தொல்லை – 23
அஞ்சலி சமைத்த மதிய உணவை கதிரும் மதுராவும் இரசித்து உண்டனர்.
“மாமா… மது அக்கா நம்ம வீட்லயே தங்கிக்கட்டுமே… எதுக்கு வெளியே ரூம்ல தங்கி கஷ்டப்படணும்…” எனக் கேட்டாள் அஞ்சலி.
ஒரு நொடி அசைவற்று அஞ்சலியை நிமிர்ந்து பார்த்தவன் பின் எதுவும் கூறாமல் கைகளை கழுவிவிட்டு அஞ்சலியின் அருகே வந்தான்.
அவளும் உண்டு முடித்திருந்தாள்.
“ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா அம்மு… பேசலாம்…” என்றான் அவன்.
“சரி மாமா…” என்றவள் கைகளைக் கழுவச் சென்றுவிட இப்போது அவனுடைய பார்வை மதுராவின் மீது விழுந்தது.
“என்னாச்சு மதுரா… நீ இப்போ ஸ்டே பண்ற ரூம் சரி இல்லையா என்ன?”
“சின்ன ரூம்தான் கதிர்… அவ்வளவா எந்த வசதியும் இருக்காது… இட்ஸ் ஓகே… நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்… அஞ்சுதான் என்ன இங்க இருக்கச் சொன்னா…” என்றாள்.
அதே நேரத்தில் அஞ்சலியும் கைகளை கழுவிவிட்டு வந்தவள் கதிரின் அருகே அமர்ந்துகொண்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க… உங்களை ஒரே வீட்ல தங்க வச்சு என்னால கன்ஃப்யூஸ் பண்ணிக்க முடியாது அம்மு…” என்றான் கதிர்.
மதுராவின் முகமோ சட்டென இறுகியது.
அஞ்சலியின் முகமோ வாடிப் போனது.
இவ்வளவு பெரிய வீட்டில் இருந்தும் தன்னுடைய சகோதரிக்கு உதவ முடியவில்லையே என வேதனை கொண்டாள் அவள்.
“ஏய்… இப்போ எதுக்காக நீ இவ்வளவு ஃபீல் பண்ற… மதுராவுக்கு தனியா ஒரு வீடு வேணும்னா ஏற்பாடு பண்ணி கொடுக்கிறேன்… எல்லா வசதிகளும் அங்க இருக்கும்…” என்றதும் அஞ்சலியின் முகம் சட்டென மலர்ந்தது.
ஆனால் மதுராவுக்கு அதில் உடன்பாடு இல்லை.
தனியாக எங்கேயோ இருக்கும் வீட்டில் அவள் வசித்து என்ன லாபம் கிடைக்கப் போகின்றது?
இங்கே இருந்தால்தானே தான் நினைத்ததை நடத்தி முடிக்கலாம்.
“இல்ல கதிர்… அதெல்லாம் வேணாம்… எவ்வளவு பெரிய வீடா இருந்தாலும் யாருமே இல்லாத வீடு நரகம் மாதிரி தான் இருக்கும்… அதுக்கு என்னோட சின்ன ரூமே பரவாயில்ல… பக்கத்துல பிரண்ட்ஸாவது இருப்பாங்க…” என்றாள் அவள்.
அஞ்சலிக்கோ உள்ளம் உருகியே போனது.
“புரியுது மதுரா… நம்மளோட அறிமுகம் வேற மாதிரி இருந்திருந்தா கண்டிப்பா நான் உன்ன இந்த வீட்ல தங்க வச்சிருப்பேன்… ஆல்ரெடி நீங்க ஒரே மாதிரி இருக்கிறதால நிறைய பிரச்சனை நடந்திருக்கு… இப்போ நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லைன்னாலும் கூட இப்படி ஒன்னா இருக்கிறது ஃப்யூச்சர்ல ஏதாவது பிரச்சனையை கொண்டு வர வாய்ப்பிருக்கு… அதனாலதான் யோசிக்கிறேன்… தப்பா எடுத்துக்காத… ஒரு வேளை உன்னோட ரூம் உனக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா சொல்லு… என்னோட மத்த வீட்ல உன்ன தங்க வைக்கிறேன்…” என்றவன் தன் அருகே அமர்ந்திருந்த அஞ்சலியின் கரத்தைப் பிடித்து அழுத்திவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட மதுராவுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
முகத்துக்கு நேராக இப்படி மறுத்துக் கூறுவான் என மதுரா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
உள்ளுக்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
ஆனால் அதை வெளிப்படுத்த முடியாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள் அவள்.
“சாரி மது அக்கா… மாமாவை தப்பா நினைச்சுடாத… அவர் ரொம்ப நல்லவரு… ஏற்கனவே பிரச்சனை நடந்ததால இப்போ வேணாம்னு சொல்றாரு…”
“இப்போ எதுக்காக நீ அவருக்கு கொடி பிடிச்சுகிட்டு வர்ற… அவர் சொன்னது எனக்கு தெளிவா கேட்டுச்சு… நீ ஒன்னும் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டாம்…” என முகத்தில் அடித்தாற்போல பேசிவிட அஞ்சலியின் முகமோ சுருங்கிப்போனது.
“ஏன்க்கா கோபப்படுற…?”
“ப்ச்… உனக்கு என்னம்மா கவலை…? இன்னொருத்தி புருஷனை உன் புருஷனா மாத்திட்டு நீ டென்ஷன் இல்லாம சந்தோஷமா இருக்க… என்னோட நிலைமை என்ன உன்ன மாதிரியா…? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு… அது எல்லாத்தையும் நான்தான் சமாளிக்கணும்…” என மதுரா கோபத்தில் கூறிவிட விக்கித்துப் போனாள் அஞ்சலி.
மதுரா கூறிய ‘இன்னொருத்தி புருஷன்’ என்ற வார்த்தையில் அஞ்சலியின் மனமோ உடைந்து போனது.
“அவர் ஒன்னும் இன்னொருத்தி புருஷன் கிடையாதுக்கா… எனக்கு தாலி கட்டுன என்னோட புருஷன்…” என குரல் நடுங்கக் கூறிய அஞ்சலியின் முகம் சிவந்து போனது.
முதல் முறையாக அதுவும் கோபத்துடன் தன்னிடம் பேசும் தங்கையை வியந்து பார்த்தாள் மதுரா.
“வாட்… உன்னோட புருஷனா…? என்ன அஞ்சு… பழசெல்லாம் மறந்திருச்சு போலயே…” எனக் கேட்டாள் அவள்.
“எதக்கா சொல்ற… நீ கல்யாணமே வேணாம்னு தாலியைக் கழட்டி என்கிட்ட கொடுத்துட்டு போனதை சொல்றியா…? இல்ல என்னை உன்ன மாதிரி நடிக்க சொன்னியே அந்த சொல்றியா..? அதெல்லாம் நான் இன்னும் மறக்கவே இல்லையே…
எத்தனையோ தடவை மாமா பாவம் இங்கே வந்துருன்னு உன்ன கூப்பிட்டேனே… அப்போ கூட நீ வரவே இல்லையே… அதையும் நான் மறக்கல… கடைசில போன்ல எனக்கு பணம் மட்டும் போதும் இந்த கல்யாண வாழ்க்கை வேணாம்னு சொன்ன… அதையும் நான் மறக்கல… உனக்குத்தான் பழசு எல்லாம் மறந்துடுச்சு போல…” என அழுத்தமாக கூறிய அஞ்சலியின் வார்த்தைகளில் மதுராவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
எப்போதும் தான் என்ன பேசினாலும் அதற்கு அடங்கிக் கட்டுப்பட்டு நிற்பவள் இப்படி எதிர்த்து பேசுவதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தாள்.
அஞ்சலியின் மனநிலையோ முற்றிலும் வேறாக இருந்தது.
சிறு வயது முதல் தன்னுடைய அக்காவிற்காக அவள் அனைத்தையும் விட்டுக்கொடுத்து விட்டாள்.
அவளுக்கு பிடித்த பொம்மைகள் ஆடைகள் முதன்முதலாக தந்தை வாங்கிக்கொடுத்த சிறிய தங்கத்தோடு என மதுரா ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் அவளுக்கு கொடுத்திருந்தாள் அஞ்சலி.
ஆனால் இப்போது அவள் உயிராக நேசிக்கும் கதிரை ‘என்னுடைய உரிமை இல்லை’ என்றல்லவா கூறுகிறாள்.
அதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியாமற் போனது.
“என்னடி… என்னையே எதிர்த்து பேசுவியா…?” கோபமாகக் கேட்டாள் மதுரா.
“பேசினா என்ன தப்புக்கா…? என் மேல தப்பு இல்லைன்னா நான் தாராளமா பேசலாம் தானே…? ஆரம்பத்துல இருந்து உன்னோட சுயநலத்துக்காக எல்லாத்தையும் பண்ணது நீ… என்னைப் பத்தி கூட யோசிக்காம என்னோட வாழ்க்கையைப் பத்தி நீ கொஞ்சம் கூட நினைக்காம உன்னை மாதிரி நடின்னு சொல்லிட்டு போயிட்ட… அதோட விளைவுதான் இப்போ இங்க வரைக்கும் வந்திருக்கு… இப்போ ஏதோ நான் தப்பு பண்ண மாதிரி ‘இன்னொருத்தர் புருஷன்’ அப்படின்னு சொல்ற… மாமா எனக்கு மட்டும்தான் புருஷன்… நானும் அவரும் முறைப்படி கல்யாணம் பண்ணிருக்கோம்… பார்த்துப் பேசு…” என்ற அஞ்சலியின் குரலில் இன்னமும் நடுக்கமும் கோபமும் கலந்திருந்தது.
மதுரா உறைந்து விட்டாள்.
அஞ்சலி இந்த அளவுக்கு எதிர்க்கக் கூடும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
அந்த அளவுக்கு கதிரின் பணமும் வசதியும் இவளை மயக்கிவிட்டது போலும்.
இப்போதைக்கு இவளை எதிர்த்து பேசுவது ஆபத்தாக முடியும் என நினைத்தவள் சட்டென சிரித்தாள்.
“அடிப்பாவி… சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா இவ்வளவு கோவப்படுறியே… உனக்கு இப்படி எல்லாம் கோபப்படத் தெரியுமா…? ரொம்ப நல்லாவே பேச கத்துக்கிட்ட…” என்றாள் மதுரா.
“சும்மா பேசினியா…? இதெல்லாம் விளையாட்டுக்கு பேசுற பேச்சாக்கா…?”
“சரி விடு அஞ்சு… இனி இப்படி பேசல…” என்ற மதுராவுக்கு எங்கே தான் பேசியதை கதிரிடம் இவள் கூறிவிடுவாளோ என்ற பயம் எழுந்தது.
இப்போது நிதானமற்று இருக்கும்போது அஞ்சலிடம் பேசுவது ஆபத்தில் முடியக்கூடும் என எண்ணியவள் “சரி… நான் கிளம்புறேன்… எனக்கு நிறைய வேலை இருக்கு…” என்றாள்.
“இருக்கா… மாமாவை வரச் சொல்றேன்…” என்ற அஞ்சலி கதிரைத் தேடி தங்களுடைய அறைக்குச் சென்றாள்.
மதுராவின் வார்த்தைகள் அஞ்சலியை வேதனை கொள்ளச் செய்தன.
அங்கே யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் அவளுடைய கணவன்.
வேகமாக அவனை நெருங்கிச் சென்றவள் திரும்பி நின்று அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கதிரை பின்பக்கமாக அணைத்துக் கொண்டாள்.
ஏனோ அவளுடைய மனம் முழுவதும் சோர்ந்து போயிருந்தது.
தன்னுடைய மனைவியின் மென்மையான கரங்கள் தன் வயிற்றைச் சுற்றிக்கொண்டதை உணர்ந்தவன் “சுரேஷ்… ஐல் கால் யூ லேட்டர்…” எனக் கூறிவிட்டு அந்த அழைப்பை உடனே துண்டித்தான்.
“என்னோட பொண்டாட்டிக்கு இப்பதான் என் நினைவு வந்துச்சா…?” எனக் கேட்டவன் அவளுடைய கைகளைப் பிடித்து தன்னுடைய முன்பக்கத்திற்கு இழுத்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அவளுக்கும் அந்த இறுக்கமான அணைப்பு அக்கணம் தேவைப்பட்டது.
அவனுடைய மார்புக் கூட்டினுள் புதைந்து போய்விடுவதைப் போல தன் முகத்தை அழுத்தமாக அவனுடைய மார்பில் பதித்தவளுக்கு விழிகள் கலங்கின.
அவளுடைய முகத்தை தன்னுடைய இரு கைகளாலும் தாங்கி அவளுடைய அழகு முகத்தை ஆழ்ந்து பார்த்தவனின் விழிகள் கூர்மையாகின.
“ஹேய் அம்மு… என்ன கண்ணெல்லாம் கலங்கிருக்கு…? என்னாச்சு…?” என நொடியில் பதறிவிட்டான் அவன்.
“ஒ… ஒன்னும் இல்ல மாமா…” என்றவள் மீண்டும் அவனுடைய மார்பில் புதைந்தாள்.
“இல்லையே… உன்னோட முகம் ரொம்ப டல்லா இருக்கே… மதுரா ஏதாவது சொன்னாளா…?”
“சே… இ… இல்லங்க… கண்ணுல தூசி விழுந்திடுச்சு…”
அவன் புருவங்கள் உயர்ந்தன.
அவன் அதற்கு அடுத்த கேள்வியைக் கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்தவள் மெல்ல தன்னுடைய கரங்களை உயர்த்தி அவனுடைய கழுத்தை வளைத்துக் கொள்ள அவனுக்கு தான் கேட்கவிருந்த கேள்வி மறந்தே போனது.
தனக்கு மிக அருகேயிருந்த அவளுடைய செம்பவள உதடுகளை ஆழ்ந்து பார்த்தவன் அடுத்த நொடி அவளுடைய உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
அவனுடைய கழுத்தை தன் கரங்களால் இறுக்கிக் கொண்டவள் அவனுடைய பின்னந் தலையின் சிகைக்குள் தன் விரல்களை நுழைத்து வருட அஞ்சலியின் அபார ஒத்துழைப்பில் அவளைத் தன் கரங்களில் தூக்கிக் கொண்டான் அவன்.
கிட்டத்தட்ட அவனுடைய இடையில் தன்னுடைய கால்களைச் சுற்றிப்போட்டவாறு அமர்ந்திருந்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“என்னடி… இன்னைக்கு இப்படிலாம் பண்ற…?” என கரகரப்பான குரலில் கேட்டவன் அவளை அப்படியே கட்டிலின் மீது படுக்க வைக்க சட்டென துள்ளி எழுந்து நின்றாள் அவள்.
“ஐயோ மாமா… அக்கா வெளியே இருக்கா…”
“அவ வெளியவே இருக்கட்டும்…” என்றவனின் கரம் அவளுடைய சுடிதாரைப் பற்றிக்கொண்டது.
“அவ… அவ ரூமுக்குப்…” என அவள் கூறி முடிப்பதற்கு முன்னரே அவளை அங்கே இருந்த சுவற்றோடு அழுத்தி மீண்டும் அவளுடைய உதடுகளை விழுங்கிக் கொண்டான் அவன்.
அவளுக்கு இதயம் எகிறிக் குதித்தது.
அவனுடைய கரங்கள் அவளுடைய துப்பட்டாவை உருவி எடுத்து எல்லை மீறி வித்தை செய்ய மயங்கிப் போனாள் அஞ்சலி.
துப்பட்டாவை எடுத்தவன் அவளுடைய சுடிதாரையும் அகற்றிவிட முயற்சிக்க சுதாரித்து தன் விழிகளைத் திறந்தவளுக்கு கதவின் அருகே யாரோ நிற்பது போலத் தெரிந்தது.
பதறி கதிரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் வாயிலை வெறித்துப் பார்க்க “ஹேய் அம்மு… என்னடி…?” எனக் கேட்டான் அவன்.
“அங்க நின்னு யாரோ நம்மள பார்த்த மாதிரி இருந்துச்சு மாமா…” என்றவளுக்கு குரல் நடுங்கியது.
“இங்கே யார் வரப் போறா…?” என்றவன் அந்த அறையின் வாயில் வரை சென்று வெளியே எட்டிப் பார்த்தான்.
“யாருமே இல்லடி…”
“ம்ம்…”
“டென்ஷன் ஆகாதடி… யாருமே இல்லை… நம்ம பெட்ரூம் வரைக்கும் இங்கே இருக்கவங்க யாரும் வரவும் மாட்டாங்க…” என்றான்.
அவளோ தரையில் கிடந்த துப்பட்டாவை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டாள்.
‘அங்க யாரோ நின்ன மாதிரி இருந்துச்சே..’ என எண்ணிக் குழம்பியவளின் கரங்களைப் பற்றிக் கொண்டான் அவன்.
அந்த சாக்கடை தான் எட்டி பார்த்திருக்கும். வேற யாரு?
Andha veena panava dhaan yetti parthu iruppa