அத்தியாயம்-17
“அவன சும்மா விடக்கூடாது… என் வீட்டுக்கே வந்து என்னோட ப்ராப்பர்ட்டியவே அவன் தூக்கிட்டு போயிட்டான்.. அவனுக்கு எவ்ளோ திமிர் இருக்கும்… அவன் வேணா இந்த மும்பைக்கே பெரிய கேங்ஸ்டரா இருக்கட்டும்… அதுக்காக அவன் இந்த நிவாஸ்கிட்டயே வச்சுப்பானா…” என்று நிவாஸ் கையில் கட்டுடன் அடிபட்ட சிறுத்தையாக உருமிக் கொண்டிருந்தான்…
அவருக்கு பக்கத்தில் அவனது அடியாட்கள் அனைவரும் தலை குனிந்தவாறு நிற்க… அவர்களை எரித்த பார்வை பார்த்தவனோ “உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்ல ஒருத்தன் இந்த வீட்டுக்குள்ள புகுந்து என்னை அடிச்சி போட்டுட்டு நான் கட்டிக்க இருந்தவள தூக்கிட்டு போய் இருக்கான்… அவளை பிடிக்கிறதுக்கு துப்பு இல்லாம இப்படி தலைய தொங்க போட்டுட்டு வந்து நிக்கிறீங்களே…“என்று ஆக்ரோஷமாக கத்தியவன்..
“உங்களுக்கெல்லாம் சரக்கு உள்ள போச்சுன்னா உள்ள என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு கூட தெரியாதா….” என்று மறுபடியும் நிவாஸ் திட்டிக்கொண்டே இருக்க அனைவரும் அப்படியே ஆசையாமல் நின்று கொண்டிருந்தனர்… நிவாஸ் போதையில் மார்ட்டினால் கை முறிக்கப்பட்டு அப்படியே அணத்திக் கொண்டே பாதி மயக்கத்தில் படுத்திருக்க…
ஆனால் வெளியிலோ அவனது பாடிகாட்ஸ் அது தான் சமயமென்று தண்ணி அடித்துக் கொண்டு போதையில் உருண்டு புரண்டு கொண்டிருந்தனர்… பார்ட்டிக்கு வந்த விருந்தாளிகள் கிளம்ப.. பாடிகார்ட்ஸோ தங்களுடைய செயலை சரியாக செய்ய உள்ளே கிடந்தவனை பாவம் கண்டுக்கொள்ள யாருமே இல்லை…
நிவாஸ் சிறிதுநேரத்தில் முழு மயக்கத்திற்கு சென்று விட.. சரியாக மூன்று மணி நேரம் கழித்து தான் எதார்த்தமாக உள்ளே வந்த ஒரு பாதுகாப்பாளன் நிவாஸின் நிலையை பார்த்து அதிர்ந்தவன் உடனே மற்ற பணியாளர்களை கூப்பிட்டு வந்து அவனை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்… அங்கோ நிவாஸிற்கு கை எலும்பு முறிக்கப்பட்டிருப்பது கண்டறிந்து உடனே அதற்கு சிகிச்சை மேற்கெண்டனர்…
மற்றும் முகத்தில் அறை வாங்கியது வேறு ஒரு பக்கம் உதடு கிழிந்து போயிருக்க அதற்கும் சிகிச்சை பார்த்து அப்படியே அவரை மறுபடியும் வீட்டிற்கு அனுப்பிருந்தனர்…
மயக்கம் தெளிந்து எழுந்த நிவாஸோ அனைவரையும் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிக் கொண்டு இருந்தான்… அவனால் அதிகமாக பேசவும் முடியவில்லை… மார்ட்டினின் அறை அப்படி…
“ம்ச் நீங்க எல்லாரும் என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது அந்த மார்ட்டினோட கையில இருக்குற அந்த பொண்ணும் அவ கழுத்துல இருக்குற அந்த லாக்கெட்டும் என் கைக்கு வந்தே ஆகணும்..” என்று நிவாஸ் கத்திக் கொண்டிருந்தவனுக்கு நேரடியாக மார்ட்டினிடம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தைரியம் எல்லாம் இல்லை…
ஏனென்றால் மார்ட்டினுக்கு இருக்கும் செல்வாக்கும், அவன் ஆள் பலமும், அவனின் உடல்பலமும் அவனுக்கு நன்றாகவே தெரியும்… எந்த அளவுக்கு இந்த நிவாஸிருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அதைவிட பல மடங்கு மார்ட்டினுக்கு செல்வாக்கு இருப்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்… ஏன் மார்ட்டினால் பல தரப்பட்ட கட்சி தலைவர்களை கூட இவனுக்கு எதிராக திருப்பி விட முடியும்.. அதனால் நிவாஸ் இப்போது அமைதியாக இருந்து மறைமுகமாக மார்ட்டினை தாக்குவதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருந்தான் மனதில்…
ஆனால் அதே நேரம் எப்படியாவது மைத்துவை தன் பக்கம் இழுத்து வரவேண்டும் என்று நினைத்தவனுக்கு மனதில் மைத்துவின் அழகிய வதனம் வந்து எச்சில் விழுங்க செய்தது… கண்டிப்பாக அந்த அழகிய பெண்ணவளை அவனால் யாருக்கும் விட்டுத்தரவே முடியாது… “கண்டிப்பா அவ எனக்கு வேணும் கண்டிப்பா அவதான் என்னோட அஞ்சாவது பொண்டாட்டி…” என்று கூற மற்ற பணியாளர்களும் சரி என்று தலையாட்டியவாறு சென்றவர்களுக்கோ மார்ட்டினிடம் வைத்துக்கொள்ள பயம் தான்… ஆனால் நிவாஸ் கூறியதை செய்யவில்லை என்றால் அவர்கள் உயிர் போவது நிச்சயம் தான்… அதனால் பயந்தவாறே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்தனர்…
எப்போது மைத்து மார்ட்டினின் வீட்டிலிருந்து வெளியில் வருவாள் அவளை எப்போது தூக்கலாமென்று காத்துக் கொண்டிருந்தார்கள்… ஆனால் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் மட்டும் அமையவே இல்லை…
இங்கு மைத்ரேயியோ மார்ட்டினின் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது. இந்த ஒரு வாரமாக மார்ட்டின் கூறியது போல அவன் கண்களில் படவே இல்லை… அவன் தோட்டத்து பக்கம் வந்தால் இவள் வீட்டிற்கு பக்கமோ, அவன் வீட்டினுள் வந்தால் இவள் தன்னுடைய அருகிலும் அடைந்து தான் கிடந்தாள்… ஏதோ தனக்கு அவன் இடம் கொடுத்ததே பெரிது இந்த நிலையில் அவனை வெறுப்பேற்ற வேண்டாம் என்று நினைத்துதான் தன் அறையினுள்ளே அடைந்து இருந்தாள்..
ஆனால் யார் அவளை தன் கண்ணில் படவே வேண்டாம் என்று கூறினாலோ அவனும் அவளை பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தான். எதற்காக அவனுக்கு இந்த ஏக்கம் என்று அவனுக்கே புரியவில்லை… “டேய் அவள உன் முன்னாடி வரக்கூடாதுனு நீதானடா சொன்ன இப்ப என்னன்னா நீயே அவள பாக்க இப்டி ஏங்கிட்டே இருக்கியே… இது உனக்கே நியாயமா இருக்காடா…”என்று அவன் மனம் அவனையே சரமாரியாக கேள்வி கேட்டது…
“ம்ச் நான் ஒன்னும் அவள பாக்குறதுக்காக ஏங்கிட்டு இல்ல… சும்மா ஏதோ நம்ம வீட்ல இருக்காளேன்ற எண்ணத்துல அவ நல்லா இருக்காளான்னு பாக்க தான் நெனச்சேன்…” என்று எவ்வளவு தான் தன் மனசாட்சிக்கு பொய் கூறினாலும் அவனைப் பற்றி அவனுக்கு தெரியாதா என்ன…
“ம்ச் இவள கூட்டிட்டு வந்தது பெரிய இம்சையா போச்சு… எவ்வளவு சீக்கிரம் அவள வீட்ல இருந்து அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவள இந்த வீட்டை விட்டு அனுப்பி ஆகணும்…” என்று நினைத்துக் கொண்டான்.. ஏனென்றால் அவள் இந்த வீட்டிற்கு நுழைந்ததிலிருந்து இல்லை இல்லை அவள் அவனின் வாழ்க்கையில் நுழைந்ததிலிருந்து மார்ட்டின் அவன் அவனாகவே இல்லை.. ஏனென்று கேட்டால் அதற்கும் அவனிடம் பதில் இல்லை.. ஏதேதோ புது புது உணர்வுகள் எல்லாம் அவனுக்கு வந்து கொண்டு இருந்தது.. காதல் மேலும் பெண்கள் மீதும் அவனுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.. அதற்கு காரணம் ஒன்று பெரிதாக எல்லாம் இல்லை.. அவன் அன்னையின் காதல் தான் அதற்கு காரணம்… உருகி உருகி காதலித்த அவன் அன்னையே அவனையும் அவன் தந்தையையும் விட்டுவிட்டு போனது தான் அவனுக்கு காதலின் மீது நம்பிக்கை இல்லை…
காதல் என்றாலே பெண்கள் என்றாலே தன் அன்னையின் காதலை எப்போதும் எடுத்துக்காட்டாக நினைத்துக் கொண்டே இருப்பான். அதுபோலதான் அவனும் பெண்களின் பக்கம் நெருங்காமலேயே வாழ்ந்து விட்டான் முப்பத்தி ஐந்து வருடமாக.. இப்போது திடீரென்று அவனது வீட்டில் ஒரு பெண் வாடை அடித்தால் அவனுக்கும் இதுவரை இல்லாத உணர்வுகள் தோன்றுதானே செய்யும்… அப்படித்தான் அவன் நினைத்துக் கொண்டான்.. ஆனால் பெண்ணவள் முதல் முதலில் அவன் மீது மோதிய போதே அவனை தன் பால் இழுத்து விட்டாள் என்று அவனுக்கு தெரியாமல் போனது…ஒருவேளை பின்னால் புரியுமோ என்னவோ..
மார்ட்டின் ஒரு பெரிய ப்ராஜெக்டிற்காக கிளம்பியவன் தனது அறையில் இருந்து வெளியில் வந்தவன் வழக்கம் போல பெண்ணவள் அறையின் கதவில் மீது ஒரு பார்வை பதித்துவிட்டு தான் சென்றான்…இது அவனுக்கு வாடிக்கையாகி போனது.. அவன் என்னதான் அந்த அறையின் கதவையே உற்று பார்த்தாலும் அவன் இந்த வீட்டினை விட்டு செல்லும் வரை அவள் வெளியில் வரப்போவதில்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்..
அவன் பார்வை ஏக்கமாக அவளின் அறையில் படிய.. “இப்படி ஏக்கமா பாத்துட்டு இருக்குறவன் எதுக்குடா அண்ணிக்கு அப்புறம் என் கண்ணு முன்னாடி கூட வரக்கூடாது அப்படின்னு சொன்ன…”என்று அவன் மனமே அவனைக் கேள்வி கேட்க…
“ம்ச் அது ஏதோ சொல்லிட்டேன் அதுக்காக இப்படியா கோழி முட்டைய அடை காக்குற மாதிரி உள்ளே உட்கார்ந்து இருப்பா.. வந்து வெளியில என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் இல்ல…” என்று நினைத்துக் கொண்டிருந்தவன் பெருமூச்சு ஒன்றினை விட்டு விட்டு உணவு அருந்துவதற்காக டைனிங் டேபிளில் சென்று உட்கார்ந்தான்.
அப்போது எப்போதும் அவனுக்கு பரிமாறும் பணியால் இன்று கை நடுக்கத்துடன் அவனுக்கு உணவினை பரிமாறிக் கொண்டே இருக்க… அதனை பார்த்த மார்ட்டினோ அந்த பணியாளை வித்தியாசமாக பார்த்த போல உண்ண ஆரம்பித்தவனுக்கு உணவின் சுவை தனியாக தெரிந்தது… இதுவரை ஏதோ கடமையாக சமைத்துக் கொண்டிருந்த செஃப்ஃபின் சமைத்த உணவு கண்டிப்பாக இது இல்லை… அந்த உணவில் இருந்த ருசியோ இப்போது அவ்வளவு அபாரமாக தெரிந்தது.. அதிலேயே இது அந்த சமையல்காரன் செய்தது இல்லை என்று அவனுக்கு தெரிந்து போக..
அந்த சமையல்காரனை ஒரு பார்வை பார்த்த மார்ட்டினை பார்த்த அவனுக்கோ சகலமும் ஆடிவிட்டது. “பாஸ் பாஸ் நான் எவ்வளவோ சொன்னேன் பாஸ் மேடம் கிட்ட மேடம் கேக்கல பாஸ்… நான் தான் சமைப்பேன்னு வம்படியா சமைச்சாங்க பாஸ்… சாரி பாஸ்…” என்று நடுங்கியவாறே கூற…
மார்ட்டினுக்கோ இது யார் செய்த வேலை என்று புரிந்து போனது… ஆனாலும் அவனுக்கு அந்த உணவின் சுவை நாக்கினை கட்டி போடதான் செய்தது… ஆனாலும் அதனை உண்பதற்கு அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை… அந்த சமையல்காரனை முறைத்தவாறே சட்டென்று வேகமாக சேரில் இருந்து எழுந்தவனோ “இன்னொரு தடவை அவளை சமைக்க விட்ட உன்ன கொன்றுவேன்…” என்று மிரட்டியவனை கண்டு நடுங்கி போனான் அவன்…
உணவினை உண்ணாமலே அங்கிருந்து செல்ல பார்க்க… அப்போது.. “இப்படி எல்லாம் சாப்பாட்ட வேஸ்ட் ஆக்க கூடாது…” என்ற கீச் கீச் குரல் ஒன்று அவன் காதை இனிமையாக வந்து தாக்கியது… அந்த இனிமையான குரலை சட்டென்று கண்களை மூடி ஆழ்ந்த சுவாசித்துக் கொண்டே இருக்க… பெண்ணவளோ வேகமாக மார்ட்டினின் பின்னாலிருந்து அவன் அருகில் வர முயல… தன் தியான நிலையை சட்டென்று முடிவுக்கு கொண்டு வந்தவனோ அவளை தடுக்க பார்க்க.. அப்படி அவன் தடுப்பான் என்று நினைக்காத பெண்ணவளோ வேகமாக வந்தவள் பூப்போல அவன் மீது மோதி நின்றாள்..
அவளின் மோதலை எதிர்ப்பார்க்காதவனும் கண்களை கிறக்கமாக மூடிக்கொள்ள அவனது மனமும் இத்தனை நாள் தேடிய தேடலில் இருந்து விடுபட்டு அவளது மென்மையில் ஒருவித புத்துணர்வை அடைந்தான். சட்டென்று கண்கள் இறுக்க மூடிக்கொண்டவனோ அவளின் நெருக்கத்தை ஆழ்ந்து ரசித்துக்கொண்டும் சுவாசித்துக் கொண்டே இருக்க…
பெண்னவளோ இப்படி வேகமாக வந்து அவன் மீது மோதுவோம் என்பதனை அறியாதவளாக எங்கே அவன் தன்னை திட்டப்போகிறானோ என்று பயத்தில் இறுக்க கண்களை மூடிக்கொண்டவள் நிமிடங்கள் கடந்தும் அவன் தன்னை திட்டவில்லை என்பதனை உணர்ந்து கண்களை திறந்துப்பார்க்க… அங்கோ தன் முகத்திற்கு வெகு அருகில் தெரிந்த அவனது தின்னென்ற மார்பு அவளுக்கு ரசனையை தான் கொடுத்தது… “வாவ் வாட் எ பாடி…”என்று உள்ளுக்குள் அவனை ரசித்தவளோ நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க.. ஏற்கனவே சிவந்த நிறத்தை உடையவன் இப்போது அவளின் அருகாமையில் இன்னும் சிவந்து போயிருந்தவனை பார்த்து அவனின் அழகில் மயங்கியே போனாள்…
“எவ்ளோ சிவப்பா இருக்காங்க இவங்க…”என்று நினைத்தவளோ அவனின் முகத்தை ரசனையாக பார்த்தவள் தன் மனம் தடுமாறுவதை நினைத்து மிரண்டு போனவளோ… “அய்யய்யோ அடியேய் மைத்து ஏன்டி இவர பாத்து இப்டி மயங்குற… இது மட்டும் இவருக்கு தெரிஞ்சிது அவ்ளோ தான்…”என்று மயங்கிய தன் மனதை அடக்கியவள்….
(கேப்பச்சினோ…)