அவளின் மேனி முழுக்க அவன் தடம். அவளின் நெஞ்சு முழுக்க ப்ரீத்தியின் முகம்.
உடம்பு ஒத்துழைக்கிறது என்று மட்டும் பார்த்தவனுக்கு அந்த மனம் எவ்வளவு பாடாய் படுகிறது என்று தெரியவில்லை.
கண்ணீரை கொட்டிய கண்கள் மரணத்தை விரும்பியது. இந்த உலகத்தை பார்க்க விரும்பவில்லை.
அவள் அழுதுக் கொண்டிருந்தாள். இவன் அவளை திருடிக் கொண்டிருந்தான். பிடிவாதம்தான். அவள் மீது கோபம்தான். ஆனால் அவள் தன் சொத்து என்பதை அவன் மறக்கவில்லை. அதனாலேயே முடிந்த அளவுக்கு அவளை காயப்படுத்தாமல் களவாடி கொண்டிருந்தான்.
அவள் வேண்டுமென்றே அழுகிறாள் என்று நினைத்தான். அவளின் மனம் விரைவில் மாறும் என்று நம்பினான்.
அதுவும் இல்லாமல் அவளின் பார்வையில் நாம் கேட்டவன்தானே, இந்த விசயத்திலும் அப்படியே இருந்து விட்டு போகலாம் என்று நினைத்தான்.
அவளின் பூங்கொடி தேகத்தில் பொன்வண்டாக மாறிய அவனின் உதடுகள் தேன் தேடின. பாலைவனமாக இருந்த அவனின் மனம் அவளின் மேனியில் நிழல் தேடியது.
கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை வலி இருக்கும் என்று அந்த அப்பாவி பெண் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் சிறிது நேரத்தில் அந்த வலி காணாமல் போய் விட்டது. தனக்கு தானே எதையாவது கேட்டிருந்தால் கூட அவளின் உடம்பு இந்த அளவுக்கு உதவி இருக்காது போல. அவனுக்கு அந்த அளவுக்கு ஒத்துழைத்தது.
“நான் உன் புருஷன். தாலி கட்டி இருக்கேன். என்னை ஏத்துக்கிட்டா தப்பு இல்ல..” என்றான் அவன்.
இவள் கண் திறந்தாள். தன் மேல் இருந்தவனை ஆழமாக பார்த்தவள் “இதுக்காக நீ நிச்சயம் ஒருநாள் அனுபவிப்ப..” என்றாள்.
இவன் நக்கலாக உதடு சுழித்தான்.
“உன்னை அனுபவிக்கும் சுகத்துக்கும் எத்தனையை வேணாலும் அனுபவிப்பேன். நீ அந்த அளவுக்கு வொர்த்..” என்றான் கண் சிமிட்டி.
அவளின் உதடுகளை மீண்டும் கவ்வினான். இறுகிய உதட்டை கடித்து அவளை வாய் திறக்க செய்தான். அவளின் வாய் முழுக்க உலாவினான். உதட்டில் இருந்து நாக்கு வரை அவன் ஆட்சி. பற்கள் அனைத்திலும் அவனின் முத்திரை.
அவன் நாக்கை கடிக்க வேண்டும் என்ற வெறி அவளுக்கு. ஆனால் குழந்தையை ஏதாவது செய்து விடுவானோ என்று பயந்து அமைதி காத்தாள்.
வாய் முழுக்க அவன் சொந்தமாகி விட்டது. அவளின் தொண்டைக்குள் அவனின் இதழ் நீர் இறங்கியது. அருவருப்பாக நினைக்க நினைத்தாள். ஆனால் அப்படி நினைக்கவே முடியவில்லை. அவன் எது செய்தாலும் அது தன் உடம்புக்கு பிடிக்கும் என்பதை ஏற்க முடியவில்லை.
முத்தமிட்டு முடித்தவன் அவளின் பொக்கிஷங்களை எல்லாம் அவ்வளவு எதார்த்தமாக திருடினான். அவனுக்காகவே அவள் சமைந்தது போல் நினைத்து விட்டான். அவளின் மேனியை மோக தீயில் சமைத்தான். இனிய பசியில் சுவைத்தான்.
இந்த கருமம் பிடித்த கலவி எப்போது முடியுமோ அவன் எப்போது தன்னை விட்டு விலகுவானோ என்று ஒவ்வொரு நொடியையும் சிரமத்தோடு கடத்திக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் அவனோ அவளின் தேகத்தை நேரமெடுத்து தின்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு அதுதான் சந்தர்ப்பம். அவளுடனான முதல் கூடலை நொடி நொடியாக அனுபவித்துக் கொண்டிருந்தான். அவள் இந்த கலவி நொடி முள்ளாக இருக்க வேண்டும் என்று கேட்டாள். ஆனால் அவன் மணி முள்ளாக இருந்தான். அவளை பிரிய மறுத்தான்.
அவளின் இடையில் மீண்டும் மீண்டும் அவன் பல் தடம் பதிந்தது. வயிற்றில் ஓயாமல் இதழ் தடம் பதிந்தது. அவன் அவள் நெஞ்சில் காதல் தடம் வரைய முற்பட்டான். அது மட்டும் கடைசி வரை கை கூடவில்லை.
அவன் கலவி முடிந்து விலகியதும் அவளுக்கு புது கண்ணீர் கொட்டியது. இது விடுதலையின் கண்ணீர். முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தாள். குழந்தை எழும் முன்னால் குளித்து விட்டு வரலாம் என்று கட்டிலை விட்டு இறங்கினாள்.
“உனக்கு ரெஸ்ட் வேணாமா?” எனக் கேட்டான் அவன்.
இதுவும் தண்டனைதான். தனக்கு தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை. அவனுடனான ஊடலை ரசித்ததற்காக இந்த தண்டனை.
அவள் பாத்ரூம்க்கு சென்று விட இவன் நெஞ்சின் மீது கை பதித்தபடி தலையணையில் விழுந்தான்.
பொண்ணுன்னா இவதான் பொண்ணு. வாழ்க்கைன்னா இவளோடுதான் வாழ்க்கை என்று சந்தோஷப்பட்டான்.
அவள் குளிக்க சென்ற சில நிமிடங்களில் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. உள்ளே தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு இந்த அழுகை சத்தம் கேட்கவில்லை.
இவன் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க பார்த்தான். அதற்குள் குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் கடுப்பாகி விட்டான். ஆனாலும் எழுந்து உடையை அணிந்துக் கொண்டு சென்று கதவை திறந்தான்.
குழந்தையின் அழுகை சத்தம் ஹாலில் இருந்த அம்மாவுக்கு கேட்டது. உடனே மகனின் அறைக்கு வந்தாள். புதிதாக வந்த மருமகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவள் குழந்தை தனியாய் தொட்டிலில் இருந்தபடி அழுவதை பார்த்து உடனே அள்ளி தூக்கினாள்.
மகன் கட்டிலில் ஓரமாக அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் பெரிய திருப்தி தெரிந்தது.
“நீ பெத்த குழந்தை அழுது. உனக்கு கொஞ்சம் கூட இரக்கம் வரலையா?” என கேட்டாள் சுலோச்சனா.
இவன் பதிலே சொல்லவில்லை. அவள் அவனை திட்டியபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பினாள். பணிப்பெண் ஒருத்தி பாலை கொண்டு வந்து தந்தாள். சுலோச்சனா அதை குழந்தைக்கு கொடுத்தாள். ஆனால் குழந்தை குடிக்கவில்லை. குழந்தையின் அழுகையும் நிற்கவில்லை.
நேரம் போய் கொண்டே இருந்தது. குழந்தையின் அழுகையை இவளால் நிறுத்தவே முடியவில்லை. பணிப்பெண்கள் யார் யாரோ தூக்கி பார்த்தார்கள். எவ்வளவோ கொஞ்சி பார்த்தார்கள். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
சுலோச்சனாவுக்கு பயம் நெஞ்சை கவ்வியது.
குளித்து விட்டு வெளியே வந்த மானசா குழந்தையின் அழுகுரலில் வெளியே ஓடினாள்.
மாமியாரின் மடியில் இருந்தது குழந்தை. பணிப்பெண்கள் மாமியாரின் வீல்சேரை சுற்றி நின்றுக் கொண்டிருந்தார்கள்
அழுத குழந்தையை அவள் நெருங்க, “பக்கத்துல வராத. என் பேத்தியை நீதான் என்னவோ பண்ணிட்ட. உன்னாலதான் இவ அழுறா..” என்றாள் சுலோச்சனா.
இவளுக்கு விழியில் நீர் கோர்த்தது. “நான் எதுவும் செய்யல..” என்றாள்.
“அப்புறம் ஏன்டி குழந்தை இப்படி அழுது?” என்று கேட்டு சீறினாள் சுலோச்சனா.
“அதை நாங்க பார்த்துப்போம். என் மூஞ்சுல விழிக்காம தூர போ. பணத்தை பார்த்துதானே என் பையனை கல்யாணம் பண்ண? நீயெல்லாம் நாசமாதான் போவ..” என்று திட்டினாள்.
மாமியாரின் திட்டு இவளின் இதயத்தை அதிகம் உடைத்தது. படுக்கையறைக்கு வந்தாள். எதுவுமே நடக்காதது போல் ஜன்னலோரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தீனா.
இவள் அவனை நெருங்கி அவனின் சட்டையை பிடித்து தன் புறம் திருப்பினாள்.
“குழந்தையை நீதான் என்னவோ பண்ணிட்ட. என்ன பண்ண சொல்லு..” என்று கேட்டாள்.
தன் சட்டையில் இருந்த அவளின் கையை விலக்கியவன் “நான் எதுவும் பண்ணல..” என்று சொன்னான்.
குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இவளின் செவியின் காயமும் ஆறவில்லை.
“அப்புறம் ஏன் குழந்தை அழுது? நான் குளிக்க போன டைம்ல நீதான் என்னவோ பண்ணிட்ட. என்ன பண்ண சொல்லு..” என்று கத்தி கேட்டாள். கதறலாக கேட்டாள்.
இவனுக்கு கடுப்பானது. “என்னை நம்ப மாட்டியா நீ?” என்று கேட்டான்.
குழந்தையின் அழுகை சத்தம் காதில் விழுந்தும் குத்துக்கல் போல் இவன் நிற்பதை பார்த்த பிறகு எந்த பெண் இந்த கேள்வியை கேட்காமல் இருப்பாள்?
அவளின் சட்டையை பிடித்து உலுக்கினாள். “உனக்கு தேவையானது கிடைச்சிடுச்சின்னு நீதான் என்னவோ பண்ணிட்ட. என்ன பண்ண சொல்லு..” என்று கதறல் பாதியும் கத்தல் பாதியுமாக கேட்டாள்.
இவன் கடுப்போடு அவளின் கழுத்தை பற்றினான். அவளின் அழுகை சத்தம் அடங்கி விட்டது. அவனின் கரத்தை தாண்டி அவளின் குரல் வெளிவரவில்லை.
“நான் எதுவும் பண்ணல. எனக்கு தேவையானது கிடைக்கல. எனக்கு என் லைஃப் லாங்கும் நீ வேணும். வெறும் ஒரு நாளுக்காக நான் திருப்தி அடையுறவன் கிடையாது..” என்றான்.
அவளின் நெஞ்சில் விரல் வைத்து குத்தியவன் “இந்த ஹார்ட் எப்பவும் நான் சொல்வதை நம்பணும். மறுபடி எப்பவாவது என் மேல நம்பிக்கை இல்லாம இப்படி கேள்வி கேட்டா அந்த குழந்தைக்கு நிஜமாவே நான் விஷ ஊசி போட்டுடுவேன்..” என்று மிரட்டலாக சொன்னான்.
இவள் பயந்து விட்டாள். முகம் வெளிறி விட்டது.
அவளை விட்டு விட்டான். அவளின் கழுத்து லேசாக சிவந்து விட்டது.
“நீ என் முத்தத்தால் மட்டும்தான் சிவக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா என்னை கெட்டவனா மாத்திட்டு இருக்க நீ..” என்றவன் அவளின் கழுத்தை மென்மையாக தேய்த்து விட்டான்.
வெளியே குழந்தை அழும் சத்தம் நிற்கவேயில்லை. இவள் அழுகையோடு அங்கிருந்து திரும்பி நடந்தாள். ஒரு கொடியவனிடம் எதற்காக நாம் நீதியை எதிர்பார்த்தோம் என்று இவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.
இவள் வெளியே வந்தபோது அந்த வீட்டில் பணிப்புரியும் வயதான பணிப்பெண் ஒருவர் குழந்தையை தூக்கி பார்த்து விட்டு “குழந்தையை தூக்க தெரியாத தூக்கி இருக்காங்க. உரம் விழுந்திருக்கு..” என்றாள்.
“போய் ஒரு நல்ல பெட்ஷீட் எடுத்து வா..” என்று அவளே ஒரு பெண்ணை அனுப்பினாள்.
பெட்ஷீட் கொண்டு வரப்பட்டதும் இரு பெண்களை சரியாக பிடிக்க சொல்லி குழந்தையை அதன் நடுவில் வைத்தாள்.
“விட்டுடாதம்மா..” என்று ஒருத்தியிடம் சொன்னவள் மற்றொருத்தியிடம் இருந்த பெட்ஷீட் முனையை வாங்கி கொண்டாள்.
“இப்படி மெல்ல அசைக்கணும்..” என்றாள்.
பெட்ஷீட் தொட்டில் போல் மெல்ல அசைந்தது. குழந்தை அப்படியும் இப்படியும் நகர்ந்தது. ஆனால் மிக மிக மெல்லிய நகர்வு அது. ஒரு கட்டத்தில் குழந்தையின் அழுகை சத்தம் நின்று விட்டது.
அதன் பிறகு சுலோச்சனாவுக்கும் மானசாவுக்கும் உயிரே வந்தது.
மற்றொரு பெண்ணிடம் அந்த பெட்ஷீட் முனையை தந்து விட்டு குழந்தையை அள்ளி எடுத்த அந்த வயதான பெண்மணி “அவ்வளவுதான் உரம் போயிடுச்சி..” என்று சிரிப்போடு சொன்னாள்.
மானசாவை பார்த்தவள் “பெத்தவ கூட இப்படி அழுதிருக்க மாட்டா..” என்று சொல்லிவிட்டு குழந்தையை அவளிடம் கொடுக்க சென்றாள்.
ஆனால் சுலோச்சனாவோ “அவகிட்ட கொடுக்காதிங்க. குழந்தையை இனி அவ தூக்கவே வேணாம். இவ கொன்னா போட்டுடுவா..” என்றாள்.
மானசாவுக்கு நெஞ்சு வலித்தது. நான் அப்படிப்பட்டவள் இல்லை என்று சொல்ல விரும்பினாள்.
“ஏதோ தெரியாம தூக்கி இருப்பா. உரம் விழுந்திருக்கும். நாமதான் சொல்லி தரணும்..” என்ற அந்த வயதான பெண்மணி “கழுத்துக்கு அடியில் கை போட்டு தூக்கி பழகும்மா..” என்றாள் மானசாவிடம்.
அவள் குழந்தையோடு அவளை நெருங்க, “அவகிட்ட கொடுக்காதிங்க..” என்று கர்ஜித்த சுலோச்சனா தன் சக்கர நாற்காலியை வேகமாக தள்ளினாள்.
ஆனால் அவளுக்கும் அந்த பணிப்பெண்ணுக்கும் இடையில் வந்து நின்றான் அவள் பெற்றெடுத்த மகன்.
“குழந்தை அவகிட்டதான் இருக்கும்..” என்றான்.
“பெத்த தாய்கிட்ட இப்படி பேசாதப்பா..” என்று அந்த பணிப்பெண் சொல்ல, இவன் குழந்தையை பிடுங்க வந்தான். அதற்குள் அந்த குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்ட மானசா “குழந்தைக்கு உரம் விழ நீதான் காரணம். உனக்குதான் குழந்தையை தூக்க தெரியல. எதுக்குடா என் புள்ளையை என்கிட்ட இருந்து தூக்கின?” என்று அழுகையோடு கேட்டாள்.