ஒரு மாதம் சென்றும் விடவே, அவள் பள்ளிக்கு இன்று வருவாள் என்று அறிந்தவன், அவளை பார்த்தேயாக வேண்டும் என கல்லூரிக்கு போகாமல் லீவ் போட்டுவிட்டான்.
எப்பொழுதும் தங்கள் சந்திக்கும் இடத்தில் தன் பைக்கை நிறுத்திவிட்டு அவன் காத்திருக்க, அந்த வழியாக சைக்கிளில் வந்தாள் தாட்சா.
அவன் பைக்கின் அருகே நின்றிருக்கவும், அவன் அருகே நிற்க சிறு தயக்கம் அவளுக்குள். வெட்கமும் கூச்சமுமாக அவளை அலைகழிக்கவே நிற்காது செல்ல முயன்றாள்.
அவள் தன்னை கண்டு நிற்காது செல்லவும் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. தன் உயிர்த்தோழியாய் இருந்தவள் அவ்வாறு செல்வாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை.
அவள் சைக்கிளுக்கு முன் சென்று தடுத்து நிறுத்தியவன், அவளை தானே இடுப்பில் கைகொடுத்து இறக்கிவிட்டு அவளை தவிப்புடன் பார்த்தான்.
“என்னடி ஆச்சு உனக்கு?. ஏன் பார்த்தும் பார்க்காம போற?…” கண்களில் அவளுக்கான தேடலோடு அவன் கேட்கவும்.
அவனிடம் என்னவென்று சொல்லுவாள்?… எதுவும் பேசாது அவன் முகத்தையும் ஏறிட்டு பார்க்காது
விட்டால் இப்பொழுதே சென்றுவிடுவேன் என்பது போல அவன் அருகே நின்றிருந்தாள்.
அவளையே பார்த்தவனுக்கு அவள் மாற்றம் ஏதேதோ செய்தது.
நேற்றுவரை குழந்தைப்பெண்ணாக இருந்தவள் இன்று பருவம் எய்தி, அதற்கே உண்டான உணவுவகைகளை உண்ண கொடுத்திருப்பதால், லேசாய் சதை போட்டிருந்தது அவள் உடம்பு. அதுமட்டுமில்லாது அவன் உணர்ந்த மாற்றத்தில் அப்படியே அவளை அணைத்து கொஞ்ச வேண்டும்போல ஆனது அவனுக்கு.
ஆம் அவனை நேருக்கு நேராக பெண்ணவளுக்கு வெட்கம் வந்திருக்கவே அவனை நிமிர்ந்தும் பாராது ரோட்டையே பார்த்திருந்தவளின் கன்னங்கள் சிவந்து கிடந்தது.
அவள் கன்னத்தை லேசாய் வருடியவன், அவள் கரத்தை பிடித்து இழுத்து “ஐ லவ் யூ…” அவளிடம் தன் காதலை உரைத்தவன், அப்படியே தன்னோடு கட்டியணைத்து அவள் இதழ்களில் முத்தமிடலானான்.
இருபத்திஒரு வயதான அவன் அதில் ஆர்வமாகவே முன்னேற. அவளுக்கோ இரண்டும்கெட்டான் வயது. உடம்பில் ஏதேதோ உணர்வுகள் எழும்ப. அதை சரியாய் புரிந்து கொள்ள இயலாமல் பயத்தில் அப்படியே மயங்கிச் சரிந்து விட்டாள்.
தன்னோடு இருந்தவள் அப்படியே சரியவும் பயந்து போனவனாய், அவளை கீழே விழாது தாங்கிப்பிடித்தான்.
அப்படியே அவளை அருகே உள்ள கல்லில் அமர வைத்தவன், “யவனா…! யவனா ப்ளீஸ் எழுந்திருடி…” தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி விட்டவன், அவளையே பயத்துடன் பார்த்திருந்தான். எங்கே தன்னை தவறாய் நினைத்து விடுவாளோ என்று.
ஆனால் அவளோ அவனை பார்க்கவும் பயந்து போனவளாய் அவனிடம் இருந்து விலகி தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தே போனாள்.
சந்தனுவுக்கு அன்பைக் காட்ட தெரிந்த அளவுக்கு கண்டிப்பை காட்டத் தெரியவில்லை. சகாயமோ அவளிடம் கண்டிப்பை மட்டுமே காட்டுவார். தாய் இல்லாத பெண்ணுக்கு அளவுக்கு மீறிய செல்லம் வேண்டாமே என்பது அவர் எண்ணம். அதனால் கண்டிப்போடு அன்பையும் சேர்த்தே வழங்குவார்.
அதேசமயம் முத்துப்பற்கள் தெரிய அழகாய் சிரிக்கும் பெண்ணிடம் அவரால் சிறிது நேரத்திற்கு மேல் தன் கோபத்தை இழுத்துப் பிடித்திருக்கவும் முடியாது. அவளைத் திட்டிய கொஞ்ச நேரத்திலேயே அவளுக்கு பிடித்த ஸ்ட்ராங் காபி அல்லது சமோசாவுடன் அவளை சமாதானப்படுத்த சென்றும் விடுவார்.
அவளோ அவர் தன்னை அதட்டினார் என்றோ, அவள் விரும்பிய இடத்திற்கு போகக்கூடாது என கட்டுப்படுத்துகிறார் என்றோ கொஞ்சமும் கோபப்படாது உடனே அவரிடம் ராசியாகி விடுவாள்.
எந்த தப்புமே செய்யாது தன்னிடம் சமாதானத்திற்கு வரும் பெண்ணைக்கண்டு அவருக்குத்தான் அதில் பாவமாகிப் போய் விடும். வைரம் போன்ற பெண்ணை இப்படி கட்டுப்படுத்துகிறோமே என்று.
அன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டாள். பள்ளிக்கு கிளம்பிப் போனவள் உடனேயே திரும்பி வந்ததும் பதற்றத்துடன் விசாரித்தவர்களிடம் தலைவலிக்கிறது என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துவிட்டாள்.
அவளுக்கு பயம், இதுவரை நட்புடன் தன்னை அனுகியவன். தவறாய் ஒருபார்வை கூடப் பாராதவன் அவன்.
இரவில் வெகுநேரம் ரெஸ்ட்டாரெண்டில் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பார்கள், சில நேரங்களில் இங்கேயே ஹாலில் அனைவரும் படுக்க அவனும் ஒரு சோபாவில் உறங்கிவிடுவான். வசதி வாய்ப்பையெல்லாம் பெரிதாய் நினைக்க மாட்டான்.
சில நேரம் அவனோடு சேர்ந்து மங்களாதேவி கோவிலுக்கு செல்வாள். அவன் அப்பா ஜெயராமனிடம் வேலை பார்ப்பவரின் அப்பா ஒரு பாரஸ்ட் ரேஞ்சர் அதனால் அவரின் அனுமதியோடு எளிதாய் அங்கே செல்வார்கள். அவனோடு தனியாய் செல்வதற்கு அவள் அஞ்சியது இல்லை.
அப்படி அவனை மலைபோல நம்பியிருக்க, இன்று அவன் தன்னிடம் நடந்து கொண்டதை அவளால் சாதாரணமாய் எடுத்துக்கொள்ள இயலவில்லை. நடந்தவற்றை கிரகிக்க முடியாது தலையணையில் முகத்தை அழுந்தப் புதைத்தவளுக்கு குழப்பமே.
6…
கதவை வேகமாய் திறந்து கொண்டு உள்ளே வந்த அவன் அவள் படுக்கையில் தலையணையில் முகம் புதைத்து படுத்திருக்க.
அவள் குழப்பத்தை புரிந்து கொண்டவனாய், மிருதுவாய் புன்னகைத்தவாறே அவள் அருகே வந்து அவள் தோள் தொட்டான்.
அவன் தொடுகையை உணர்ந்து திக்கென எழுந்து அமர்ந்தவள், தன்னை நெருங்கி வந்தவனை மிரட்சியுடன் பார்த்தாள்.
ஏற்கனவே தாய் இல்லாத பெண்ணான அவளுக்கு இந்த சமயத்தில் ஒரு அன்பான பெண் துணை இல்லாத சூழல்.
அதேசமயத்தில் அவள் பெரிய மனுஷி ஆனதை யாரிடமும் ஆர்ப்பாட்டமாய் சொல்லிக்கொள்ளவும் இல்லை. சகாயத்தின் உறவுப்பெண்மணியை வைத்து அவளுக்கு செய்யவேண்டிய சடங்கை செய்துவிட்டார்கள்.
அதனால் அந்த அளவிற்கு பெரிதாய் வெளியே தெரியவும் தெரியாது. இந்த விஷயத்தை பெரிதாக வெளியே சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று சந்தனுவும் சகாயமும் முடிவு செய்துவிட்டார்கள்.
அதனாலேயே மாணவர்கள் ஏதும் கேலி செய்வார்களோ என்ற சங்கடம் எல்லாம் அவளுக்கு இல்லைதான்.
ஆனாலும் அந்த சமயத்தில் உண்டாகும் அறியாமை, பயம், கூச்சம் எல்லாம் சேர்ந்து ஏற்கனவே அவள் மன அழுத்தத்தில் இருக்க. இப்பொழுது தன் உயிர்நண்பனும் இவ்வாறு தன்னிடம் நடந்து கொண்டால்?…
அவன் முகம் பார்க்க அவளுக்கு என்னவோ போல இருக்க, தலைகுனிந்தவளாய், “சேனா ப்ளீஸ். தயவுசெய்து போய்டுங்க இங்கேயிருந்து…” அவனிடம் வாய்விட்டு பேசவும் பயந்து போனவளாய் மெல்லிய குரலில் பேசியவாறு அவன் அருகாமையை விட்டு விலகி பின்நோக்கி நகர்ந்தாள்.
அவள் பதற்றத்தை உணர்ந்து கொண்டவனாக, “ஹேய் ரிலாக்ஸ் யவனா. உனக்கு எதுவுமில்லைடி…” அவள் பேசிய அதே குரலில் சொல்லியவனாய் அவள் அருகில் அவன் அமர்ந்து கொள்ள.
அதற்கு மேல் செல்ல முடியாதவளாய் தன்னை குறுக்கி அமர்ந்து கொண்டவள், “சேனா ப்ளீஸ். எனக்கு அதெல்லாம் பிடிக்கவே இல்லை. நீங்க என்கிட்டே தப்பாய் பிஹேவ் பண்றீங்க… இங்கே இருந்து போய்டுங்க…” முழங்கால்களை கைகளை கொண்டு கோர்த்து நெஞ்சோடு இறுக்கி அமர்ந்து கொண்டவளாய் அவனிடம் பேசவும் பிடிக்காதவளாய் முகம் திருப்பினாள்.
உண்மையில் சேனா மனம் விட்டு பேசிப் பழகும் இருவர் அவன் தந்தையும், தாட்சாவும்தான். ஸ்டேட்டஸ் அப்படி இப்படியென்று அவன் தங்கை சிந்துஜாவுக்கும் அவன் தாய்க்கும் தலையில் கொம்பு முளைத்திருக்க மனம் விட்டு பேசுவதைக் கூட கவுரவக்குறைச்சலாய் நினைப்பார்கள்.
அதனால் தனக்கான நெருங்கிய துணையாக யவனாவை அவன் மனம் நாட. அவளோ இப்படி விலகிப்போவதில் மனம் அடிபட்ட குழந்தையாக முழித்தான்.
அவள் விலகலை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமல் போகவே, “யவனா ப்ளீஸ்… நீதானே சொன்னே எனக்கு என்ன வேணும்னாலும் உன்கிட்டே சொல்லலாம். உன்கிட்டே சேர் பண்ணலாம்னு?… அதைத்தான் நான் இப்போ செய்யறேன். இப்போ இப்படி விலகிப்போனால் எப்படி?…” அவன் தவிப்புடன் அவள் முழங்காலில் கைவைக்க.
அவன் கையை தட்டிவிட்டவளாய், அவனை கோபமாய் பார்த்தவள், “அதுக்குன்னு அப்படியெல்லாம் நடந்துக்கலாமா நீங்க?. அதுக்குப் பெயர் பேட் டச் தானே?…” அவள் தன்னை புரிந்து கொள்ளாமல் பேசுவதோடு, தான் முதன் முதலில் கொடுத்த காதல் முத்தத்தை தவறாய் வேறு பேசவும். அவனுக்கு இதுவரை இருந்த தவிப்பு போய் மாறாக கோபம்தான் வந்தது.
கோபமாய் அவள் கன்னம் பற்றியவன், “முட்டாள் பெண்ணே. அதுக்குப் பெயர் பேட் டச் கிடையாது. அதான் சொல்லியிருக்கேனே முத்தம் தர்ற இடத்தை பொறுத்து அதுக்கு நிறைய அர்த்தம் இருக்கும்னு. இப்போ நான் தந்த முத்தத்திற்கு பெயர் இணைபிரியாத காதலர்களின் முத்தம்னு அதுக்குப் பெயர். என்ன புரியுதா நான் சொல்றது?…” அவன் கன்னம் பற்றி அவள் கண்களுக்கு தன் விழிகளை கலந்து தன்னை அவளுக்கு உணர்த்திவிட முயன்றவனாய் அவன் பார்க்க.
அவளோ மங்கை என்ற பருவத்திற்கும் மடந்தை என்ற பருவத்திற்கும் இடையில் நின்று தவிப்பவள், தனக்குள் நிகழும் மாற்றத்தையே இன்னும் புரிந்து கொள்ளாது தவிப்பவள். அப்படியிருக்கையில் தற்போது அவன் கற்றுக்கொடுப்பதை புரியாது பார்த்திருந்தாள்.
கண்டிப்பு அன்பு நட்பு என்று அனைத்தும் கலந்தவனாய் இருந்தவன் அவளுக்கு காதலையும், இதழ் முத்தத்தையும் கற்றுக் கொடுத்தான்.
காதலை மட்டுமா கற்றுக்கொடுத்தான்?…
அத்தோடு தான் நினைக்க மறந்துபோன தன் தகுதியையும், இருவருக்கும் இடையில் நின்ற ஸ்டேட்டசையும் நெஞ்சில் ஆணி அடித்ததுபோல நினைவுபடுத்திய அவனின் செயலும் அவளைத் தீயாய் எரித்தது. இந்த பத்துவருடங்களாய் அவளை உயிரோடு எரித்தது.
அவளால் அதற்கு மேல் தூங்க முடியாது போகவும், வெகுநேரம் அப்படியே புரண்டு புரண்டு படுத்திருந்தவள், பின்னிரவு நேரம்தான் கண்ணயர்ந்தாள்.