அத்தியாயம்-14
மார்ட்டின் அந்த நிவாஸின் அரண்மனையை சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க,. அவனுடனே ஒரு வேலையாளும் திருத்திருவென விழித்துக்கொண்டே மார்ட்டினை விட்டு தள்ளியே வந்திருந்தான். அவனுக்கு மார்ட்டினை பற்றி தெரியாதா? என்ன… இப்படி தன்னுடைய முதலாளி மார்ட்டினிடம் தன்னை கோர்த்து விட்டு சென்று விட்டாரே என்று மனதில் நினைத்தவன் பம்மிக்கொண்டே மார்ட்டினினை விட்டு ஒரு இரண்டு அடி தூரத்திலையே வர… மார்ட்டினோ அந்த வேலையாளின் மிரட்சியைக் கண்டு இதழ் கேலியாக வளைந்தது.
அவனுக்கும் அதுதானே வேணும். இப்படி தன் கூடவே வந்து கொண்டு இருப்பவனே வைத்து எப்படி அந்த லாக்கெட்டை திருடுவது அதனால் சுற்றிமுற்றி பார்த்தவாறு வந்தவன் திருப்பி அந்த வேலையாளை பார்த்து “எனக்கு ஒரு ஜூஸ் கிடைக்குமா?…”என்று கேட்க..
அதில் அந்த வேலையாளும்… “இட்.. இதோ இப்ப கொண்டு வரேன் சார்…” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் அருகில் இருந்து ஓடிவிட்டான்… அதை கேலியாக பார்த்த மார்ட்டினோ அந்த அரண்மனையையே தன்னுடைய லேசர் பார்வையால் அளந்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏற்கனவே கபீரின் மூலமாக அந்த அரண்மனையின் ப்ளூ பிரிண்ட் வந்து சேர்ந்து இருந்தது… “பாஸ்..” என்று அவன் முன்னால் ஒரு ப்ளூ பிரிண்டை விரித்து வைத்த கபீரோ “பாஸ் இதுதான் நீங்க உள்ள போற வழி இந்த பார்ட்டி ஹால் தான் அந்த வீட்டோட அட்டாச் ஆகி இருக்கிற ஒரு ப்ளேஸ்… இதுல தான் எப்போதும் அந்த நிவாஸ் பங்க்ஷன் எதுனா அரேஞ்ச் பண்ணுவான்… உள்ள போறதுக்கு யாருக்கும் அனுமதி கிடையாது… ஆனால் உங்களுக்கு அப்படி இல்ல பாஸ் கண்டிப்பா அந்த நிவாஸ் உங்கள பார்த்த உடனே கண்டிப்பா பம்முவான்… என்னா… அவனோட பலவீனமே அரசியல்வாதிங்கதான் அவங்க கிட்ட இருந்து அவனுக்கு சப்போர்ட் கிடைக்கணும்னா அவன் உங்களையும் சப்போர்ட் பண்ணி தான் ஆகணுன்ற நிலைமை தான்… அதனால உங்களை ஈசியா அதுக்குள்ள விட்டுருவான்…” என்ற கபீர்…
“கீழே இருக்கிற எந்த ஒரு ரூமையும் அவன் அந்த பொக்கிஷத்தை வச்சுக்கிறதுக்காக யூஸ் பண்றது இல்ல பாஸ்… மேல கிட்டத்தட்ட 16 ரூம்கள் இருக்கு அந்த 16 ரூம்ல ஏதோ ஒரு ரூம்ல தான் அவன் அந்த லாக்கெட்ட வச்சிருக்கிறதா நமக்கு இன்ஃபர்மேஷன் வந்து இருக்கு… இதுல சொல்லப்போனா இந்த கீழ கிரவுண்ட் ப்ளோர விட்டு மேல ஃபஸ்ட் ப்ளோருக்கு அவன் யாரையுமே அனுமதிக்கிறதே கிடையாது..” என்று கூற…
“ம்ம்ம் ஓகே வெல்… இதுக்கப்புறம் நான் பார்த்துக்கிறேன் கபீர்…” என்று கூறிய மார்ட்டினோ இப்போது அதனை எல்லாம் யோசித்தவாறு அங்கும் இங்கும் சுற்றி பார்த்து கொண்டே இருந்தான். அப்போது அவன் கேட்ட ஜூஸை எடுத்துக்கொண்டு பணியாளும் வர அதனை வாங்கி குடித்துக்கொண்டே ஓர கண்ணால் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தவனோ… அதன் பிறகு அந்த பணியாளை பார்த்து “ம்ம்ம் நான் இனிமே பாத்துக்கறேன் நீ இனிமே தேவை கிடையாது…” என்று கூற..
அவனோ அதனை கேட்டு தயங்கியவாறே நிற்க… “ம்ச்.. உன் முதலாளி கிட்ட நான் சொல்ல மாட்டேன் நீ இங்கிருந்து போ…” என்று கூற..
சரி என்று அவனும் தலையாட்டி வைத்தவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்… எங்கே அதற்குப் பிறகு நின்றால் அவனிடம் அடி வாங்க வேண்டியது இருக்குமோ என்றுதான் பயத்தில் அவன் ஓடி விட்டான்… மார்ட்டினோ தன் கையில் உள்ள ஜூஸை குடித்தவாறே அந்த ஃப்ளோரையே அலசி ஆராய்ந்து கொண்டிருக்க…
மெல்ல மேலே படிக்கட்டியின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக் கொண்டிருந்தான். நல்ல வேளையாக அந்நேரம் பார்த்து அங்கு யாரும் அவ்வளவாக வரவில்லை… அனைவரும் அந்த விருந்தினர் மாளிகையில் தான் விழா கொண்டாட்டத்தில் தான் இருந்தனர்.. அனைவரின் கையிலும் மது கோப்பை வழிந்து கொண்டிருந்தது… நிவாஸும் தனக்கு அழகான பெண் மனைவியாக வரப் போகிறாள் என்ற எண்ணத்திலேயே குஷியாக, புது மாப்பிள்ளை கணக்காக சுற்றிக் கொண்டிருந்தான்…
இங்கு மேலே ஏறியவாறு தன் கூர்மையான கண்களால் அளந்தவாறே மேலே வர.. அங்கோ இருந்த 16 அறைகளையும் ஒவ்வொரு அறையாக திறந்து பார்க்க ஆரம்பித்தான்… முதல் அறையில் போய் திறந்து பார்க்க அது ஏதோ ஒரு படுக்கையறையாக தான் இருந்தது… அடுத்த அறையும் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் சாதாரண அறைதான்… இப்படியே ஒரு பத்து அறையை திறந்து பார்த்தவன் எதுவும் கிடைக்காமல் போக… ஒரு பெரும் மூச்சை வெளியிட்டவாறே அடுத்த அறையை போய் திறந்து பார்க்க… அதுவோ வெற்றிட அறையாகத்தான் இருந்தது… அந்த அறையை கூர்மையாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு சட்டென்று அங்கு இருந்த ஒரு லாக்கர் ஒன்று கண்ணில் பட அதனை பார்த்து நக்கலாக உதட்டை வளைத்தவனோ நேராக அந்த லாக்கருக்கு பக்கத்தில் போய் நின்றவன்… சுற்றி முற்றி பார்த்தவாறு லாக்கரை திறக்க முயற்சித்தான்.
ஆனால் அவனுக்கோ முதலில் திறக்க வராமல் இருக்க.. சட்டென்று கபீருக்கு போன் செய்தவன்… “கபீர் லாக்கர் நம்பர் சொல்லு…” என்று கேட்க கபீரோ ஏற்கனவே நிவாஸை அலசி ஆராய்வதற்காக ஒரு சின்ன பக் டைப்பில் ஒரு ரோபோட்டை செய்து வைத்திருந்தான்… அதன் மூலமாக அந்த பாஸ்வேர்டை தெரிந்து வைத்திருந்தான்…
“பாஸ்வேர்ட் சொல்றேன் பாஸ்…” என்று நம்பர் சொல்ல… அதனை போட்டவனுக்கு லாக்கர் ஓபன் ஆகி விட்டது… ஏற்கனவே அந்த அறையில் இருந்த கேமரா அனைத்தையும் கபீர் ஜாமர் மூலியமாக ஃப்ரீஸ் செய்து வைத்திருந்தான்… இப்போது மார்ட்டின் அந்த லாக்கரை திறந்து பார்க்க உள்ளேயோ பல வகையான பணங்களும்,நகைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது…. அதனை பார்த்து பெருமூச்சு விட்டு மார்ட்டினோ தான் தேடி வந்த பொருள் இருக்கிறதா என்று பார்க்க… ஆனால் அங்கு அந்த பொருள் இல்லை..
அதில் புருவத்தை சுருக்கிவனோ “கபீர் லாக்கெட் மிஸ்ஸிங்…” என்று கூற
கபீருக்கோ அது அதிர்ச்சிதான்… “பாஸ் அந்த லாக்கர தவிர வேற எங்கேயும் அந்த லாக்கெட்டை வச்சிருக்க மாட்டான்…” என்று கூற.
அதில் மார்ட்டின் தலை கோதிக் கொண்டவனோ “இங்கே இல்ல கபீர்…” என்றவன் வேக வேகமாக அந்த அறையை விட்டு வெளியில் வந்தான்…. கபீரோ “ஒரு நிமிஷம் பாஸ் நான் மறுபடியும் உங்களை கூப்பிடுறேன்…” என்றவனும் போனை வைத்துவிட… யாருக்கு அடித்தானோ என்றே தெரியவில்லை… அடுத்த நிமிடம் மறுபடியும் மார்ட்டினுக்கு அழைக்க… மார்ட்டினோ போனை எடுக்கவே இல்லை…
ஏனென்றால் அவன் அந்த அறையை பூட்டிவிட்டு அதற்கு அருகில் இருந்த மற்றோரு அறையை கிராஸ் செய்து வர… அந்த அறையில் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்ப்பதாக இருந்தது… அதனால் அப்படியே புருவம் சுருக்கி யோசித்தவன் அந்த அறையை திரும்பிப் பார்க்க அங்கோ பார்த்த காட்சியில் அதிர்ந்தே போய் விட்டான் மார்ட்டின்….
மார்ட்டின் தன்னை அணைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும் பெண்ணவளை பார்க்க பார்க்க அவனுக்கு ஏதேதோ புதுவித உணவுகள் தோன்றி கொண்டே இருந்தது… அதுவும் அவளது மென்மைகள் அனைத்தும் தன்மீது மோதியவாறு இறுக்க அணைத்துக் கொண்டு நிற்பவளை பார்த்து அவனின் இருக் கைகளையும் இறுக்க மூடிக்கொண்டதுடன் இல்லாமல் தன் கண்களையும் மூடிக்கொண்டவன் ஆழ்ந்து சுவாசித்தவாறு இருக்க… அவனது உடம்பிலோ ஏதோ புது ரத்த ஓட்டம் பாய்வது போல அப்படி ஒரு சிலுசிலுப்பு உண்டாகியது…
அது மட்டுமா இதுவரை அவன் உணர்ந்திடாத ஒரு உணர்வு குவியலாகவே இருந்தது… அப்படியே கண்களை இறுக்க ஓடிக்கொண்டவன் தனது நெஞ்சில் அழுது கொண்டிருந்த பெண்ணவளின் முகத்தில் ஏற்பட்ட ஏதோ குறுகுறுப்பில் சட்டென்று நினைவுக்கு வந்தவன்… தன்னிடமிருந்து அவளை பிரிப்பதற்கு மட்டும் முயலவே இல்லை.. அப்படியே அவன் குனிந்து அவளை மட்டும் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க.. அந்த இளம் மங்கையோ அவனது நெஞ்சில் முகத்தை அழுத்தியவள்… கதறியவாறே..
“என்னை எப்படியாவது காப்பாத்துங்க ப்ளீஸ்..” என்று கதறிக்கொண்டே இருக்க..
அதில் சட்டென்று அவனுக்கு உணர்வலைகள் அறுந்து போனது..
ஆம் அது மைத்ரேயி தான்… மார்ட்டின் அந்த பொக்கிஷத்தை எடுப்பதற்காக அந்த வீட்டின் மாடியையே அளந்து கொண்டிருக்க… அப்போது மீதம் இருந்த ஆறு அறைகளையும் திறந்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் நடந்தவன் எதார்த்தமாக திரும்பி பார்க்க அங்கே அவன் பார்த்த காட்சி அவன் ஈரக்குலையே நடுங்கி போனது…
ஏனென்றால் அங்கு ஒரு பெண் அந்தரத்தில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்வதும் பின் அதன் அடுத்தப்படியாக அவள் கால்கள் அந்தரத்தில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்ப்பவனுக்கு ஏதோ மனம் வலிக்க செய்தது.. சட்டென்று தன் அதிர்ச்சியில் இருந்து விலகியவன் அடுத்த நிமிடம் புயலாக வேக வேகமாக ஓடி வந்து அந்த பெண்ணின் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டான்…
“ஹேய் என்ன பண்ற உனக்கு அறிவு இல்ல…” என்று அவன் கத்திக் கொண்டே அவள் கால்களை பற்றி தூக்கியவன் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அந்த கயிறை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்திக்கொண்டு அறுத்து விட… பொசுக்கென்று பெண்ணவள் அவன் தோள் மீது விழுந்தாள்… அதில் அவனுக்குமே தன்னை சமாளிக்க முடியாமல் கொஞ்சம் தடுமாற்றத்துடன் அருகில் இருக்கும் பெட்டில் விழ.. அவன் மீது பூக்குவியலாக வந்து விழுந்தாள் அந்த பெண்ணவள்… அவளின் தொடுகையும், மென்மையும் கண்டு அதிர்ந்தவனுக்கு அன்று கிளப்பில் பார்த்த பெண்ணிடம் இருந்து தோன்றியது போல இருக்க.. சட்டென்று அவளது வதனத்தை நிமிர்ந்து பார்த்தவனுக்கோ அன்று பார்த்த பெண்ணவள் தான் இது என்பதே அதிர்வாக இருந்தது…
“ஹான் இவளா….”என்று அதிர்வாக பார்த்தவனோ அடுத்த நிமிடம் அந்த அதிர்ச்சி விலகியவனாக… “ம்ச் இவளுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பார்த்தாலும் நம்பகிட்டையே மோதிட்டு இருக்கா…” என்று புலம்பியவன்… “ஏய்… கொஞ்சம் தள்ளுறியா…” என்று வெடுக்கென்று அவளை தன்னிடமிருந்து தள்ளிவிட முயல ஆனால் அவளோ அவனை விட்டு இம்மியும் நகரவில்லை… மேலும் இரண்டு முறை அவளை தூக்கி பார்க்க… அப்போதும் அவனால் முடியவில்லை…
“காட்… இவள…”என்று மனதில் திட்டிக்கொண்டவனோ… அப்படியே அவளை தூக்கியவாறு எழுந்து நின்றவன் தன் அணைப்பிலையே நிற்கும் அவளை குனிந்து பார்க்க…
அவளோ நிமிர்ந்து அவனை பார்த்தவள் முகத்தில் ஒருவித பளப்பளப்பு தெரிந்தது… “வந்துட்டீங்களா…”என்றவளை கண்டு அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..
ஆனாலும் அப்படியே அவளை பார்த்தபடியே மார்ட்டின் நிற்க… “ப்ளீஸ் என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாத்திட்டு போங்க…” என்று கதறியவாறு அவன் நெஞ்சிலையே குடி கொண்டிருந்தாள்.. கிட்டதட்ட அவன் உள்ளே வந்த நொடி முதல் மேலும் அரைமணி நேரம் ஆன போதும் அவள் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.. அவனும் அவளை தன்னை விட்டு விலக்கவில்லை…
இப்போது அதனை எல்லாம் நினைத்து பார்த்தவனோ சலித்துப்போனவனாக.. இல்லை இல்லை வெளியில் சலித்துப்போனவன் போல தன்னையே நம்ப வைத்துக்கொண்டவன்.. கடுக்கடுத்த முகத்துடன் “கொஞ்சம் என்னை விட்டு தள்ளி நிக்கிறியா…. எவ்வளவு நேரம் இப்படி என் மேல சாய்ஞ்சிட்டே நிப்ப…” என்று கடுப்பாக பேசியவனை கண்டு அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தவளோ….
தன்னுடைய நிலையை பார்த்து சட்டென்று அவனிடமிருந்து விலகியவளோ “சாரி சார்..” என்று கூற…
அவளில் விலகல் அவனுக்கு ஏனோ உள்ளுக்குள் பிடிக்காமல் போக… ஆனால் அதனை முகத்தில் காட்டாதவன்… “ம்ச் டேம் யுவர் சாரி…” என்று கூறியவன்… “எதுக்காக இப்படி முட்டாள்தனம் பண்ற அளவுக்கு போன…” என்று மேலே ஃபேனில் மாட்டிய அவளின் லெகங்கா ஷாலை காட்டியவாறே கத்தினான்… அதில் அப்படியே அதிர்ந்தவள் உடல் வெடவெடக்க நின்றிருந்தாள்…
“ம்ம்ம் ஆமா நீ அன்னிக்கு கிளப்ல ஓடி வந்து என் மேல மோதுன அந்த பொண்ணு தானே…” என்று அவனுக்கு அவளை தெளிவாக தெரிந்தாலும் ஏதோ யோசிப்பது போல பாவ்லா செய்ய… அவளோ ஆம் என்று தலையாட்டினாள்…
“ஓஓஓ ஆமா உனக்கு வேற வேலையே இல்லையா… அன்னைக்கு என்னை இடிச்ச மாதிரி ஓடி வந்த.. இன்னைக்கு தற்கொலை பண்ணிக்கிற மாதிரி என் மேல வந்து விழுற… உனக்கு என்ன தாண்டி பிரச்சனை…” என்று அவன் கேட்க.. இந்நேரம் அவன் அவளை உரிமையாக வாடி போடி விளித்ததை அவன் குறித்துக்கொள்ளவில்லை…
அதில் நிமிர்ந்து அவனை பார்த்து பேய் முழி முழித்தவளோ… “அது… அது…”என்று திணற… அவனோ அவளை கடுப்பாக பார்த்தான்…
“ம்ம்ம் சொல்லு…”அதட்ட..
“ம்ம்ம்ச் ப்ளீஸ் என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாத்திட்டு போங்க… இங்க இங்க… எனக்கு…” என்று தடுமாறியவளை கண்டுக்கொண்டவனோ…
“கல்யாணம் அதானே…”என்று தலையை அழுத்து கோதி கொண்டவாறே கூற…
அவளோ ஆம் என்றாள் தலையாட்டியவாறே… “ம்ச் ஸீ… இப்போ எனக்கு என்னோட டார்கெட் உன்ன காப்பாத்துறது கிடையாது… என்னோட டார்கெட்டே வேற சும்மா என் கண்ணு முன்னாடி தற்கொலை பண்ண போனியேன்னு உன்ன காப்பாத்துறதுக்காக வந்தேன்.. பார்த்தபடி எனக்கு உனக்கு ஹெல்ப் பண்ண எந்த ஒரு இன்டென்ஷனும் கிடையாது…” என்றவனோ அங்கிருந்து நகர முற்பட… ஆனால் அவனால் முடியவில்லை..
ஏனேன்றால் மைத்து தான் அவனின் கையை இறுக்க பிடித்துக் கொண்டாளே…. “ப்ளீஸ் ப்ளீஸ் என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாத்திட்டு போய்டுங்களேன்… இங்க இருக்கவே எனக்கு பிடிக்கவே இல்ல… என்னை ஊர்ல இருந்து கடத்திக்கொண்டு வந்துவிட்டான் இந்த கிழவன்… அவன் என்னை அஞ்சாவதா கல்யாணம் பண்ணிக்க போறானாம்… எனக்கு ஜஸ்ட் 21 ஏஜ் தான் ஆகுது தெரியுமா..” என்று அவள் புலம்பியவாறு நிற்க…
“ம்ச் எனக்கு உன்னோட சொற்பொழிவுலாம் முக்கியம் கிடையாது.. என்ன விடு நான் போறேன்…” என்று திரும்ப மறுபடியும் பெண்ணவளின் கையில் இருந்து தன் கையை விலக்க முயல… அப்போதும் இறுக்க கட்டிக்கொண்டு அவனை பாவம் போல பார்த்தவளின் வாயில் ஒரே சொல் தான் திரும்ப திரும்ப வந்தது…
“எப்படியாவது காப்பாத்தி என்ன கூட்டிட்டு போங்க…” என்று கூற…
அவனுக்கோ இது ஆகுற காரியம் இல்லை என்று அவளை தள்ளிவிட அவளின் தோளில் கை வைக்க அப்போதுதான் அவன் கண்களில் பட்டது பெண்ணவளின் கழுத்தில் இருந்த அந்த லாக்கெட்… எந்த லாக்கட்டினை அவன் தேடி வந்தானோ அந்த லாக்கெட் அதுதான்… அதுவே தான்… மார்ட்டின் அதிர்ச்சியாக அதையே பார்த்தவன்…
“இது எப்படி உன் கழுத்துல வந்துச்சு…” என்று அதை சுட்டிக்காட்டி பேச..
அவளோ குனிந்து கழுத்தினை பார்த்தவள்… “ம்ச் இதுவா என்னவோ அந்த ஆள் வந்துதான் இத எனக்கு போட்டுவிட்டான்…” என்று அவள் வெகுளியாக கூற…
மார்ட்டினின் பார்வையோ இமைக்காமல் அந்த லாக்கெட் மீதே இருந்தது… ஏனென்றால் அவன் மிகப்பெரிய டீல் பேசிவிட்டு வந்திருந்த லாக்கெட் அதுதான்.. அதனையே வித்தியாசமாக பார்த்திருந்தவனும் தான் தேடி வந்த பொருள் தனக்கு முன்னாலே வந்தால் விடுவதற்கு அவன் ஒன்றும் பைத்தியம் கிடையாதே… அதனால் அதனை அப்படியே வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவெடுத்தவனாக…
“ம்கூம்… சரி ஓகே நான் உன்னை காப்பாத்துறேன்…” என்று கூற..
அதில் பெண்ணவளின் முகம் முழுவதும் புன்னகையில் பூ பூத்தது… எப்படியாவது அந்த அரக்கனிடமிருந்து வெளியில் தப்பித்தால் போதும் என்று நினைத்தாள் அவள்… ஏதோ அன்று அந்த இரவு மார்ட்டினை பப்பில் பார்த்ததும் சரி இப்போது சிறிது நேரத்துக்கு முன்பு அவனைப் பார்த்ததும் சரி ஏதோ மனசுக்குள் ஒருவித நிம்மதி தான் அவளுக்கு தோன்றியது…
தன் அகண்ட வேல்விழிகளை விரித்தவள்.. “உண்மையாவா சொல்றீங்க… என்னை நீங்க காப்பாத்துவீங்களா…” என்று சிறுபிள்ளை முகத்துடன் அவனிடம் கேட்க…
அந்த பாவனையில் மார்ட்டின் கொஞ்சம் அசந்துதான் போனான்… அவனுக்கு பெண்கள் எல்லாம் புதிதுதான்… அதாவது வெளி தோற்றத்தில் பல பெண்களை தன் ஒற்றைப் பார்வையில் ஓட வைத்திருக்கிறான் தான்… ஆனால் இப்படி அணைத்து கொண்டும், கட்டிக் கொண்டும் இருக்கவிட்டதில்லை யாரையும்… ஏன் தன் பக்கத்தில் கூட யாரையும் நெருங்கவிடாமல் இருந்தவன் இப்போது தன்னை பூப்போல பெண்ணொருத்தி அணைத்து கொண்டிருக்கும் இந்த பெண்ணை தட்டிவிட அவனுக்கு மனம் வரவில்லை..
அவன் நினைத்திருந்தால் ஒற்றை நொடியில் அந்த பெண்ணை தன்னை விட்டு தள்ளிவிட்டு இருக்க முடியும்.. ஆனால் அவனுக்கு செய்ய தோன்றவில்லை.. அப்படியே அசையாமல் கைகளை முறுக்கியவாறு நிற்க பெண்ணவள் திரும்பவும் அவனை பாவமாக பார்த்தவாறே…
“உண்மையாவே என்னை காப்பாத்துவீங்களா.. இந்த அரக்கன் ரொம்ப கெட்டவன் தெரியுமா என்னை ஏதாச்சும் பண்ணிடுவானோன்னு பயமாவே இருக்கு… என் பக்கத்துல நெருங்கும்போது எல்லாம் எனக்கு படப்படன்னு வருது தெரியுமா..” என்று தன்னுடைய உணர்வுகளை அவனிடம் கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கோ ஏதோ உள்ளுக்குள் தடுமாறுவது போலவே இருந்தது.. ஆனாலும் தன்னை சடுதியில் சமாளித்துக் கொண்டவன் அவளது தோள்பட்டை பிடித்து தன்னிடம் இருந்து விலக்க முயன்றவாறே..
“சரி சரி ஓகே நான் உன்னை இங்கிருந்து காப்பாத்துறேன் பட் அதுக்கு கைமாறா நீ என்ன செய்வ..” என்று கேட்க.
அதில் அவனை பார்த்து பயந்தவாறே தன் கண்களை விரித்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்… “என்கிட்ட உங்களுக்கு கொடுக்கிற மாதிரி எதுவுமே இல்லையே…” என்று கூற.
அதில் நக்கலாக சிரித்தவனும் “இருக்கு நிறைய இருக்கு.. ஆனா நான் அத இப்போ கேட்கமாட்டேன்… இங்கிருந்து உன்னை கூட்டிட்டு போன பிறகு நான் கேட்டுக்குறேன்…” என்று கூற.
அதில் சரி என்று தலையை உருட்டியவாறு இருந்தாள்… அவளுக்கு எப்படியெனும் இங்கே இருந்து வெளியில் சென்றாலே போதும் என்று தான் தோன்றியது… அதற்காக அவள் என்ன செய்யவும் தயாராகத்தான் இருந்தாள்.. ஆனால் மார்ட்டினோ அவளது கழுத்தில் இருக்கும் லாக்கெட்டை விழிகள் சுருக்கியவாறே பார்த்தவன்…
“ம்ம்ம்.. வெல் இத எப்படி உனக்கு போட்டு விட்டான்…” என்று தயக்கியவாறே கேட்டவன்…
அதில் அவனை நிமிர்ந்து புரியாத மொழியில் பார்த்தவளோ “இந்த குடும்பத்தோட கலாச்சாரம், பாரம்பரியம், மண்ணாங்கட்டின்னு சொல்லி அந்த அரைக்கிழம் இத கழுத்துல போட சொல்லி சர்வன்ட்கிட்ட குடுத்துட்டு போச்சி…” என்று கூற..
அவள் கூறிய திணுசில் அவனுக்கு பொசுக்கு என்று சிரிப்பு தான் வர பார்த்தது… ஆனால் சிரிக்காமல் “அவன் அரைக்கிழம் இல்ல முழு கிழவன்தான்..” என்று மார்ட்டின் மாற்றி கூற…
“ம்ம் ஆமா ஆமா அந்தாளு ஒரு கிழவன் தான்…” என்று கூறிக்கொண்டாள்..
“என்ன மார்ட்டின் அவன் முழு கிழவன்னா அப்போ நீ யாருடா… உனக்கு வயசு 35 ஆகுது… அப்ப நீ தான் அரைக்கிழம்…” என்று அவன் மனது எடுத்துரைக்க…
அவனுக்கோ அவளின் வயது எவ்வளவு என்று யோசனை வர ஆரம்பித்தது.. “ஆமா இவ எவ்ளோ வயசு இருப்பா.. ஏற்கனவே சொன்னாளே.. நான் தான் கண்டுக்காம விட்டுட்டேன்…” என்று தேவையில்லாமல் ஒரு யோசனை வேறு அவனை தொற்றிக் கொண்டது…
“ம்ம்ம்…”என்று யோசனையுடன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தவனோ… “ம்ம்ம் என்ன ஒரு இருபது, இல்லனா இருபத்தி ஒன்னு இருப்பாளா…”என்று யோசித்தவனுக்கோ அது வேப்பங்காயாக கசந்தது… ”
“ஆஆ அம்மாடியோ அப்போ அவளுக்கும், எனக்கும் நடுவுல நிறைய வயசு டிஃபரண்ட் இருக்கும் போல இருக்கே… கிட்டத்தட்ட பத்து வயசுக்கும் மேல டிஃப்ரண்ட் இருக்கும் போல இருக்கு…” என்று அவன் மனதும் கணக்கு போட..
“அட இது என்னடா வித்தியாசமான யோசனையிலாம் வருது உனக்கு… எதுக்காக இப்ப அவளோட வயசையும், உன் வயசையும் கம்பேர் பண்ணிக்கிற…” என்று தன்னை தானே நக்கல் செய்துக்கொண்டவனோ… அவள் தன்னையே மலங்க மலங்க பார்ப்பதை பார்த்து தன்னை சமாளித்துக்கொண்டவன்…
“ஸீ… இன்னும் ஒரு அரை மணி நேரத்துல நான் இங்கே வருவேன் நீ தயாரா இரு.. நாம இங்க இருந்து கிளம்புவோம்..” என்று கூற… அவளும் கிடுகிடுவென தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்…
“ம்ம்ச் இப்படி ஆடு மாறி தலையை ஆட்டாதே…”என்று திட்டியவனோ.. இன்னும் தன் இடையில் அவள் இறுக்க கைகளை கோர்த்துக்கொண்டு நிற்பதை கவனித்தவன் “கொஞ்சம் கைய எடு…” என்று தன்னிடமிருந்து அவளை விலக்க… ஆனால் அவளோ அப்போதும் அவனை விடாமல்… பாவமாக பார்த்தவாறே… “ம்ம் என்ன சீக்கிரமா கூட்டிட்டு போய்டுவீங்க இல்ல.. ஏமாத்தமாட்டீங்களே…” என்று கேட்க…
அந்த பிள்ளை மொழி குரலிலும்,அவளது காந்த பார்வையிலும் அவனுக்கு தான் ஒரு மாதிரி உள்ளம் தடுமாறியது…
“ம்ச் அதெல்லாம் ஏமாத்தமாட்டேன்…”என்று கூறியவன் அவளின் கைகளை தன்னிடமிருந்து கடினப்பட்டு விலக்கியவன்…
“இதுக்கு மேல இங்க இருந்தா மாட்டிப்போம்…” என்று நினைத்தவாறு வெளியில் சென்று விட்டான். அவன் “மாட்டிப்போம்…” என்று சொன்னது அந்த நிவாஸிடமில்லை இந்த குட்டி பெண்ணவளிடம் தான் என்பது அதன் பிறகு தான் அவன் மனதுக்கே புரிந்தது…
(கேப்பச்சினோ…)