மான்ஸ்டர்-12

5
(9)

அத்தியாயம்-12

இங்கோ மார்ட்டின் தனது குறுகுறுத்த நெஞ்சையே வருடியவரே தன்னுடைய அறையில் உட்கார்ந்து இருந்தான்… “என்ன நேத்துல இருந்து என் நெஞ்சே சரியில்லையே…..” என்று வருடியவரை இருக்கஅப்போது தான் நேற்று இரவு நடந்த நிகழ்வு அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டே தான் இருந்தது 

ம்ச் இது என்ன வித்தியாசமா…”என்று தன்னையே நொந்துக்கொண்டவனுக்கோ அந்த வித்தியாசமான உணர்வு பிடிக்கவே இல்லை.. “ம்ச் இங்கையே இருந்தா கண்டதையும் யோசிப்போம்…”என்றவன் கிளம்பி வெளியில் வர…

அந்த நெக் லாக்கெட் மட்டும் நம்ம திருடி கொடுத்தோம்னா கிட்டத்தட்ட எவ்வளவு மில்லியன் கணக்குல நமக்கு லாபம் வரும் தெரியுமா பாஸ்…. இதுவரைக்கும் பல கேங்ஸ்டர் க்ரூப்புக்கு இந்த ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டுச்சுஆனா அவங்க யாராலயுமே இதை செஞ்சு முடிக்க முடியலஏன்னா அந்த நிவாஸ் வீடு ஃபுல்லா எப்போதும் செக்யூரிட்டி நிறைஞ்சி தான் இருக்கும்… அதும் அந்த நிவாஸ் வேட்டை நாய் மாதிரி தன்னோட லாக்கெட் யாரு எடுத்தாங்களோ அவங்கள சும்மா விடமாட்டான்…. அதனால இது நமக்கு கூட கொஞ்சம் கஷ்டமா தான் பாஸ் இருக்கும்…” என்று கபீர் அந்த லாக்கெட்டை எப்படி திருடுவது என்பதை பற்றி சின்ன பிளானை ஒன்று போட்டு தன்னுடைய பாஸிடம் விளக்கிக் கொண்டிருந்தான்.

இதனை எல்லாம் கேட்டவாறு கம்பீரமாக உட்கார்ந்து இருந்த மார்ட்டினுக்கோ இன்னும் அவனது மார்பு குறுகுறுத்துக் கொண்டே இருப்பது போல தான் இருந்ததுஅவன் நேற்று இரவு நேரத்தில் பப்பில் அந்த இளம் பெண்ணின் மீது மோதினானோ அன்றிலிருந்து அவன் நிலைப்பாடு இப்படித்தான் இருந்தது… “ஏன் இப்படி இந்த இடம் குறுகுறுத்துட்டே இருக்கு….” என்று தன்னுடைய மார்பினை வருட

கபீரோ தான் விளக்குவதெல்லாம் விளக்கி விட்டு குனிந்து தன்னுடைய பாஸை பார்க்க அவனது முகத்தில் ஏற்பட்ட உணர்வுகளை பார்த்த கபீருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை… “பாஸு சரி இல்லையே… எங்கையோ இருக்குற மாதிரில இருக்கு..”என்று நினைத்தவன்…. “பாஸ் பாஸ்..” என்று அவன் தன்னுடைய பாஸினையே அழைத்துக் கொண்டு இருந்தான்.

மார்ட்டினோ ஏதோ பலவித சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தான். அவன் உடல் ஏதோ ஒரு போதைக்கு அடிமையானது போல அந்த பெண்ணவளின் மென்மையான உடல் பாகத்தில் குறுக்குறுத்து கொண்டே இருக்கஅது எதனால் என்று தான் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.. அன்று இரவிலிருந்து கூட அவனுக்கு அப்படித்தான் இருந்து கொண்டே இருக்கிறது

இப்படியே நாட்கள் ஓட… அந்த பெண் அவனின் மீது மோதி கிட்டதட்ட ஒரு வாரம் ஓடிவிட்டதுஆனாலும் இந்த ஒரு வாரம் அவனின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள்… இரவு நேரத்தில் இப்போது எல்லாம் அவன் பம்பில் சென்று குடிக்கும்போது அந்த தன் மீது வந்து மோதிய பெண்ணவள் இருக்கிறாளா என்றுதான் அந்த இடம் முழுவதும் அலசி ஆராய்ந்து கொண்டே இருந்தான்.

ம்ம்ம்ச்ச் அவ எப்படிடா இங்க இருப்பாஅவள தான் அன்னிக்கி தூக்கிட்டு போக சொல்லிட்டியே..” என்று அவனுடைய மடத்தனத்தை அவனது மனம் எடுத்துரைக்கஅதில் முதலில் யோசனையுடன் சுத்திக் கொண்டிருந்தவன் பின்பு தோளை உலுக்கியவாறே…

ஏற்கனவே நமக்கு நிறைய பிரச்சனை இதுல இந்த பிரச்சனை வேறையா…” என்று தன்னை நிதானித்தவன்… முதல்ல அவள விட்டு வெளியில வாடா…” என்று தனக்கு தானே கூறிக்கொண்டான்…. ஆனால் உண்மையிலே, சத்தியமாக இந்த உணர்வுகள் எல்லாம் அவனுக்கு புதிதாக தான் தோன்றி கொண்டே இருந்தது. ஏதோ புது வகையான ஒரு போதைக்கு அவன் உடல் ஏங்குவது போல ஒரு பிரம்மைஅவனின் இத்தனை வருட பிரம்மச்சரிய வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணை பார்த்தும் அவனுக்கு இப்படி தோன்றியது இல்லைஇத்தனைக்கும் அவன் மீது எந்த பெண்ணும் வந்து உரசாமலோ, மோதாமலோ இல்லை.. ஆனால் அப்படிப்பட்டவர்களை தன் கண் கொண்டு அனல் கக்க முறைத்தவாறு அவர்களை துரத்தி விடுபவனுக்கு அன்று எதார்த்தமாக தன் மீது மோதியவளையோ, தன்னை பின்னால் இருந்து அணைத்த அந்த பெண்ணவளை தான் அவனால் மறக்கவே முடியவில்லை…

ஏதோ அவக்கிட்ட வித்தியாசமா இருக்கு…” என்று அவன் தன் எண்ணத்தை மாற்ற நினைத்துக் கொண்டே இருந்தாலும் முடியவில்லை…

தான் கேட்கும் கேள்விக்கோ.. தான் பேசுவதையோ தன்னுடைய பாஸ் கவனிக்காமல் இருப்பதையும், கிட்டதட்ட ஒருவாரமாக ஏதோ யோசனையிலையே இருப்பவனை பார்த்து கபீருக்கு ஒன்றுமே புரியவில்லை… அந்நேரம் பார்த்து கபீரின் போன் வேறு…

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

அது ஏனோ…. அது ஏனோ

உன்னிடம் இருக்கிறது…

அதை அறியாமல் விடமாட்டேன்..

அதுவரை உன்னை தொட மாட்டேன்…” என்ற ரிங்டோன் வேறு இசைக்கஅந்த பாட்டின் வரியில் சட்டென்று நினைவுக்கு வந்த மார்ட்டினோ நிமிர்ந்து கபீரை முறைப்பாகப் பார்த்தான்…

கபீரோ தன்னுடைய பாஸின் முறைப்பை புரியாமல் பார்த்தவன்… பாஸ் என் வைஃப் தான் கூப்புடுறா… பேசிட்டு வரேன்…” என்று கூறியவரே போனை காதில் வைத்துக் கொண்டு குசுகுசுவென்று ஏதோ பேசிக்கொண்டு இருக்கஇதனை பார்த்தவனுக்கு தான் ஒரு மாதிரி இருந்ததுஅவனுக்கே நிறைய முறை தன்னை நினைத்து சந்தேகமாக தான் இருந்து கொண்டிருக்கிறதுஎந்த பெண்ணை பார்த்தும் அவனுக்கு எந்த ஒரு உணர்வுகளும் தோன்றவே தோன்றாதுஏன் அவன் முன்னால் எந்த பெண் வந்து உடைகள் இல்லாமல் நின்றாலும் அவனால் அதனை ரசனையாகவோ அல்லது அவளை புசிக்க வேண்டும் என்றோ அவனுக்கு தோன்றவே தோன்றாது… ஏன் அது போல் நடந்தும் இருக்கின்றது அவனுக்குஆனால் அப்போதெல்லாம் அனல் தெறிக்க பார்த்து விலகி ஓடி வருவானே தவிர எப்போதும் அவன் பெண்களிடம் நெருங்கியதே இல்லை…

ஒருவேளை நமக்கு அந்த பிரச்சனையோ…” என்று அவன் மனம் யோசிக்காமலும் இல்லைஆனால் அதற்காக மருத்துவமனைக்கு ஓடி சென்று தன்னை பரிசோதிக்கும் அளவுக்கு மார்ட்டினுக்கு இன்னும் அந்த அளவிற்கு தேவை வரவில்லை… “ம்ச் இந்த உலகத்துல பொண்ணுதான் பெருசா… பொண்ணுங்க கிட்ட இல்லாத சுகம் வேற எதிலுமே இல்லையா என்னஅதெல்லாம் இல்ல அதெல்லாம் சும்மா கட்டுக்கதைங்க…” என்று புலம்பியவன் அதனை அடியோடு ஒதுக்கி விட்டு தான் சுத்திக் கொண்டிருந்தான்.

ஆனால் இன்று அவனது உணர்வுகளோ தூண்டப்பட்டிருந்தது.. அதுவும் ஒரு சிறிய பெண்ணினால் தூண்டப்பட்டு இருந்தது.. அவளுக்கு தெரியாமல் தான் இது நடந்து இருந்தது.. மார்ட்டின் திரும்ப அந்த யோசனையிலையே இருக்க… ம்ச் பாஸ் நான் சொல்றத கேக்குறீங்களா…” என்று மறுபடியும் கபீர் கேட்டான்…

அப்போது தான் நிகழ்வுலகத்திற்கு வந்த மார்ட்டினோ தன்னுடைய மூளை யோசிப்பதை நினைத்து கடுப்பானவன்… “சும்மா இருந்தா இப்படித்தான் ஏதாவது யோசனை தோனிக்கிட்டே இருக்கும்…” என்று தோன்றியவாறே,… “ம்ம்ச் சொல்லு கபீர் என்ன நீ தகவல் தரணும்…” என்று கேட்க.

கபீர் மறுபடியும் ஆரம்பத்தில் சொன்ன அனைத்து விஷயங்களையும் இப்போது கூறிக் கொண்டிருந்தான். அதனை எல்லாம் கேட்டவனோ… ம்ச் இப்ப நீ என்ன சொல்ல வர இந்த ப்ராஜெக்ட் ரொம்ப கஷ்டம் சொல்ல வரியா இல்ல என்னால முடியாதுன்னு சொல்ல வரியா…” என்று வீறுக்கொண்ட சிங்கமாக கர்ஜித்தவாறே கேட்க…

கபீரோ அதில் திருத்திருத்தவன் ஐயோ பாஸ் நான் அப்படியெல்லாம் சொல்லல…” என்று பதட்டமாக கூறினான்…

ம்ம் வெல் வேற என்ன சொல்ல வர கபீர்…” என்று கேட்டவனோ… “ஸீ இந்த மார்ட்டினுடைய லைஃப்ல எதுவுமே முடியாதுன்றதே கிடையாது.. இந்த மார்ட்டின் கண்டிப்பா அதை முடிச்சு காட்டுவான்… அந்த நிவாஸ் இல்ல பெரிய டான்னே வந்தாலும் எனக்கு அத பாத்து பயமில்ல.. இந்த ப்ராஜெக்ட்ட நான் முடிச்சே ஆவேன்…”என்று கூறியவனோ… ஏதோ யோசித்தவாறே… ம்ம்ம் அந்த நிவாஸோட வீட்ல எதுவும் ரீசண்டா பங்க்ஷன் வருதா..” என்று கேட்க.

கபீரோ புருவம் சுருக்கி யோசித்தவன் ஆமா பாஸ்அந்த நிவாஸ் இப்போ ரீசண்டா அஞ்சாவது முறையா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க இருக்கான்னு நம்ம அன்டர்க்ரவுன்ட்ல பேசிக்கிட்டாங்க..” என்று கூறினான்…

அதில் நக்கலாக சிரித்த மார்ட்டினோ… “ம்ம்ம் அஞ்சாவதா கல்யாணமா… வாவ் வன்டர்ஃபுல்…”என்று இதழ் சுளித்து சிரித்தவன்… ம்ம்ம் இந்த ஒரு பங்க்ஷன் போதுமே கண்டிப்பா எப்படி இருந்தாலும் நமக்கு அந்த மேரேஜ்க்கு அழைப்பு வரும்ல…” என்று கபீரிடம் கேட்க…

எஸ் எஸ் பாஸ்கண்டிப்பா வரும் அதுவும் இப்போ அவன் ரீசண்டா முடிச்ச நாலு கல்யாணம் வரைக்கும் நம்ம இன்வைட் செஞ்சான்ஆனா நம்ப தான் இதெல்லாம் தேவையில்லைனு அதுக்கு போகல…” என்று கூற

ம்ம்ம் அப்ப இந்த முறையும் கண்டிப்பா நமக்கு இன்வைட் வரும்அப்போ பார்த்துக்கலாம்.. நம்ம ப்ளான..” என்று கூறகபீருக்கு தன்னுடைய பாஸ் இதில் தீவிரமாக இறங்கிவிட்டது நன்றாகவே தெரிந்து போனது…

ஓகே பாஸ்…” என்று கூற… இன்னும் பல தகவல்களை கேட்டு தெரிந்துக்கொண்ட மார்ட்டின்.. அந்த சங்கீத்திற்கு தன்னை அழைத்து இன்விடேஷன் எதுவும் வருகிறதா என்று கபீரை பார்க்க சொல்லஅது போல கபீரும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தான்…

இங்கு மைத்துவோ அந்த இருட்டு அறையில் அழுகையில் தேம்பியவாறு இருக்கதிடீரென்று அந்த அறை திறக்கப்பட்டது.. அதில் பெண்ணவள் பயத்துடன் நிமிர்ந்து பார்க்க.. அங்கு 2 பெண்கள் அவளை பார்த்தவாறே வந்தவர்கள்… ம்ம் மேடம் சார் உங்களுக்கு அளவு எடுத்துக்க சொன்னாங்கஉங்களோட சங்கீத்க்கு தேவையான டிரஸ் தைக்கணும் இல்ல..” என்று கூற மைத்துக்கோ இங்கிருந்து தப்பிக்க அவர்களிடமும் உதவி கேட்க மனம் பிராண்டியது.. ஆனால் இதற்கு முன்னால் தனக்கு உதவி செய்த அந்த பணியாளர் இறந்த குற்ற உணர்ச்சிலேயே இருந்த மைத்ரேயிக்கு இவர்களையும் சாகடிக்க மனமே வரவில்லைமைத்ரேயி அப்படித்தான் எதற்கும் இளகிய மனம் கொண்டவள்தன்னால் ஒருவர் துன்பப்படுவதை அவளால் தாங்க முடியாது.. அப்படி இருக்கும்போது தன்னால் ஒருவர் செத்துப் போவது எப்படித்தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியும்,,

அப்படியே அமைதியாக எழுந்து பொம்மை போல நிற்கஅந்த பெண்களோ இருவரும் தங்களுக்குள்ளே பார்த்தவாறே அவளை அங்க அளவுகளை அளந்து எழுதிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்மைத்ரேயி கடனே என்று அப்படியே உட்கார்ந்து கொண்டவளுக்கு தன்னுடைய நிலையை நினைத்து மனம் வெம்பியது

இந்நேரம் அப்பத்தாவுக்கு என்ன ஆகி இருக்குமோ தெரியலஅப்பத்தாவை ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களானும் தெரியலையே…” என்று இப்போதும் அப்பத்தாவினை நினைத்து அழுது கொண்டே இருக்க.. நாளை அவளது வாழ்க்கையை திசை மாறி போகப்போகிறது என்பதனை அவள ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!