நெஞ்சம் – 25
அன்று நாளெல்லாம் சோகமாக இருந்தவளை கண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மதியம் வரை பொறுத்து பார்த்தவன், மிகுந்த கோபத்துடன்
“நாலு நாள்ல ஏண்டா இந்த கல்யாணம் பண்ணோம்னு வருத்தப்படுறியா?” என்றான்.
முதலில் அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தவள், கொஞ்சம் யோசித்து அவனை முறைத்தாள்.
“நீங்க செய்றதை எல்லாம் என்கிட்டே கேட்காதீங்க” என்றாள் கடுப்பாக.
வேகமாக அவர்கள் அறையில் இருந்த டிரஸிங் டேபிள் கண்ணாடி முன் அழைத்து சென்றவன்,
“ரெண்டு பேர் முகத்தையும் பார், யாரு மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு இருக்கிறது?” அவனின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
“நிவேதாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?” என்றாள்.
அவளை போலவே அவனும் அவளுக்கு பதில் சொல்லாமல், தன் முன்னால் நின்றவளின் தோள்களில் கை வைத்து இருந்தவன், அப்படியே அவளை தன்னிடம் இழுத்தான். தன் நெஞ்சில் அவளை சாய்த்தவன், அவள் கழுத்தில் தன் இதழை வைத்து தேய்த்தான். அவன் கரங்கள் இரண்டும் அவள் தோள்களில் இருந்து இறங்கி அவளின் புடவையின் உள்ளே ஊர்ந்தவாறு ஊடுருவியது. அவள் தடுமாற்றத்தை சமாளிக்க, நின்றபடி அவள் தலைக்கு மேல் கையை தூக்கி அவன் தலையை பற்றினாள். சற்று நேரத்தில் அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் மலர். அவளின் காதில், இப்போ எனக்கு பிடிச்சு இருக்குனு புரியுதா? என்றான்.
ஆண்களின் காதல் பெரும்பாலும் உணர்வுகள் சார்ந்தே வருகிறது அதனால் அர்விந்த் அவன் மலரிடம் காட்டும் நெருக்கத்தை குறிப்பிட்டான். ஆனால் பெண்களுக்கு என்றுமே வாய் மொழி தான் முக்கியம். வாரத்தைகள் பெண்களை கவர்ந்து ஈர்ப்பது போல் செயல்கள் சட்டென்று கவர்ந்து விடுவதில்லை. அதனால் அவன் வாய்மொழி இல்லாமல் அவனின் உணர்வுகள், காதல், அன்பு, பிரியம் குறித்து நிறைய தடுமாறினாள் மலர். அதனால் அவன் கூற வந்தது அவளை சரியாக சென்றடயவில்லை. அவள் வெறுமனே அதை உடல் சார்ந்த உணர்வாக மட்டுமே எண்ணினாள். அன்று மாலில் தருணிடம், ஷி மேக்ஸ் மீ ஹாப்பி என்றது சம்பந்தமே இல்லாமல் அவள் நினைவிற்கு வந்தது அப்போது. அவன் வாழ்க்கையில் என்ன இடம் கொடுத்து இருக்கிறான் அவளுக்கு என்று தெரியாதவள், எளிதாக அவன் இவளிடம் சந்தோஷம் மட்டும் எதிர்பார்க்கிறான் என்று புரிந்துக் கொண்டாள். அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தில், அமைதியாக அவனிடம் இருந்து விலகி சென்றாள்.
மனித மனம் விசித்திரமானது. முதலில், அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை திருமணம் செய்தால் போதும் என்று நினைத்தாள் மலர். இப்போது அவன் கணவனாக இருக்கிறான் ஆனாலும் அவளால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
ஒரு வாரத்தில் அவர்களின் வாழ்க்கை ஒரு வழக்கத்திற்கு வந்தது. இன்னும் அடுத்த வாரத்தில் இருந்து வாரம் இரண்டு நாள் அர்விந்த் அலுவலகம் செல்வான். மற்ற நாள் வீட்டில் இருந்து வேலை செய்வான். இப்போது சமையல், கணவன் என அவளும், வேலை, புது மனைவியுடன் ஆசை, மோகம் என அவனும் இயல்பாக இருந்தான். மலரும் அப்படி இருப்பதாக அவன் நினைத்தான்.
மலரின் பெற்றோர் பெங்களூர் வந்து சேர்ந்தனர். என்ன தான் மாணிக்கவாசகம் கூறி இருந்தாலும் கண்ணகி அர்விந்தின் வீட்டினரையும் அவன் வீட்டையும் நேரில் கண்டு உண்மையில் கொஞ்சம் மலைத்து தான் போனார். தங்களை விட அனைத்திலும் வித்தியாசனமான குடும்பத்தில் இருந்து எப்படி தங்களை இவ்வளவு இயல்பாக ஏற்றுக்கொண்டது மட்டுமில்லாமல், சகஜமாகவும் பழகுகிறார்கள் என்று.
அவர்கள் பெங்களூரில் இருக்கும் சமயம், சிறியதாக ரிஷப்ஷன் நடத்திவிடலாம் என்று முன்பே முடிவு செய்து இருந்தான் அர்விந்த். அதை இப்போது குடும்பத்தினரிடம் கூற, அனைவருக்கும் மகிழ்ச்சி, ஒருத்தியை தவிர்த்து. அவனை தனியே பிடித்து,
“கண்டிப்பா இந்த ரிஷப்ஷன் வேணுமா?”
“நீ தான் இந்த கல்யாணம் நடக்கவே காரணம், உன்னால தான் எல்லாம்னு அடிக்கடி பெருமையா சொல்றே….. அட்லீஸ்ட் ரிஷப்ஷனாவது நான் ஏற்பாடு பண்றேன்.”
“எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு….”
“ஏன்?”
“உங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லாம் வருவாங்க…. நான்…. என்னை….” அவளின் தாழ்வு மனப்பானமையை சொல்ல முடியாமல் தடுமாறினாள் மலர். நிவேதா அவன் அலுவலகத்தில் மலரை பற்றி கூறி இருப்பாள் என்பதால் ஒருவிதமாக உணர்ந்தாள் மலர்.
“கல்யாணத்துக்கு கூட தான் நிறைய பேர் வந்தாங்க…. என்ன மலர்….? தெளிவா சொல்லு….”
“உன்னோட ஹார்ட் ஓர்க்கிற்க்கு என்னோட பரிசு மா இது….இப்படி பண்றியே மா….”
“இல்லை நம்ம கல்யணம் பத்தி ஏதாவது வித்தியாசமா பேசினா?”
“நாம வித்தியாசமா எதுவும் பண்ணலையே…. கல்யாணம் தான் பண்ணி இருக்கோம்! யார் என்ன சொன்னா என்ன? நீ என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இருந்தே…. இப்போ பார்த்தா வேற மாதிரி பீல் பண்றே! எனக்கு ஒன்னும் புரியலை….” என்றான் வருத்தபடுவது போல்.
“ஐயோ, எனக்கு நம்ம கல்யாணம் சந்தோஷம் தான்….”
“அப்படி போராடி கல்யாணம் பண்ண உனக்கு என் கிப்ட்….”
“நீங்க சொல்றதை பார்த்தா எனக்கு பரிசு மாதிரி தெரியலை…..பனிஷ்மெண்ட் மாதிரி புளியை கரைக்குது வயத்திலே…..”
“புளியை எல்லாம் ஏன் வயித்துல போடுறே?” அவள் தான் மாறிக் கொள்ள வேண்டும் என்பது போல் அவளை நக்கல் அடித்து விட்டு பேச்சை கத்தரித்து விட்டான்.
“கடவுளே!” புலம்பிக் கொண்டாள் மலர்.
ரிஷப்ஷன் நாள்
பெங்களூரில் இருக்கும் மிக முக்கியமான சொந்தங்கள் சிலர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து இருந்தான் அர்விந்த். தேவையில்லாமல் கூட்டத்தை கூட்ட விரும்பவில்லை அவன். தனக்காக சந்தோஷப்படுவார்கள் என்பவர்களையே அன்று அவன் சந்தோஷத்தை பகிர அழைத்து இருந்தான். அவன் நினைத்தது போலவே நன்றாகவும் சென்றது. அனைவரையும் விட, மலரின் பெற்றோர் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
வந்திருந்த அனைவரும் பரிசு கொடுத்து, உணவு உண்ண சென்றார்கள். அந்த நேரம் மலர் ரெஸ்ட் ரூம் செல்ல, அது அந்த ஹாலை விட்டு வெளியே இருந்தது. வேறு தளத்தில் இருந்தும் வந்து உபயோகித்து கொள்ளும் வகையில் இருந்தது. மலர் தன்னை ரெபிரஷ் செய்து கைகளை கழுவிக் கொண்டு இருக்க, கண்ணாடியில் தனக்கு பின்னால் தெரிந்த நிவேதாவை கண்டு அதிர்ச்சி ஆனாள். அவளுக்கு அழைப்பு இல்லை என்று மலருக்கு தெரியும். அப்படி இருக்கையில் இவளுக்கு என்ன வேலை இங்கே?
“என்ன ஷாக்கா? குட்! உன்னை பார்க்க தான் வந்தேன். பாவமா இருந்துச்சு உன்னை நினைச்சா, அதான் உனக்கு சில விஷயம் சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொல்லலாம் நினைச்சேன்.”
“என்ன?”
“நான் இப்போ பெங்களூர் ஆபீஸ்ல தான் இருக்கேன்! அர்விந்த் சொல்லி இருக்க மாட்டனே உன்கிட்ட?” அர்விந்திற்கே தெரியாது என்று மலருக்கு தெரியாதே. ஆனாலும் கணவனை விட்டுக் கொடுக்காமல்,
“உங்களை பத்தி எல்லாம் நாங்க பேசுறது இல்லை….” என்றாள்.
“ஓ, தெரியலைங்கிறதை இப்படி சொல்லி கவர் பண்றியா?” நிவேதா நக்கலாக சிரிக்க,
“இதை கேட்க தான் வந்தீங்களா?”
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் அர்விந்த் தான் பர்ஸ்ட் கேட்டான், அப்புறம் நான் டைவர்ஸ் கேட்ட அப்போ கூட என்மேல கோபப்படாம கொடுத்தான். என்னை அந்த அளவிற்கு அவனுக்கு பிடிக்கும்…. அன்னைக்கு வீட்டிலே பார்த்தே தானே…. எக்ஸ் வைப்பை எப்படி கவனிச்சான்னு…..” நிவேதா பேச, மலருக்கு எரிச்சல் ஏற,
“உங்களை ரொம்ப பிடிச்சாலும் உங்களுக்கு டைவர்ஸ் கொடுத்து அனுப்பிட்டார்ல…. உங்க கிட்டே திரும்ப வந்து கெஞ்சலை தானே…. இப்போ நான் தான் அவர் வைப்! விஷயம் முடிஞ்சுது. நான் வரேன்” என்று கிளம்ப போனாள் மலர்.
“சின்ன ஊரில இருந்து வந்து இருக்கேனு ப்ரூவ் பண்றியே…. யோசி மா…. நல்லா யோசி…. அவ்ளோ விரும்பி, பழகி கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்கே ஈசியா டாட்டா சொல்லிட்டான்…. நீ அவனுக்கு கொஞ்சமும் மேட்ச் இல்லை…. ஸோ அவன் உனக்கு டாட்டா சொல்ற நாள் ரொம்ப தூரத்தில இல்லை, அவனோட இருக்க இந்த வாழ்க்கையை ரொம்ப நம்பாதே…. ஜாக்கிரதை” என்றாள் நிவேதா எகத்தாளமாக.
“உங்க அட்வைஸுக்கு ரொம்ப தேங்க்ஸ்…. ஒரு மனுஷனை கல்யாணம் பண்ணிட்டு அவரோட கஷ்டக் காலத்திலே அவரை வேணாம்னு சொல்லிட்டு ஓடிப் போன உங்களை மாதிரி பொண்ணுகிட்டே அவர் ஏன் பீலிங்க்ஸ் காட்டணும்?” என்று சொல்லிவிட்டு, கடைசியாக நக்கலுடன்
“என்னை பத்தி நீங்க ரொம்ப கவலைப்பட வேண்டாம்….” என்றவாறு வேகமாக திரும்பி நடந்தாள்.
என்ன தான் நிவேதாவிற்கு பதில் கூறினாலும், அவள் சொன்ன அவனுக்கு நீ கொஞ்சமும் மேட்ச் இல்லை என்ற சொல் அவளை வெகுவாக உறுத்தியது. இதே போல் தான் மற்றவர்களும் நினைப்பார்களா? தன் கணவனுக்கும் அந்த நினைப்பு இருக்குமா? அவள் பற்ற வைத்த சிறு தீப்பொறி மலரின் மனதிற்குள் அணையாமல் கனன்றுக் கொண்டே இருந்தது.
நிவேதா வந்ததையும் பேசி சென்றதையும் அர்விந்திடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள், பின் வேண்டாம் என்று முடிவு செய்துக் கொண்டாள். என்ன தான் இருந்தாலும் அவனின் முதல் மனைவி அவள். அன்று அவள் வீட்டிற்கு வந்து பேசிய போது, அவன் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை என்பதால் இவள் குறை சொல்வது போல் ஆகி விட வேண்டாம் என்று அமைதியாக இருந்து கொண்டாள் மலர்.
திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகி இருந்தது அர்விந்திற்கும் மலருக்கும். ஹனிமூன் எங்கும் செல்லவில்லை அவர்கள். மலரும் கேட்கவில்லை, பெரிதாக வெளியில் கூட செல்வதில்லை.வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருந்தார்கள். மலருக்கு அவ்வப்போது சஞ்சலம், சந்தேகம் எல்லாம் வரும் ஆபீஸ் செல்லும் போது முடிந்தவரை மலர் கொடுக்கும் சாப்பாட்டை எடுத்து செல்வான் அர்விந்த். பலமுறை வெளியில் செல்கிறோம், டீம் லன்ச் என்று முன்கூட்டியே சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவான்.
அன்று அவன் அலுவலகம் கிளம்பும் போது, திடீரென்று ஒரு மீட்டிங் ஏற்பாடு ஆகிவிட அவன் டென்ஷனில் சாப்பாட்டை மறந்து வைத்து விட்டு சென்று விட்டான். அவன் சென்று வெகு நேரம் கழித்து தான் மலரும் அவன் விட்டுச் சென்றதை கவனித்தாள்.
அருணாவிடம் சென்றவள்,
“அத்தை, நான் அவருக்கு ஆபீஸில் கொண்டு போய் கொடுத்துட்டு வரவா?” என்றாள்.
அவளின் ஆசையை புரிந்துக்கொண்ட அருணா, “நீ தைரியமா போய்ட்டு வந்துருவேனா போகலாம்” என்று சிரித்தார் பழைய நியாபகத்தில்.
“இப்போ எல்லாம் நான் அவ்ளோ மோசம் இல்லை அத்தை” என்றவள், டாக்ஸி புக் செய்து கிளம்பினாள்.
அங்கே சென்றவள், அலுவலகத்தின் உள்ளே செல்லும் முன் அரவிந்த்தை அழைக்க அவன் போனை எடுக்கவே இல்லை. அதனால் அவன் அலுவலக ரிஷப்ஷனை அடைந்து அவனின் பெயர் தாங்கிய அவனின் கம்பெனி கார்ட்டை கொடுத்தாள். அவளை காத்திருக்க சொன்ன நவநாகரிக பெண்ணியின் பார்வை அவளுக்கு சற்றும் பிடித்தமில்லை. கிளம்பி வரும் போது தோன்றாத பயம் இப்போது தோன்றியது. அர்விந்த் என்ன மாதிரி ரியாக்ட் செய்வானோ என்று பயந்தாள் மலர்.
அர்விந்த் மீடிங்கில் இருப்பதாக சொன்ன பெண், காத்திருக்க சொல்லிவிட்டு தன் வேலையை கவனித்தாள். கிட்டதட்ட முக்கால்மணி நேரத்திற்கு பின் மலர் மீட்டிங் முடிந்தவுடன் அவள் அலுவலகம் வந்து இருப்பது தெரியாமல் அவளின் மிஸ்ட் கால் பார்த்துவிட்டு அவளை அழைக்க,
“என்ன மலர்? சும்மா தானே கால் பண்ணே? இன்னைக்கு நான் ரொம்ப பிஸி…” என்றான் வேகமாக.
“நீங்க சாப்பாட்டை மறந்து வீட்டிலேயே….” அவளை முழுதாக பேச விடாமல்,
“அதெல்லாம் பரவாயில்லை, நான் என்ன ஸ்கூல் பையனா? நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அவள் அழைப்பை துண்டித்தான்.
அழைப்பை துண்டித்து விட்டானே, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவள் இருக்க, அதே நேரம் மூன்று நான்கு பேருடன் அதில் நிவேதாவும் ஒருத்தி ரிஷப்ஷன் நோக்கி வந்தவன்,
“யார் வந்து இருக்கா என்னை பார்க்க? எங்கே?” என்றான்.
அதற்குள் அவன் கூட இருந்த ஒருவனும், நிவேதாவும் உனக்கு இந்த ரெஸ்டாரண்ட் ஓகே வா என்றனர் அவனிடம். அவர்கள் லஞ்ச் போக போகிறார்கள் என்று புரிந்தது மலருக்கு. அவர்கள் யாருமே இவளை கவனிக்கவில்லை.
ரிஷப்ஷன் பெண் மலரை கை காட்ட, கொஞ்சம் கூட மலரை அங்கே எதிர்பார்க்காதவன், தன் கூட நிவேதா இருப்பதை உணர்ந்து, இவளுடன் வேறு நிற்கிறேன் என்ன நினைப்பாள் விழி என்று யோசித்தவாறு அவளிடம் சென்று,
“ஹேய், நீ எங்க இங்க? எப்படி வந்தே?” என்றான்.
அவள் எதுவும் பேசாமல் சாப்பாடு பையை காட்டவும்,
“இப்படியெல்லாம் நீ வரவேண்டிய அவசியமே இல்லை….” என்றான் மெதுவாக. அவனின் முகத்தையே பார்த்த மலருக்கு அவள் வந்தது குறித்து அவனுக்கு சந்தோஷம் இல்லை, சங்கடம் மட்டுமே என்று புரிய,
“நீங்க தெரியாம வைச்சுட்டு போயிட்டீங்கனு நினைச்சு கொஞ்சம் ஆசையா வந்துட்டேன்….இங்க வந்து பார்த்தா தான் தெரியுது நீங்க வேணும்னே வைச்சுட்டு வந்து இருக்கீங்கனு…. வந்தது தப்பு தான்… ஸாரி” என்றாள் மலர்.
நிமிடத்தில் அவன் முகம் கடுகடுக்க, “உளறாமா வீட்டுக்கு கிளம்பு. நாம அப்பறம் பேசலாம். ஆபீஸ்ல கொஞ்சம் டென்ஷன் இப்போ” என்றான்.
“என்னை எதிர்பர்க்காம இங்கே பார்த்ததுனால தானே டென்ஷன்…. இருக்கும் இருக்கும்….” என்றவள் அர்விந்தை நன்றாக முறைத்து விட்டு கிளம்பினாள்.
போகும் வழியெல்லாம் மலரின் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. ஏதேதோ யோசித்து தன்னையே நொந்துக் கொண்டாள் மலர்.
இவ்வாறு அவளாக யோசித்து வளர்த்துக் கொண்ட எண்ணங்களால் அவளே அவள் மகிழ்ச்சியை குலைத்துக் கொண்டாள்.
அவளை போல் அல்லாமல், பார்ரா என் பொண்டாட்டியை, கலக்குறா….கடைசியில என்னை வேற முறைக்கிறா…. அந்த கண்ணு ஆறு மாசம் முன்னாடியே என்னை சுண்டி இழுக்கும், இப்போ இப்படி எல்லாம் உரிமையா சண்டை போட்டு, முறைச்சா நான் டோட்டல் காலி என்று நினைத்து சிரித்துக்கொண்டான்.