அந்தியில் பூத்த சந்திரனே – 22

5
(11)

ஆத்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் என ரெஸ்டாரண்ட்டில் வேலைபார்க்கும் நபர்கள் வரை அனைவரையும் அழைத்திருந்தான் ஹர்ஷ மித்ரன்.

பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டதும் ஆத்யா முதலில் அம்ருதாவுக்கும், ஹர்ஷாவுக்கும் ஊட்டிவிட்டவள் அடுத்தடுத்து குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஊட்டினாள். பிறகு வந்தவர்கள் யாவரும் பரிசு பொருட்களை ஆத்யாவிடம் கொடுத்து விட்டு வாழ்த்துக் கூற, குழந்தைக்கு அளவில்லாத சந்தோஷம். மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருந்தாள் ஆத்யா.

அனைவருக்கும் வகை வகையான இரவு உணவும், தனித்துவமான இனிப்பு வகைகளும் பரிமாறப்பட்டது. திருப்தியாக உண்டு முடித்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்று கிளம்பி கொண்டிருக்க, வந்திருந்த அனைவருக்கும் ரிட்டர்ன் கிஃப்ட் வழங்கப்பட்டது. அதில் மனம் மகிழ்ந்து போனவர்கள் நிறைவாக வீடு திரும்பினர்.

ஒரு நாளாவது இருந்து விட்டு போகலாமே என்று கூறியும், இன்னொரு நாள் வருவதாக கூறிவிட்டு அம்ருதாவின் குடும்பத்தினரும் கிளம்பி இருந்தனர்.

இரவு உறங்கும் நேரம் வரை ஆத்யாவை தன்னுடனே வைத்து கொண்டார் கீர்த்தனா. உறங்கும் போதும் தன்னுடனே வைத்து கொள்ள ஆசை எழுந்தாலும் ‘இத்தனை நாள் இல்லாமல் இன்று மட்டும் கேட்டால் என்ன நினைப்பார்களோ?’ என்று எண்ணியவர் அம்ருத்தாவை அழைத்து மனமே இன்றி ஆத்யாவை அவளிடம் கொடுத்தார்.

தனது அறைக்கு வந்து குழந்தையை கட்டிலில் கிடத்தியவள் ஹர்ஷாவை தேட படுக்கை அறையை ஒட்டி உள்ள மற்றைய அறையில் சத்தம் கேட்டது.

‘என்ன.. ஸ்டடி ரூம்ல சத்தம் கேக்குது? இவர் தூங்காம இன்னும் அங்க என்ன பண்றார்?’ என்று எண்ணியப்படியே அறைக்குள் நுழைந்தாள் அம்ருதா.

“இன்னும் தூங்கலையா நீங்க?”

“இல்ல அம்மு, கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டுதான் தூங்கணும். நேரமாகும், நீ போய் தூங்கு. ரொம்ப டயர்டா இருப்ப” என்றவன் மீண்டும் தனது வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டான். ஹர்ஷாவின் அருகில் வந்து அமர்ந்தவள் இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் சிந்திக்கும்போது சுருங்கி விரியும் புருவங்களும், உற்று நோக்கும் விழிகளும், கூர் நாசியும், அளவான தாடி மீசைக்குள் ஒளிந்திருந்த தடித்த அதரங்களும், அவனது திடகாத்திரமான உடல் அமைப்பும் அவளது பார்வையை திருப்ப முடியாமல் செய்தது.

அவள் தான்னையே பார்ப்பது போல் தோன்ற, அதில் அவள் புறம் திரும்பி “என்னடி..? அப்படி பாக்குற?” என்றதும்

“நீங்க ரொம்ப ஹாண்ட்சமா, மேன்லியா இருக்கீங்க” என்று தன்னை மறந்து கூறிவிட ஹர்ஷாவின் இதழில் பூத்தது அழகான புன்னகை. அதன் பிறகே தான் கூறிய வார்த்தைகளை உணர்ந்தவள்,  திருத்திருவென விழித்தாள்.

புன்னகையுடனே “என்னடி சைட் அடிச்சியா?” என்றதும் ஆமாம், இல்லை என்பது போல் நாளாபுறமும் தலையாட்டியவளை பார்த்து வாய்விட்டே சிரித்தான் ஹர்ஷா.

“நான் தூங்க போறேன்ப்பா..” என்று நழுவ பார்த்தவளை “எங்கடி ஓட பாக்குற?” என்று இழுத்து தன் மடிமீதே அமர வைத்தவன், “இவ்வளவு நேரம் என்னை சைட் அடிச்சல? ஒரே ஒரு கிஸ் கொடுத்துட்டு போ” என்றதும் வெட்கம் பிடுங்கி திங்க, அதைவிட அவன் மடிமீது அமர்ந்திருப்பது கூச்சத்தை ஏற்படுத்தியது. அதில் நெளிந்தப்படியே அவளிருக்க, “நெளியாம உக்காருடி. அப்பறம் கிஸ்சோட நிறுத்த மாட்டேன்” என்றதும் அசைவின்றி அப்படியே அமர்ந்து விட்டாள்.

“ஒரே ஒரு கிஸ். நீயா கொடுத்துட்டேனா அதோட விட்டுடுவேன்.” என்றதும்

ஹர்ஷாவின் தாடியடர்ந்த கன்னங்களை  அழுந்த பற்றியவள் சுவாச காற்று மேனியில் படும் அளவு நெருங்கி வேண்டுமென்றே அவனை தவிக்க விடும் பொருட்டு முத்தமிடாமல் விலகி நின்றாள்.

விழிகளை மூடி அவளது இதழ் முத்தத்திற்காக காத்து கொண்டிருந்தவன் அது கிடைக்காமல் போனதில் இமை திறந்து பார்க்க அவனை பார்த்து சிரித்து வைத்தாள் அம்ருதா.

“என்ன ஏமாந்தீங்களா? ஹா ஹா ஹா..” என வாய்விட்டு சிரித்தவள் அவனை விட்டு எழுந்து ஓட, இமை சுருக்கி முறைத்து பார்த்தவன் “இன்னைக்கு நீ அவ்ளோதாண்டி..” என்று அவளை பிடிக்க முயல “உங்களால என்னை பிடிக்க முடியாது” என்று புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட அலமாரிகளின் ஊடே புகுந்து புகுந்து ஓடி அவனது கைகளுக்கு சிக்காமல் தப்பித்து கொண்டிருந்தாள்.

அவள் போகும் திசையினை சரியாக கணித்தவன் இம்முறை அவளுக்கு பின்னால் ஓடாமல் எதிரே வந்து சட்டென நின்றதில் அவன் இரும்பை ஒத்த மார்மீதே மோதி நின்றாள். கீழே விலாமல் இருக்க அவளது இடையை சுற்றி வளைத்து தன்னோடு நெருக்கி கொண்டவன் “உன்னால இனி எங்கேயும் ஓட முடியாது.” என்றதும் சட்டென திரும்பி மீண்டும் ஓட முயன்றவளின் ஆடைக்குள் வெற்று வயிற்றில் கரம் பதித்து தன்னோடு நெருக்கி கொள்ள தன்னுடைய குளிர்ந்த மேனியில் அவனுடைய வெப்பமான கரம் பதிந்ததில் மின்சாரம் தாக்கிய உணர்வு ஏற்பட்டது அம்ருதாவிற்கு.

உணர்வு தாளாமல் இதழ்கள் இரண்டும் விரிந்து கொள்ள “ஹர்ஷா.. ப்ளீஸ்.. லீவ் மீ..” என்றவளது குரல் அவளுக்கே கேட்காமல் போனது.

பின்னாலிருந்து அவளை அணைத்தவனது கரங்கள் அடிவயிற்றில் கோலமிட அதை தடுத்து பிடித்ததும் தன்னுடைய கழுத்தோரம் தீண்டிய அவன் மூச்சு காற்றின் வெப்பம் தாங்காமல் சிலிர்த்து அடங்கியவள் உதடு கடித்து தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முயன்றாள்.

“இன்னொரு முறை என்னோட பேரை சொல்லுடி. இந்த மாதிரி நேரத்துல மட்டும்தான் என் பேரை சொல்ற. ப்ளீஸ்.. இன்னொரு முறை சொல்லு. எனக்கு கேக்கணும்” என்றவனது கரங்கள் அவளது  வெற்றிடையை இறுக பற்றியது.. “ஹர்ஷா…” என்று தன்னையும் மீறி மோகம் நிறைந்த குரலில் அவள் அழைக்க, சட்டென அவளை திருப்பி “என்னை பார்த்து சொல்லுடி” என்றான்.

அவனது விழிகளில் தனது பார்வையை கலக்க விட்டவள் “ஹ.. ஹர்ஷா..” என்றதும் பட்டென அவளது இதழ்களை கவ்வி கொண்டவன் காற்று புகாத வண்ணம் இறுக்கி அணைத்து கொண்டான்.

அவர்களது இதழ் முத்தம் நொடிகளை கடந்து நிமிடங்களை தாண்டி செல்ல இருவரது உடல்களிலும் பற்றி கொண்டது மோகத்தீ. அதில் உணர்வுகள் கட்டவிழ்ந்து, ஆடை கலைந்து, தேகம் கடந்து தங்களது காதலை கூடலாக கொண்டாடி தீர்த்தனர். இருவரது மனமும் உடலும் ஒருசேர மகிழ்ச்சியில் திலைத்திருக்க, இருவரும் ஒருவராகி போயினர்.

அடுத்த நாள் காலை நிரஞ்சனா தாரிக்காவின் வீட்டிற்கு சென்றிருந்த நேரம் தாரிக்கா வீட்டில் இல்லை. பாலா மட்டும் வீட்டில் தனித்திருக்க வந்ததிலிருந்து நிரஞ்சனாவையே விழுங்கும் பார்வை பார்த்து கொண்டிருந்தான்.

அவன் பார்வையை கவனிக்காதாவள் சுற்றும் முற்றும் பார்த்தப்படியே “தாரிக்கா என்னை வர சொல்லிடு, அவ எங்க போய்ட்டா?”

“வக்கீல் ஆபீஸ் போயிருக்கா..  அரை மணி நேரத்துல வந்துடுறதா சொன்னா. வந்துடுவா”

“அரை மணி நேரமா? என்ன விளையாடுறாளா அவ? எனக்கு காலேஜ் போக டைம் ஆச்சு”

“நோ.. நோ.. சொல்லியே  ட்வெண்ட்டி மினிட்ஸ் மேல ஆகிடுச்சு. வர நேரம்தான்.”

“ஓ.. அப்போ சரி” என்றவள் வாசலை பார்த்தவாரு இருக்க பாலாவோ இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாரிக்கா, “வா நிரஞ்சனா.. வந்து ரொம்ப நேரம் ஆகுதா?” என்றபடியே உள்ளே நுழைய,

“இல்ல கொஞ்ச நேரம்தான் ஆச்சு. சொல்லு எதுக்கு என்னை வர சொன்ன?”

“இப்போதான் லாயரை பார்த்துட்டு வரேன். ஹர்ஷாவுக்கும் எனக்கும் ஆத்யா பிறந்த அதே டைம்லதான் டிவோர்ஸ் ஆச்சு. சோ.. மெண்டல் டிப்ரஸ்ஸன்ல இருந்ததனால குழந்தையை வாங்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சுனு, கோர்ட்ல வாதாடலாம்னு சொல்லி இருக்காரு” என்றதும் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

“அவசியம் ஏற்பட்டா ஏதாவது விஷயத்துல எனக்கு சாதகமா பொய் சாட்சி சொல்ல நீ கோர்ட்க்கு வர வேண்டி இருக்கும். வருவதான?” என்றதும்,

“என்னது நானா?” என்று அதிர்ந்து விழித்தவள். “அதெல்லாம் முடியாது. எங்க அம்மாவும் அப்பாவும் என்னை கொன்னே போட்டுடுவாங்க. நான் மாட்டேன்பா” என்றாள் நிரஞ்சனா.

“ப்ச்.. நீ என்ன இவ்வளவு பயந்தாங்கோலியா இருக்க? கிடைச்ச சான்ஸ்ச யூஸ் பண்ணுவியா.. அத விட்டுட்டு அம்மா, அப்பான்னு பால்வாடி பிள்ளை மாதிரி பயந்துட்டு இருக்க?”

“நீ என்ன வேணாலும் சொல்லு தாரிக்கா. என்னால கோர்ட்டுக்கெல்லாம் வர முடியாது. யாருக்கும் தெரியாம வெளில இருந்து ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு, தாராலமா பண்றேன்” என்றதும்,

“சரி. நானும் தேவைபட்டாதான் கேட்டேன். இதை நானே ஹேன்டில் பண்ணிப்பேன்” என்று பேசி கொண்டே ஏதேர்ச்சையாக பாலா புறம் திரும்ப, அவன் நிரஞ்சனாவையே விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருப்பது தாரிக்கவிற்கு நன்றாகவே தெரிந்தது.

அதில் கடுப்பானவள் “சரி நிரஞ்சனா இப்போ நீ கிளம்பு. தேவைப்பட்டா நான் கூப்பிடுறேன்” என்றதும்

“ஓகே தாரிக்கா. எதுவா இருந்தாலும் கால் பண்ணு என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள் நிரஞ்சனா. அவள் கிளம்பிய அடுத்த நிமிடம் பாலாவின் புறம் திரும்பியவள் ஏன்டா அவளை அப்படி பாத்த?” என்றதும்

“எப்படி பாத்தேன்?”

“அதான் அப்படியே முழுங்குற மாதிரி பாத்துட்டு இருந்தியே. அதத்தான் கேட்டேன்.”

“ஆமா..  பாத்தேன். இப்போ அதுக்கென்ன?”

“அதுக்கென்னவா? என்னடா பேசிட்டு இருக்க நீ? உனக்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா?” என்று சீறினாள் தாரிக்கா.

“சும்மா நிறுத்து டி. நீ என்னவோ பெரிய உத்தமி மாதிரி பேசுற. எனக்காக கட்டின புருஷனை விட்டுட்டு வந்தவதான நீ?”

என்றதும் செருப்பால் அடித்தது போல் இருந்தது தாரிக்காவிற்கு. ஆனாலும் அவள் விடுவாய் இல்லை.

“உண்மைதான். நீ இனிக்க இனிக்க பேசினத நம்பி நான் ஹர்ஷாவை விட்டு உன்கூட வந்தேன். ஆனா உன்னோட வந்ததுக்கு அப்புறம் உனக்கு உண்மையாதானே இருக்கேன்?” என்றாள்.

“நீ..? எனக்கு..? உண்மையா இருக்க..?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு பேசியவன். “உன் நடிப்பையெல்லாம் நம்பிட்டு இருக்க நான் ஒன்னும் ஹர்ஷா இல்லடி.. பாலா.” என்றதும் புருவம் இடுங்க ‘என்ன பேசுகிறான் இவன்?’ என்று சிந்தித்தவளை பார்த்து,

“என்ன? மேடம்க்கு நான் என்ன சொல்றேன்னு புரியலையோ?” என்றவன் அவள் அருகில் வந்து அவள் தாடையை இறுக பற்றி, இந்த மூஞ்சில எந்தெந்த நேரம் என்னென்ன ரியாக்ஷன் வரும், இந்த மூளை எந்த நேரம் எப்படியெல்லாம் யோசிக்கும்னு இந்த இரண்டு வருஷத்துல நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன்.

உனக்கு அந்த குழந்தை தேவையே இல்ல. உன்கிட்ட இருந்த பணமெல்லாம் காலியானதும், நானும் உன் தேவைக்கு பணம் தரலைன்னதும் என்னை கழட்டி விட்டுட்டு அந்த ஹர்ஷா கூடவே போய் திரும்பவும் ஒட்டிக்கலாம்னு பாக்குறதான நீ? அதுக்குதான இவ்வளவு ட்ராமா?” என்றதும் அதிர்ந்து விழித்தாள் தாரிக்கா.

‘இது எப்படி இவனுக்கு தெரிஞ்சது?’ என்று அதிர்ச்சி மாறாமல் பார்த்தவளை பார்த்து சிரித்தவன் “இப்போ கூட நீ என்ன யோசிக்கரன்னு எனக்கு தெரியும். இவனுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு தானே?” என்றதும் மேலும் விழிகள் விரிந்தது தாரிக்காவிற்கு.

“சரி..  எல்லாத்தையும் விடு. ஒரு டீல் பேசுவோமா?” என்றான் பாலா.

“எ.. என்ன?, என்ன டீல்?”

“சிம்பிள். நீ ஹர்ஷாகிட்ட போவியோ இல்ல வேற இளிச்சவாயன் கெடச்சா அவனோட போவியோ ஆனா எனக்கு இந்த நிரஞ்சனாவை செட் பண்ணி கொடுத்துட்டு போ. எனக்கும் உன்னோட வாழ்ந்து போர் அடிச்சு போய்டுச்சு. எனக்கு நிரஞ்சனா வேணும். நீ மட்டும் எனக்காக இதை செய்யல உன்னை கொன்னு குக்கர்ல வேகவச்சு நாய்க்கு போட்டுடுவேன் ஜாக்கிரதை” என்றான். அவன் பேச்சில் சொன்னதை செய்வேன் என்ற உறுதி இருந்தது. அதிலேயே தாரிக்கவிற்கு பாதி உயிர் பறிபோனது போல இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!