் தான் வருவேன் நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க…

ஓகே சார் என்றாலும் அவனிடத்தில் அமர்ந்து ஏதோ ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்..

பிரகதியும் வீடு வந்து சேர்ந்தாள்..

இரவு நேரம் என்பதால் பக்கத்தில் யாரும் வெளியே இல்லை..

அவளை அணைத்து கொண்டு கௌசல்யா தேம்பி தேம்பி அழுக..

சரி சரி அழுதது போதும் போய் குளிச்சிட்டு வா என்று அவளை அழைத்துச் செல்ல…

அவள் குளித்து விட்டு வந்ததும் சாமி கும்பிட்டு.. கடவுளே என் பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நல்ல படியாக இருக்கனும் என்று அவளுக்கு திருநீறு பூசி விட்டனர்…

காலையில மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரேன்னு சொன்னாங்க..

ஒருவேளை கல்யாணம் வேண்டாம்னு சொல்ல போறாங்களோ என்று கௌசல்யா கேட்க?

தெரியலமா எதுவா இருந்தாலும் வார்த்தையை விட்டுறாதீங்க..

எல்லாம் சேர்ந்து பேசிக்கலாம் இப்ப போய் தூங்குங்க…

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்..

கண் மூடி படுத்திருந்தாலும் யாருக்கும் தூக்கம் வரவில்லை…

பிரகதிக்கு திருமணம் நடக்குமா என்பது சந்தேகம் தான்..

அரவிந்த் வீட்ல என்ன சொல்லுவாங்க என்று யோசித்துக் கொண்டே ரொம்ப நேரம் கழித்து தான் தூக்கம் வந்தது..

அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு அபிஷேக் வீடு வந்து சேர்ந்தான்..

அப்பா எங்க என்று கேட்டான்?

தூங்கிட்டு இருப்பாங்க நைட் லேட்டா தான் தூங்கினாங்க என்று திவ்யா கூறினாள்..

அரவிந்த் வீட்டுக்கு லேட்டா தான் வந்தனா?

ஆமாங்க..

சரி வா என்று அவன் அரைக்கு சென்று விட்டான்..

திவ்யா தயக்கத்துடன்

அபி இந்த மேரேஜ் நடக்கிறது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..

நீ என்ன நினைக்கிற என்று அவளை திருப்பி கேட்டான்?

அந்த பொண்ணு ரொம்ப பாவம்… எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரும் கொஞ்சம் க்ளோசா பேசிக்கிட்டாங்க.. இப்ப கல்யாண நின்னுச்சுனா அந்த பொண்ணு ரொம்ப உடைஞ்சு போயிடுவா..

ஏற்கனவே டிஸ்டர்ப்டா  தான் இருப்பா;

அவளோட அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை தானே!

இப்பதான் ஒரு ப்ராப்ளம் வந்துச்சு.. இப்ப மறுபடியும் கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன நீங்க எப்படி ரியாக்ட் பண்ணவாங்கன்னு தெரியல டா என்றாள்..

இதுதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்..

பட் அம்மா என்ன முடிவெடுப்பாங்கன்னு தெரியல?

எப்படியும் அரவிந்த் அம்மா சொல்றது ஒத்துக்க மாட்டான்..

சரி விடு காலைல பேசிக்கலாம்.. எனக்கு டயர்டா இருக்கு.. அவங்க வீட்டுக்கு  போகணும்…

கொஞ்சம் ஹெட் மசாஜ் பண்ணி விடுறியா?

அவளும் செய்து விட்டு அவனை அணைத்தபடி படுத்துக் கொண்டாள்…

ரகு வீட்டுக்கு வந்ததும் ..

என்னங்க சீக்கிரம் வந்துட்டிங்க ?

ம்ம் அதுவா ஒரு பேபி எனக்கு கிஃப்ட் கொடுத்தாங்க. திருப்பி நான் கிஃப்ட் கொடுக்கவே இல்லையே.. ரொம்ப கில்டா இருந்துச்சு.அதனால தான் வீட்டுக்கு வந்துட்டேன்..

அப்படியா சார் என்ன கிஃப்ட் வாங்கி வந்திங்க என்று கேட்க..

நானே கிஃப்ட் தான் டி என்று வழக்கமாக கூறி சமாளிப்பதையே இந்த முறையும் சொல்ல..

எனக்கு தெரியும் டா இதைத் தான் நீ சொல்லப் போறன்னு..

பேபி கிஃப்ட் பிரிச்சு பார்க்கலயா என்று கேட்க?

அவள் முறைத்துக் கொண்டே ஃபர்ஸ்ட் போய் குளிச்சிட்டு வாங்க.. அப்புறம் கிஃப்ட் பிரிக்கறத பத்தி பேசுவோம் என்று குளியலறைக்குள் தள்ளினாள்..

ஒரு ஆபிசர்ன்னு பயமே இல்ல டி உனக்கு…

வீட்டுக்குள்ள நான் தான் டா ஆபிசர் என்றவளை இழுத்து சேர்த்து குளித்து விட்டு வெளியே வந்தனர்..

போடா எப்ப பாத்தாலும் இதே வேலை தான் உனக்கு என்று அவனை கட்டிக்கொண்டு பேசினால்…

நாம இன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு ஷாப்பிங் போகலாம்.. நான் ஈவினிங் தான் ஸ்டேசன் போறேன் என்றான்..

உன்னை நம்ப முடியாது.. நீ வொர்க் வந்துட்டா என்னை பாதில விட்டுட்டு போயிடுவ தானே ..

இந்த டைம் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் டி.. நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன் என்று அறைக்கு சென்று விட்டான்..

மகனுக்கு முத்தமிட்டு அவன் அருகே படுத்து உறங்கி விட்டான்..

 

அடுத்த எபி ல அரவிந்த் வீட்டில கல்யாணத்துக்கு என்ன சொல்ல போறாங்கன்னு பாக்கலாம்

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!