மான்ஸ்டர்-13

5
(7)

அத்தியாயம்-13

 “ஒழுங்கா நான் சொல்ற பேச்சைக் கேட்டுகிட்டு நாளைக்கு ஃபங்ஷன்ல அமைதியா நின்னுட்டு இருந்தனா உன் உயிருக்கு உத்தரவாதம் இருக்குஅதுவே நீ கால்ல சலங்கை கட்டின மாதிரி ஆடின உன்னை அவ்வளவுதான்…” என்று நிவாஸ் பெண்ணவளை பயமுறுத்திக் கொண்டே இருக்கமைத்துவோ ஏற்கனவே அவனை பார்த்த வேகத்திற்கு பயந்து மிரளுபவள் இப்போது அவன் மிரட்டும் போது உண்மையிலே பயந்தே போனாள்…

அப்படியே நடுங்கியவாறே இல்லை என்று அவள் வேகமாக தலையாட்ட… “நாளைக்கு பங்க்ஷனுக்கு நிறைய பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க பேபி.. அப்போ நீ அமைதியா நிக்கணும் இல்லன்னு வச்சுக்க..” என்று மறுபடியும் அவளை மிரட்ட ஆரம்பிக்க

மைத்ரேயியோ என்ன விட்டுருங்க ப்ளீஸ்…” என்று கடைசி முறையாக அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்அவனும் ஒரு நக்கல் பார்வையுடன் அவளை மேலிருந்து கீழாக ரசனையாக பார்த்தவனின் முக பாவத்தை பார்த்து அவளுக்கோ அவ்வளவு அருவருப்பு தான் வந்திருந்ததுஅது கண்டிப்பாக அவனின் வயதை பொறுத்து எல்லாம் இல்லை. இந்த வீட்டிற்கு அவளை கொண்டு வந்து அடைத்ததில் இருந்து வெளியில் பணியாளர்கள் பேசுவதை கொஞ்சம் கேட்டு இருக்கிறாள். அப்போது அவர்கள் இதுக்கு முன்பு இவனுடைய நான்கு மனைவிகளையும் அவன் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததை பற்றி அரசல் புரசலாகப் இவளின் காதில் விழஅதில் அவனுக்கு கொஞ்சமும் மனிதாபிமானம் இருக்கும் என்ற எண்ணம் அற்றே போனது…

ப்ளீஸ் என்ன இப்படி என்னை விட்ருங்க..” என்று அவள் மறுபடியும் கெஞ்சிக்கேட்க…

ம்ச் அதுக்கு வாய்ப்பே இல்ல பேபி.. நம்ம ரெண்டு பேருக்கும் கண்டிப்பா கல்யாணம் நடந்தே ஆகும்….” என்று அவன் கூறியவாறு அங்கிருந்து சென்று விட்டான்.

இந்த ஒரு வார காலமாக அவளை நெருங்க எவ்வளவு முயற்சி செய்து விட்டான் தான்ஆனால் மைத்ரேயி அவனை பார்த்து மிரண்டவாறே நிற்க ஏதோ அவனின் குடும்ப சாமியார் அந்த குருஜி திருமணத்திற்கு முன்பு அந்த பெண்ணை தொடாதே என்று கூறியது இன்னும் நிவாஸை அவளை தொடாமல் தடுத்து வைத்திருந்தது.

ம்ச் இவ்ளோ லட்டு மாதிரி ஒரு பொண்ண கூட வச்சுக்கிட்டு எப்படி தான் தொடாம இருக்கிறது…” என்று அந்த முதியவனின் முடங்கிய மூளை தான் அடிக்கடி எடுத்துரைத்துக் கொண்டே இருக்கஎன்னமோ அந்த குருஜி தான் தெரிந்தோ தெரியாமலோ மைத்ரேயியை இவ்வளவு காலமாக காப்பாற்றிக் கொண்டே வந்திருந்தார்.

ஆயிற்று நிவாஸ் மற்றும் மைத்ரேயின் திருமணத்திற்கு முதல் நாளும் வந்து இருந்தது.. அடுத்த நாள் திருமணம் என்று இருக்கும்போது தன்னுடைய அரண்மனை வீட்டில் பெரிய விழா போல ஏற்பாடு செய்திருந்தான் நிவாஸ்.. அவன் ஒவ்வொரு திருமணத்தையும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றான்பின்பு இருக்கும் காசை வைத்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தால் இப்படித்தானே செய்து கொண்டிருப்பான்.. எப்போதும் அதனையே செய்து கொண்டிருந்தவன் வீட்டினையே மண்டபமாக மாற்றி வைத்திருந்தான்வீடு நிறைய தன்னுடைய சொந்தக்காரர்களையும், தனது பிசினஸ் பார்ட்னர்ஸ்களையும் ஏகப்பட்ட நிழலுலக தாதாக்களையுமே குவித்து வைத்திருந்தான்.

அனைவரும் அந்த அரங்கத்தில் போதையின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தது.. நிவாஸுமே இதுவரை பத்து கிளாஸ் முதல் கொண்டு அடித்துவிட்டான். ஆனாலும் அப்படியே வெறி கொண்ட நரியாக சுத்திக் கொண்டே தான் இருந்தான்.. அனைவரும் நின்று பேசிக்கொண்டே இருக்க.. “என்ன ஜி உங்களோட வருங்கால வைஃப்ப காட்ட மாட்டீங்களா…” என்று ஒருவன் கேட்க.

அதில் நக்கலாக சிரித்த நிவாஸோ கண்டிப்பா காட்டுவேன் ஆனா இன்னிக்கு இல்ல நீங்க எல்லாம் இன்னைக்கு பார்த்து கண்ணு கிண்ணு வச்சுட்டீங்கனா என்ன பண்றது அதனால நாளைக்கு கல்யாணத்தப்ப பாத்துக்கோங்க..” என்று அவன் கூற..

அவன் கூறிய பதிலை கேட்ட அனைவருக்கும் ஏதோ வயது வாலிபன் முதல் திருமணத்தின்போது பேசுவது போல தான் இருந்ததுஆனால் அவனுக்கு இப்போது நடக்க இருப்பதோ ஐந்தாவது திருமணம்அதனை அரசல் புரசலாக சில பேர் பேசிக்கொண்டாலும் வெளிப்படையாக பேசி நிவாஸிடம் சாக அவர்கள் தயாராகவும் இல்லை….

அதனால் அமைதியாக வந்ததற்கு போதையின் பிடியில் சிக்கிக் கொண்டே நிற்க… அந்த அப்பாவி பெண்ணவளோ தன்னுடைய அறையில் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்சிறிது நேரத்துக்கு முன்புதான் அவளுக்கு ஒரு அழகிய லகங்காவை போட்டுவிட்டு கையில் மருதாணியை போட்டு விட்டு சென்றிருந்தனர் இரு பெண்கள்… ஆனால் அவளுக்கு அந்த அறையை விட்டு வெளியில் வருவதற்கு கொஞ்சமும் அனுமதி இல்லை

நிவாஸ் காலையிலேயே அவளிடம் வந்து உன்னை நான் எப்ப கூப்பிடுறேனோ அப்பதான் வெளியில் வரணும்…” என்று ஆணையிட்டு சென்றிருக்க பெண்ணவளுக்கு இங்கிருந்து தப்பிக்கும் மார்க்கமும் இல்லாமலே போய்விட்டது.. அவள் கண்கள் மிரட்சியாக எங்கும் பார்த்துக் கொண்டிருக்கஎதார்த்தமாக அந்த அறையிலிருந்த ஜன்னலில் இருந்து கீழே பார்த்தவளுக்கு இங்கிருந்து குதித்து அந்த கூட்டத்துடன் கூட்டமாக கலந்து எங்காவது சென்று விடுவோமா என்று கூட தோன்றியதுஆனால் இந்த அறையினை விட்டு கூட அவளால் வெளியில் செல்ல முடியாது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்…

எப்போதுமே அவள் அறைக்கு வெளியில் இரு பாடிக்காட்ஸ் காவலாக நிற்க அந்த எருமை மாடு போல இருக்கும் இருவரை தாண்டி செல்வதும் ஒன்றுதான் எமனை தாண்டி செல்வதும் ஒன்றுதான் அதை நினைத்துக் குலுங்கி அழுதவாறே இருந்தவளுக்கு அன்னையின் நியாபகம் அதிகமாக வந்தது… ஏன்ம்மாஎன்ன விட்டுட்டு போன…” என்று இப்போதும் தன்னுடைய அன்னையை நினைத்து அழுகைதான் பொங்கியது.

நேரம் சரசரவென்று ஓடிக்கொண்டே இருக்க.. அந்நேரம் வந்த அரண்மனையின் வாசலில் பரபரப்பாக ஒரு நான்கு, ஐந்து கார்கள் வந்து நிற்க நிவாஸுக்குமே அதை பார்த்து ஒன்றுமே புரியவில்லை… “ஏன் பா அப்படி யாரு வரா இப்படி வரிசையா கார் வந்து நிக்குதே…” என்று அனைவரும் பரப்பரப்பாக அந்த நான்கு கார்களையும் வெறித்து பார்த்துக் கொண்டிருக்ககண்டிப்பாக அதிலிருந்து இறங்குபவனை அங்கு யாருமே எதிர்பார்க்கவே இல்லை…

ஆம் அந்த காரில் இருந்து இறங்கியது மார்ட்டின் லுதாஸ் தான்ஏன் அவனை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றால் அவன் இதுவரை எந்த ஒரு விழாவிற்கும் அவ்வளவாக சென்றதில்லைஅவனுக்கு முக்கியமாகப்பட்ட விழாவிற்கு மட்டும்தான் செல்வான்ஏதாவது பெரிய கேங்ஸ்டர் மீட்டிங் இருந்தாலோ அல்லது பெரிய பார்ட்டி இருந்தாலோ மட்டுமே அவனை அங்கு பார்க்க முடியும்.. மற்ற நேரத்தில் எல்லாம் மார்ட்டினை யாராலும் பார்க்க முடியாது..

மார்ட்டின் வந்து இறங்கியதை பார்த்த நிவாஸிற்கு கூட அதிர்வு ஆச்சரியம் தான்… அவனை கண்டிப்பாக எதிர்பார்க்கவே நிவாஸ் எதிர்ப்பார்க்கவே இல்லை…

ஜி ஜி…” என்று நிவாஸ் மார்ட்டினிடம் ஓட… மார்ட்டினோ தன் கண்ணில் போட்டிருந்த கூலிங் கிளாஸை கழட்டியவாறு இறங்கியவனின் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜி நீங்க என்னோட கல்யாணத்துக்கு வந்தது எவ்வளவு பெரிய பாக்கியம் தெரியுமா…” என்று நிவாஸ் அவனிடம் கொஞ்சிக்கொண்டிருக்கமார்ட்டினோ அவனை பார்த்து உதட்டை சுழித்து இளக்காரமாக சிரித்துக் கொண்டிருந்தான். ஆனால் அது இளக்கார சிரிப்பு என்று யாருக்கும் தெரியாது.. அவன் இங்க வந்ததுக்கான குறிக்கோளே வேற ஆயிற்றே.. அவனுக்கு கண்டிப்பாக நிவாஸின் குடும்ப சொத்தான அந்த லாக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும்என்னதான் அதனால் கிடைப்பது மிக கோடிக்கணக்கான பணம் என்றாலும் இதில் அவனது பிரெஸ்டிஜிம் இருக்கின்றதுகண்டிப்பாக பல கேங்ஸ்டர்களால் செய்ய முடியாத ஒரு செயலை மார்ட்டின் செய்து காட்டினால் அவனது புகழ் ஏதோ வரலாற்றிலேயே பதியப்போவது போல அவனுக்கு ஒரு நினைப்புஅதுவும் உண்மைதான் பல கேங்ஸ்டர்ஸ் மார்ட்டினின் பெருமையாக பேசுவது அவனுக்கு போதையை ஏற்றுவது போல தான் இருந்ததுஅதனாலேயே இந்த தேவையில்லாத இந்த லாக்கெட்டை எடுத்து கொடுப்பதாக அவன் டீல் பேசியிருக்க.. அதற்காகத்தான் திட்டம் போட்டு இந்த பங்க்ஷன்க்கு வந்திருந்தான். இல்லை என்றால் இந்த கிழவனின் திருமணத்திற்கு வருவதற்கு அவனுக்கு என்ன தலை எழுத்தா என்ன….

ம்ம் என்ன மிஸ்டர் நிவாஸ் என்ன நீங்க எதிர்பார்க்கல போல இருக்கு…” என்று கேட்க..

நிவாஸும் மார்ட்டினை பார்த்த பிரம்மிப்பில் ஆம் என்று தலையாட்டியவர் ஜி நீங்க எந்த பங்க்ஷன்க்கும் இந்த மாதிரி வந்தது இல்லையே..” என்று கொஞ்சிக் குழாவிக் கொண்டு இருந்தான்பின்னே பல செயல்கள் நிவாஸ் மார்ட்டினை வைத்து முடித்திருக்கிறாரேமார்ட்டினுக்கு இருக்கும் அரசியல் பலம் அரசியல்வாதிகளின் பலம் அனைத்தும் நிவாஸ் அறிந்ததே.

அவருக்கும் ஏதாவது அரசியல் சம்பந்தப்பட்ட உதவி வேண்டுமென்றாலும் அவர் ஓடிப்போய் நிற்பது மார்ட்டினிடம் தான்அதனால் நிவாஸ் ஒன்றும் சிறிய ஆளும் கிடையாதுபெரிய ஆள் தான்.. இருந்தாலும் மார்ட்டின் கை வைத்தால் சில காரியங்கள் முடியுமோ என்று நினைக்கும் செயல்களை மட்டுமே முடித்துக் கொடுப்பான்

ஓஓஓ… அப்போ இப்ப வந்துட்டேனே திரும்பி போயிடவா என்ன…” என்று மார்ட்டின் வேணும் என்று கிண்டல் பேசஅதில் இல்லை என்று வேகமாக தலையாட்டிய நிவாஸோ..

அட சும்மா ஃபன் ஜீ…”என்று குழைந்தவர்… வாங்க வாங்க ஜி உள்ள வாங்க…” என்று மார்ட்டினை மரியாதையாக உள்ளே அழைத்து வந்திருந்தான்மார்ட்டினும் தன் கூரிய கண்களால் சுற்றி முற்றி ஆராய்ந்தவாறே வந்தவனை நெருங்க பயந்தவாறே தூரத்தில் நின்றே பலர் அவனுக்கு மரியாதையாக வணக்கம் வைக்க… அனைத்தையும் பார்த்து தலை ஆட்டிக்கொண்டான்… நிவாஸ் மார்ட்டினை அழைத்து சென்று ஒரு நாற்காலியில் உட்கார வைத்தவன் அவனுக்கு மது கோப்பையை எடுத்து மரியாதையாக கொடுக்க… அதனை கையில் வாங்கிக்கொண்ட மார்ட்டினுக்கோ ஏனோ நிவாஸின் சிரித்த முகம் கடுப்பை கிளப்பியது

ம்ம்ம் அப்புறம் மிஸ்டர் நிவாஸ் இது உங்களுக்கு எத்தனாவது கல்யாணம்…” என்று வேண்டுமென்றே அவனை வெறியேத்தநிவாஸிற்கும் அவனின் கிண்டல் புரியதான் செய்தது… ஆனால் அதனை நினைத்து பல்லை கடித்துக் கொண்டுதான் இருந்தான்சில நேரம் மார்ட்டின் பேசுவது நிவாஸிற்கு பிடிக்காதுமார்ட்டின் எப்போதும் வெளிப்படையாக பேசி டேமேஜ் செய்பவன்.. அது நிவாஸிற்கு பிடிக்காது தான் ஆனாலும் மார்ட்டினை பகைத்துக் கொள்ள முடியாதே.. அதனால் கம்மென்று வாயை மூடிக்கொண்டு சிரித்தவாறு இருக்கமார்ட்டினுக்கோ அவனின் தேள் கொட்டிய நிலையை பார்த்து சிரிப்புதான் வரும்..

மார்ட்டினுக்கு நிவாஸினை கிட்டத்தட்ட அவனின் தாத்தா காலத்திலிருந்து தெரியும்… அதில் தொடங்கி அடுத்தது மார்ட்டின் தான் நிவாஸிற்கு தேவையான அனைத்தையும் முடித்துக் கொடுத்திருக்கின்றான்

அஞ்சாவது மேரேஜ் ஜீ…”என்று நிவாஸ் வழிந்தவாறே கூற… மார்ட்டினோ அதனை கவனிக்காமல் தன் கூர்மையான பார்வையால் அந்த அரங்கத்தை அளந்து கொண்டிருந்தான்அரண்மனையின் வாசலில் செயற்கையாக ஒரு மேடை ரெடி செய்து அதில் தான் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது;.. “ம்ம்ம் குட் நல்லாவே செட் பண்ணி இருக்கீங்க…”என்று மார்ட்டின் கூற…

நன்றி ஜீ…”என்றான் இழித்தவாறே..

ம்ம்ம் இத விட உங்க பேலஸ் நல்லா இருக்கும் போலவே…”என்று அர்த்தத்துடன் மார்ட்டின் கேட்க…

அதில் சிரிப்பாக தலையாட்டிய நிவாஸோ… ஆமா ஜீ.. எங்க கொள்ளுதாத்தா வீடு… கிட்டதட்ட நூறு வருஷம் பழசு தான்…”என்று பெருமை பீத்திக்கொள்ள… அதனை சலிப்பாக கேட்ட மார்ட்டினோ அடுத்ததாக அவன் வீட்டினை பற்றி இழுக்க…

நிவாஸோ… ம்ம்ம் ஜீ நீங்க இன்னும் என் வீட்ட பார்த்ததில்லையே நீங்க போய் சுத்தி பாக்கறீங்களா ஜி…” என்று கேட்க… அவனின் பேச்சில் மார்ட்டினோ நக்கலாக சிரித்துக்கொண்டான்… பின்னே அவனும் அதுதானே வேண்டும்… ஓஓஓ ஆம்…” என்று தலையாட்டிய மார்ட்டினோ…

ம்ம்ச் ஆனா உங்களுக்கு இன்னைக்கு சங்கீத் இல்ல நிவாஸ்நீங்க எப்படி சுத்தி காட்டுவீங்க….” என்று கேட்க… நிவாஸும் அது சரிதானே என்று யோசித்தவாறே நிற்க… மார்ட்டினோ ம்ம்ம் பேசாம நான் சுத்தி பார்த்துக்கிறேன் நீங்க வர கெஸ்ட்ட ரிசிவ் பண்ணுங்க…” என்று கூற…

அதில் நிவாஸ் கொஞ்சம் சமாதானம் அடைந்தவன் சரி பாஸ் நீங்க எங்க பாத்தாலும் போய் சுத்தி பாருங்க… உங்க இஷ்டம் போல…” என்று கூறியவன் மார்ட்டினை தனியாக விடாமல் கூடவே ஒரு வேலையாலையும் அனுப்பிவிடவும் செய்தான்…

(கேப்பச்சினோ…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!